மே ஒன்றாம் தேதியை தொழிலாளர் தினமாகக் கொண்டாடக் காரணம் என்ன? 1886ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக (அதற்கு முன் அப்படி கட்டுப்பாடு எதுவும் இல்லை) வேண்டும் என்று கோரி ஊர்வலம் வந்துகொண்டிருந்த போது போலீஸ் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் பல தொழிலாளர்களும் சில போலீஸ் அதிகாரிகளும் மரணம் அடைந்தார்கள். அதை நினைவு கூறும் வண்ணமே மே முதல் தேதி மே தினமாகக் கொண்டாடப் படுகிறது. ஒரு வேளை அமெரிக்கா இந்த கறுப்புச் சரித்திரத்தை மறைக்கவே வேறொரு நாளில் கொண்டாடுகிறதோ?
எப்படியோ ஒரு லாங் வீக்கெண்ட் கிடைத்தால் சரி.
இந்த லாங் வீக்கெண்டில் இரண்டு தமிழ்ப் படங்கள் பார்க்க நேர்ந்தது. முதல் படம் நான் மகான் அல்ல. பையாவுக்குப் பிறகு கார்த்திக்கு மற்றுமொரு மசாலாப் படம். மசாலாப் படம் என்றால் அக்மார்க் மசாலா. மசாலாப் படங்களுக்கான இலக்கணங்கள் அனைத்தும் பொருந்தி இருந்த படம். முதல் பாதி நகைச்சுவையாகப் போய் அடுத்த பாதியில் கொஞ்சம் கொஞ்சமாக டெம்போ ஏற்றி கடைசியில் மசாலாப் படங்களுக்கேயுரிய சினிமாத்தனத்தோடு முடித்திருந்தார் இயக்குனர் சுசீந்திரன். முதல் படத்தை மென்மையாகக் கொடுத்துவிட்டு அடுத்த படத்தை அதிரடியாகக் கொடுத்ததில் லிங்குசாமியின் வாரிசாகி விட்டார். (என்ன பொருத்தம் பாருங்கள். கார்த்தியின் முந்தைய படம் லிங்குசாமி டைரக்ஷன்). வழக்கம்போல ஏதாவது கண்ணாடியைப் போட்டுப் பார்ப்பவர்கள் இந்தப் படத்தில் அரசுக் கல்லூரி மாணவர்களை வில்லன்களாக்கி விட்டார்கள். அதில் ஒருவர் முஸ்லிம் சிறுவன் என்றெல்லாம் பேசத் துவங்கிவிட்டார்கள். அந்த முஸ்லிம் பாத்திரம் ஒன்றும் திணிக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. மற்றபடி வன்முறையையும் வக்கிரத்தையும் அள்ளித் தெளித்திருக்கக் கூடிய வாய்ப்பு இருந்தும் அதையெல்லாம் காட்டாமலே உணர்த்திய சுசீந்திரனுக்கு மற்றுமொரு சல்யூட்.
இன்னொரு படம் வம்சம். இதுவும் ஒரு மசாலாப் படமே. ஆச்சரியம் தரும் வகையில் சுனைனா நன்றாக நடித்திருந்தார். பாண்டிராஜின் சின்னச் சின்ன ஐடியாக்கள் அவரது முதல் படம் போலவே ஆங்காங்கே ரசிக்க வைத்தது. “முடிய நீளமா வச்சிருக்கிறவ, குடும்பத்தையும் அதே மாதிரி பத்திரமா பாத்துக்குவா” என்று கதாநாயகனின் தாய் சிலாகித்துக் கொண்டே போக இங்கே சுனைனா சவரியைப் பிரித்து தலையைக் கோதுகிறார்.
செல்ஃபோனை மரத்தின் மீது கட்டிவிட்டு, போன் பேசவேண்டுமென்றால் மரமேறிப் பேசுவது, சுனைனா வீட்டிலோ, மேலே இருக்கும் செல்ஃபோனில் இருந்து நீஈஈஈஈளமான ஹெட் ஃபோன் மூலம் கீழிருந்த படியே பேசுகிறார்.
கிளைமாக்ஸும் வித்தியாசமாக இருந்தது. பெண்களைத் தாக்குவதில்லை என்பதும், சத்தியம் செய்து விட்டால் அதற்குக் கட்டுப்படுவதும் என்றும் வாழும் இந்தச் சமூகத்தின் மீது வன்முறை/அராஜகத்தைத் தாண்டிப் பார்த்தால் ஒரு மரியாதை வரும்போல. எப்படியோ பாண்டிராஜ் மீண்டும் ஒரு செஞ்சுரி போட்டுவிட்டார்.
ஜெயப் பிரகாஷ் அதகளப்படுத்தியிருக்கிறார். பக்கத்து ஊர்த் தலைவரைக் கொன்றுவிட்டு பன்னிக்கறியும் பட்டை சாராயமும் சாப்பிடும் போது அவர் அடிக்கும் டயலாகும் அதன் டெலிவரியும் அசத்தல். இவருக்காகவே இன்னுமொருமுறை பார்க்கவேண்டும்.
“கண்ணாடி” போட்டுப் பார்ப்பவர்களுக்கு: இந்தப் படத்தில் ஜெயப்ரகாஷின் மகனாக வருபவர் பல காட்சிகளில் சிவப்புச் சட்டை போட்டு வருகிறார்.
இரண்டரையாவதாகவும் ஒரு படம் பார்த்தேன். பீப்ளி லைவ். முழுதும் பார்த்துவிட்டு என் கருத்தை (ரொம்ப முக்கியம்) அடுத்த பிதற்றல்களில் தருகிறேன்.
பஸ்ஸில் கார்த்திகா வாசுதேவன் சும்மானாச்சுக்கும் ஒரு தமிழ் குவிஸ் வைத்திருந்தார். நானும் என் மூளையைக் கசக்கி கூகுளாண்டவர் துணையோடு அந்த ஐந்துக் கேள்விகளுக்கு விடையை அளித்திருந்தேன். (இதுல நான் சொல்லிக் குடுத்த மாதிரியே சொன்னதுக்கு நன்றின்னு தளபதி நசரேயன் கமெண்டு வேற). சரி பதிலை சொல்லியாச்சே. எதாவது பரிசு உண்டாவென்று கேட்டால், அனுப்பி வைக்கிறார்கள் ஒரு ஆங்கிலப் புத்தகத்தின் பி.டி.எஃப் பிரதியை. தமிழில் குவிஸ் நடத்தி, தமிழ் இலக்கியத்திலிருந்து கேள்வி கேட்டு, அதற்கு தமிழில் பதில் கொடுத்தால் எனக்குப் புரியாத ஆங்கிலத்தில் புத்தகம் அனுப்பினால் எப்படி? நீங்களே சொல்லுங்கள். இது நியாயமா?
இதில் புத்தகம் அனுப்பியதைப் பற்றி விளம்பரம் போடவில்லையென்று கவலை வேறு...:))
உங்களுக்காக அந்தக் கேள்விகள் இதோ:
1 .ஐம்பெருங்காப்பியங்க
2 . ஐஞ்சிறுகாப்பியங்கள் எவை ?
3 . இதிகாசங்கள் எவைஎவை?
4 .புராணம் இதிகாசம் ஒரே வரியில் வேறுபடுத்திக் காட்டுக?
5 .பெருந்திணை ,கைக்கிளை ஒரு வார்த்தையில் பதில் அளிக்கவும்
எச்சரிக்கை: இந்தக் கேள்விகளுக்குப் பின்னூட்டத்தில் பதில் அளிப்பவர்களுக்கு அந்தப் புத்தகம் அனுப்பிவைக்கப் படும்.
முகிலன் அப்டேட்ஸ்
பூச்சாண்டி ஒரே மாதத்தில் புஸ்ஸாண்டி ஆகிவிட்டது. இப்போது அவர் எங்களை பூச்சாண்டியைக் காட்டி பயமுறுத்துகிறார். என்ன சொல்ல?
ஆங்கில எழுத்துக்கள் - A, B, C, F, G, I, N, O, P, Q, R, S, T, U, W, Y, Z - ஆகியவற்றை அடையாளம் கண்டுபிடிக்கப் பழகிவிட்டார். இப்போது அந்த எழுத்துக்களை எங்கே பார்த்தாலும், அப்பா டபியூ, அம்மா டபியூ என்று இருவரையும் அழைத்துக் காட்டி கை தட்டும் வரை விடமாட்டேன் என்கிறார்.
மூன்று பேர் உட்காரும் சோஃபாவில் இடது ஓரம் அம்மா சீட், நடுவில் அப்பா சீட், வலது ஓரம் தம்பி சீட். மாறி உட்கார்ந்தால் எழுப்பி விட்டுத்தான் மறுவேலை பார்க்கிறார். இதில் கொடுமை, ஓர சீட்டுகள் இரண்டும் ரெக்லைனர்கள். நடு சீட் அப்பாவுக்கு. என்ன ஒரு வில்லத்தனம்?
எந்திரன் பாடல்கள் அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டன. (அப்புறம் விடாம போட்டுக்கிட்டே இருந்தா, பிடிக்காதா என்ன?). காரில் ஏறியதும் கையில் ஐ பாடைக் கொடுத்து விட்டால் எந்திரன் பாடல் கேட்டுக் கொண்டு அமைதியாக வருகிறார்.
கொசுறு: ரஜினியை டிவியிலோ செல்ஃபோனிலோ பார்த்தால் ரஜிதாத்தா என்று சொல்கிறார்.
16 comments:
எந்திரன் படத்தை பையன் எப்படி ரசிச்சான் என்று சொல்ல மறக்காதீங்க!
முகிலன்:)). ஒரு வேளை நடு சீட் அப்பாக்குன்னு ரிஸர்வ் பண்ணது ஜிம்முக்கு போகணும்னு சொல்லாம சொல்றதுக்கோ:)). க்யூட்.
வம்சம் படத்தில் சுனைனா என்று இல்லை எல்லோருமே நன்றாக நடித்து இருந்தனர் என்பது என் கருத்து
கார்த்திகாவின் கேள்வியும் உங்கள் பதிலும் பஸ்ஸில் படித்தது போக இங்குமா??
குட்
உங்க முகிலனுக்கு நான் சொன்னதா சொல்லிடுங்க
vazhakam poala super
1 .ஐம்பெருங்காப்பியங்கள் எவை?
சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணி வளையாபதி குண்டலகேசி
2 . ஐஞ்சிறுகாப்பியங்கள் எவை ?
உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி
3 . இதிகாசங்கள் எவைஎவை?
இராமாயணம்,மகாபாரதம்
4 .புராணம் இதிகாசம் ஒரே வரியில் வேறுபடுத்திக் காட்டுக?
“புராணம்ன்னா நெம்ப பழையது, அதுனால பழைய பழக்க வழக்கங்கள், வரலாறு இதுகளையெல்லாமுஞ் சொல்ற நூல் புராணம். இதிகாசமின்னா, வட மொழியில உண்மை நிகழ்வுகளைத் தழுவினதுன்னு அர்த்தம்.”
நன்றி:-http://maniyinpakkam.blogspot.com/2009/06/15.html
5 .பெருந்திணை ,கைக்கிளை ஒரு வார்த்தையில் பதில் அளிக்கவும்
பெருந்திணை என்பது பொருந்தாக்காமம்
கைக்கிளை என்பது ஒரு தலைக் காமம் ஆகும்
//நடு சீட் அப்பாவுக்கு. என்ன ஒரு வில்லத்தனம்?//
ஹஹா, பசங்க அம்மா பக்கம்தான் சாய்வாங்க :)
பீப்லி லைவ் பார்த்துட்டு சொல்லுங்க...சிறந்த படம்...
1 .ஐம்பெருங்காப்பியங்கள் எவை?
சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணி வளையாபதி குண்டலகேசி
tam book 6th std
5 .பெருந்திணை ,கைக்கிளை ஒரு வார்த்தையில் பதில் அளிக்கவும்
பெருந்திணை என்பது பொருந்தாக்காமம்
கைக்கிளை என்பது ஒரு தலைக் காமம் ஆகும்
ref tamil book 2nd paper 10th std
Enga paappa adhudhan naduvula utkaranumnudhan adam pidikum.
Enna madhiriye Rajini uncle nu solli kudunga.
'Vamsam' nalla iruku sir.
Rajini thatha vendame...
Rajini mama o.k.
Rajini thatha vendame...
Rajini mama o.k.
கொசுறு: ரஜினியை டிவியிலோ செல்ஃபோனிலோ பார்த்தால் ரஜிதாத்தா என்று சொல்கிறார்.//
LOL :)
பாஸ் ரஜிதாத்தா theatrical trailer release ஆயிடுச்சு, Thalaivar rocking... பையனுக்கு போட்டு காட்டுங்க :)
http://www.youtube.com/watch?v=hNXHveyzUvY&feature=player_embedded
mukilan smart avanga amma maathiri
நல்ல ரசிக்கக் கூடிய பதிவு... வாழ்த்துக்கள்.. நேரம் கிடைத்தால் நம்ம ஓடையிலும் வந்த நனைந்திட்டுப் போங்க...
mathisutha.blogspot.com
சுவராஸ்யமான பதிவு..ம்ம்ம்
Post a Comment