ரஜினி கேட்ட மன்னிப்பு
இன்னிக்கு இதுதாங்க தலைப்புச் செய்து. ரஜினி அப்படின்னு பேர் வச்ச ஒரு பொண்ணு நியூஸையே வியாபாரமாக்குன பத்திரிக்கைங்க இப்படி ஒரு நியூஸையா சும்மா விடுவாங்க? இன்னும் ஆட்டோ ஓட்டுறவங்கள்ள இருந்து ஆஸ்கார் மூவிஸ் ரவிச்சந்திரன் வரைக்கும் எல்லார் கிட்டயும் இது பத்தி கருத்து கேக்க ஆரம்பிச்சுடுவாங்க. இதை வச்சே இன்னும் ஒரு மாசம் வரைக்கும் ஓட்டிடுவாங்க.
முதல்ல இந்த நியூஸை படிச்சது சக தமிழருங்களைப் போல எனக்கும் ரத்தம் கொதிச்சது. சே இப்படி ஒரு பெரிய யாவாரியா போயிட்டாரேயா இந்த ரஜினி. இவரு மேல எம்புட்டு நம்பிக்கை வச்சிருந்தோம். இப்பிடி மன்னிப்பு கேட்டு அம்புட்டு நம்பிக்கையையும் பாழாக்கிட்டாரேய்யான்னு ஒரே வருத்தமா வேற போச்சி. அப்புறமா உக்காந்து யோசிச்சப்புறந்தான் வெளங்கிச்சி.
1. ரஜினி ஒரு வியாபாரி:
இந்தப் பேச்சை விமர்சனம் பண்ற பெரும்பாலனவங்க சொல்லப்பொறது இது தான். ரஜினி ஒரு வியாபாரி. தன் படம் ஓடணும்னா என்னா வேணும்னாலும் செய்வாரு. அப்பிடின்னு சொல்லப் போறாங்க. ஆனா ஒரு விஷயம் யோசிச்சு பாருங்க. ரஜினி இந்தப் படத்துல நடிக்க சம்பளம் வாங்கிட்டாரு. அவரு இந்தப் படத்துக்கு புரடியூசரும் இல்லை. கர்நாடகா விநியோகஸ்த உரிமையயும் அவர் வாங்கல. அப்பிடியிருக்கும்போது அவர் எதுக்கு இதைப் பத்தி கவலைப்பட்டு மன்னிப்பு கேட்டு அவரு படத்தை ஓட வைக்க நினைக்கணும். ஒரு வேளை, தன் படத்தை வாங்கின விநியோகஸ்தர் நஷ்டப்பட்டு, அந்த நஷ்டத்தை ஈடு செய்ய தன் கைக்காசைப் போட வேண்டியிருக்குமோன்னா? (பாபா படத்தை வாங்கி நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு அவங்க பணத்தை திருப்பிக் குடுத்ததை மறக்க முடியாதுன்னு நினைக்கிறேன்). அப்பிடி நினைச்சிதான் இந்த மன்னிப்பை கேட்டிருப்பாருன்னா, ரஜினி எப்பிடியா வியாபாரி ஆவாரு? எனக்கென்னா போச்சி, என் பணம் எனக்கு வந்தாச்சின்னு போயிட்டே இருந்திருந்தா தான் அவர் வியாபாரி. தன்னால ஒருத்தரும் நஷ்டப்படக்கூடாதுன்னு தன்மானத்தை விட்டு மன்னிப்பு கேட்ட அவர் பெரிய மனுசன் இல்லையா?
2. ரஜினி தமிழின துரோகி
இன்னும் சிலர் கொஞ்சம் மேலயே போயி ரஜினி தமிழனில்லை. தமிழின துரோகின்னு சொல்லுவாங்க. அவரு தமிழனுக்காக ஒகெனக்கல் விவகாரத்துல குரல் குடுக்க போயி அவர் சொந்த மண்ணுக்குள்ள வரக் கூடாது வந்தா திரும்ப மாட்டாருன்னு எல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தப்போ நாம என்ன செஞ்சோம். சக நடிகர்கள் யாராவது சப்போர்ட்டா எதாவது சொல்லியிருப்பாங்களா? இல்லையே. சரி அதை விடுங்க. இப்போ குசேலன் படம் கர்நாடகால போட விடமாட்டோம்னு சொல்லும்போதாவது நடிகர் சங்கமோ இல்லை பிலிம் சேம்பரோ இல்லை தயாரிப்பாளர் சங்கமோ ஏதாவது முயற்சி எடுத்தாங்களா? இல்லையே? ரஜினியே கடைசில கர்நாடக பிலிம் சேம்பருக்கு லெட்டர் எழுதுயில்ல இதை சரி பண்ண வேண்டியிருந்தது. உண்மையிலேயே ரஜினி பாடம் கத்துக்கிட்டாரு. கர்நாடக மக்களிடமிருந்து இல்லை, தன் சக தமிழ் நடிகர்கள்கிட்டயிருந்துதான்.
இப்படி தமிழனுக்கு சப்போர்ட் செஞ்சி ரஜினிக்கு என்ன கிடைச்சது? கர்நாடகால இந்தப் படத்தை வெளியிட தடைன்னு பேச்சு அடி பட்டப்போவே பேசி அதை சரி பண்ண முயற்சி செய்யாம, ரஜினிக்கு பின்னாடி நின்னு, நீ எங்களுக்காக இப்பிடி பேசின, உனக்கு ஒரு கஷ்டமுன்னு வந்தா நாங்க பக்கத்தில நிப்போம்னு சொல்லாம அவரை மறுபடி தனி மனுசனா விட்டுப்புட்டு, அவரு தன்னால யாரும் நட்டப்படக்கூடதுன்னு தன்மானத்தை விட்டு மன்னிப்பு கேக்க விட்டதுக்காக, நாம இல்ல வெக்கப்படணும்?
ஏதோ எனக்கு தோணினதைச் சொல்லிப்புட்டேன். யோசிச்சுப்பாருங்க.
Thursday, July 31, 2008
நண்பர்களே,
இது எனது முதல் வலைப்பூ. வலை மனையில் உலவும் பல கோடி தமிழர்களில் நானும் ஒருவன். பிழைப்புக்காக நாடு விட்டு நாடு வந்து வசிக்கும் சில லட்சம் தமிழர்களில் நானும் ஒருவன். எழுதுவதற்கான வேட்கை இருந்தும் எழுத இயலாமல் (நேரம் கிடைக்கவில்லை என்று சாக்கு சொல்லிக்கொண்டு) வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் நேரத்தில், இப்படி ஒரு வலைப்பூ தொடங்கினால் என்ன என்று எண்ணம் வந்த உடன் நேரத்தை வீண்டிக்காமல் துவக்கியது இந்த வலைப்பூ. இதில் என்னுடைய பிதற்றல்கள் சிலவற்றை பதிக்கும் எண்ணம் உள்ளது.
இது முழுக்க முழுக்க என்னுடைய கருத்துக்கள். இக்கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தினால் இப்போதே என் மன்னிப்புகள்.
இது எனது முதல் வலைப்பூ. வலை மனையில் உலவும் பல கோடி தமிழர்களில் நானும் ஒருவன். பிழைப்புக்காக நாடு விட்டு நாடு வந்து வசிக்கும் சில லட்சம் தமிழர்களில் நானும் ஒருவன். எழுதுவதற்கான வேட்கை இருந்தும் எழுத இயலாமல் (நேரம் கிடைக்கவில்லை என்று சாக்கு சொல்லிக்கொண்டு) வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் நேரத்தில், இப்படி ஒரு வலைப்பூ தொடங்கினால் என்ன என்று எண்ணம் வந்த உடன் நேரத்தை வீண்டிக்காமல் துவக்கியது இந்த வலைப்பூ. இதில் என்னுடைய பிதற்றல்கள் சிலவற்றை பதிக்கும் எண்ணம் உள்ளது.
இது முழுக்க முழுக்க என்னுடைய கருத்துக்கள். இக்கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தினால் இப்போதே என் மன்னிப்புகள்.
Subscribe to:
Posts (Atom)