Saturday, September 19, 2009

கு.ஜ.மு.க பொதுச் செயலாளர் கைது

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கு.ஜ.மு.க பொதுச் செயலாளர் இன்று அதிகாலை மூன்று மணியளவில் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கு.ஜ.மு.க பொதுச்செயலாளர் குடுகுடுப்பை அவர்களின் வருமானம் வலையுலக குடிமக்கள் (!?) அனைவருக்கும் தெரிந்ததே. அப்படியிருக்க அவர் போன வாரம் ஒரு புது செல்போன் வாங்கி இருப்பதாக சி.பி.ஐக்கு தகவல் வந்ததை அடுத்து அவரது இல்லத்திலும் அலுவலகத்திலும் அதிரடி சோதனை நடத்தியது. அதில் அடுக்கடுக்காக பல ஆவணங்கள் சிக்கியது. அதனை அடுத்து அவர்மீது வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ இன்று அதிகாலை மூன்று மணியளவில் அவரது வீட்டு படுக்கை அறைக்குள் நுழைந்து அவரைக் கதறக் கதற இழுத்துச் சென்றது.

சிறையிலிருந்து அவர் அளித்த பேட்டியில் -
"இது ஆளுங்கட்சியின் சதி. அடுத்த 2011 தேர்தலில் கணிசமாக சீட்டுக்களை வென்று என் கட்சி ஆட்சிக்கு வந்துவிடும் என்ற பயத்தில் என்னை சிறையில் அடைத்து தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க முயற்சி செய்கிறது. அவர்களுக்கு ஒன்று கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது. அதுபோல ஆளுங்கட்சி ஆயிரம் வழக்குகள் போட்டாலும் 2011ல் நாங்கள் ஆட்சி அமைப்பதை தடுத்து நிறுத்த முடியாது" என்று கூறி விட்டு கேள்விகள் எதற்கும் பதில் அளிக்காமல் இருந்துவிட்டார்.

"பொதுச்செயலாளர் சிறையிலிடப்பட்டால் கட்சி நடவடிக்கைகள் முடக்கப்பட்டுவிடும் என்று பகல் கனவு காண்கின்றனர் ஆளுங்கட்சியினர். அது நடக்கவே நடக்காது. எங்கள் தலைவனின் பணியினை தொடர்ந்து செய்வோம். அவரை விரைவில் வெளியே கொண்டுவர ஆவன செய்வோம். தொண்டர்கள் துவண்டுவிட வேண்டாம்" துணைப் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக் கொண்ட முகிலன் மிகவும் ஆக்ரோஷமாக அறிவித்தார்.

குடுகுடுப்பை அவர்கள் கைது செய்யப்பட்டபோது "கொல்றாங்களே கொல்றாங்களே" என்று கதறிய படக்காட்சியையும், சிறைச்சாலையில் அவர் பேட்டியையும், முகிலனின் வீர உரையையும் டூப் நியூஸ் தொலைக்காட்சியில் காணலாம்.

பின் குறிப்பு: பொழுது போகலைங்க. யாரையாவது வம்புக்கு இழுக்கலாம்னு யோசிச்சேன். சும்மாதான இருக்காரு குடுகுடுப்பைன்னு... ஹி ஹி ஹி. மற்றபடி குடுகுடுப்பை டல்லாஸில் அவரது இல்லத்தில் தங்கமணி ஹரிணி சகிதம் சந்தோசமாக உள்ளார் என தெரிவித்துக்கொள்கிறேன்.

8 comments:

பழமைபேசி said...

//குடுகுடுப்பை ஹூஸ்டனில் அவரது இல்லத்தில் தங்கமணி//

அடக் கொடுமையே, டாலாசுல இருந்து குடும்பத்தோட ஹூசுடனுக்கு கொண்டு போய்ட்டாங்களா? ஆளுங்கட்சியோட அராஜகத்துக்கு அளவே இல்லையா??

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

எங்கள் கழக பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட துயரத்தின் காரணமாக நான் டீ குடிக்கிறேன்.

அதற்கான நான்கு ரூபாயை வால்பையன் செட்டில் பண்ணவேண்டும்.

அவர் தான் டீ நான்கு ரூபாய் என்று பதிவிட்டிருந்தார்.

முகிலன் said...

//அடக் கொடுமையே, டாலாசுல இருந்து குடும்பத்தோட ஹூசுடனுக்கு கொண்டு போய்ட்டாங்களா? ஆளுங்கட்சியோட அராஜகத்துக்கு அளவே இல்லையா//

சுட்டிக்காட்டியதற்கு நன்றி இப்போதே திருத்தம் போட்டு விடுகிறேன்.

நசரேயன் said...

அண்ணனுக்காக டீ குடிப்பு போராட்டம் நடத்துவேன்

பழமைபேசி said...

//நசரேயன் said...
அண்ணனுக்காக டீ குடிப்பு போராட்டம் நடத்துவேன்
//

போராட்டம் எந்த அளவுல இருக்குங்க?

ILA said...

இதற்காக அண்ணாச்சி நசரேயன் சீக்கிரமே டீ குடித்தபின், தீக்குளிப்பார். அதனை அவரே யூடியூபில் Streamingஆகவும் வர செய்வார்.

குடுகுடுப்பை said...

உணமை அங்கே.

[ஞான]-[பி]-[த்]-[த]-[ன்] said...

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
எங்கள் கழக பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட துயரத்தின் காரணமாக நான் டீ குடிக்கிறேன்.

அதற்கான நான்கு ரூபாயை வால்பையன் செட்டில் பண்ணவேண்டும்.

அவர் தான் டீ நான்கு ரூபாய் என்று பதிவிட்டிருந்தார்.
//

ரிப்பிட்டுகிறேன்