Wednesday, July 7, 2010

புறக்கணிப்பு

குழந்தை பிறப்பு என்பது ஒரு நெடிய ப்ராசெஸ். கர்ப்பமான முதல் மூன்று மாதங்களில் வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வரும். எதை வாயில் போட்டாலும் குமட்டிக் கொண்டு வெளியே வந்து விடும். தலை சுற்றலும் மயக்கமும் காலையிலும் மாலையிலும் வாட்டி எடுத்து விடும். பிடித்த உணவுகள் பிடிக்காமல் போய் விடும். சிலருக்கு தலை வலியும் வருத்தி எடுக்கும்.

அடுத்த ஆறு மாதங்களில் வாய்க்கு ருசியாகச் சாப்பிட நாக்கு ஏங்கும். தன் சமையலே தனக்குப் பிடிக்காமல் போய் விடும். குழந்தை வயிற்றுக்குள் அசைய ஆரம்பித்தவுடன் தூக்கம் போய் விடும். குழந்தைக்காக ஒருக்களித்தே படுக்க வேண்டி இருக்கும். நின்று கொண்டே இருந்தால் கால் நரம்புகளில் ரத்தம் அதிகம் பாய்ந்து வெரிகோஸ் வெயின்ஸ் வரும். நடந்தால் மூச்சு வாங்கும். ஹார்மோன்களின் உள்ளே வெளியே விளையாட்டால் எரிச்சலும் கோபமும் கும்மாளம் போடும்.

கடைசியாக பிரசவ நேரத்தின் வேதனையையும் வலியையும் பற்றி சொல்லவே வேண்டாம். அதை மறு பிறப்பு என்றே சொல்வார்கள்.

இத்தன வேதனைகளையும் பொறுத்துக் கொண்டால், இறுதியாக நம் கையில் தவழும் அழகுக் குழந்தை இத்தனை நாள் பட்ட வேதனைகள் அத்துனையையும் மறக்கடிக்கும்.

சில சோகமான தருணங்களில் குழந்தை இறந்தே பிறந்து விடுவதோ, அல்லது தாய் பிரசவத்தில் மரணிப்பதோ, பிறந்த குழந்தை ஏதோ குறை பாட்டுடன் பிறந்து விடுவதோ தவிர்க்க முடியாதது.

இந்த வேதனைகளையும், தவிர்க்க முடியாத எதிர் நிகழ்வுகளையும் பார்த்து விட்டு ஆணியே புடுங்க வேண்டாம் என்று யாரும் இருந்து விடுவோமா?

பவனின் இந்தப் பதிவுக்கு வந்த சில பின்னூட்டங்களின் சாரம் அப்படித்தான் இருந்தது.

எந்த ஒரு போரோ போராட்டமோ பக்க விளைவுகள் இல்லாமல் வந்திடாது. அந்தப் பக்க விளைவுகளுக்குப் பயந்து அந்த போரையோ போராட்டத்தையோ நிறுத்தி விட்டால் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு எப்படிக் கிடைக்கும்? மேலே சொன்னது போல சில சமயங்களில் நிரந்தரத் தீர்வு கிட்டாமலேக் கூடப் போகலாம். அல்லது நாம் எதிர்ப்பார்த்த நிரந்தரத் தீர்வு குறை பாட்டுடன் இருந்து விடலாம். அதற்காக போராடாமல் இருக்க முடியுமா? இருந்து விடுங்கள் என்று சொல்கிறார்கள் ஒரு சாரார். போராட்டத்தையே கேலி செய்கிறார்கள் ஒரு சாரர்.

முள்வேலிக்குப் பின் நிற்கும் தமிழ்ச் சகோதரர்களின் படத்தை நடுவில் போட்டு, ஒரு பக்கத்தில் அசின் படத்தையும் இன்னொரு பக்கத்தில் போராட்டம் நடத்துவோர் படத்தையும் போட்டு, “அசின் ஷூட்டிங்குக்கு வந்தா அவ கூட ஒரு படம் எடுக்கலாமெண்டு நெனச்சா விடமாட்டாங்க போலருக்கே இந்தப் பொடியள்” என்று ஒரு கமெண்டையும் போட்டால் அது எந்த அளவுக்கு அவர்களின் வேதனையை கேலி செய்வதாக இருக்குமோ அப்படி இருந்தது பவனின் இந்தப் பதிவு.

இலங்கை சிங்களப் பேரினவாத அரசு புலிகளை ஒழிக்கத் தீவிரமாக போரில் ஈடுபட்டு நாட்டின் பொருளாதாரத்தையும் பத்திரிக்கை சுதந்திரத்தையும் ஒரு சேர நசுக்கிக் கொண்டிருந்த போது வெள்ளை வேனுக்குப் பயந்து மூச்சுக் காட்டாமல் இருந்தவர்கள் எல்லாம், இன்று இலங்கையைப் புறக்கணிப்போம் என்ற போராட்டத்தை முன் வைக்கும் போது, அதனால் பொருளாதாரம் பாதிக்கிறதென்றும், அப்பாவி தமிழன் தலையில் அந்தப் பொருளாதாரச் சுமை விழுகிறதென்றும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இதன் பின்னணியில் இருக்கும் இந்திய உளவுத்துறையின் வேலையைப் பற்றி அறியாமல் பவனைப் போல இளைஞர்களும் அந்த வலையில் விழுந்து விட்டார்கள்.

என் நாட்டின் பேரைச் சொல்லி அரசியல் ஆதாயம் தேடுவதா என்று கோபப் படுகிறீர்கள் பவன். நீங்கள் முதலில் ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவில் இலங்கைத் தமிழரின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தி ஆட்சியைப் பிடித்து விடவோ, ஆயிரம் வீடு கட்டவோ முடியாது. செலவு செய்யாமல் போடக் கூடிய ஓட்டையே போட பெரும்பாலான தமிழர்கள் தயாராய் இல்லாத போது, இலங்கையின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தி முன்னேறுவதாவது? காமெடி செய்கிறீர்கள் பவன் (முன்பாவது விடுதலைப் புலிகள் காசு கொடுக்கிறார்கள் என்று பகடி செய்து கொண்டிருந்தார்கள். இப்போது அவர்களும் இல்லையே?)

பவன், apartheid என்ற வார்த்தை பாப்புலராக இருந்த காலத்தில் நீங்கள் பிறந்திருக்கவே மாட்டீர்கள். கறுப்பின மக்களை தனிமைப் படுத்தி சட்டம் இயற்றியது தென்னாப்பிரிக்க அரசு. இதனைக் கடுமையாக எதிர்த்த நெல்சன் மண்டேலாவை சிறையில் தள்ளியது. நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்தன. தென்னாப்பிரிக்காவுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்த நிறுவனங்களை அவர்களின் நாட்டு குடிமக்கள் தொடர்புகளைத் துண்டிக்குமாறு வற்புறுத்தினார்கள். தென்னாப்பிரிக்க விளையாட்டு அணிகள் ஒலிம்பிக் முதலாக அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்ள தடை விதிக்கப் பட்டன. தென்னாப்பிரிக்காவின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப் பட்டது. இதனால் தென்னாப்பிரிக்காவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப் பட்டது. வேறு வழியில்லாமல் வெள்ளைப் பேரினவாத அரசு இறங்கி வந்தது. 27 வருடங்கள் சிறையில் பூட்டப் பட்டிருந்த நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப் பட்டார். கறுப்பின மக்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு ஐ.நாவின் மேற்பார்வையில் தேர்தல் நடத்தப்பட்டது. பெரு வாரியான வாக்கு வித்தியாசத்தில் நெல்சன் மண்டேலா ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.

அந்தக் கால கட்டத்தில் தென்னாப்பிரிக்காவை பொருளாதார நெருக்கடிக்குள் ஆளாக்கினால் அங்கிருக்கும் கறுப்பின மக்களும் பாதிக்கப் படுவார்களே என்று நினைத்திருந்தால் இன்றும் தென்னாப்பிரிக்கா இனவாத அரசாகவே இருந்திருக்கும். நெல்சன் மண்டேலாவும் சிறையிலேயே மரணித்திருப்பார்.

இலங்கையையும் இப்படி ஒரு நெருக்கடிக்குள் உள்ளாக்க வேண்டும். இந்திய அரசும் சீன அரசும் மட்டுமே இலங்கையின் பக்கம் இருக்கின்றன. ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே இலங்கையை போர்க்குற்றவாளி ஆக்கிவிட்டது. அமெரிக்காவும் வாய்ப்பை எதிர்பார்த்தே இருக்கிறது. இலங்கைப் பொருட்களை வாங்காமல் தவிர்த்தும், இலங்கையோடு வணிகத் தொடர்பு வைத்திருக்கும் நிறுவனங்களை தொடர்புகளை நிறுத்த வற்புறுத்தியும் வந்தோமானால் தென்னாப்பிரிக்காவின் நிலைக்கு இலங்கை தள்ளப்படும். அதன் மூலம் தமிழனுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு - தனி நாடோ, சுயாட்சியோ - கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. என் போலவே இதை குறிக்கோளாகக் கொண்டு போராடும் பலருக்கும் இருக்கிறது.

இது கொஞ்சம் மெதுவான ப்ராசஸ் தான். இன்று கர்ப்பமாகி நாளைக் காலையே குழந்தை பெற்றுவிட முடியாது. அதே போல இன்றைய கர்ப்பத்தின் பக்க விளைவுகளுக்குப் பயந்து கர்ப்பத்தைக் கலைத்துவிட்டால் குழந்தை கிடைக்காமலே போய்விடும்.

உங்கள் பதிவின் பின்னூட்டங்களின் மூலம் பல சிங்களர்களுக்கும் இதே மனப்பாங்கு இருக்கிறதென்று தெரிகிறது. அவர்களைத் திரட்ட கல்லூரி மாணவராகளாகிய நீங்கள் ஏன் முன்வரக் கூடாது? உள்ளுக்குள் இருந்து போராடுங்கள். வெளியிலிருந்து சர்வதேசத்தின் கவனத்தை உங்கள் நாட்டின் மீது திருப்ப நாங்கள் எங்களால் ஆனதை முயற்சிக்கிறோம்.

உடனே, வெளிய இருந்து என்ன வேணும்னா சொல்லலாம். உள்ள வந்து பாரு என்று சொல்லக் கூடாது. தென்னாப்பிரிக்காவின் போராட்ட வரலாற்றைப் படித்துப் பாருங்கள். அதிலிருந்து ஒன்றிரண்டு இலைகளை உருவிக் கொள்ளலாம்.

இன்று வரை சாமானிய ஈழத் தமிழன் சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்துப் போராட ஒன்று திரளவில்லை என்பதே ஈழப் போராட்டத்தின் பின்னடைவுக்கு ஒரு முக்கியக் காரணம்.

47 comments:

எறும்பு said...

Hmm serious post..

http://rkguru.blogspot.com/ said...

nalla pathivu...

vasu balaji said...

/இன்று வரை சாமானிய ஈழத் தமிழன் சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்துப் போராட ஒன்று திரளவில்லை என்பதே ஈழப் போராட்டத்தின் பின்னடைவுக்கு ஒரு முக்கியக் காரணம்./

ஓரளவு சரிதான். ஆனால் தென்னாப்பிரிக்காவில் டக்ளசும், கருணாவும், பிள்ளையானும் இன்ன பிறர்களும் இல்லை. ஐநாவாவது கொய்நாவாவது நீ நடத்து ராசா என்று சீனாவும், இந்தியாவும் இல்லை. மண்டேலாவை கைது செய்ததை எதிர்க்கவில்லை. கருப்பரினத்தை இழிவு செய்ததைத்தான் எதிர்த்தேன் என்று யாரும் சொல்லவில்லை. எனக்கு வாக்களித்தால் என்று இல்லாததை சொல்லி பல்டியடிக்கவில்லை. மண்டேலாவை விட்டிருப்பார்களென்றால் நான் ஆட்சியை எப்போதோ துறந்திருப்பேன் என்று பகடி செய்ய ஆளில்லை. பவன் இதைத்தான் சொல்லியிருப்பதாகக் கருதுகிறேன்.

நெடுமாறன் ஒருவர் போதும் ஈழத்தமிழரை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பதற்கு உதாரணம்.

Prathap Kumar S. said...

சரியான பதி(ல்)வு... முகிலன்...

Paleo God said...

out of Box thinking அப்படின்னாலே இப்படித்தான் போல!

Unknown said...

//பவன் இதைத்தான் சொல்லியிருப்பதாகக் கருதுகிறேன். //

//தமிழுக்காக போராடுகிறோம் என்ற பெயரில் பாடசாலையில் சிறுபிள்ளைகள் ஆசிரியரிடம் முறையிடுவது போல குற்றச்சாட்டுகளைச் சுமத்திவரும் புத்திசாலிகளின்(:P) எதிர்காலத்திட்டங்கள்//

இந்த வரிகளைப் பார்த்தால், பவன் கருணாநிதியைப் பகடி செய்வது போலத் தெரியவில்லை. கருணாநிதிக்கு ஈழ ஆதரவாளர்களின் போராட்டத்தைக் கேலி செய்ய கம்பு எடுத்துக் கொடுப்பது போலத் தான் உள்ளது.கருணாநிதி, ஜெயலலிதா போன்றோரின் ஓட்டுப் பொறுக்கி ஈழ ஆதரவு நிலையை பகடி செய்திருந்தால் அத்துணை பின்னூட்டங்கள் அங்கே வந்திருக்காது என்பது என் கருத்து.

Unknown said...

எறும்பு
ஆர்.கே.குரு
நாஞ்சில் பிரதாப்
ஷங்கர்ஜி

நன்றி

ஹேமா said...

அரசியல் புரிதல் நிறையவே தேவைப்படுகிறது.நன்றி முகிலன்.

தர்ஷன் said...

உங்கள் குழந்தை கதையைக் கேட்டால் இன்னமும் தமிழீழக் கனவில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

// போராட்டத்தையே கேலி செய்கிறார்கள் ஒரு சாரர்.//

போராட்டத்தை எவரும் கேலி செய்ய வில்லை முகிலன். யதார்த்தத்திற்கு ஒவ்வாத போராட்டங்களின் உள்நோக்கங்களைப் பற்றிய விமர்சனமே அது.

//வெள்ளை வேனுக்குப் பயந்து மூச்சுக் காட்டாமல் இருந்தவர்கள் எல்லாம், இன்று இலங்கையைப் புறக்கணிப்போம் என்ற போராட்டத்தை முன் வைக்கும் போது, //

வெள்ளை வேனுக்கு அஞ்சி இருந்து விட்டு இன்று போராடுபவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள் எனச் சொல்ல முடியுமா? இன்று நீங்கள் சொல்லும் போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் புலம் பெயர்ந்தவர்கள் அல்லது தமிழகத்தில் வாழும் சீமான் போன்ற தமிழ் இனவாதிகள்( வேண்டுமானால் இனவாதம் என்ற வார்த்தையின் வீரியத்தைக் குறைக்க உணர்வாளர் என்னும் பதத்தை பயன்படுத்தலாம்) .

//நீங்கள் முதலில் ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவில் இலங்கைத் தமிழரின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தி ஆட்சியைப் பிடித்து விடவோ, ஆயிரம் வீடு கட்டவோ முடியாது. //

அதுதான் நீங்கள் மனமுவந்து இலவசங்களுக்கு ஆசைப்பட்டு காங்கிரசுக்கு வாக்களித்தப் போதே புரிந்ததே.

கலகலப்ரியா said...

இவ்ளோ பெரிய போஸ்ட்டா... அப்புறம் படிக்கறேன்..

தர்ஷன் said...

நீங்கள் சொல்ல வரும் தீர்வுத்தான் என்ன? எஞ்சியுள்ள சொற்ப தமிழரும் போராடி செத்துப் போக வேண்டுமென்பதா? சற்றே யதார்த்தபூர்வமாய் சிந்தித்துப் பாருங்கள் எவ்வடிப்படையில் தமிழீழம் சாத்தியம் எனக் கருதுகிறீர்கள்.
வடக்கே வாழ்ந்தோரில் வாய்ப்புக் கிடைத்தோர் வெளிநாடுகளுக்கும் இன்னும் சிலர் தமிழகத்திற்கும் கொஞ்சம் பேர் தென்னிலங்கைப் பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்தப்பின் அங்கேயே இரு தரப்பினதும் தாக்குதலால் நொந்து தின்னவும் வழியில்லாது செத்துப் போனவர்களின் சுற்றத்தாரைக் கேட்டுப் பாருங்கள்.
அல்லது போலிஸ் பதிவுகளோடும், அடையாள அட்டையோடும் பெரும்பான்மையின் சந்தேக பார்வைக்கு இலக்காகி வாழ்ந்த தலைநகர தமிழர்களைக் கேட்டுப் பாருங்கள்.
தேவை தமிழீழமா அல்லது நிம்மதியான வாழ்வா என ?
தமிழீழத்தை வேண்டுபவர்கள் இன்று ஈழத்தில் இல்லை அவர்கள் தாம் சொகுசாக வாழும் மதர்ப்பில் பொழுது போகாமற் போடும் தமிழீழக் கோஷம் இங்கே மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல மேலும் இக்கட்டுக்குள் தள்ளும் என்பது ஏன் உங்களுக்கு புரியவில்லை.

Unknown said...

பெரிய வாக்கியமாய் எழுதும்போது அர்த்தம் அனர்த்தம் ஆகி விடுகிறது போல. தர்ஷன் பண்க்சுவேஷனை சரியாகப் பாருங்கள். வெள்ளை வேனுக்கு பயந்தவர்கள் இன்று போராடுகிறார்கள் என்று சொல்லவில்லை. அவர்கள் என்றுமே போராட மாட்டார்கள் என்பது தெரிந்ததே. அப்படி பயந்தவர்கள் தான் இன்று இலங்கையைப் புறக்கணிப்போம் என்று ஈழ ஆர்வலர்கள் போராடும்போது அப்பாவி தமிழன் பாதிக்கப் படுவான் என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்

Unknown said...

Iஇரண்டாம் குடிமக்களாகவே இருந்து விட்டுப் போகிறோம் அதுவே போதும் என்று நீங்களே நினைத்தால் என்ன செய்வது? உயிரை விட உரிமை பெரிதென்று நினைத்த காலம் போய் வயிற்ருக்குக் காஞ்சி கிடைத்தால் மானமாவது மயிராவது என்று நினைப்பவர்கள் அதிகமாகி விட்டால்  என்ன ஆகும்?

தர்ஷன் said...

சரி முகிலன் நீங்கள் முன்வைக்கும் தீர்வு என்ன ? அதை எப்படி சாத்தியப் படுத்தலாம்?

Unknown said...

சுயாட்சி / தனி நாடு / சட்ட ரீதியிலான சம உரிமை இதில் எது கிடைத்தாலும் பரவாயில்லை.

தர்ஷன் said...

தென்னாபிரிக்க நிலை வேறு நிறவெறி அரசை அனைத்துலகம் கண்டித்ததும் தடை ஏற்படுத்தியதும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆட்சியமைக்கவும் நிறவெறி அகலவும் காரணமாக அமைந்தது. அங்கு மிக வெளிப்படையான முறையில் நிறவெறியின் அடிப்படையில் வெள்ளையருக்கு சில அனுகூலங்கள் வழங்கப்பட்டன.
இலங்கை நிலவரம் வேறு. இனவாதம் இரு சாராரிலும் இருப்பது. திட்டமிட்ட முறையில் தலைவர்களால் வளர்த்தெடுக்கப் பட்டது.
அமெரிக்காவோ ஐரோபிய யூனியனோ இலங்கை மேல் தடைகளை விதிக்க காரணம் தமிழர் மேல் உள்ள அன்பினால் அல்ல இது சீனாவுடனும் ரஷ்யாவுடனும் ஈரானுடனும் நட்பு பாராட்டுவதாலேயே

தர்ஷன் said...

வடக்கில் முழுமையாகத் தமிழர்கள் இருந்தாலும் அவர்கள் சொற்பமே. கிழக்கில் மூவின மக்களும் சம அளவிலேயே வாழ்கின்றனர். வடக்கில் இருந்து ஏலவே புலிகளால் விரட்டப் பட்ட அனுபவமுள்ள முஸ்லிம்கள் ஒரு நாளும் தமிழ் தலைமைத்துவத்திற்கு கீழான தனிநாட்டுக்கு ஆதரவு தர மாட்டார்கள். இலங்கை வாழ் தமிழரும் தனிநாட்டின் சாத்தியமின்மையை அறிந்தே உள்ளனர். யாழ் கிழக்கு மக்களிடையே கருணா விவகாரத்திற்கு பின் கசப்புணர்வு உருவாகி உள்ளமை உண்மை. ஆயுத ர்தியில் போராடும் பலம் முற்றிலுமாக அகன்று விட்டது. ஆகத் தனி நாட்டுக்கான போராட்டத்தை மேற்கொள்வது சாத்தியமே இல்லாத ஒன்று.

தர்ஷன் said...

ஐக்கிய இலங்கைக்குள் சுயாட்சி என்பதே பொருத்தமானது என்ற நிலையில் அரசியல் தீர்வுக்கான பயணத்தை இப்போராட்டங்கள் மேலும் சிக்கலாக்காதா? அரசியல் தீர்வைப் பார்த்தாலும் எம்மாதிரியான தீர்வு. சமஷ்டி என்ற பதமே சிங்களவர்களால் கெட்ட வார்த்தையாக பார்க்கப் படுகிறது. ஆக குறைந்தபட்சம் உள்ளக சுய நிர்ணய உரிமைக்கேனும் மிகுதியாக உழைக்க வேண்டும். தீர்வு இணைந்த வடகிழக்கில் என்பது தமிழரின் ஆசையாக இருந்த போதும் கிழக்குத் தமிழரில் ஒரு சாராரும் முஸ்லிம்களும் அதற்கு உடன் பட போவதில்லை. இதுவல்லாமல் முஸ்லிம்கள் அம்பாறை மாவட்டத்தை உள்ளடக்கிய நிலத் தொடர்பற்ற சுயாட்சி பிரதேசத்தை ஏற்கனவே கோரி வருகின்றனர். ஆக இத்தனையையும் சமாளித்து அரசியல் தீர்வை அடைய வேண்டிய பயணத்தில் இந்தப் போராட்டங்கள் அதற்கு எவ்வாறு உதவும் என்பதே என் கேள்வி.

தர்ஷன் said...

தனி நாடு அமையும் பட்சத்தில் புவியியல்,கலாசார ரீதியில் முற்றிலும் வேறான மலையகத் தமிழருக்கு தாங்கள் தரும் தீர்வு என்ன? சிங்களவோரோடு கலந்து வாழும் இவர்களுக்கு முகங்கொடுக்க நேரும் இன்னல்களை எப்படி களையலாம்.

தர்ஷன் said...

//பெரிய வாக்கியமாய் எழுதும்போது அர்த்தம் அனர்த்தம் ஆகி விடுகிறது போல. தர்ஷன் பண்க்சுவேஷனை சரியாகப் பாருங்கள். வெள்ளை வேனுக்கு பயந்தவர்கள் இன்று போராடுகிறார்கள் என்று சொல்லவில்லை. அவர்கள் என்றுமே போராட மாட்டார்கள் என்பது தெரிந்ததே. அப்படி பயந்தவர்கள் தான் இன்று இலங்கையைப் புறக்கணிப்போம் என்று ஈழ ஆர்வலர்கள் போராடும்போது அப்பாவி தமிழன் பாதிக்கப் படுவான் என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்//

ஆம் போராடுபவர்கள் வெள்ளை வேனுக்கு பயந்தவர்கள் அல்ல. போரின் நிழல் சற்றும் தம் மீது படியாது வெளிநாடுகளுக்கு ஓடி சென்றவர்கள்.

Unknown said...

I am not in a position to give a detailed response now. But thanks tharshan for bringing up a healthy argument. I will get back to you when time permits

வில்லங்கம் விக்னேஷ் said...

தர்ஷன் ஸாப் நீங்கோ மாத்தளய வுட்டு வடக்கு கெழக்குல இருந்திருக்கீங்களாங்கோ?
என்பத்துமூணுல பொறந்தே இருந்திருப்பீங்களாங்கோ?
ஐக்கிய எலங்கன்னு சொல்லறீங்களே அத பற தெமலோ இந்தியாகிட்ட ஓடுடா பள்ளோங்குற ஆளுங்ககிட்ட இத்தினி நாளு சொன்னிங்களாங்கோ?
துட்டு யாரு தர்றானு தெர்யுது.

கன்கொன் || Kangon said...

தர்ஷன் விளக்கமாக பின்னூட்டியிருக்கிறார்....
நான் ஒன்றுமே சொல்லத் தேவையில்லை.
வடக்கில் பிறந்து அங்கு 18 வருடகாலம், இரண்டு பெரிய போர்களுக்கு நடுவே மூட்டை முடிச்சுக்களோடு ஓடியவன் என்ற வகையில் யதார்த்தங்கள், போர் மீதான மக்களின் பார்வைகள் என்பவற்றை சிறிதாவது அறிவேன்.
இன்னும் போராட்டங்கள், தமிழீழ அரசுகள், நாடுகடந்த அரசுகள் போன்றவற்றை நம்ப மக்கள் தயாராக இல்லை.

ஆனால் உங்கள் பதிவில் உங்கள் கருத்துக்களிடையேயே முரண்பாடுகள் உண்டு.

நீங்கள் பதிவில் இதைச் சொல்கிறீர்கள்.
நீங்கள் முதலில் ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவில் இலங்கைத் தமிழரின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தி ஆட்சியைப் பிடித்து விடவோ, ஆயிரம் வீடு கட்டவோ முடியாது. செலவு செய்யாமல் போடக் கூடிய ஓட்டையே போட பெரும்பாலான தமிழர்கள் தயாராய் இல்லாத போது, இலங்கையின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தி முன்னேறுவதாவது? காமெடி செய்கிறீர்கள் பவன்

பின்னூட்டத்தில் இதைச் சொல்கிறீர்கள்.
கருணாநிதி, ஜெயலலிதா போன்றோரின் ஓட்டுப் பொறுக்கி ஈழ ஆதரவு நிலையை பகடி செய்திருந்தால் அத்துணை பின்னூட்டங்கள் அங்கே வந்திருக்காது என்பது என் கருத்து.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் வாக்குப் பொறுக்கிகள் என்றால் சீமான், வைகோ போன்றவர்கள் உத்தமர்களா?

யோ வொய்ஸ் (யோகா) said...

பவனின் கோபியின் கருத்தை வழி மொழிகிறேன்

Think Why Not said...

அன்புடன் முகிலனுக்கு,

பவனின் வலைப்பூவில் நிகழ்ந்த விவாதங்களில் தவறான கண்ணோட்டத்தை / புரிதலை உங்களுக்கு வழங்கிவிட்டோமோ என அஞ்சுகிறேன்..

நாங்கள் யாரும் போராட்டத்தையோ போராடுபவர்களையோ குறை சொல்லவில்லை... போராட்டத்தை கிண்லடிப்பவர்களாயிருந்தால் இங்கு 3 தசாப்பங்களாக எத்தனையோ உயிர்களை இழக்க போராடியிருக்க மாட்டார்கள்...

நாங்கள் எதிர்த்தது இலக்கு இல்லாத போராட்டத்தையே.. யதார்தத்தை புரிந்து கொள்ளாத போராட்டத்தையே!! "எல்லாவற்றையும் இழந்து நடைப்பிணங்களாய் இருக்கும் மக்களுக்கு கிடைக்கும் ஒரு வேளை / இரு வேளை உணவையும் உங்கள் போராட்டத்தையும் இல்லாமல் செய்து விடுமானால் அப்போராட்டம் அவசியம்தானா என கேட்கிறோம்.." மரத்தால் விழுந்தவனை லொறி ஏற்றி கொல்லுவது போராட்டம் அமைவதால் யாருக்கு பிரயோசனம்..
போராட்டங்கள் மக்களுக்கானதாய் இருக்கவேண்டுமே ஒழிய போராட்டங்களுக்காய் மக்கள் அல்ல..

முகாமில் உள்ள மக்களை எல்லாம் கொன்றுவிட்டு யாருக்கு தீர்வு வாங்கி தரப் போகிறீர்கள்..? முதலில் அவர்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து மீள வாழ வழி வகை செய்து விட்டு சரியான புரிதலுடன் போராட்டங்களை தொடங்குவோம்...

சரியான புரிதல் இன்றி சினிமாவையோ நிகழ்ச்சிகளையோ எதிர்த்து கொண்டிருப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லை என்பதெ எமது தாழ்மையான கருத்து.. (பொருளாதாரம் பற்றி யாருமே கவலைப்படவில்லை என்பதை அறிக, எமது கருத்துக்கள் முகாம்களில் உள்ள மக்கள் சார்ந்தே இருக்கிறது / இருக்கும்)

வில்லங்கம் விக்னேஷ் said...

எல்லாவற்றையும் இழந்து நடைப்பிணங்களாய் இருக்கும் மக்களுக்கு கிடைக்கும் ஒரு வேளை / இரு வேளை உணவையும் உங்கள் போராட்டத்தையும் இல்லாமல் செய்து விடுமானால் அப்போராட்டம் அவசியம்தானா என கேட்கிறோம்.."

தமிழ்நாட்டிலே புலம்பெயர்நாட்டிலே ஈழஅரசியல் பேசப்படாவிட்டால், கொத்தபாய தேனும் பாலும் ஓடிப்பாய வாய்க்காலா கொத்திவைத்துவிடுவார்?

அப்படியானால், புலம்பெயர் தமிழர்கள் ஐரோப்பாவினை இலங்கைக்குச் சகாயநிதியையும் ஐநா விசாரணையைக் கைவிடவும் கேட்டுக்கொள்ளவேண்டுமென்றுதானா சொல்ல வருகின்றீர்கள்?

அது சரி(18185106603874041862) said...

முகிலன்,முற்றிலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பதிவு

அது சரி(18185106603874041862) said...

//
தர்ஷன் said...
உங்கள் குழந்தை கதையைக் கேட்டால் இன்னமும் தமிழீழக் கனவில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

// போராட்டத்தையே கேலி செய்கிறார்கள் ஒரு சாரர்.//

போராட்டத்தை எவரும் கேலி செய்ய வில்லை முகிலன். யதார்த்தத்திற்கு ஒவ்வாத போராட்டங்களின் உள்நோக்கங்களைப் பற்றிய விமர்சனமே அது.
//

தர்ஷன்,

அது எதார்ததிற்கு உதவாத போரட்டமில்லை...ஒரு வகையில் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கும் வகையை சார்ந்த போராட்டமே. மனித உரிமைகளை மிதிக்கும் நாடுகள் மீது ஐ.நா பொருளாதார தடை விதிப்பது போன்றது தான் இதுவும்...

இப்பொழுது இது கேலிக் கூத்தாக தெரியலாம்...ஆனால் தமிழ் திரையுலகம் ஏதோ அவர்களால் முடிந்ததை செய்கிறார்கள்...அதை ஏன் நக்கல் செய்ய வேண்டும்?

அது சரி(18185106603874041862) said...

//
தென்னாபிரிக்க நிலை வேறு நிறவெறி அரசை அனைத்துலகம் கண்டித்ததும் தடை ஏற்படுத்தியதும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆட்சியமைக்கவும் நிறவெறி அகலவும் காரணமாக அமைந்தது. அங்கு மிக வெளிப்படையான முறையில் நிறவெறியின் அடிப்படையில் வெள்ளையருக்கு சில அனுகூலங்கள் வழங்கப்பட்டன.
இலங்கை நிலவரம் வேறு. இனவாதம் இரு சாராரிலும் இருப்பது. திட்டமிட்ட முறையில் தலைவர்களால் வளர்த்தெடுக்கப் பட்டது.
அமெரிக்காவோ ஐரோபிய யூனியனோ இலங்கை மேல் தடைகளை விதிக்க காரணம் தமிழர் மேல் உள்ள அன்பினால் அல்ல இது சீனாவுடனும் ரஷ்யாவுடனும் ஈரானுடனும் நட்பு பாராட்டுவதாலே
//

இப்பொழுது உங்கள் நிலைப்பாடு என்ன?

யாரும் எந்த தடையும் விதிக்க கூடாது, அது இலங்கையின் உள்நாடு பிரச்சினை என்று சொல்லி ராஜபக்ஷேவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்து விடலாமா?

இது எங்கள் நாட்டு பிரச்சினை, எவனும் தலையிட வேண்டாம் என்று நீங்களும் சொல்கிறீர்கள்...ராஜபக்ஷேவும் அதை தான் சொல்கிறான்...நல்ல கருத்தொற்றுமை...

உண்மை தான்...இதில் அரசியல் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இலங்கை பிரச்சினை ராஜபக்சேவின் பிரச்சினை, இலங்கையின் உள்நாட்டு பிரச்சினை, எவனும் தலையிட வேண்டாம் என்று நீங்கள் மட்டுமல்ல யாருமே சொல்ல முடியாது. ஏனெனில் அந்த பிரச்சினையில் விளைவு எல்லா இடத்திலும் தான் எதிரொலிக்கிறது...

அது சரி(18185106603874041862) said...

//
வடக்கில் முழுமையாகத் தமிழர்கள் இருந்தாலும் அவர்கள் சொற்பமே.
//

சொற்பமே?? உங்கள் அகராதியில் சொற்பமே என்பதன் அளவு என்ன? சில பல லட்சங்கள்?

சரி, பத்தாயிரமாக கூட இருக்கட்டும்...அதற்காக அவர்கள் கொன்றழிக்கப்பட்டாலும் பரவாயில்லையா?

//
கிழக்கில் மூவின மக்களும் சம அளவிலேயே வாழ்கின்றனர். வடக்கில் இருந்து ஏலவே புலிகளால் விரட்டப் பட்ட அனுபவமுள்ள முஸ்லிம்கள் ஒரு நாளும் தமிழ் தலைமைத்துவத்திற்கு கீழான தனிநாட்டுக்கு ஆதரவு தர மாட்டார்கள். இலங்கை வாழ் தமிழரும் தனிநாட்டின் சாத்தியமின்மையை அறிந்தே உள்ளனர். யாழ் கிழக்கு மக்களிடையே கருணா விவகாரத்திற்கு பின் கசப்புணர்வு உருவாகி உள்ளமை உண்மை. ஆயுத ர்தியில் போராடும் பலம் முற்றிலுமாக அகன்று விட்டது. ஆகத் தனி நாட்டுக்கான போராட்டத்தை மேற்கொள்வது சாத்தியமே இல்லாத ஒன்று
//

ஆயுத பலம் அகன்று விட்டது என்பது பலருக்கு தெரியும்...அதற்கான காரணங்களும் தெரியும்...

அதற்காகத் தான் இந்த பொருளாதார ரீதியான நடவடிக்கைகள்...ஆனால், இதுவும் கூட உங்களுக்கு பிடிக்கவில்லை...அதனால் தான், இந்த "இது எங்க ஏரியா உள்ள வராதே" போன்ற பதிவுகள்...

தனி நாடு என்றுகூட இல்லை, அவர்களுக்கான குறைந்த பட்ச மனித உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன என்பது தான் உண்மை...அந்த குறைந்த பட்ச உரிமைகளாவது அவர்களுக்கு வேண்டும் என்பது தான் அடிப்படை நோக்கம்...

மற்றபடி இலங்கை பிரச்சினை வைத்து அரசியல் நடத்தி முகிலனோ, இல்லை நானோ அடுக்கு மாளிகைகள் கட்டப் போவது இல்லை.

அது சரி(18185106603874041862) said...

//

ஐக்கிய இலங்கைக்குள் சுயாட்சி என்பதே பொருத்தமானது என்ற நிலையில் அரசியல் தீர்வுக்கான பயணத்தை இப்போராட்டங்கள் மேலும் சிக்கலாக்காதா? அரசியல் தீர்வைப் பார்த்தாலும் எம்மாதிரியான தீர்வு. சமஷ்டி என்ற பதமே சிங்களவர்களால் கெட்ட வார்த்தையாக பார்க்கப் படுகிறது. ஆக குறைந்தபட்சம் உள்ளக சுய நிர்ணய உரிமைக்கேனும் மிகுதியாக உழைக்க வேண்டும். தீர்வு இணைந்த வடகிழக்கில் என்பது தமிழரின் ஆசையாக இருந்த போதும் கிழக்குத் தமிழரில் ஒரு சாராரும் முஸ்லிம்களும் அதற்கு உடன் பட போவதில்லை. இதுவல்லாமல் முஸ்லிம்கள் அம்பாறை மாவட்டத்தை உள்ளடக்கிய நிலத் தொடர்பற்ற சுயாட்சி பிரதேசத்தை ஏற்கனவே கோரி வருகின்றனர். ஆக இத்தனையையும் சமாளித்து அரசியல் தீர்வை அடைய வேண்டிய பயணத்தில் இந்தப் போராட்டங்கள் அதற்கு எவ்வாறு உதவும் என்பதே என் கேள்வி.
//

ஆக, இலங்கைப் பிரச்சினையை சிக்கலாக்கியதே தமிழ் திரையுலகம் தான் என்று சொல்வீர்கள் போல இருக்கிறது....

இந்த போராட்டங்கள் உடனடியாக உதவாது தான்...ஆனால், இனவெறிப் பிடித்த சிங்கள அரசை மெல்ல மெல்ல தனிமைப்படுத்துவது தான் இப்பொழுது இருக்கும் ஒரே வழி...அதற்கு பெரும் தடையாக இருப்பது, உலகின் மிகப்பெரிய நிறவெறி நாடான இந்தியாவும், மாஃபியா கும்பலான சைனாவும்.....ஆனால், அதற்காக முயல்வதே தவறு என்று எப்படி சொல்ல முடியும்??

என்னைப் பொறுத்த வரை, நீங்களே சொல்வது போல,இது உங்களைப் போன்ற கொழும்பு வாழ் தமிழர்களுக்கான போராட்டம் அல்ல...கொன்று குவிக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம்...உங்களுக்கு விருப்பமில்லை எனில் விலகி இருக்கலாம்...உணர்வு இருப்பவர்கள் தங்களால் முடிந்த அளவு போராட்டத்தை பதிவு செய்யத்தான் செய்வார்கள்...அதை நீங்கள் தடை செய்ய முடியாது.

கன்கொன் || Kangon said...

தென்னாபிரிக்கா அரசியல் எல்லாம் கதைக்கும் அரசியல் விற்பன்னர்களுக்கு...

தென்னாபிரிக்காவில் கிட்டத்தட்ட 80 சதவீதமானவர்கள் கறுப்பர்கள் என்று சொல்லப்படுகின்ற இனத்தவர்கள்.
வெறுமனே 9 சதவீதமானவர்களே வெள்ளையர்கள் என்று சொல்லப்படுபவர்கள்.
9 சதவீதம் வேறு நிறப்பிரிவினர்.
2.6 சதவீதம் ஆசியர்கள்.

ஆகவே அங்கு ஒதுக்கிவைக்கப்பட்டது ஒரு பெரும்பான்மை இனம்.
அதனால் அந்த இனத்தினுடைய போராட்டத்தையும் இங்கு வெறுமனே 12.6 + 5.2 சதவீத தமிழர்கள் பற்றிய பிரச்சினையையும் ஒப்பிடாதீர்கள்.
அங்கிருந்த நிலைமைகள் வேறு.

கன்கொன் || Kangon said...

@அதுசரி
// ஒரு வகையில் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கும் வகையை சார்ந்த போராட்டமே. மனித உரிமைகளை மிதிக்கும் நாடுகள் மீது ஐ.நா பொருளாதார தடை விதிப்பது போன்றது தான் இதுவும்... //

ஐ.நாடுகள் சபை என்ன செய்கிறது?
நாளை பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் இங்குள்ள தமிழர்கள் என்ன செய்வது என்று யோசித்தீர்களா?
இங்குள்ள யாருமே பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதை விரும்பவில்லை, எந்த இனமென்று இல்லை.
ஆகவே தேவையற்று முடிவுகளை எம் மீது திணிக்காதீர்கள்.

// இப்பொழுது இது கேலிக் கூத்தாக தெரியலாம்...ஆனால் தமிழ் திரையுலகம் ஏதோ அவர்களால் முடிந்ததை செய்கிறார்கள்...அதை ஏன் நக்கல் செய்ய வேண்டும்? //

தமிழ் திரையுலகம் ஒன்றுமே செய்யவில்லை.
வெறுமனே உணர்ச்சிப் பீறீட்டால் செய்யப்படுபவனவே இவை.
கடைசியாக தமிழர்களால் IIFA தோற்றுப்போனது என்று வரலாறு சொல்ல ஒரு தேசப்பற்றாளன் வந்து திரும்பவும் தமிழர்களைப் பகைக்கப் போகிறான்.

இலங்கைக்கு நடிகர்களை படப்பிடிப்புக்கு செல்லத் தடை செய்யும் தமிழ் திரையுலகம் இங்கு தங்கள் திரைப்படங்களை அனுப்புவதைத் தவிர்க்க ஆயத்தமாக இருக்கிறதா?
அதைச் செய்தால் இங்கு வருவதற்கான தடையை நான் மனமுவந்து ஏற்கிறேன்.
இங்கு படப்பிடிப்பு வரக்கூடாதாம், ஆனால் அவர்கள் சொல்கிற அதே இரத்த பூமிக்கு திரைப்படங்களை அனுப்பி அதன்மூலம் உழைத்துக் கொள்ளலாமாம்.
இந்த இரட்டை வேடத்தைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.

கன்கொன் || Kangon said...

// ஆக இத்தனையையும் சமாளித்து அரசியல் தீர்வை அடைய வேண்டிய பயணத்தில் இந்தப் போராட்டங்கள் அதற்கு எவ்வாறு உதவும் என்பதே என் கேள்வி. //

இதற்கும்

// ஆக, இலங்கைப் பிரச்சினையை சிக்கலாக்கியதே தமிழ் திரையுலகம் தான் என்று சொல்வீர்கள் போல இருக்கிறது.... //

இதற்கும் என்ன சம்பந்தம்?
தர்ஷன் சொல்கிறார் இந்தப் போராட்டங்கள் ஒருபோதும் உதவாது.
ஆனால் அதன் அர்த்தம் தமிழ் திரையுலகம் தான் இந்தப் பிரச்சினைகளுக்கு காரணம் என்பதா?

இந்தப் போராட்டங்கள் ஏதோ ஒருவகையில் அடிப்படை சிங்கள மக்களிடம் தமிழர்கள் பற்றிய கசப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதும், அந்தக் கசப்புணர்வு எதிர்காலத்தில் வெறுப்பாக மாறலாம் என்பதும் உண்மை.
வெறுமனே நாட்டில் 12.6 + 5.2 சதவிகிதமாக உள்ள இனம் கிட்டத்தட்ட 74 சதவிகிதமுள்ள ஒரு இனத்தோடு காழ்ப்புணர்வுடன் அதன் ஆட்சியின் கீழே வாழமுடியாது என்பது யதார்த்தம்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//தென்னாபிரிக்காவில் கிட்டத்தட்ட 80 சதவீதமானவர்கள் கறுப்பர்கள் என்று சொல்லப்படுகின்ற இனத்தவர்கள்.
வெறுமனே 9 சதவீதமானவர்களே வெள்ளையர்கள் என்று சொல்லப்படுபவர்கள்.//

உரிமைகளுக்காக சிறுபான்மையினர் போராடி வென்ற உதாரணம் வேண்டுமென்றால், அமெரிக்காவின் கறுப்பினத்தவர்களை எடுத்துக் கொள்ளுங்கள்..

கன்கொன் || Kangon said...

// உரிமைகளுக்காக சிறுபான்மையினர் போராடி வென்ற உதாரணம் வேண்டுமென்றால், அமெரிக்காவின் கறுப்பினத்தவர்களை எடுத்துக் கொள்ளுங்கள்.. //

புத்தகங்களையும் வரலாறுகளையும் மட்டும் படித்துவிட்டு உதாரணம் சொல்வதற்கு மட்டுமே அவை உதவும்.
கறுப்பினத்தவர்கள் ஆயதம் தரித்து 30 வருடகாலம் போராடினார்களா?

ஒவ்வொரு நாட்டினதும் பிரச்சினைகளும், அதற்குரிய காரணங்களும், அங்கு நடந்த, நடக்கின்ற சம்பவங்களும் வேறுபாடானவே.
புரிந்துகொள்ளுங்கள்.
மேம்போக்கான கருத்துக்கள் மாத்திரமே உங்களிடமிருந்து கிடைக்கின்றன.
யதார்த்தங்களை உணர யாராவும் முடியவில்லை, அதைத்தான் சொல்கிறோம்.

Unknown said...

கன்கொன், நீங்கள் ஆயுதம் தரித்துப் போராடினீர்களா?

அங்கே போரில் அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்து கொண்டிருந்த போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

உங்களுக்காக ஆயுதம் ஏந்தி ஒருவன் போராடுவான். பிள்ளை குட்டிகளையும் போர் முனையில் நிறுத்தி செத்து மடிவான். நீங்கள் கொழும்பில் ஏ.சி அறையில் உட்கார்ந்து டிவியில் இலங்கையும் இந்தியாவும் ஆடிய கிரிக்கெட் மேட்சைப் பார்த்து கைதட்டி ரசித்துக் கொண்டிருந்திருப்பீர்கள்.

அப்போது எங்கே போனீர்கள்? போரை நடத்திய சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்து என்ன செய்தீர்கள்? அப்போதெல்லாம் சும்மா இருந்துவிட்டு இப்போது போராடுபவர்களைப் பகடி செய்யாதீர்கள்

Subankan said...

அன்பின் முகிலன்,

யுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்ந்து டிவியில் இலங்கையும் இந்தியாவும் ஆடிய கிரிக்கெட் மேட்சைப் பார்த்து கைதட்டி ரசித்துக் கொண்டிருக்காதவன் என்ற அறிமுகத்துடனும், இல்லை ஏதோ ஒரு நாட்டில் உட்கார்ந்து குழுவாக உட்கார்ந்து குடித்துக்கொண்டு இலங்கையைப்பற்றி கலவைப்படாதவன் நான் என்ற அறிமுகத்துடன் உங்களுக்குப் பின்னூட்டுகிறேன்.

மனதைத் தொட்டுச் சொல்லுங்கள், இதுவரை இலங்கையின் யுத்தத்தின் அவ்வளவு கஸ்டங்களையும் அனுபவித்துவிட்டு இன்னும் இலங்கையில் வாழ்ந்துகொண்டிருக்கும் எத்தனைபேரை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள்? அவர்களது மனநிலை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அல்லது சொன்னால்தான் ஏற்றுக்கொள்வீர்களா?

(இலங்கை) யுத்தம் என்பது உங்களுக்குச் செய்தியாகத்தான் தெரியும். எங்களுக்கு அதுவே வாழ்க்கையின் ஒரு அங்கமாக இதுவரை மாறிப்போயிருந்தது. பிறந்ததுமுதல் எனக்கு அதுதான் நிலைமை. இந்த யுத்தத்தால் நாங்கள் இழந்தது ஆயிரக்கணக்கான உறவுகளை மட்டுமல்ல, எத்தனையோ வளங்கள், எங்கள் அடிப்படையாக இருந்த கல்வி, இன்னும் பல சின்னச்சின்ன சந்தோஷங்கள். முப்பது வருடங்கள் நிலைமை இதுதான். நிச்சயமாக நாங்கள் போராடினோம், நியாயமான காரணத்துக்காகப் போராடினோம். ஆனால் அதனால் நாங்கள் பெற்றுக்கொண்டவற்றை விட இழந்துவிட்டவை அதிகம். யுத்தம் இடம்பெற்ற இடங்களை வந்து பாருங்கள். உங்கள் சுடுகாடுகள் சிலவேளை அதைவிட நன்றாக இருக்கலாம். எங்களுக்கு இப்போது முதல் தேவையாக இருப்பது எங்கள் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதும், வாழ்க்கையை மீள அமைத்துக்கொள்வதுதான். நடிகர் நடிகைகளை எதிர்த்து புகழ் பெறுவதோ, இல்லை அவர்களுடன் புகைப்படம் எடுப்பதோ இல்லை.

நெருப்புக்கு வெளியே 'குளிருக்குள்' இருப்பவர்களுக்கு நெருப்பின் வெதுவெதுப்பு இதமாகத்தான் இருக்கும். ஆனால் நெருப்புக்குள் இருப்பவர்களுக்குத்தான் அதன் வெம்மை புரியும். புரிந்துகொள்ளுங்கள்.

கலகலப்ரியா said...

SENSIBLE POST!!!!

கலகலப்ரியா said...

||Subankan said...||

சுபாங்கன்...

என்ன விதமான அணுகுமுறை இது?

என்ன குளிருக்குள்ள இருந்தாலும்.. நெருப்புன்னா சுடும்ன்னு தெரியும்தானே?..

அங்க இருக்கிற ஜனங்களுக்கு கஷ்டம்தான்.. அதாவது.. காங்கேசன் துறைல பத்து ஆர்மி செத்துப்போனா... பருத்தித்துறைல நூறு குண்டு விழும்... ரெண்டு குழந்தை சாவும்... இப்டி அவங்க அடிக்கிறது ஒன்னும் புதுசில்ல... விரல அசைப்பியா.. கைய வெட்டுவேன்.. கைய அசைப்பியா.. தலைய வெட்டுவேன்னு.. இந்த அடக்குமுறைக்காகதானே உடம்பில குண்ட கட்டிக்கிட்டு அலைஞ்சாங்க?

(பொதுவா தமிழன்னே சொல்றேனே.. எனக்கு பிரதேசவாதம்.. தேசியவாதம் எல்லாம் கேட்டுக் கேட்டு போதும் போதும்ன்னு ஆய்டுத்து..)

பிரதேசங்களை அபிவிருத்தி செய்வது... வாழ்க்கையை மீள அமைத்துக் கொள்வது எல்லாம் சரிதான்... ஆனா... எதயோ மறந்துட்டோம் போல இருக்கே... ம்ம்..

எதுக்கெடுத்தாலும்.. வெளிநாட்டில உள்ளவங்களுக்கு எதும் தெரியாது... ஏசி.. குளிர்.....இப்டியே சொல்லிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்... (பக்கத்து வீட்டில வீடு எரிஞ்சா அப்பாடா... நம்ம கூரை தப்பிச்சதுன்னு பெருமூச்சு விட்டே பழக்கமாயிடுத்தா?) வெளிநாட்டில உள்ளவங்க நிலமை அங்க உள்ளவங்க நிலமைய விட ஒன்னும் குறைஞ்சதில்ல.. சித்தப்பிரம்மை பிடிச்சு அலைறது நிறைய... (ஒரு வேளை அந்த வட்டத்தில இருந்து வெளில வந்து பார்த்தா உங்களுக்குக் கூடத் தெரியலாம்... முக்கிய தேவை.. உணவா... அபிவிருத்தியா.. அல்லது.. சுதந்திரமா சுவாசிக்கறதுக்கு கொஞ்சம் காத்தான்னு..)

திரும்பவும்... அங்க உள்ள ஜனங்களோட கவலை... பயம்.. கஷ்டம் எல்லாம் புரியுதுன்னாலும்.. இவ்ளோ மேலோட்டமா இந்தப் பதிவை எதுக்கு பார்க்கறீங்க?.. இப்போ எல்லாரும் துப்பாக்கி எடுத்துப் போராடுங்கன்னு இங்க யாரும் சொல்லலயே..?

கருணாநிதி ஐயா... ரெண்டு மணி நேரம் உண்ணா விரதம் இருந்தா... அத நக்கல் பண்ணலாம்.. திட்டலாம்.. காறித்துப்பலாம்.. .ஆனா.. ஏதாவது பண்ணனுமேன்னு உணர்வுபூர்வமா பண்றத கேலி பண்ணா.. நல்லாவா இருக்கு?

யாருக்காவது இதயம் கிழிஞ்சு தொங்குதுன்னா.. .மத்தவங்க இதயத்த கிழிச்சுதான் அத உணரணும்ன்னு எதுமில்லை... மத்தவங்க உணர்வுக்கு கொஞ்சம் மதிப்பு கொடுக்கலாம்... நீங்க உணர்ச்சிவசப்படாம இருக்கலாம்... அதே மாதிரி நம்மளுக்கு மட்டுமில்ல.. உலகத்தில எங்க கஷ்டம்னாலும் நாமளும் உணர்வ வெளிப்படுத்தலாம்... (ட்ரை பண்ணுங்களேன்..)

இந்தப் புள்ளில... முகிலன்.. உங்க உணர்வுகளுக்கு என்னோட வந்தனம்.. :)

Unknown said...

பின்னூட்டம் பெறுதற்பொருட்டு

கன்கொன் || Kangon said...

// முகிலன் said...

கன்கொன், நீங்கள் ஆயுதம் தரித்துப் போராடினீர்களா?

அங்கே போரில் அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்து கொண்டிருந்த போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

உங்களுக்காக ஆயுதம் ஏந்தி ஒருவன் போராடுவான். பிள்ளை குட்டிகளையும் போர் முனையில் நிறுத்தி செத்து மடிவான். நீங்கள் கொழும்பில் ஏ.சி அறையில் உட்கார்ந்து டிவியில் இலங்கையும் இந்தியாவும் ஆடிய கிரிக்கெட் மேட்சைப் பார்த்து கைதட்டி ரசித்துக் கொண்டிருந்திருப்பீர்கள்.//

அதைத்தான் நான் சொல்கிறேன்.
மீண்டுமொரு போராட்டத்தை நடத்துமாறு சொல்ல எனக்கு எந்தவுரிமையும் இல்லை.
அதேபோல் தான் உங்கள் எல்லோருக்கும்.
எனது குடும்பத்திற்கு நான் எப்படித் தேவையானவனோ அதேபோல் தான் மரணித்துப் போன அந்தச் சகோதரர்களின் குடம்பத்திற்கும்.
அதைத்தான் சொல்கிறேன், வீணான உசும்பல்களும், இனத்தின் பெயரால் உசுப்பல்களும்.

// அப்போது எங்கே போனீர்கள்? போரை நடத்திய சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்து என்ன செய்தீர்கள்? அப்போதெல்லாம் சும்மா இருந்துவிட்டு இப்போது போராடுபவர்களைப் பகடி செய்யாதீர்கள் //

போர் நடைபெற்றது இரண்டு பிரிவினரிடையே.
அரசு மட்டும் போர் நடத்தியது என்று சொல்கையில் உங்கள் மேம்போக்குக் கருத்துத் தெரிகிறதே?
நான் இங்கு மக்களுக்காக, மக்களுக்காக மட்டுமே கதைக்கிறேன்.

உங்களுக்கு எங்கள் பெயரால் அரசியல் செய்ய முடியுமானால் அதைக் கிண்டல் செய்ய முழு உரிமையும் எனக்கு இருக்கிறது.

கன்கொன் || Kangon said...

// கலகலப்ரியா said...

||Subankan said...||

சுபாங்கன்...

என்ன விதமான அணுகுமுறை இது?

என்ன குளிருக்குள்ள இருந்தாலும்.. நெருப்புன்னா சுடும்ன்னு தெரியும்தானே?.. //

ஆனால் எந்தளவு சுடும் என்பது நெருப்புக்குள் இருந்தவனுக்குத் தான் தெரியும்.
உங்களுக்கு எங்கள் பிரச்சினைகள் புரியவில்லை என்று யாருமே இங்கு கதைக்கவில்லை, ஆனால் புரிய வேண்டிய அளவிற்கு புரியவில்லை என்கிறோம்.

நெருப்புக்குள் விழுந்தவனை முதலில் தூக்குவதை விட்டுவிட்டு தள்ளிவிட்டவனைத் தேடியலைகிற போக்கைத் தான் வேண்டாம் என்கிறோம்.

கலகலப்ரியா said...

முகிலன்...

க்ரிக்கெட் பற்றி ஒரு போஸ்ட் போடுங்க... நான் படிச்சுப் புரிஞ்சுக்கப் பார்க்கறேன்...

இல்லைன்னா.. ஏதாவது திரைப்பட விமர்சனம் எழுதுங்க..

அதுவும் இல்லைன்னா... உங்க ஸ்பெஷல் க்ரைம் கதை எழுதுங்க..

எதுக்கு வம்பு... நாம எல்லாம் பேசக்கூட அருகதையற்றவர்கள்... பேசப்டாது...

மண்ணோட மண்ணாப் போய் நாசமாப் போனவங்க ஆவி யாராவது வந்து பேசட்டு... அப்போ இன்னொரு ஆவி.. நீயென்ன பேசுறது... நாந்தான் பெரிய ஆவின்னு வந்து சண்டை போடட்டு...

நாம திருந்த மாட்டோம் அப்பு...

Unknown said...

///இன்று வரை சாமானிய ஈழத் தமிழன் சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்துப் போராட ஒன்று திரளவில்லை என்பதே ஈழப் போராட்டத்தின் பின்னடைவுக்கு ஒரு முக்கியக் காரணம்///

முகிலன்...
தமிழ் நாடு. இறையாண்மை மிகுந்த இந்தியாவின் ஒரு மாநிலம். தமிழ் பேசுபவர்கள் ஆட்சி செய்கிற மாநிலம். வேறு ஒரு நாடு வந்து எந்த மயிரையும் புடுங்கமுடியாது. காசு கொடுத்து ஓட்டு வாங்குகிறார்கள். ஜனநாயகத்தைக் கொல்கிறார்கள் இப்போது ஆட்சியிலிருப்பவர்கள். அழகிரி வெளிப்படையாக ரவுடி அரசியல் பண்ணுகிறார். ஒரு சாமான்ய மனிதராக அவரை எதிர்த்து உங்களால் போராட முடியுமா? அப்படியானால் உலக நாடுகளின் உதவியோடு ஒரு போராட்டத்தை அடக்கியொடுக்கிய அரசொன்றுக்கெதிராக, மூன்று நாட்கள் உப்புக் கடல் தண்ணியைக் குடித்து அதே உப்புக்கடல் தண்ணீரில் 6 மாதப் பிள்ளைக்கு செரிலாக் கரைத்து உணவூட்டி முல்லைத் தீவிலிருந்து பருத்தித்துறைக்கு டோறா படகில் கட்டி இழுத்துச் சென்று உயிர்ப்பிச்சையளிக்கப்பட்ட ஒரு சாமானியத் தமிழன் போராட ஒன்றுதிரளவில்லை என்று எப்படி நீங்களோ, கனடாவில் இருக்கிற நானோ சொல்லலாம்? எங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. ஒன்று திரளாத அந்தச் சாமானியன் பக்கத்து நியாயம் எங்களுக்குத் தெரியவேண்டாமா? (முப்பது வருடமாக போன வழி சரியோ பிழையோ, ஒன்று திரண்டு போராடியது அதே சாமனியத் தமிழ்க்கூட்டம்தான் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்)

Unknown said...

//முகிலன்...
தமிழ் நாடு. இறையாண்மை மிகுந்த இந்தியாவின் ஒரு மாநிலம். தமிழ் பேசுபவர்கள் ஆட்சி செய்கிற மாநிலம். வேறு ஒரு நாடு வந்து எந்த மயிரையும் புடுங்கமுடியாது. காசு கொடுத்து ஓட்டு வாங்குகிறார்கள். ஜனநாயகத்தைக் கொல்கிறார்கள் இப்போது ஆட்சியிலிருப்பவர்கள். அழகிரி வெளிப்படையாக ரவுடி அரசியல் பண்ணுகிறார். ஒரு சாமான்ய மனிதராக அவரை எதிர்த்து உங்களால் போராட முடியுமா? அப்படியானால் உலக நாடுகளின் உதவியோடு ஒரு போராட்டத்தை அடக்கியொடுக்கிய அரசொன்றுக்கெதிராக, மூன்று நாட்கள் உப்புக் கடல் தண்ணியைக் குடித்து அதே உப்புக்கடல் தண்ணீரில் 6 மாதப் பிள்ளைக்கு செரிலாக் கரைத்து உணவூட்டி முல்லைத் தீவிலிருந்து பருத்தித்துறைக்கு டோறா படகில் கட்டி இழுத்துச் சென்று உயிர்ப்பிச்சையளிக்கப்பட்ட ஒரு சாமானியத் தமிழன் போராட ஒன்றுதிரளவில்லை என்று எப்படி நீங்களோ, கனடாவில் இருக்கிற நானோ சொல்லலாம்? எங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. ஒன்று திரளாத அந்தச் சாமானியன் பக்கத்து நியாயம் எங்களுக்குத் தெரியவேண்டாமா? (முப்பது வருடமாக போன வழி சரியோ பிழையோ, ஒன்று திரண்டு போராடியது அதே சாமனியத் தமிழ்க்கூட்டம்தான் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்//

கிருத்திகன் - முதலில் காசு கொடுத்து ஓட்டு வாங்கி ரவுடி அரசியல் நிகழ்த்துவதையும், மனித உரிமையைக் காலால் மிதித்து சொந்த நாட்டு குடிமக்களையே இரண்டாம் தரமாய் நடத்தும் சர்வாதிகாரத்தையும் ஒரே தட்டில் உங்களால் எப்படி வைத்துப் பார்க்க முடிகிறது?

ஈழ விடுதலை இன்று வரை ஒரு குழுப்போராட்டமாக இருந்திருக்கிறதே தவிர என்றைக்காவது மக்கள் போராட்டமாக மாற்றப்பட்டிருக்கிறதா?

எப்படி புலம்பெயர்ந்த தமிழர்கள் போரை நிறுத்தச் சொல்லி ஐரோப்பாவிலும், அவுஸ்திரேலியாவிலும், அமெரிக்காவிலும் கனடாவிலும் தெருவில் பதாகைகள் ஏந்திப் போராடினார்களோ அது போல அன்றைக்கிருந்து போராடி வந்திருந்தோமானால் இன்றைக்கு கருணாவும் டக்ளஸும் உதித்திருப்பார்களா? அப்படியே உதித்திருந்தாலும் மக்கள் செல்வாக்குடன் வாக்கு வாங்கி எம்.பி மந்திரி என்று அரசியல் நடத்தியிருக்க முடியுமா?

இதைத்தான் சாமானியத் தமிழன் ஒன்று திரளவில்லை என்று சொல்லியிருக்கிறேன் என்பதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

Unknown said...

கிருத்திகன்,

உப்புக் கடல் தண்ணீரைக் குடித்து அதே உப்புத்தண்ணீரில் பால்மா கரைத்து குழந்தைக்குப் புகட்டிய அதே தேசத்தில் இன்னொரு தமிழன் ஏசி அறையில் இருந்து கொண்டு கிரிக்கெட் பதிவுகள் எழுதி வர முடிகிறது. முல்லைத்தீவிலிருந்து பருத்தித் துறைக்கு டோறா படகில் இழுத்துச் சென்று உயிர்ப்பிச்சை அளிக்கப்பட்ட அந்தத் தமிழனுக்குப் போராட உடம்பில் சக்தி இருந்திருக்காது. யாழிலும் கொழும்பிலும் இணைய வசதி வரை கொண்டிருந்த தமிழன் போராடியிருக்கலாமே?

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் போரை நிறுத்தும் வரை கல்லூரி வளாகத்துக்குள்ளேயே உண்ணாவிரதம் இருந்தார்கள்.

சிகரெட் பற்ற வைக்கும் போதோ விளக்கை ஏற்றும் போதோ கையில் சிறு நெருப்பு பட்டுவிட்டால் துடித்துப் போகிறோம். தன் உடம்பு முழுக்க மண்ணெண்ணை ஊற்றி பற்ற வைத்துக்கொண்டானே எங்கள் முத்துக் குமரன், அவன் செய்யவில்லையா தியாகம்.

அப்போதெல்லாம் ஏன் கொழும்பில் வசித்த தமிழர்கள் திரண்டு போராட முன்வரவில்லை.

இதையும் தான் சாமானியத் தமிழன் போராட வரவில்லை என்று சொல்கிறேன்.