Friday, September 3, 2010

ரஜினியும் முதல்வன் பட வசனமும்

முதல்வன் படத்தின் வசனம் இது:

முதல்வர் அர்ஜூன் களைப்பில் படுக்கையில் படுத்துக்கொண்டிருப்பார். அவர் தாய் அவர் கையில் மருதாணி வைத்துக் கொண்டிருப்பார். அப்போது அவர் தந்தை, “விசிஆர்ல இருக்கிற மாதிரி ஒரு ரீவைண்ட் பட்டன் லைஃப்லயும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?” என்பார்.

அப்படி ஒரு வசதி ரஜினிக்குக் கிடைக்கிறது.

ரஜினி அறிக்கை: என் மகளின் திருமணத்திற்கு சென்னையின் போக்குவரத்து மற்றும் இட நெருக்கடி காரணமாக ரசிகர்களை அழைக்க முடியவில்லை. அதற்காக வருந்துகிறேன்.
பத்திரிகைகள்: ரசிகர்கள் வரவேண்டாம் - ரஜினி அறிக்கை
பதிவர்கள்: ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தவனுக்கு அழைப்பில்லையாம்.
ரஜினியின் வளர்ச்சி ரசிகனின் வீழ்ச்சி

ரஜினி: ம்ம்ம்.. இப்பிடி ஒரு அறிக்கை விட்டதுதான் தப்போ. பேசாம ரீவைண்ட் பண்ணி ஒன்னும் சொல்லாம இருந்திரலாம்

ரஜினி அறிக்கை: ம்ஹூம்.
பத்திரிகைகள்: ரசிகர்களுக்கு அழைப்பு இல்லை - ரஜினி ரசிகர்களைப் புறக்கணிக்கிறார்.
பதிவர்கள்: தனது படங்களுக்கு 500, 1000 என்று மனைவியின் தாலியை விற்று டிக்கெட் எடுத்துப் பார்த்த ரசிகனை அழைக்கவேண்டாம். ஏன் அழைக்க முடியவில்லை என்று ஒரு அறிக்கையாவது விட வேண்டாமா?.
இப்படியா கள்ள மவுனம் சாதிப்பது?
ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கிறார் ரஜினி.

ரஜினி: இதுவும் தப்பா.. பேசாம ரீவைண்ட் பண்ணி எல்லாரையும் கூப்பிட்டு நேரு உள்விளையாட்டு அரங்கத்துல வச்சிரலாம் கல்யாணத்தை.

ரஜினி அறிக்கை: என் மகளின் திருமணம் அனைத்து ரசிகர்களும் கலந்து கொள்ளுமாறு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும். என் உயிருனும் மேலான ரசிகர்கள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பத்திரிகைகள்: வளர்ப்பு மகன் திருமணத்தை விஞ்சும் வகையில் ஆடம்பரமாக ரஜினியின் மகள் திருமணம்.
பதிவர்கள்: இத்தனை கோடி செலவு செய்து ஒரு திருமணம் நடத்த வேண்டுமா? அந்தக் காசில் எத்தனை ஏழைகளைப் படிக்க வைத்திருக்கலாம்?
ஒரு நாளைக்கு 6000 குழந்தைகள் பசியால் இந்தியாவில் இறக்கின்றன. இந்தப்பணத்தில் எத்தனை குழந்தைகளைக் காப்பாற்றி இருக்கலாம்.
இந்தப் பணம் எப்படி இவருக்கு வந்தது? கறுப்புப் பணத்தை எதிர்த்து சிவாஜி படத்தில் போராடிய இவர் கறுப்பில்லாமல் இவ்வளவு பணம் எப்படிச் சேர்த்தார்?

ரஜினி: போச்சுடா.. இதுவும் தப்பா. ரீவைண்ட். காதும் காதும் வச்ச மாதிரி திருப்பதியில கல்யாணத்த முடிச்சிட்டு திரும்பிடலாம்.

ரஜினி அறிக்கை: மூச்..
பத்திரிகைகள்: ரஜினி மகள் ரகசியத் திருமணம். ரஜினிக்குத் தெரியுமா? அவர் கருத்தென்ன?
பதிவர்கள்: ஏன் ரஜினியின் மகள் ரகசியத்திருமணம் செய்து கொள்ள வேண்டும்? எதுவும் கசமுசவா?

ரஜினி: அடங்கொய்யால. இதுக்கு புள்ளையே பெத்துக்காம ரெண்டு படம் நடிச்சிட்டுப் போயிருந்திருக்கலாமே.. ரீவைண்ட்..

முதல் படம்: ஃப்ளாப்
பத்திரிகைகள்: ரஜினியின் படம் படு தோல்வி. வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு ரஜினியை நெருக்குகின்றனர். ரஜினி சகாப்தம் முடிந்ததா?
பதிவர்கள்: அம்புட்டுத்தான் ரஜினி. இனி தலையில துண்டுதான்.
அவரை நம்பித்தானே வினியோகஸ்தர்கள் பணம் போட்டார்கள். அவர்களின் நஷ்டத்துக்கு அவரே பொறுப்பேற்று பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்

இரண்டாம் படம்: பெரிய பட்ஜெட்
பத்திரிகைகள்: பணத்தை இறைத்து ரஜினியின் அடுத்த படம். அவருக்கு சம்பளம் 25 கோடியாம்.
பதிவர்கள்: இவ்வளவு பணம் போட்டு படம் எடுக்க வேண்டுமா? இந்தப் படத்தைப் புறக்கணிப்போம்.
இந்தப் பணத்தில் எத்தனை ஏழைகளை.. ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்பாபாபா

ரஜினி: அவ்வ்வ்வ்வ்வ்... வேற வழியே இல்லை ரீவைண்ட்...

...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...

1949, March 12


ஜீஜாபாய்: என்னங்க.. புள்ளைகளை தூங்க வச்சிட்டேன். பாலக் குடிச்சிட்டுப் படுக்க வாங்க.
ராமோஜிராவ்: இல்லடி நான் செகண்ட் ஷோ சினிமாவுக்குப் போறேன்.


டிஸ்கி: எப்படி மார்ச் 12, என்று கேட்டவர்களுக்காக. கர்ப்பத்தின் ட்யூ டேட் இப்படித்தான் கணக்கிடப் படுகிறது. கூட்டிக் கழிச்சிப் பாருங்க கணக்கு சரியா வரும். 

35 comments:

LK said...

ada vidunganne, invaglai thiruthha mudiyaathu.. invaga bloga popular aaka ennak karumathai venumnalum eluthuvaanga

நாஞ்சில் பிரதாப் said...

ஹஹஹஹ... இப்படி பதிவர்களுக்கும் ஒரு ரீவைண்ட் ஆப்ஷன் இருந்தா எழுதன பதிவையும்
மாத்தி எழுதியிருக்க முடியும்... :))

சேட்டைக்காரன் said...

தலைப்பைப் பார்த்து நீங்களுமா...ன்னு தான் வாசிக்க ஆரம்பிச்சேன். :-)
கலக்கிட்டீங்க! வேடிக்கையாக, எது எதார்த்தமுன்னு அழகா விளக்கிட்டீங்க! க்ரேட்!!

சரவணகுமரன் said...

:-))

உமாபதி said...

ஹா ஹா ஹா
எல்லாம் மாயை

VISA said...

PINNNNNNNNNNNNNNNNNNNNAL

Chitra said...

1949, March 12


ஜீஜாபாய்: என்னங்க.. புள்ளைகளை தூங்க வச்சிட்டேன். பாலக் குடிச்சிட்டுப் படுக்க வாங்க.
ராமோஜிராவ்: இல்லடி நான் செகண்ட் ஷோ சினிமாவுக்குப் போறேன்.


....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

R.Gopi said...

பலே அலசல் கட்டுரை....

நிறைந்திருந்த நகைச்சுவையுடன் சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானது என்பதை தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள்....

ரசித்து, சிரித்து படித்தேன்....

பதிவை ரெஃபர் செய்த சித்ரா அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி...

கிரி said...

ஹா ஹா ஹா கலக்கல் :-)))

r.selvakkumar said...

புதிய பாணியில் ஒரு நையாண்டிக் கட்டுரை.
ரஜினி, ரஜனி இரசிகர்கள், பதிவர்கள் உட்பட அனைவரையும் ஒரு பிடிபிடிக்கிறது.

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
1949 March 12
//

Dec 12 க்கு 9 மாசம்தான் வருது.... 1949 Feb 12 னு மாத்துங்க...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

////
1949 March 12
//

Dec 12 க்கு 9 மாசம்தான் வருது.... 1949 Feb 12 னு மாத்துங்க... //

ரஜினி என்ன ஒன்பது மாதத்தில் பிறந்தவரா..?

வானம்பாடிகள் said...

:)

பாலா said...

வர வர ரஜினி கொட்டாவி விட்டா கூட கண்டனம் தெரிவிக்க ஒரு கூட்டம் கிளம்பிடுது. கொடுமைடா சாமி!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

பாசகி said...

கலக்கல் பாஸ்.. ROTFL :)))

பிரபாகர் said...

கடைசியில ஹா...ஹா... கலக்கல்.

பிரபாகர்...

Anonymous said...

super

Phantom Mohan said...

1949, March 12


ஜீஜாபாய்: என்னங்க.. புள்ளைகளை தூங்க வச்சிட்டேன். பாலக் குடிச்சிட்டுப் படுக்க வாங்க.
ராமோஜிராவ்: இல்லடி நான் செகண்ட் ஷோ சினிமாவுக்குப் போறேன்.
////////////////////////////

இது கொஞ்சம் ஓவர் பாஸ்...

மத்தபடி செருப்படி!

suriyan said...

Super Sir, Nethi Adi

sakthi said...

ரசித்தேன் நல்லதொரு கற்பனை

பிரியமுடன் ரமேஷ் said...

Sema! Adhuvum Rewind panni 1949ke ponadhu. Top.

MANO said...

பதிவு பட்டாசாக இருக்கிறது.


மனோ

பின்னோக்கி said...

ஹா..ஹா.. நைஸ்.. வெரி நைஸ்.. நல்லாயிருக்கு

என்னது நானு யாரா? said...

மனுஷன் கொஞ்சம் பிரபலம் ஆகிட்டாலே இந்த பிரச்சனை தான் வரும்.

இதையெல்லாம் கண்டுக்காம போகவேண்டியது தான். அதை நம்ப தலைவரு சரியா செய்றாரு! விட்டு தள்ளுங்க தல!

எறும்பு said...

ஹா ஹா nice.

:)))))

அது சரி said...

செஞ்சாலும் தப்பு செய்யாட்டிம் தப்பு சொன்னாலும் தப்பு சொல்லாட்டியும் தப்பு...இப்படி எப்பவும் பரபரன்னு இருந்தா தான் சூப்பர் ஸ்டார் :)). ரஜினியை வாழ்த்தினாலும் பத்திரிக்கை விக்கும் திட்டினா இன்னும் அதிகமா விக்கும். இது ரஜினிக்கும் தெரியும் :)))

Krish_tek said...

Manam vittu sirikavum, manadhara sindhikavum vaitha padhivu.

Rajiniyaga iruka kodukum vilai?

Aanalum rajinirasigan endra varthayai pirika nadakum muyarchigal thodarndhu thotru povadhe nijam

ஜோ/Joe said...

:)))))))

பரிசல்காரன் said...

செம! ரசிச்சுப் படிச்சேன் பாஸ்!

Ŝ₤Ω..™ said...

:)))
கலக்கல்ண்ணே..

கண்ணன் said...

Super..I have shared this in facebook..(just the link), hope you won't mind

கண்ணன் said...

Super..I have shared this in facebook..(just the link), hope you won't mind

ஆட்டையாம்பட்டி அம்பி said...

நன்றாக எழுதுகிறீர்கள். நீங்கள் ஐதுவர்கு ஒன்று மரண மொக்கை அல்ல. எல்லாம அர்த்தம பொதிந்தது.

நன்றாக எழதுகிறீர்கள்..வாழ்த்துக்கள்..

மேலும படியுங்கள் நம்ம தலைவரைப பற்றி:

http://tamilkadu.blogspot.com

Vijayakumar Ramdoss said...

:) nice