எஸ்.பி.சற்குணபாண்டியனின் செல் அலறியது. தெரியாத நம்பர். பச்சைப் பொத்தானை ஒத்தி “ஹலோ” என்றான். எதிர்முனையின் பதட்டம் இவனைத் தொற்றிக் கொண்டது. ஃபோனை அணைத்ததும்
எழுந்து அறையை விட்டு வெளியே வந்து, “கவுதம்...” கத்தினான்.
எஸ்.ஐ கவுதம் “யெஸ் சார்” என்று ஓடி வந்தான்.
“ஒரியெண்டல் ஹாஸ்பிடல்ஸ்ல யாரோ டயமண்ட் கடத்தலாம் அல்லது திருடலாம்னு ஒரு கால் வந்திருக்கு. என்னன்னு விசாரிங்களேன்?”
“பேசினது யாரு சார்?”
“மாரிமுத்துனு ஒரு வார்ட்பாய்”
“விசாரிக்கிறேன் சார்” விலகினான் கவுதம்.
**************************************************************************************
கவுதமின் புல்லட் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்தது. புல்லட்டை நிறுத்தியதும் நேராக சற்குணபாண்டியனின் அறைக்குள் சென்று விரைப்பாக ஒரு சல்யூட் வைத்தான்.
“என்ன கவுதம்?”
“சார் விஷயம் நாம எதிர்பார்க்கிறதை விட தீவிரமாப் போவுது. சில டாக்டர்ஸ்க்கே தொடர்பு இருக்கலாம் போல. வார்ட் பாய் டாக்டர்ஸ் ரெஸ்ட் ரூமுக்கு வெளிய ஒட்டுக் கேட்டிருக்கான். பல லட்சம்
மதிப்புள்ள டயமண்ட்ஸா இருக்கலாம். அநேகமா வெளிநாட்டுல இருந்து உடம்புல வச்சி ஸ்மக்கிள் செஞ்சிருக்கலாம். அதை சர்ஜரி பண்ணி எடுக்கிற வேலைய ஹாஸ்பிடல்ல சில டாக்டர்ஸ் செய்யலாம்ங்கிறது என் யூகம் சார்”
“ஓக்கே கவுதம். ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்டுக்கு தகவல் குடுத்துட்டு செக்யூரிட்டி டைட் பண்ணுங்க. வெளிய போற ஃபோன்கால்ஸ், டாக்டர்ஸோட செல்ஃபோன் எல்லாத்தையும் ட்ரேஸ் பண்ணுங்க.
நமக்குத் தெரியாம ஒரு ஈ காக்கா கூட வெளிய போகக் கூடாது”
“சார் பேஷண்ட்ஸ்?”
“அவங்கள டிஸ்டர்ப் பண்ணாதீங்க. எல்லாம் சீக்ரெட்டாவே நடக்கட்டும். இது ஒரு ஷேடோ ஆப்பரேஷன்”
“ஓக்கே சார்”
***************************************************************************************
கம்ப்யூட்டர் திரையில் “You have got a new Mail" என்று ஒளிர்ந்ததும் பரந்தாமனின் கண்களில் அந்த ஒளி தொற்றிக் கொண்டது. திறந்து உள்ளே இருந்த அந்த இயேசு நாதரின் படத்தை டவுன்லோட்
செய்து இமேஜ் டிக்ரிப்ஷன் சாஃப்ட்வேரில் போட்டார். இயேசுவின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து அந்த எழுத்துக்கள் மட்டும் திரையில் குடி கொண்டன - “Mission Planned. Carrier Kamini".
"யெஸ்” என்று உற்சாகத்தில் முஷ்டியை மடக்கி காற்றில் குத்தினார் பரந்தாமன்.
நினைவு வந்தவராக செல்ஃபோனை எடுத்து நம்பரை ஒற்றி, எதிர்முனை எடுத்ததும், “சிவா” என்றார்.
************************************************************************
ஓரியெண்டல் மருத்துவமனை பரபரப்பாக இருந்தது. ஸ்ட்ரெச்சரில் ரத்தச் சகதியாக இருந்தாள் அந்தப் பெண். நினைவு தப்பவில்லை. இரண்டு நர்ஸ்கள், இரண்டு வார்ட் பாய்கள், இரண்டு டாக்டர்கள் அந்த ஸ்ட்ரெச்சரைச் சுற்றி ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தார்கள்.
“உங்க பேரு என்னங்க?”
“கா.. கா.. காமினி” திக்கித் திணறி சொல்லி முடித்தாள். கையில் வைத்திருந்த பேடில் கிறுக்கிவிட்டு ஐசியுவுக்குள் தள்ளிப் போனார்கள். அரை மணி கழித்து ஆறு பேரும் வெளியேறினார்கள்.
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். ஐ.சி.யூ தரைத் தளத்தில் இருந்த படியால் மெத்தென்ற புல்வெளியில் பூனை போல விழுந்தாள். இடுப்பைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். அது பத்திரமாக இருந்தது. யாரும் பார்க்கும் முன் அந்த மருத்துவமனையைச் சுற்றி வந்து கூட்டத்துக்குள் கலந்து காணாமல் போனாள்.
**************************************************************************
சிறிது நேரத்துக்கு முன் உள்ளுக்குள் ஏற்றிய ரம் சிவப்பாய் விழிகளில் படர்ந்திருந்தது. மூன்று நாள் தாடி முகத்தில் முள் போட்டிருந்தது. செல்ஃபோனை எடுத்து மணி பார்த்துக் கொண்டான். அவன் கண்கள் தூரத்தில் வரும் ஒவ்வொரு ஆட்டோவையும் ஸ்கேன் செய்து கொண்டிருந்தன. கடைசியாக ஒரு ஆட்டோ வந்து அவன் அருகில் நின்றது.
அதிலிருந்து காமினி இறங்கினாள். கைப்பைக்குள் கையை விட்டவள் ஒரு கிழிந்த நூறு ரூபாய் நோட்டை எடுத்து “சில்லறை இருக்கா?” என்று நீட்டினாள்.
“இருவத்தஞ்சி ரூவா நோட்டா இருக்கு பரவாயில்லயா?”
"பாஸ் கோட்?”
“டயமன்ட்ஸ் ஃபார் எவர்”
“சிவா?” என்றவாறு கையை நீட்டினாள்.
“காமினி?” கையைப் பிடித்துக் குலுக்கினான். ஆட்டோவை கட் செய்துவிட்டு மறைவாக இருந்த ஸ்விஃப்டில் ஏறினர்.
**************************************************************************
அந்த பழைய கட்டடத்தின் முன் கார் நின்றது.
“உள்ள வா காமினி” என்றவாறு கதவைத் திறந்து உள்ளே போனான். காமினி தயக்கத்துடன் உள்ளே நுழைந்தாள். சிறிய ஹால், வலது பக்கம் கிச்சன், இடதுபக்கம் பெட்ரூம் என்று அடக்கமாக, அழகாக இருந்தது.
“உக்காரு” சோஃபாவை சுட்டினான்.
“பரந்தாமன் சார் எங்க இருக்காரு?”
“அவர் வேற இடத்துல. நீ என் கிட்ட குடுத்தா போதும். நான் அவர்கிட்ட சேத்துடுவேன்.”
“நோ. பரந்தாமன் சார்கிட்ட குடுக்கச் சொல்லித்தான் எனக்கு உத்தரவு”
“இல்ல என் கிட்ட குடு”
“நோ வே”
“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. காமினி சட்டென்று தொண்டையைப் பிடித்துக் கொண்டு ஒரு கேவலை வெளிப்படுத்தி மடங்கி விழுந்தாள். பயந்து போன சிவா மண்டி போட்டு காமினியை நோக்கிக் குனிந்தான்.
“சொத்” என்று அடக்கப்பட்ட ஸ்பிரிங் விடுபடுவதைப் போல காமினியின் வலதுகால் சிவாவின் உயிர்நிலையில் அடித்தது. “அம்மா...” காமினியின் கைகளும் கால்களும் கராத்தே வீராங்கனையின் லாவகத்தோடு இயங்கின. இரண்டே நிமிடங்களில் சுருண்டு மயங்கி விழுந்தான் சிவா. சிவாவின் கை கால்களை அங்கே இருந்த அவன் பெல்டுகளால் இறுக்கிக் கட்டினாள்.
அவன் செல்ஃபோனை எடுத்து பரந்தாமன் நம்பரைத் தேடினாள்.
“ஹலோ..”
“பரந்தாமன் ஹியர்”
“நான் காமினி”
“சிவா எங்க?”
“டபுள் கிராஸ் பண்ணப் பார்த்தான். முடிச்சிட்டேன்”
“கொன்னுட்டியா?”
“இல்ல இல்ல. மயக்கம் தான். போலீஸ் எப்பிடியோ மோப்பம் பிடிச்சிட்டாங்க. ஹாஸ்பிட்டல் செக்யூரிட்டி டைட்டென் ஆயிடுச்சி”
“கேள்விப்பட்டேன். எப்பிடி தப்பிச்ச?”
“எல்லாத்தையும் நேர்ல சொல்றேன் எப்பிடி வரணும்?”
“நீ அங்கயே இரு. நான் வர்றேன்”
“ஓக்கே”
ஃபோனை அணைத்துவிட்டு டிவியைப் போட்டாள்.
******************************************************************************
செல்ஃபோன் ஒலித்தது. பரந்தாமன்.
“ஹலோ”
“காமினி, நான் வெளியதான் நிக்கிறேன்”
எழுந்து போய் கதவைத் திறந்தாள்.
உள்ளே வந்த பரந்தாமனுக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும். கருகருவென்றிருந்த முடி கோத்ரெஜ் என்றது. நடிகர் நாசரின் மூக்கைப் போல சற்றே நீளம் அதிகமான மூக்கு. மேனரிசம் போல அதை கட்டை விரலாலும் சுட்டு விரலாலும் இழுத்து இழுத்து விட்டுக் கொண்டார்.
“காமினி போலிஸ் மோப்பம் பிடிச்சிட்டதா தகவல் வந்ததே?”
“ஆமா சார். ஆனா நான் போலிஸுக்கு டிமிக்கி குடுத்துட்டேன்”
“டைமண்ட் எங்கே? நான் பாக்கணும்”
இடுப்பிலிருந்து அந்தக் குடுவையை எடுத்து நீட்டினாள்.
அதைக் கையில் வாங்கி "காமினி... வெல்டன்... எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே..." என்று பாராட்டினார் பரந்தாமன்.
வேக வேகமாக அந்தக் குடுவையைத் திறந்தவர் முகத்தில் ஏமாற்றம்.
“என்ன காமினி இது. ஒரு கிட்னி தான் இருக்கு?”
“மிச்சமெல்லாம் ஒரு இடத்துல பத்திரமா இருக்கு.” பின்னாலிருந்து ஒலித்த குரலுக்கு திடுக்கிட்டுத் திரும்பினார்.
அங்கே கவுதமும் இன்னும் இரண்டு கான்ஸ்டபிள்களும் கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்தனர்.
பரந்தாமனின் கை தானாய் மேலேறியது. “டாக்டர் பரந்தாமன். ஒரு புனிதமான தொழில் செய்யற நீயே இப்பிடி உடல் உறுப்புகளை கள்ள மார்க்கெட்ல விக்கலாமா? இதுல அதுங்களுக்கு டயமண்ட்னு கோட் வேர்ட் வேற”
பரந்தாமன் பதில் சொல்லாமல் கவுதமை முறைத்தான். “என்னடா முறைக்கிற? எப்பிடித் தெரியும்னா? முதல்ல நாங்களும் டயமண்ட்னு தான் நினைச்சோம். அப்புறமா உனக்கு வந்திச்சே ஒரு ஈ-மெயில், அதை நாங்களும் trap பண்ணிட்டோம். உன்கிட்ட மட்டும் தான் இமேஜ் டி-க்ரிப்டர் இருக்குமா? எங்க டிபார்ட்மெண்ட்லயும் இருக்கு. அதை அனுப்புன டாக்டரை ரெண்டு தட்டு தட்டின உடனே உண்மையக் கக்கிட்டான். உன்னைக் கையும் களவுமாப் பிடிக்கணும்னு தான் எங்க டிப்பார்ட்மெண்ட் எஸ்.ஐ காமினியை அனுப்பி வச்சோம்”
“நீ கையில வச்சிருக்கிற பாக்ஸ்ல இருக்கிறது கிட்னி இல்ல. க்ளோப்ஜாமுன்” குடுவையை வாங்கி கான்ஸ்டபிளிடம் கொடுத்த காமினி கவுதமின் நீட்டிய கையிலிருந்த விலங்கை வாங்கி பரந்தாமனின் கையை பின்னால் மடக்கி மாட்டினாள்.
டிஸ்கி 1: நல்லா பாத்துக்குங்க. லேபிள்ல பு..வு இல்லை. வேற சொற்சித்திரம், சொற்சிலம்பம் இப்பிடி எதுவுமே இல்லை. மேலும், இது போட்டிக்கான கதைங்கிறதால இதுல வர்ற கேரக்டர் (முக்கியமா பெண்) எல்லாம் கற்பனையே.. யாரையும் குறிப்பதல்ல. யாராவது பிராது குடுக்கணும்னா பரிசல் & ஆதி மேல குடுக்கவும்.
டிஸ்கி 2: மக்கள்ஸ் தைரியமா பின்னூட்டலாம். பின்னாடி யாரும் வந்து இந்த இடுகையைப் படிச்சியா? இது சரியா? நேரடி பதில் தேவைன்னு கேக்க மாட்டாங்க.
டிஸ்கி 1: நல்லா பாத்துக்குங்க. லேபிள்ல பு..வு இல்லை. வேற சொற்சித்திரம், சொற்சிலம்பம் இப்பிடி எதுவுமே இல்லை. மேலும், இது போட்டிக்கான கதைங்கிறதால இதுல வர்ற கேரக்டர் (முக்கியமா பெண்) எல்லாம் கற்பனையே.. யாரையும் குறிப்பதல்ல. யாராவது பிராது குடுக்கணும்னா பரிசல் & ஆதி மேல குடுக்கவும்.
டிஸ்கி 2: மக்கள்ஸ் தைரியமா பின்னூட்டலாம். பின்னாடி யாரும் வந்து இந்த இடுகையைப் படிச்சியா? இது சரியா? நேரடி பதில் தேவைன்னு கேக்க மாட்டாங்க.
35 comments:
ரைட்டு! குடுவைல கிட்னியான்னு கேக்கலாம்னு பார்த்தேன். குலோப்ஜாமூனாக்கிட்டீங்க.
பஸ்ல மொத்த கதையும் ஏறுதே பாஸ், லிங்க் மட்டும் போடலாமே?
இன்னொன்னு எழுதுவீங்களா? :)
Super
பரந்தாமனுக்கு அல்வா.. :)) சூப்பர் கதைங்க.. முகிலன்.
நல்லாருக்கு கதை.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
கதை நல்லாயிருக்கு தினேஷ். வெற்றி பெற வாழ்த்துகள்
kathaya vida diski nalla irukku
super
good
பர பரன்னு போகுது .. நைஸ்..
www.narumugai.com
கதை நல்லாயிருக்கு தினேஷ். வெற்றி பெற வாழ்த்துகள்.
ம்ம்..கதை செம்ம ஸ்பீடு தல.
டிஸ்கி :-)
என்ன சொல்ல, க்ரைம் கதைன்னா அல்வா சாப்பிடற மாதிரியாச்சே தினேஷுக்கு... கலக்கலா இருக்கு.
பிரபாகர்...
கதை நல்ல இருக்கு, டாக்டர் பணத்துக்காக உடல் உறுப்புகளை இபப்டி விற்கிறாரக்ள், அதை டயமண்டுடன் ஒப்பிட்டு சொல்லி அருமை
வெற்றி பெற வாழ்த்துக்கள்
பரந்தாமனுக்கு க்ளோப்ஜாமுன் :)
//பரந்தாமனுக்கு க்ளோப்ஜாமுன் //
எங்களுக்கு அல்வாவா ?
nice. :-)
p.s. Did you get the tickets for Enthiran? I DID!!!
நல்லாருக்கு:)
செம கதை ண்ணா. உங்க ப்ளாகை இப்ப வலைச்சரத்துல ஜெய்லானி பாய், கதை பேசறவங்க லிஸ்ட்ல சேத்தப்புறம்தேன் வாசிக்கறேன். உறவுகள் 8வது பாகத்துக்கு அப்புறம் தேடிட்டே இருக்கேன். இந்த சவால் சிறுகதை ரொம்ப அருமையா போயிருக்கு. அருமையான ட்விஸ்ட்டுக்கள் கூடவே மெஸேஜும். பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்!!
சூப்பர்..
:)
கதை எப்பவும் போல பர பர.. வேகம் உங்க ப்ளஸ் பாயின்ட்..
ஜஸ்ட் ஒரு குடுவைக்குள்ள போட்டு கிட்னியக் கடத்தறது தான் லாஜிக்கலா இடிக்குது.. அம்புட்டு ஈசியான காரியமா அது?
போட்டிக்கு அனுப்பறீங்க போல.. வாழ்த்துக்கள்..
கதை அருமை பரிசுகிடைக்க வாழ்த்துக்கள்.
|| மக்கள்ஸ் தைரியமா பின்னூட்டலாம். பின்னாடி யாரும் வந்து இந்த இடுகையைப் படிச்சியா? இது சரியா? நேரடி பதில் தேவைன்னு கேக்க மாட்டாங்க||
சரி இவ்ளோ சொல்றீங்கன்னு படிக்காம பின்னூட்டறேன்...
(ஒரு வாரம் லீவு போட்டு உக்காந்து எல்லாக் கதையும் படிக்க ட்ரை பண்றேன்..)
வாழ்த்துக்கள்.
கதை அருமை. டிஸ்கி அதை விட அருமை!
:)
கதை நல்லாருக்கு முகிலன்
@ஷங்கர் -
குடுவைன்னா குடுவையேவா? தெர்மாஸ் குடுவைன்னு வச்சிக்கிங்களேன்
@விசா - நன்றி விசா :)
@விதூஷ் - நன்றி விதூஷ்
@சுசி - நன்றி சுசி
@நான் ஆதவன் - நன்றி ஆதவன்
@ers - உங்க கொடுமை தாங்க முடியல சாமீ
@LK - நன்றி கார்த்திக்
@க்ரிஷ்_டெக் - நன்றி
@மதன்செந்தில் - நன்றிங்க
@சே.குமார்- நன்றி குமார்
@ராஜூ - நன்றி தல
@பிரபாகர் - வணக்கம் பிரபா & நன்றி
@ஜலீலா கமால் - நன்றி ஜலீலா
@எறும்பு - நன்றி ராஜகோபால்
@நசரேயன் - உங்களுக்கு அல்வா குடுக்க முடியுமா?
@சித்ரா - நன்றி & வயித்தெரிச்சலைக் கிளப்பாதீங்க. எங்க ஊர்ல ரெண்டாவது வாரம்தான் கொண்டு வருவேன்னு சொல்லிட்டான். நியூ ஜெர்சி போகலாம்னு பாத்தா வீட்ல பெர்மிசன் கிடைக்க மாட்டேங்குது
@வானம்பாடிகள் - நன்றி சார். அப்ப்ப்ப்ப்பா உங்க கிட்ட பின்னூட்டம் வாங்க என்ன என்ன டிஸ்கியெல்லாம் போட வேண்டியிருக்கு?
@அன்னு - நன்றிம்மா அன்னு. அந்தக் கதை தொங்கல்ல விட்ட தொடர்கதை. தொங்கலில் விட்ட தொடர்கதைகள்னு ஒரு தொடர் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.. ;))))
@அன்பரசன் - நன்றி பாஸ்
@எல் போர்ட்..பீ சீரியஸ் - நன்றி சந்தனா
@எல் போர்ட்.. மறுபடியும் நன்றி
@கலகலப்ரியா - பின்னூட்டம் மட்டும் தானா? கதையையும் படிச்சிட்டு நாலு திட்டு திட்டுங்க
@மங்களூர் சிவா- நன்றி தல
@அது சரி - நன்றி அதுசரி..
//தொங்கலில் விட்ட தொடர்கதைகள்னு ஒரு தொடர் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.. ;))))//
ஆஹா...இப்படி கூட ஐடியா இருக்கா. பொழச்சுக்குவீங்கண்ணோவ்...!!!!!
வெற்றி பெற வாழ்த்துகள்
http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_23.html
கதை நல்லாயிருக்கு.வாழ்த்துக்கள்.
முகிலன் அண்ணா, உங்களை ஒரு மெகா தொடருக்கு அழைத்துள்ளேன். எந்த வேலையிருந்தாலும் தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கவும். ப்ளீஸ். :)
http://mydeartamilnadu.blogspot.com/2010/09/blog-post_28.html
வாழ்த்துக்கள்.
(இனி குலோப்ஜாமூன் கவனிச்சு வாங்கணும்)
கதை ரொம்ப நல்லாருக்கு.. வெற்றிபெற வாழ்த்துகள்.
நல்லா எழுதியிருக்கீங்க. நானும் எழுதியிருக்கேன் "வைரம் உன் தேகம்"ங்கற தலைப்பில்
http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.html
Post a Comment