Monday, October 12, 2009

க்ரைம் கதை மன்னனின் சொதப்பல்கள்

க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் விகடனில் ஒரு புதிய தொடர்கதை தொடங்கியிருக்கிறார். அவரது கதைகளின் பெரிய ரசிகன் நான். வர வர அவரது கதைகளில் லாஜிக் இல்லாமல் போய் விட்டதா, இல்லை, உலக அனுபவம் எனக்கு கொஞ்சம் வந்து விட்டதால் எனக்கு இப்படி தோணுகிறதா என்று தெரியவில்லை.

இந்த வாரம் வெளிவந்த பாகத்தில் நான் பார்த்த சொதப்பல்கள்:

காரை விரட்டினாள் ஃப்ளோரா. ரோட்டின் நான்கு டிராக்குகளில் அதிவேக டிராக்கைத் தேர்ந்தெடுத்தாள். 140 மைல் வேகத்தில் பென்ஸ் வீல்கள் சுழன்றன

நியூ யார்க் மாகாணம் முழுவதுமே அதிக பட்ச வேகம் 65 மைல். அதில் 140 மைல் வேகத்தில் போனால் என்ன ஆகும்?

''அதற்குக் காரணம், இங்குள்ள மக்கள்தொகை. அது தவிர, நீக்ரோக்களின்...'' என்று ஃப்ளோரா பேசிக்கொண்டு இருக்கும்போதே விஜேஷின் செல்போன் ரிங்டோனை வெளியிட்டது.

அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை நீக்ரோக்கள் என்று சொல்லும் வழக்கம் 1960தோடு போய் விட்டது. அந்த வார்த்தையை உபயோகிப்பது பெரும் குற்றமாகக் கருதப் படுகிறது. அப்படி இருக்க பெரிய எழுத்தாளர் இதை உபயோகப்படுத்தியிருப்பது வேதனை அளிக்கிறது.

இதையெல்லாம் விட பெரிய (என்னை இந்த பதிவை வெளியிடத் தூண்டிய) விசயம் இந்த தொடரை வைத்து ஆனந்த விகடன் ஒரு எஸ்.எம்.எஸ் போட்டியை நடத்துகிறது. அதில் இந்த வாரத்துக்கான கேள்வி

'கிரைம் சிட்டி' என்பது எது? 1. நியூயார்க் 2. பாரீஸ் 3. கோவை, AVCRIME என்று டைப் செய்து, ஒரு ஸ்பேஸ் விட்டு, சரியான விடைக்குரிய எண்ணையும் டைப் செய்து, 562636-க்கு உடனே எஸ்.எம்.எஸ். பண்ணுங்க!


இந்தக் கேள்வியைப் படிக்கும் என் பெற்றோர்களோ இல்லை உறவினர்களோ நான் வசிக்கும் நியூ யார்க் (நான் நியூ யார்க் மாகாணத்தில் வசித்தாலும் நியூ யார்க் நகரத்தையும் மாகாணத்தையும் குழப்புபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்) பற்றி என்ன நினைப்பார்கள்?

5,00,000க்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் வசிக்க பாதுகாப்பான நகரங்களில் நியூ யார்க் 5 வது இடத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட நகரத்தை கிரைம் சிட்டி என்று அழைப்பது சரியா?

நல்ல வேளை என் மனைவிக்கு திருப்பாச்சி விஜய் மாதிரி அண்ணன் இல்லை. அப்புறம் அவர் வேறு நியூ யார்க் குற்றங்களை ஒழித்துவிட்டுதான் மறுவேலை என்று அருவாளைத் தூக்கிக்கொண்டு வந்து விடுவார்.

30 comments:

சென்ஷி said...

//நல்ல வேளை என் மனைவிக்கு திருப்பாச்சி விஜய் மாதிரி அண்ணன் இல்லை. அப்புறம் அவர் வேறு நியூ யார்க் குற்றங்களை ஒழித்துவிட்டுதான் மறுவேலை என்று அருவாளைத் தூக்கிக்கொண்டு வந்து விடுவார்.//

LOL :)

அமுதா கிருஷ்ணா said...

ராஜேஷ் குமார் எல்லாம் டீன் ஏஜில் தான் பிடிக்கும் முகிலன்....

Anonymous said...

He was a superhit when there was only DD, AIR, magazines for entertainment, ie in the 80's. In this era of totally (well almost) connected world, many Tamils with first hand exposures, such bluffs can't be digested simply.

He should realize that he need to re-invent himself. Look at Subha who moved to moviedom and gave decent products like kanaa kanden and ayan.

யாசவி said...

stopped reading r.kumar at the age of 14.

all stories in same template.

No offenses just my openion
:)

பின்னோக்கி said...

நீங்கள் நிறைய கற்றுக் கொண்டுவிட்டீர்கள் :) அது தான் காரணம்.

எழுத்தாளனின் சக்தியே, தான் போகாத இடத்திற்கு கூட வாசகனை கூட்டிக் கொண்டு போகும் திறமைதான். அதனால் சிறு பிழைகளை மன்னியுங்கள் :)

நியூயார்க் மாகாணம் முழுவதுமே 65 மைல் தான் ஸ்பீட் லிமிட்டா ? ஆச்சர்யத் தகவல்.

சொல்ல முடியாது, உங்கள் பதிவை படித்துவிட்டு அடுத்த வாரத்திலிருந்து தவறை திருத்திக்குவார் என நினைக்கிறேன்

முகிலன் said...

சென்ஷி
அமுதா கிருஷ்ணா
அனானி
யாசவி வருகைக்கு நன்றி.

பின்னோக்கி said..

//எழுத்தாளனின் சக்தியே, தான் போகாத இடத்திற்கு கூட வாசகனை கூட்டிக் கொண்டு போகும் திறமைதான்.//

மேலே நீங்கள் சொன்னதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால், தான் போகாத இடத்திற்குக் கூட கூட்டிச்செல்கிறேன் என்று இல்லாத இடத்திற்கு கூட்டிச்சென்றுவிடக்கூடாது.

எனக்கு ராஜேஷ் குமாரைப் பிடித்திருந்தது, சுஜாதா போன்றவர்களைப் படிக்கும் வரை.

செந்தழல் ரவி said...

ராஜேஷ் குமார் எல்லாம் டீன் ஏஜில் தான் பிடிக்கும் முகிலன்...////


அமுதா கிருஷ்ணனை வழிமொழிகிறேன்.

அவரது வாசகர்கள் அங்கேதான்..

டீன் ஏஜில் காமிக்ஸில் இருந்து ஸ்விட்ச் ஆக முயன்றால் கண்ணில் படுபவர் அவர்தான்.

ஆயிரம் நாவல்கள் எழுதிய அபூர்வ சிந்தாமணி.

இப்ப அவரோட புக்ஸை ரயில்வே ஸ்டேஷன்ல வாங்காதீங்க. :)))

Kaarkotaka Naagan said...

அவர் கதையோட வேகம் கூட சரி,ஆனால் முடிவு ரொம்ப வித்தியாசமாக,எதிர்பாராதவிதமாக இருக்கணும்கிறதுக்காக,கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத ட்விஸ்ட் எல்லாம் படிச்சு மண்ட காஞ்சு போயிருக்கேன்.இன்னும் 1990-ஐ தாண்டாத எழுத்தாளர்.!

Indy said...

நியூயார்க் மட்டுமல்ல, அமெரிக்கா முழுவதும் 65 மைல் தான் ஸ்பீட் லிமிட்.

அது சரி said...

//
நியூ யார்க் மாகாணம் முழுவதுமே அதிக பட்ச வேகம் 65 மைல். அதில் 140 மைல் வேகத்தில் போனால் என்ன ஆகும்?
//

என்ன ஆகும்....ஆக்ஸிடென்ட் ஆகும்...இல்லாட்டி போலீஸ் துரத்தி ஓட்டுன ஆள் ஜெயிலுக்கு போகும்...:0)))

அது சரி said...

//
அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை நீக்ரோக்கள் என்று சொல்லும் வழக்கம் 1960தோடு போய் விட்டது. அந்த வார்த்தையை உபயோகிப்பது பெரும் குற்றமாகக் கருதப் படுகிறது. அப்படி இருக்க பெரிய எழுத்தாளர் இதை உபயோகப்படுத்தியிருப்பது வேதனை அளிக்கிறது.
//

ராஜேஷ்குமார் 1950வது வருஷம் பி.எஸ்.ஸி பாஸ் பண்ணது...அதுக்கப்புறம் அவர் எதுவுமே படிக்கிறதில்லை...எழுதி குவிக்கவே அவருக்கு நேரம் போதலை...அப்புறம் எங்க இருந்து படிக்க?? :0))

குலவுசனப்பிரியன் said...

அவருடைய புதினங்களில் தகவல் பிழைகள் எப்போதுமே மலிந்து கிடக்கும். 80களில் ”ஒரு இஞ்ச் பரப்பு, இண்டெக்ரேடட் சர்க்யூட்டை அலசிப்பார்” என்று எழுதியவர்.

மற்ற எழுத்தாளர்களும் அப்படியே. சுபாவின் கதாநாயகன் ஓரிடத்தில் “இங்கே மேடாக இருக்கிறது. அதனால் ஃப்ரிக்வென்சி அதிகமாகி பேசுவது சத்தமாக கேட்கிறது” என்பான்.

இவர்களாவது பரவாயில்லை.
சுஜாதா, அவரின் புறநானூறு உரை மற்றும் சில சமூகக் கதைகளின் நேர்மையற்ற அரசியல் மூலம் மிகவும் தரம் தாழ்ந்து போனார்.

ஷங்கி said...

ஓ, இப்படி ஒரு தொடர் ஆரம்பிச்சிருக்காங்களா?! இவங்க இன்னும் அந்தக் காலம் மாதிரியே நம்மாளுங்க குண்டு சட்டியில குதிரை ஓட்டிக்கிட்டிருக்காங்க நினைக்காங்க போல! அது பரபரப்புத் தொடரா இருக்கும்!

//நல்ல வேளை என் மனைவிக்கு திருப்பாச்சி விஜய் மாதிரி அண்ணன் இல்லை. அப்புறம் அவர் வேறு நியூ யார்க் குற்றங்களை ஒழித்துவிட்டுதான் மறுவேலை என்று அருவாளைத் தூக்கிக்கொண்டு வந்து விடுவார்.//

இங்கதான் நீங்க நிக்கிறீங்க!, கலக்குறீங்க!

ஷங்கி said...

’’நியூயார்க் மட்டுமல்ல, அமெரிக்கா முழுவதும் 65 மைல் தான் ஸ்பீட் லிமிட்.//
Indy, 70, 75 மைல் ஸ்பீட் லிமிட்லாம் நான் பார்த்திருக்கேனே!

குடுகுடுப்பை said...

அண்ணே உமக்கு வயசு ஆயிடுச்சு எல்லாரும் பேசிக்கிறாங்கண்ணே. முதுகுளத்தூர் பக்கத்திலே நாங்கெல்லாம் 50 கி.மீ வேகத்தில சைக்கிள் ஓட்டினவங்கண்ணே.

முகிலன் said...

செந்தழல் ரவி

வருகைக்கு நன்றி. ஆம், அவரது பல நாவல்களை இப்போது படித்தால் அபத்தமாக இருக்கிறது.

முகிலன் said...

// Kaarkotaka Naagan said...
அவர் கதையோட வேகம் கூட சரி,ஆனால் முடிவு ரொம்ப வித்தியாசமாக,எதிர்பாராதவிதமாக இருக்கணும்கிறதுக்காக,கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத ட்விஸ்ட் எல்லாம் படிச்சு மண்ட காஞ்சு போயிருக்கேன்.இன்னும் 1990-ஐ தாண்டாத எழுத்தாளர்.!

//

ஆமாங்க.. வருகைக்கு நன்றி

முகிலன் said...

Indy said...
நியூயார்க் மட்டுமல்ல, அமெரிக்கா முழுவதும் 65 மைல் தான் ஸ்பீட் லிமிட்

இல்ல இண்டி, நான் வெஸ்ட் வெர்ஜீனியாவில் 70 லிமிட் பார்த்து இருக்கிறேன்.

முகிலன் said...

வாங்க அது சரி.

அது சரி, களவு கதையை பயணம் முடிஞ்சப்புறம் வந்து படிக்கேன்னு பின்னூட்டம் போட்டுட்டு அப்புறம் ஆளையே காணோம்?

முகிலன் said...

குலவுசனப்பிரியன்...

நீங்க சொல்றது சயின்ஸ். விஞ்ஞானம் தெரியாத ஆட்களுக்கு இது பிழைன்னு தெரியாது. ஆனா நியூ யார்க்கை க்ரைம் சிட்டின்னு சொல்றாரு பாருங்க, அதை என்னால தாங்க முடியல..

முகிலன் said...

வாங்க ஷங்கி, வருகைக்கு நன்றி..

முகிலன் said...

//குடுகுடுப்பை said...
அண்ணே உமக்கு வயசு ஆயிடுச்சு எல்லாரும் பேசிக்கிறாங்கண்ணே. முதுகுளத்தூர் பக்கத்திலே நாங்கெல்லாம் 50 கி.மீ வேகத்தில சைக்கிள் ஓட்டினவங்கண்ணே
//

ஸ்டேண்டு போட்டுட்டு சைக்கிள் ஓட்டுனதையெல்லாம் பத்தி இங்கன பேசப்படாது.

ஏதோ 70, 80 இல்ல 90ன்னாக்கூட நம்பலாம். அது என்ன 140?

முகிலன் said...

// குடுகுடுப்பை said...
அண்ணே உமக்கு வயசு ஆயிடுச்சு எல்லாரும் பேசிக்கிறாங்கண்ணே. முதுகுளத்தூர் பக்கத்திலே நாங்கெல்லாம் 50 கி.மீ வேகத்தில சைக்கிள் ஓட்டினவங்கண்ணே.

//

ஆமா அது என்ன பேச்சுவாக்குல அண்ணே? எனக்கு இன்னும் ஒரு வயசு கூட ஆகல.. சின்னப்புள்ளயப்போட்டு அண்ணெ வெண்ணேன்னுட்டு

Varadaradjalou .P said...

//நல்ல வேளை என் மனைவிக்கு திருப்பாச்சி விஜய் மாதிரி அண்ணன் இல்லை. அப்புறம் அவர் வேறு நியூ யார்க் குற்றங்களை ஒழித்துவிட்டுதான் மறுவேலை என்று அருவாளைத் தூக்கிக்கொண்டு வந்து விடுவார்//
:))

செந்தழல் ரவி said...

க்ரைம் கதை மன்னன் படிப்பதில்லை என்று அது சரி சொல்லியிருந்தார்.

அது தவறு :)

சுஜாதாவுக்கு முன்னெ 80களில் ஐசி, இரண்டாயிரத்தில் இண்டர்நெட் வைரஸ் என்று அறிமுகப்படுத்தியவர்தான் அவர்.

ஆனால் விழலுக்கிறைத்த நீர். அவருடைய ஆடியன்ஸ் சுதாவின் ஆடியன்ஸ் போலில்லாமல் பே பே ரகம். அம்புட்டுதேன்.

அது சரி said...

//
முகிலன் said...
வாங்க அது சரி.

அது சரி, களவு கதையை பயணம் முடிஞ்சப்புறம் வந்து படிக்கேன்னு பின்னூட்டம் போட்டுட்டு அப்புறம் ஆளையே காணோம்?

//

ஓ...அது ஒண்ணுமில்ல...புக் மார்க் செய்யலை...அதனால மறந்து போச்சி...இப்ப உங்களை புக்மார்க் செஞ்சிட்டேன்...

அது சரி said...

//
செந்தழல் ரவி said...
க்ரைம் கதை மன்னன் படிப்பதில்லை என்று அது சரி சொல்லியிருந்தார்.

அது தவறு :)

சுஜாதாவுக்கு முன்னெ 80களில் ஐசி, இரண்டாயிரத்தில் இண்டர்நெட் வைரஸ் என்று அறிமுகப்படுத்தியவர்தான் அவர்.

ஆனால் விழலுக்கிறைத்த நீர். அவருடைய ஆடியன்ஸ் சுதாவின் ஆடியன்ஸ் போலில்லாமல் பே பே ரகம். அம்புட்டுதேன்.

//

அட...நான் அவரு பி.எஸ்.சிக்கு அப்புறம் எம்.எஸ்.சி படிக்கலைன்னு சொன்னேன்....:)))

(ச்சே...எப்பிடியெல்லாம் சமாளிக்க வேண்டியதாருக்கு...அவ்வ்வ்வ்வ்வ்)

சங்கர் said...

//எனக்கு ராஜேஷ் குமாரைப் பிடித்திருந்தது, சுஜாதா போன்றவர்களைப் படிக்கும் வரை.//

ஒப்புக்கொள்கிறேன், ஒரே நாளில் நான்கைந்து நாவல்கள் படித்த காலம் மலையேறிவிட்டது, ஒரு புத்தகத்தில் நான்கு பக்கம் படிப்பதற்குள் அலுத்து போகிறது, பழைய நாவல்களை புது பெயர்களில் வெளியிடும் இன்னொரு கொடுமையும் உண்டு,

கைவசம் ஐம்பது, அறுபது புத்தகங்கள் உள்ளன, விரும்புவோர் (சென்னைவாசிகள் மட்டும்) மெயில் அனுப்பலாம், பதிவர் சந்திப்பில் சந்திக்கும்போது தருகிறேன்

Anonymous said...

Mukhil,

Come Texas. You have 80m speed limits during the day (I35 towards Laredo TX)

govindaraja mohan said...

Athaan titleye "Pithtralkal"nu pottuteengaley.... Thavaraana pithatralkalathan ungaludayathu....

MGR...