Sunday, July 19, 2009

சிவகாசி படம் - வக்கில்கள் கண்டனம்

சிவகாசி படத்தில் நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு "தேங்காய் மூடி" வக்கீலாக நடித்திருப்பார். அந்த பாத்திரப் படைப்பு வக்கீல்கள் அனைவரையும் கேவலப்படுத்துவதாக மொத்தம் 13 கோர்ட்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இப்போது விஜய், இயக்குனர் பேரரசு மற்றும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஆகியோர் மன்னிப்பு கேட்டுகொண்டால் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக ஒத்துக் கொண்டுள்ளனர். இதன் மூலம் நீதி மன்றம் தெரிவித்திருப்பது என்னவென்றால், விஜய், பேரரசு, ஏ.எம்.ரத்னம் ஆகியோர் குற்றவாளிகளே என்பது தான். இத்தனைபார்த்து மற்றவர்களும் வழக்கு போட என்னாலான யோசனை.
1. வெடிகுண்டு முருகேசன்: இந்த படத்தின் தலைப்பு முருகேசன் என்று பெயர் வைத்திருப்பவர்கள் எல்லாம் வெடிகுண்டு தயாரிப்பவர்கள் போலவோ, அல்லாது வெடிகுண்டு போல எப்போது வேண்டுமானாலும் வெடித்து விடலாம் என்ற அர்த்தம் தொனிப்பதாகவோ இருக்கிறது. ஆகவே, இந்தத் தலைப்பை மாற்ற வேண்டும் என்று கூறி முருகேசன் என்ற பெயர் வைத்திருப்போர் சங்கம் சார்பாக வழக்கு தொடுக்கலாம்.
2. அயன் திரைப்படத்தில் எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு கள்ளக் கடத்தல் தொழிலில் ஈடுபடுவதாக காட்டியதை கண்டித்து எம்.எஸ்.சி படித்து விட்டு வேலை இல்லாதோர் சங்கத்தை சார்ந்தவர்கள் அந்த திரைப்படத்தில் சூர்யா கள்ளகடத்தல் செய்ததில் பாதி பணத்தை கேட்டு வழக்கு தொடுக்கலாம்.
3. சிவாஜி படத்தில் அமெரிக்காவில் வேலை செய்து சம்பாதித்த பணத்தில் பாதியை லஞ்சமாக கொடுத்ததன் மூலம் அமெரிக்க வாழ் கணினி வல்லுனர்கள் எல்லாம் லஞ்சம் கொடுப்பவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியதை கண்டித்து கணினி துறையில் வேலை செய்கிறோம் என்ற போர்வையில் வலைப்பூவில் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் போடுவோர் சங்கம் சார்பில், ரஜினி சம்பாதித்ததாக சொல்லப்படும் பணத்தில் (லஞ்சம் கொடுத்தது போக) மீதியை நஷ்ட ஈடாக கேட்டு வழக்கு தொடுக்கலாம்.
4. பசங்க படத்தில் L.I.C ஏஜென்டாக வந்து எதிர் வீட்டு பெண்ணை மடக்கும் பாத்திரத்தை படைத்ததன் மூலம் L.I.C ஏஜெண்டுகள் எல்லாம் எதிர் வீட்டு பெண்ணை மடக்குபவர்கள் என்ற தப்பான என்னத்தை விதித்ததால் படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும், தலா 25 கோடிக்கு L.I.C பாலிசி எடுக்க வேண்டும் என்று பாலிசி கிடைக்காத L.I.C ஏஜெண்டுகள் சங்கத்தின் சார்பாக வழக்கு தொடுக்கலாம்.

<<தொடரும்>>

1 comment:

Anonymous said...

I think, that anything serious.