Sunday, November 15, 2009

கடை லீவு

சனிக்கிழமையானா லேட்டா பத்து மணிக்கு எந்திரிச்சி, பல்லு மட்டும் வெளக்கிட்டு தங்கமணி போட்டுத் தர டீயக் குடிச்சுப்புட்டு, சோஃபால கால நீட்டி உக்காந்துக்கிட்டு, கைல ரிமோட்டோட டீ.வி சேனல்களை மேஞ்சிக்கிட்டே இருந்தோம்னா மணி 12:30 ஆனதும் சுட சுட சாப்பாடு தயாராகி இருக்கும் அத சாப்புட்டுட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டு சாயந்திரம் எழுந்திருக்கலாம்.

இத உட்டுட்டு இந்த வாரம் தங்கமணிக்கு ஹெல்ப்பு பண்றேன்னு சொல்லி, காய்கறி நறுக்குரேன் பேர்வழின்னு கை விரலை நறுக்கிக்கிட்டு, எமெர்ஜென்சி ரூம் போய், 3 மணி நேரம் கழிச்சு, கையில பெரிய மாவுக்கட்டோட வீட்டுக்கு வந்தா தங்க்ஸ் கேக்குராங்க, விரல்ல லேசா கிழிச்சிக்கிட்டேன்னு தான போன இப்ப என்ன கைய முறிச்சிக்கிட்ட மாதிரி பெரிய கட்டோட நிக்கிறன்னு...

நான் என்னத்த சொல்றது? காயம் என்னவோ சுண்டு விரல்ல ரெண்டு செ.மீ அகலம் தான். ஆனா ஆழம் கூடிப்போச்சு போல. என் சுண்டு வெரலோட மேல இருக்குற எலும்பையும் தசைகளையும் இணைக்குற டெண்டனை அறுத்துட்டதால என் சுண்டு வெரல மடக்கவே முடியல. அதுனால வெறும் தையல் மட்டும் போட்டு விட்டு மூனு நாள் கழிச்சி கை ஸ்பெசலிஸ்ட் ஒருத்தர் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் போட்டு சர்ஜரி பண்ணனுமா வேண்டாமான்னு கேட்டுக்க, அது வரைக்கும் கைய அசைக்காம இருன்னு ஒரு மாவுக்கட்டு போட்டு உட்டுட்டா அந்த டாக்டர். ஏதோ அவ அழகா இருந்ததுனால ரொம்ப பதில் பேசாம சொன்னதுக்கு எல்லாம் மண்டைய மண்டைய ஆட்டிட்டு வந்துட்டேன். (இதுல டாக்டரப் பத்தி சொன்னத மட்டும் தங்க்ஸ் கிட்ட சென்ஸார்ட்).

அதுனால மகா ஜனங்களே! வெட்டுப்பட்ட விரல் வலது கையில இருக்குறதுனாலயும், நான் இடது கைப்பழக்கம் இல்லாதவனா இருக்குரதாலயும் கை சரியாகுர வரைக்கும் கடைக்கி லீவு.

மத்தவுங்க பதிவயெல்லாம் தொடர்ந்து படிப்பேன்னும், பின்னூட்டம் போட்டே ஆகனும்னு நெனக்கிம்போது பின்னூட்டம் பொடுவேன்னும் சொல்லிக்கிறேன்.

4 comments:

ரோஸ்விக் said...

இந்த மாதிரி வேலை பாக்கும்போது உஷாரா இருங்க ராசா...ஆமா, அந்த டாக்டர பாக்கமுடியுமா? :-))

கலகலப்ரியா said...

=)).. aiyo aiyo... hmm... nadakkattu nadakkattu..

குடுகுடுப்பை said...

என்னை சமைக்கசொன்னா காய்கறிய வெட்டாமலே போட்டிருவேன்.

கறி வெட்ட கத்தரி வெச்சிருக்கேன்.

Unknown said...

ரோஸ்விக், நீங்க ராச்சஸ்டர் வந்தீயன்னா நான் காட்டுறேன் அந்த டாக்டர.

கலகலப்ரியா - வருகைக்கு நன்றி

குடுகுடுப்பை - அதுனால தான் நீங்க பொதுச் செயலாளர், நான் வெறும் தொண்டன்.