Tuesday, July 27, 2010

பதிவுலகில் நான் (மட்டும்) உத்தமன்

சில தொடர்பதிவுகளுக்கு நம்மை அழைக்க மாட்டார்களா என்று காத்திருப்போம். அதை முதலில் படித்தவுடனே நாம் எழுதினால் இப்படி எழுத வேண்டும் என்று ஒரு கற்பனை செய்து வைப்போம். கிரிக்கெட் தொடர் பதிவு ஆரம்பிக்கப் பட்ட போது அப்படித்தான் நினைத்தேன். இந்தத் தொடர்பதிவையும்.


இப்படி நினைக்கும் போதுதான் நம்மை யாரும் அழைத்துத் தொலைய மாட்டார்கள். கடைசியில் நம்மை அழைக்கும் போது பலர் எழுதியிருப்பார்கள். நான் நினைத்து வைத்திருந்த அத்தனையையும் யாராவது எழுதியிருப்பார்கள். வடை போச்சே என்று உட்கார்ந்திருக்க வேண்டும். வேறு வழி? 


இந்தத் தொடர்பதிவுக்கு என்னை அழைத்த சகோதரி சின்ன அம்மிணிக்கு நன்றி (இவர்தான் என்னை முதல் தொடர்பதிவுக்கு அழைத்தவர்)




1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
முகிலன்.
 
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
இல்லை.

எனக்கு என் பெற்றோர் வைத்த பெயர் வடமொழிப் பெயரான காரணத்தால், ஒரு நல்ல தமிழ்ப் பெயர் வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தேன். அப்போது, என் மகனுக்கு அவன் தந்தை வைத்த நல்ல தமிழ்ப் பெயரான முகிலன் எனக்குப் பிடித்துப் போகவே அதையே வைத்துக் கொண்டேன்.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

வில்லு படம் வெளிவந்த நேரம். வலையுலகில் வில்லு பட விமர்சனங்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது குடுகுடுப்பை அவர்கள் எழுதிய விமர்சனத்தைப் பார்க்க நேர்ந்தது. அவரது நகைச்சுவை இழையோடிய எழுத்தைப் படித்ததும் அவருக்கு வாசகனாகிப் போனேன். அப்போது எனக்கு தமிழ்மணம் தமிழிஷ் என்பதெல்லாம் என்ன என்றே தெரியாது. அவரது வலைப்பூவை மட்டும் என் உலவியில் விருப்பமானவைகளில் சேமித்துக் கொண்டு அவர் புதிய பதிவு போடப் போட போய் படிப்பேன். பின்னர், அவருக்குப் பின்னூட்டங்கள் போடத் துவங்கினேன். ஒரு முறை டாக்டர்.சுரேஷுடன் ஒரு விவாதம் கூட செய்தேன். அதன் பின்னர் ப்ளாக்கர் இலவசமாகக் கிடைக்கிறது என்றதும், நானும் ஒரு வலைப்பூவை ஆரம்பித்து அதற்கு பிதற்றல்கள் என்ற பெயரையும் வைத்து பிதற்றி வந்தேன்.  குடுகுடுப்பை அவர்களின் ஆலோசனைப் படி தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தின் என் வலைப்பதிவைச் சேர்த்தேன்.
 
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
இதுவரை ஒன்றுமே செய்யவில்லை. யாரையும் ஓட்டுப் போடச் சொல்லிக் கூட கேட்டதில்லை

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
சிலவற்றைப் பகிர்ந்திருக்கிறேன். சிலவற்றை புனைவு போல எழுதியிருக்கிறேன். விளைவு சிலமுறை வீட்டில் திட்டு வாங்கி போட்ட பதிவுகளை அழித்தும் இருக்கிறேன். 

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு முகிலன் என்ற ஒரு உயிரி இருந்தது என்பதைச் சொல்லிப் போவதே என் வலைப்பூவின் நோக்கம்.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
இரண்டு. எனக்கிருந்த கிரிக்கெட் ஆர்வக்கோளாறால் இந்தப் பதிவில் பல கிரிக்கெட் இடுகைகளை இட்டு வந்தேன். கிரிக்கெட் பிடிக்காத சில நண்பர்கள் எரிச்சல் அடைவதைக் கண்டு கிரிக்கெட்டுக்கு என்று ஒரு வலைப்பூ துவங்கினேன். 

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

நகோபம் பல முறை பட்டிருக்கிறேன். அப்படிக் கோபம் வரும்போது அவர்களின் இடுகையில் பின்னூட்டங்கள் மூலமாகவோ இல்லை நெகட்டிவ் ஓட்டுக்கள் மூலமாகவோ என் கோபத்தை/எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டு வந்திருக்கிறேன். சில நேரங்களில் பின்னூட்டங்களில் விவாதமும் நிகழ்த்தியிருக்கிறேன். எப்போதாவது எதிர்வினையும்.


இந்த இடத்தில் பொறாமை என்பதை விட ஏக்கப் பெருமூச்சு என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இவர்களைப் போல எழுத முடியவில்லையே என்று நான் ஏங்கும் பதிவர்கள் பலர். நான் பின் தொடரும் அனைவரையும் பார்த்து நான் ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். ஓரிருவரைச் சொல்லி மற்றவர்களைச் சொல்லாமல் விட நான் விரும்பவில்லை.  

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
பின்னூட்டம் எனக்கு முதல் முதலில் இட்டது (நான் தமிழ்மணத்தில் இணைக்கும் முன்பே) குடுகுடுப்பை. அவரே என்னை வலைச்சரத்திலும் அறிமுகப் படுத்தினார். என்னுடன் முதன் முதலில் தொலைபேசியில் உரையாடியதும் அவரே.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...


விருப்பம் இல்லை. 


இத் தொடரைத் தொடர நான் அழைக்கும் ஆட்கள்


1. சகோதரி கலகலப்ரியா
2. நண்பர் அதுசரி
3. சேட்டைக்காரன்
4. மதுரை நண்பர் கார்த்திகைப் பாண்டியன்.
5. பட்டா பட்டி

43 comments:

Unknown said...

தலைவா.. நீங்க சொன்னபடி உங்க பேரை பல தடவை போட்டு வச்சிட்டேன். பேசினபடி செக் அனுப்பி வச்சிருங்க.

Unknown said...

10வது கேள்விக்கு இப்பவே பதில் சொல்லிட்டா அப்புறம் மத்த பதிவெல்லாம் எப்பிடிப் போடுறது? சரக்கில்லாமப் போயிருமே?

எல் கே said...

rightu neengala vadaya saapiitta eppadi

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமால்ல நீங்க ஒரு முறை குறும்படம் விமர்சனத்தை எதிர்த்து பதிவிட்டுட்டு மேலிடம் திட்டறாங்கன்னு அழிச்சீங்க .. :)

சாந்தி மாரியப்பன் said...

//10வது கேள்விக்கு இப்பவே பதில் சொல்லிட்டா அப்புறம் மத்த பதிவெல்லாம் எப்பிடிப் போடுறது?//

:-)))))))))டாப்பு.

vasu balaji said...

/தலைவா.. நீங்க சொன்னபடி உங்க பேரை பல தடவை போட்டு வச்சிட்டேன். பேசினபடி செக் அனுப்பி வச்சிருங்க.//


ந்னோ! தளபதி அது சரி இடுகையில் இல்லாத வார்த்தையை போட்டு போங்காட்டம் ஆடி இலக்கியவாதி என்று சொன்னதற்காகவும், பிழையில்லாமல் நேற்று போட்ட இடுகையைக் கண்டும் எளக்கிய அணியைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சி இது. இதில் தலைவர் பெயரைக் களங்கம் செய்ய முயற்சிப்பதை வன்மையாக எதிர்க்கிறேன். (தலவா! எனக்கு செக் வேணாம்!!)

/கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...//

தெரியவேண்டிய தகவலைத் தரமறுப்பது தகவலறியும் சட்டத்தின் கீழ் குற்றமாகும். சட்டத்துறைத் தலைவர் நடவடிக்கை எடுப்பாரா?

/என் மகனுக்கு அவன் தந்தை வைத்த நல்ல தமிழ்ப் பெயரான/

இது தன்னடக்கமா? தூக்கக் கலக்கமா? தாத்தா வைத்த பெயரோ

நல்ல பதில் வடமொழிப் பெயர் அவர்களே.

Unknown said...

//ந்னோ! தளபதி அது சரி இடுகையில் இல்லாத வார்த்தையை போட்டு போங்காட்டம் ஆடி இலக்கியவாதி என்று சொன்னதற்காகவும், பிழையில்லாமல் நேற்று போட்ட இடுகையைக் கண்டும் எளக்கிய அணியைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சி இது. இதில் தலைவர் பெயரைக் களங்கம் செய்ய முயற்சிப்பதை வன்மையாக எதிர்க்கிறேன். (தலவா! எனக்கு செக் வேணாம்!!)//

இது பொதுச் செயலாளருக்கும் எளக்கிய அணித் தலைவருக்கும் இடையே சண்டை மூட்டி விட மாணவரணித் தலைவரும் கள்ளக்காதலணித் தலைவரும் செய்யும் சதி.

///என் மகனுக்கு அவன் தந்தை வைத்த நல்ல தமிழ்ப் பெயரான/

இது தன்னடக்கமா? தூக்கக் கலக்கமா? தாத்தா வைத்த பெயரோ//

ஹி ஹி தன்னடக்கம்.

Chitra said...

ஒரு நல்ல தமிழ்ப் பெயர் வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தேன். அப்போது, என் மகனுக்கு அவன் தந்தை வைத்த நல்ல தமிழ்ப் பெயரான முகிலன் எனக்குப் பிடித்துப் போகவே அதையே வைத்துக் கொண்டேன்.

...... ஆஹா.... ஓஹோ..... நல்ல தமிழ் பெயர் வைத்த முகிலனின் தந்தைக்கு எங்கள் பாராட்டுக்கள்!

பதில்கள் எல்லாம் நல்லா இருக்குங்க....

ஜில்தண்ணி said...

செம செம பதில்கள் தல

அந்த வடமொழிப் பெயரையும் சொன்னால் நல்லாயிருக்கும் :)

தங்கள் வலைப்பூவில் இருக்கும் பில்லா செம கியூட் :)

நாடோடி said...

க‌ல‌க்க‌ல் ப‌தில்க‌ள்... ந‌ல்லா இருந்த‌து.... த‌லைப்பு தான் டாப்பு.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆகா.. என்னைய இழுத்துவிட்டுட்டீங்களே பாஸ்..ஹி..ஹி

எழுத டிரை பண்றேன் பாஸ்...

பின்னோக்கி said...

இனி எல்லா தொடர்பதிவுலயும் உங்க பேர சேர்த்துடலாம் :)

பின்னோக்கி said...

குழப்பாதீங்க.. உங்க பையன் பேரு முகிலன். உங்க பேரும் முகிலன். வித்தியாசமா இருக்குங்க :)

க.பாலாசி said...

//என் மகனுக்கு அவன் தந்தை வைத்த நல்ல தமிழ்ப் பெயரான முகிலன்//

இதத்தான் குசும்புன்னு எங்கூர்ல சொல்லுவாங்க...

கடைசி பதில் நச்....(அவ்வ்வ்வ்வ்வ்வ்........)

Vidhoosh said...

मुकिलन बहुत अच्छा नाम हैं| :))

VISA said...

//விருப்பம் இல்லை. //

ATHU SARI

Anonymous said...

//வில்லு படம் வெளிவந்த நேரம்.//
நான் ஒரு நிமிஷம் வில்லு படத்தில நடிச்சிருக்கறதா சொல்லிடுவீங்களோன்னு பயந்துட்டேன்.
குடுகுடுப்பையாருக்கும் ஒர் அழைப்பு வுட்டுருக்கலாமில்ல

Anonymous said...

//இதுவரை ஒன்றுமே செய்யவில்லை. யாரையும் ஓட்டுப் போடச் சொல்லிக் கூட கேட்டதில்லை.//

இது தானா சேர்ந்த கூட்டம் :)

பிரபாகர் said...

//
பின்னோக்கி said...
குழப்பாதீங்க.. உங்க பையன் பேரு முகிலன். உங்க பேரும் முகிலன். வித்தியாசமா இருக்குங்க :)
//

ஒருத்ததர வசமா குழப்பி விட்டுட்டீங்களே பாஸ்... இது உங்களுக்கே நியாயமா?

பிரபாகர்...

பிரபாகர் said...

//க.பாலாசி said...
...

கடைசி பதில் நச்....(அவ்வ்வ்வ்வ்வ்வ்........)
//

இளவல், விருப்பமில்லைன்னு நானும் சொல்லியிருப்பேனே, இப்படி சொல்லுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா!

பிரபாகர்...

பிரபாகர் said...

//
Vidhoosh(விதூஷ்) said...
मुकिलन बहुत अच्छा नाम हैं| :))
//

রম্পা বল্লা পিন্নুত্তাম...

পিরাপাকার...

பிரபாகர் said...

////வில்லு படம் வெளிவந்த நேரம்.////

அம்பா கிளம்பி அசத்திகிட்டிருக்கீங்க!

பிரபாகர்...

ஹேமா said...

முகிலன்...அழகான தமிழ்ப் பெயர்.நேர்மையான பதில்கள்.

சுசி said...

//இப்படி நினைக்கும் போதுதான் நம்மை யாரும் அழைத்துத் தொலைய மாட்டார்கள். //

சேம் பிளட்டு..

//சில தொடர்பதிவுகளுக்கு நம்மை அழைக்க மாட்டார்களா என்று காத்திருப்போம். //

சிக்கிட்டாரு சிங்கம்.. :))

முகிலன்.. ரொம்ப அழகான பெயர்.

பா.ராஜாராம் said...

ஜாலியான பதில்கள்,

முகிலா தாத்தாவோட மகனே! :-)

நசரேயன் said...

பேசாம பதிவுலகிலே குடுகுடுப்பை எப்படி பட்டவர்ன்னு தலைப்பு வைத்து இருக்கலாம், நான் ௬ட பல தடவை போன், ஆனா போன் எடுக்க ஆள் இல்லை

Paleo God said...

நான் மஹா உத்தமரோன்னு நெனெச்சேன்..:))

கார்த்திகைப் பாண்டியன் said...

அழைப்புக்கு நன்றி நண்பா.. அடுத்த வாரம் எழுதுறேன்..:-))

மதுரை சரவணன் said...

முகிலன் சூப்பர்...பெயர் மட்டுமல்ல பதிவும் சூப்பர்...தொடரவும்...வாழ்த்துக்கள்

Sukumar said...

:) Nice..

கலகலப்ரியா said...

||கிரிக்கெட் பிடிக்காத சில நண்பர்கள் எரிச்சல் அடைவதைக் கண்டு கிரிக்கெட்டுக்கு என்று ஒரு வலைப்பூ துவங்கினேன். ||

அது நான் இல்ல... அவ்வ்வ்வ்...

கலகலப்ரியா said...

|| சகோதரி கலகலப்ரியா||

அவ்வ்வ்... இதுவும் நான் இல்ல... :))))

கலகலப்ரியா said...

|என் மகனுக்கு அவன் தந்தை வைத்த|
|| பா.ராஜாராம் said...
ஜாலியான பதில்கள்,

முகிலா தாத்தாவோட மகனே! :-)||

:))... சூப்பர் பா.ரா..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு முகிலன் என்ற ஒரு உயிரி இருந்தது என்பதைச் சொல்லிப் போவதே என் வலைப்பூவின் நோக்கம்//.

அரிதினும் அரிதான...

//அப்போது, என் மகனுக்கு அவன் தந்தை வைத்த நல்ல தமிழ்ப் பெயரான முகிலன் எனக்குப் பிடித்துப் போகவே அதையே வைத்துக் கொண்டேன்.//

இதுவும், இது குறித்து வரும் பின்னூட்டங்களும் ரசிக்க வைத்தன..

அது சரி(18185106603874041862) said...

//

அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
இல்லை.

எனக்கு என் பெற்றோர் வைத்த பெயர் வடமொழிப் பெயரான காரணத்தால், ஒரு நல்ல தமிழ்ப் பெயர் வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தேன். அப்போது, என் மகனுக்கு அவன் தந்தை வைத்த நல்ல தமிழ்ப் பெயரான முகிலன் எனக்குப் பிடித்துப் போகவே அதையே வைத்துக் கொண்டேன்.
//

அதெல்லாஞ்சரிதென்....ஆனாக்க, இன்ன மேறி முகிலன்னு எம்பேர எனக்கு தெரியாம ஒருத்தரு யூஸ் பண்ணி எழுதிட்ருக்காரு...இதுக்கு பெரியவங்க தான் நல்ல முடிவு சொல்லணும் அப்படின்னு முகிலன்னு ஒரு குட்டிப்பய பிராது குடுத்துருக்கார்...

இதுக்கு ஒங்க தரப்புல என்ன சொல்றிய? சட்டுபுட்டுன்னு கேச பைசல் பண்ணனுமா இல்லியா?

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை அவர்களின் ஆலோசனைப் படி தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தின் என் வலைப்பதிவைச் சேர்த்தேன்.
///

இப்பிடி கெடுத்து குட்டிச்சுவராக்குறதே அவரு வேலையா போச்சு...அடுத்த பொதுக்குழுவுல வச்சிக்கலாம்...நீங்க ஒண்ணியும் கவலைப்படாதீங்க....

அது சரி(18185106603874041862) said...

//
கிரிக்கெட்டுக்கு என்று ஒரு வலைப்பூ துவங்கினேன்.
//

நல்லவேளை செஞ்சீங்க பாஸ்...ஆமா...நீங்க எப்போ க்ரிக்கெட் எழுதினீங்க? டென்டுல்கர் வெளம்பரம் தான எப்பவும் ஓடும்...

அது சரி(18185106603874041862) said...

//
என்னுடன் முதன் முதலில் தொலைபேசியில் உரையாடியதும் அவரே.
//

அவ்ளோ தான்...கத முடிஞ்சது...:0))))

அது சரி(18185106603874041862) said...

//

கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
//

என்னய்யா கேள்வி இது? :))

அது சரி(18185106603874041862) said...

//
இத் தொடரைத் தொடர நான் அழைக்கும் ஆட்கள்

2. நண்பர் அதுசரி
//

நான் ஏற்கனவே எழுதிட்டேன்...அய்யாங் டொய்ங்க் இன்னொரு தடவை படிச்சிக்கங்க :0))))

Unknown said...

@எல்.கே - ஹி ஹி

@முத்துலட்சுமி - அதே தான். உங்களுக்குத்தான் எம்புட்டு நியாபக சக்தி?

@அமைதிச்சாரல் - நன்றி

@சித்ரா - நன்றி

@ஜில்தண்ணி - பலருக்கு தெரியுமே ஜில்தண்ணி. அதுல ஒண்ணும் பெரிய ரகசியம் இல்லை. தினேஷ் தான் அது.

@நாடோடி - நன்றி பாஸ்

@பட்டாபட்டி - அப்புறம் நீங்க எழுதாம யாரு எழுதறது?

Unknown said...

@பின்னோக்கி - மவம்பேரு தானுங்கோ முகிலன். நாம அவரு பேர ஓசி வாங்கிக்கிட்டோம்.

@க.பாலாசி - நன்றி

@விதூஷ் - சுக்ரியா (வீ ஸ்பீக் ஃபைவ் லேங்குவேஜஸ் இன் தமிழ்)

@விசா - ஆமா

@சின்ன அம்மிணி - அவரு அழைப்பு விட்டாலும் எழுத மாட்டேங்குறாரு

@பிரபாகர் - நன்றி

@ஹேமா - நன்றி

@சுசி - ஹி ஹி ஹி நன்றி

@பா.ரா - நல்ல பின்னூட்டம்.

@நசரேயன் - அவரு கரெக்டா செக் மட்டும் அனுப்பாம இருக்கட்டும். அப்புறம் வக்கிறேன் ஆப்பு.

@ஷங்கர் - அது யாரு மஹா?

@கார்த்திகைப் பாண்டியன் - கண்டிப்பா எழுதுங்க நண்பா

@மதுரை சரவணன் - அட நம்மூரு. நன்றிங்கோ

@சுகுமார் சுவாமிநாதன் - நன்றி

@கலகலப்ரியா - இதுதான் அப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு சொல்றதா?

@எல் போர்ட் - நன்றி

@அது சரி - யாருக்கும் யாருடைய பெயரும் சொந்தமில்லை. அய்யாங்க் டொய்ங் கும் எழுதுங்க இதையும் எழுதுங்க. எழுதலைன்னா ஆட்டோ அனுப்புவோம்.

அம்பாளடியாள் said...

வாழ்த்துக்கள் சகோதரரே மிக அழகான கேள்வி.அடக்கமான
பதில் அருமையாக இருந்தது....