இன்று பாபர் மசூதி/ராமஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. எந்தக் கலவரமும் வெடிக்காமல் அமைதியாக முடிய அல்லாவையும் ராமரையும் வேண்டிக் கொள்கிறேன்.
***********************************************************************
நாளை எந்திரன் ரிலீஸ். ராச்செஸ்டரில் ரஜினி/கமல் படங்கள் ரீலீஸாகும் வாரத்தின் சனி அல்லது ஞாயிறு ஒரே ஒரு காட்சி மட்டும் தான் போடுவார்கள். வழக்கமாக படத்தை ஸ்கீரின் செய்யும் நிறுவனத்துக்கு போன வாரம் தொலைபேசியில் அழைத்துக் கேட்ட போது, டிஸ்ட்ரிப்யூட்டர் அதிக பணம் கேட்பதாகவும் இந்த முறை இரண்டு வாரம் கழித்துத்தான் எந்திரன் வரும் என்றும் சொன்னார்கள். எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.
இந்த வாரம் திங்கட்கிழமை எங்கள் ஊரில் இருக்கும் சினிமார்க் (cinemark theaters) தியேட்டர்ஸில் ஒரு வாரம் எந்திரன் - The Robot போடப்போவதாக (ஒரு நாளைக்கு மூன்று காட்சிகள்) விளம்பரம் பார்த்ததும் முதல் வேளையாக டிக்கெட் புக் செய்துவிட்டேன். எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் ஏழு நாள் திரையிடும் அளவுக்கு ராச்செஸ்டரில் தமிழ்க்கூட்டம் இல்லையே? எந்த தைரியத்தில் போடுகிறார்கள்?
ஆனால், நியூ யார்க் மாகாணத்தில் நியூ யார்க் சிட்டியிலும் ராச்செஸ்டர் சிட்டியிலும் மட்டுமே திரையிடப்படுகிறது. அதனால் பக்கத்து ஊர் மக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பாயிருக்கலாம். யாருக்காவது விசயம் தெரியாமல் இருந்தால் இங்கே போய் தெரிந்து கொள்ளுங்கள்.
*****************************************************************************
கடந்த சில வாரங்களாக பேசப்பட்டு வரும் அந்தப் பிரச்சனையில் என் பக்கம் நின்ற அனைவருக்கும் நன்றிகள். நானாக யாரையும் போய்ப் பார்த்து என் பக்கம் நியாயம் இருக்கிறது என்று விளக்கிக் கொண்டு இருக்கவில்லை. ஆனாலும் என் மீது நம்பிக்கை வைத்து நான் தவறிழைத்திருக்க மாட்டேன் என்று என் பக்கம் நின்றதற்கு கோடி நன்றிகள்.
தலைவர் பாணியில சொல்லணும்னா - இது “சேத்த” கூட்டமில்லை. அன்பால தானா சேர்ந்த கூட்டம்.
இதோட அவ்வளவுதான். மீண்டும் சைலண்ட் மோடுக்குப் போகிறேன்.
******************************************************************************
பரிசல் கிருஷ்ணாவும், ஆதி/தாமிராவும் இணைந்து நடத்தும் மாபெரும் சிறுகதைப் போட்டியைப் பற்றி தெரிந்து கொண்டிருந்திருப்பீர்கள். இருந்தாலும் ஒரு விளம்பரம். அதற்கான அறிவிப்பை பரிசல் பக்கத்துக்கே போய் பாருங்க.
எல்லாரும் எழுதுங்க. எதையாவது எழுதுங்க. நானே ரெண்டு கதை எழுதியிருக்கேன்னா பாருங்களேன்? மூன்று சிறந்த கதைகளுக்கு ரூ.1000/- மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாம். புத்தகத்துக்காகவாவது எழுதுங்க.
********************************************************************************
முகிலன் அப்டேட்ஸ்:
ரஜினியை நன்றாக அடையாளம் தெரிந்து கொண்டார். ரங்கா திரைப்படத்தில் வரும் ரஜினியில் இருந்து எந்திரன் புரமோசனில் வரும் ரஜினி வரை அனாயாசமாக அடையாளம் கண்டுபிடிக்கிறார். பிடித்ததும் அப்பா ரஜ்ஜி, அம்மா ரஜ்ஜி என்று இருவரையும் அழைத்து கைத்தட்டல் பெறும் வரை காட்டிக்கொண்டே இருக்கிறார்.
சமீபத்தில் ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பல ரஜினி புகைப்படங்களை வைத்து பத்மப்ரியா ஆடிய - ஸ்டைலு ஸ்டைலுதான் பாடல் முகிலனின் ரஜினிப் பசிக்கு ஏற்ற தீனி. முதல்முறையாக தியேட்டரில் ஒரு தமிழ்ப் படம் பார்க்கப் போகிறார். என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை.
கலர்களை அடையாளம் கண்டுகொள்ளப் பழகிவிட்டார். எட் (ரெட்), கீன்(க்ரீன்), பூ(ப்ளூ), பாக்(ப்ளாக்), யெய்யோ (யெல்லோ)ஆகியவற்றை சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவார். ப்ரவுன், பிங்க், வொயிட் ஆகியவற்றை சொல்லத் தெரியாது, ஆனால் எதுப்பா பிரவுன் கலர் என்று கேட்டால் காட்டத்தெரியும்.
சில நாட்களாக கலரையும் பொருளையும் சேர்த்து - எட் ச்சூச்சூ, யெய்யோ டக் (யெல்லோ ட்ரக்) என்று சொல்லப் பழகியிருக்கிறார்.
பேப்பரும் பேனாவும் கொடுத்தால் கொஞ்ச நேரம் எதாவது கிறுக்குவார். பின் என்னையோ அம்மாவையோ அழைத்து எங்கள் கையில் பேனாவைக் கொடுத்து எழுதச் சொல்வார்.
முதலில் ஏப்பேன் - ஏரோப்ளேன் வரைய வேண்டும்.
அடுத்து ஃபிஷ் (சில நேரம் மீனா, சில நேரம் ஃபிஷ் அவர் மூடைப் பொறுத்து). ஃபிஷ் வரைந்ததும் அதைச் சுற்றி தண்ணினா( தண்ணீர்) வரைய வேண்டும். தண்ணீர் வரைந்ததும் அதன் மீது போட் ஒன்று விடவேண்டும். மீண்டும் ஏப்பேன், அடுத்து ஃபிஷ், அடுத்து தண்ணினா, அடுத்து போட், மீண்டும் ஏப்பேன்..
இப்படி ஒரு நாளைக்கு நானும் தங்கமணியும் சேர்ந்து ஒரு 100 ஏப்பேனாவது போட்டு விடுவோம்.
என்னவோ தெரியலை, சரியாக வெளியே இருட்டாகி தூங்கப் போகலாம்பா என்று சொல்லும்போது ஒரு புக்கையோ பேப்பர்/பேனாவையோ எடுத்து வைத்துக் கொண்டு படிக்கத் துவங்கிவிடுகிறார். (இந்த சமயத்தில் நான் ஏ, பி, சி, டி எழுத வேண்டும் அவர் ஒவ்வொரு எழுத்தாக சொல்வார்).
தூங்கும்போது எந்திமா (எந்திரன்+அரிமா) பாட்டு போட்டே ஆக வேண்டும். ஐ-பாடில் போட்டு அவர் கையில் கொடுத்துவிட வேண்டும். அவராக ரீவைண்ட் செய்து ரீவைண்ட் செய்து அதே பாட்டை கேட்டுக் கொண்டே இருப்பார். கிளிமாஞ்சாரோ பாடத்துவங்கிவிட்டால் தூங்கிவிட்டார் என்று அர்த்தம்.
16 comments:
பிதற்றல்களில் ரஜினி புராணம் கொஞ்சம் அதிகமா தெரியுதே..
//கிளிமாஞ்சாரோ பாடத்துவங்கிவிட்டால் தூங்கிவிட்டார் என்று அர்த்தம்
ரசித்து படிக்கும் படி இருக்கிறது அருமை .
நாந்தான் ரெகமெண்ட் பண்ணேன்.ராச்செஸ்டரில் ஒரு ஆணாதிக்கவாதி ஐஸ்வர்யா பாக்க அலையாருன்னு.
இன்றைக்கு எந்திரன் ஸ்பெசலா ...?
//தூங்கும்போது எந்திமா (எந்திரன்+அரிமா) பாட்டு போட்டே ஆக வேண்டும். ஐ-பாடில் போட்டு அவர் கையில் கொடுத்துவிட வேண்டும். அவராக ரீவைண்ட் செய்து ரீவைண்ட் செய்து அதே பாட்டை கேட்டுக் கொண்டே இருப்பார். கிளிமாஞ்சாரோ பாடத்துவங்கிவிட்டால் தூங்கிவிட்டார் என்று அர்த்தம். //
:))))
"இருட்டாகி தூங்கப் போகலாம்பா என்று சொல்லும்போது ஒரு புக்கையோ பேப்பர்/பேனாவையோ எடுத்து வைத்துக் கொண்டு படிக்கத் துவங்கிவிடுகிறார். (இந்த சமயத்தில் நான் ஏ, பி, சி, டி எழுத வேண்டும் அவர் ஒவ்வொரு எழுத்தாக சொல்வார்)."
Very cute. I remember my son used to insist me to read books everynight until he goes to sleep. This continued for nearly 4 or 5 years.
Very cute. Thanks for sharing.
Thalaivar padam parthuttu pakkava oru padhivu kodukanum.
Mukilanin rasanai super. Suthi podunga
Thalaivar padam parthuttu pakkava oru padhivu kodukanum.
Mukilanin rasanai super. Suthi podunga
Thalaivar padam parthuttu pakkava oru padhivu kodukanum.
Mukilanin rasanai super. Suthi podunga
ஆமா, இங்கயும் பொட்டி கிடைக்கலை, 2, 3 வாரங்கள் ஆகும்னு சொன்னாங்க. இன்டர்நெட்ல தேடி ரோசெஸ்டர்ல சனிக்கிழமைக் காட்சிக்கு கொஞ்சம் பேர் புக் பண்ணிட்டோம்.
எந்திரனோட ரஜ்ஜி வீடியோ ரிலீஸ் பண்ணலாமே.:)
thanks for the details..
//நாளை எந்திரன் ரிலீஸ்.//
இன்னைக்கு இரவு 11 மணிக்கெல்லாம் விமர்சனம் அமெரிக்காவுல வெளியாகுது... அதுக்கு முன்னாடியே, வளைகுடா நாட்டுல இருந்து...
//கலர்களை அடையாளம் கண்டுகொள்ளப் பழகிவிட்டார். எட் (ரெட்), கீன்(க்ரீன்), பூ(ப்ளூ), பாக்(ப்ளாக்), யெய்யோ (யெல்லோ)ஆகியவற்றை சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவார். ப்ரவுன், பிங்க், வொயிட் ஆகியவற்றை சொல்லத் தெரியாது, ஆனால் எதுப்பா பிரவுன் கலர் என்று கேட்டால் காட்டத்தெரியும்.
சில நாட்களாக கலரையும் பொருளையும் சேர்த்து - எட் ச்சூச்சூ, யெய்யோ டக் (யெல்லோ ட்ரக்) என்று சொல்லப் பழகியிருக்கிறார்.//
நீங்க வேற. உங்க வூட்டு சாராவது வெரும் பொருட்களை கலர் கொண்டு அடையாளம் காட்டறார். எங்கவூட்டு வாலு, ரெட் துத்தூ (dudduu- பால்), பின்க் பானி (தண்ணீர்)...எந்த கலர் பாத்திரத்தில் / பாட்டிலில் அந்த உணவு இருக்கிறதோ அதுதான் அடையாளம். வொயிட் மொம்மோ(white rice), யெல்லோ மொம்மோ....எங்க போயி முடியும்னுதான் தெரியலை. :)) அனுபவிங்க....அனுபவிங்க. கொஞ்ச நாள்லயே அதெல்லாம் காணமப் போயிடும்...எனக்கு அதான் மிகப் பெரிய கவலை!!
mugilanukku vaazhthukkal
மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.com/
Post a Comment