Tuesday, October 19, 2010

பிதற்றல்கள் - 10/19/2010

ஒரு எதிர்வினை

எந்திரன் பற்றி வருகிற எதிர்மறையான விமர்சனங்கள் முன் வைக்கும் குறைகளும், அவற்றின் மீதான என் பார்வையும்

1. லாஜிக் இல்லாத அபத்தமான கதை - ஷங்கர் + ரஜினி படங்களில் உலகத்தரமான கதை + லாஜிக் எதிர்பார்த்து போகும் இவர்களை என்னவென்று சொல்வது. 10 வருடம் அல்ல 100 வருடக் கனவு படம் என்றாலும் ஷங்கரால் இதைத் தாண்டி கதை சொல்ல முடியாது. ஷங்கர் படத்துக்குப் போய் ஷங்கரைத் தேடுங்கள் கிம்கிடுக்கை அல்ல.

2. கொசு பிடிக்கும் காட்சி - பலரால் இதை ஜீரணிக்க முடியவில்லை. டாக்டர் புருனோ நர்சிம் இடுகையின் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது போல இது குழந்தைகளுக்காக. ஆங்கிலப் படம் போல குழந்தைகளுக்காக, பெரியவர்களுக்காக, ஆக்‌ஷன் விரும்பிகளுக்காக, ரொமான்ஸ் விரும்பிகளுக்காக என்று தனித்தனியே எதிர்பார்ப்பவனல்ல தமிழ் ரசிகன். அவனுக்கு இலை போட்டு 4 வகைக் கூட்டு, சாம்பார், ரசம், வத்தக் குழம்பு, மோர் கடைசியாக ஒரு கரண்டி பாயாசம் என்று அத்தனையையும் சேர்த்துப் படைக்க வேண்டும். அதில் உங்களுக்கு காய் பிடிக்கவில்லை என்றால் ஒதுக்கிவிட்டு சாப்பிட்டுக் கொள்ளுங்கள். அதை விடுத்து அந்தக் காயினால் சாப்பாடே கெட்டுப் போய்விட்டது என்று கூப்பாடு போடாதீர்கள். “பசங்க” படத்திலும் காதல் எதிர்பார்ப்போம், “காதல்” படத்திலும் காமெடி எதிர்பார்ப்போம்.

3. விளம்பரங்களில் இது இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல், இதுவரை வெளிவராத புது முயற்சி என்றெல்லாம் சீன் போடும் அளவுக்கு படத்தில் ஒன்றுமே இல்லை.  - இதெல்லாம் விளம்பரம் பாஸ். புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் சூர்யா வந்து SUPERல் S for Service என்று சொல்கிறார். அதை நாம் ஒரு புன்னகையுடன் கடந்து போவதில்லை?

4. சன் டிவியில் அரைமணிக்கொரு முறை விளம்பரம் போட்டு கொல்கிறார்கள் - அவர்கள் இதை எந்திரனுக்கு மட்டுமா செய்கிறார்கள்? அவர்களின் முதல் மொக்கைப் படமான காதலில் விழுந்தேனிலிருந்தே இதைச் செய்து வருகிறார்கள். திடீரென பலருக்கு இப்போதுதான் சன் டிவி என்ற சேனல் இருப்பதும் அதில் எந்திரன் விளம்பரம் போடுவதும் தெரிகிறது.

எந்திரன் பற்றி ரஜினி ரசிகர்கள் எழுதியதை விட ரஜினியை வெறுப்பவர்கள் தான் அதிக இடுகைகளைப் போட்டார்கள். அது கூட ஒரு மாதிரி விளம்பரப் பிரியம் தான்.

ஒரு நன்றி:

நர்சிம் அவர்களிடம் பல நாட்களாகக் கேட்டுக் கேட்டு அவர் செய்யாததால் வெறுத்துப் போய் பின்னூட்டப் போராட்டம் நடத்திய பின்னர் அவர் சச்சின் பற்றி எழுதிவிட்டார். சச்சின் பற்றி யார் எழுதினாலும் படிக்கலாம். ஆனாலும் நர்சிம்மின் டச்சோடு படிக்கலாமே என்று நினைத்துத்தான் அந்தப் போராட்டம்.எதிர்ப்பார்ப்பை 100% பூர்த்தி செய்யவில்லை என்றாலும் எழுதிய வரை ஓக்கே. பரிசல் அண்ணா தானும் ஒரு பாதி எழுதி வைத்திருப்பதாகச் சொன்னார். அவரையும் எழுதச் சொல்லி போராடிவிட வேண்டியதுதான்.

ஒரு விளம்பரம்

நண்பர் பலா பட்டறை ஷங்கர் - இருங்க இருங்க, அவசரப்படாதீங்க, விவகாரமில்லை.. விஷயம் - ஒரு தளத்தைப் பற்றிய செய்தியைப் பகிர்ந்துகிட்டார். உண்மையிலேயே ஒரு களஞ்சியம் அந்தத் தளம் - http://www.chennailibrary.com/ பழந்தமிழ் இலக்கியங்களும், சம கால நாட்டுடமையாக்கப்பட்ட இலக்கியங்களும் மின்னூலாக வைத்திருக்கிறார்கள். சென்று படித்து பயன் பெறுங்கள். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

ஒரு கொலு

நான் இதுவரை கொலு என்பதை சினிமாவில் மட்டுமே பார்த்து வந்திருக்கிறேன். அங்கே என்ன செய்வார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது. எங்களை இந்த முறை ஒரு வீட்டில் கொலுவுக்கு அழைத்திருந்தார்கள். (சுண்டல் தருவார்கள் என்று சொல்லியிருந்ததால்) தங்கமணி, முகிலனோடு ஆஜர் ஆகிவிட்டோம். வந்தவர்கள் எல்லாரும் ஆளுக்கொரு பாட்டு பாடிவிட்டு சென்றார்கள். என்னையோ தங்கமணியையோ பாடச் சொன்னார்கள். கொலுவிலிருக்கும் விக்ரகங்கள் & பொம்மைகள் எல்லாம் எழுந்து ஓடிவிடும் அபாயம் இருந்ததால புன்னகையோடு மறுத்துவிட்டு சுண்டலையும் டீயையும் குடித்துவிட்டு வீடு திரும்பினோம். தங்கமணிக்கும் கொலு வைக்கும் ஆசை வந்துவிட்டது.. :(((

முகிலன் அப்டேட்ஸ்

முகிலன் இப்போது ஆங்கில எழுத்துக்கள் 26ஐயும் (கேப்பிடல் மற்றும் ஸ்மால்) அடையாளம் கண்டுகொள்கிறார். "L" எழுதினால் நேராகப் பார்த்து எல் எனவும் தலைகீழாகத் திருப்பி செவன் எனவும் சொல்கிறார் (M & Wவுக்கும் இப்படியே). ஒரே ஒரு நாள் ஒன்றிலிருந்து ஆரம்பித்து டென் வரைக்கும் அவராகவே எண்ணினார். அதன் பிறகு பலமுறை முயன்றும் டூவிலிருந்து ஆரம்பிக்கிறாரே ஒழிய ஒன் சொல்வதே இல்லை.

அடுத்த கட்டமாக தமிழ் எழுத்துகள் அறிமுகம் துவங்கியிருக்கிறது. அ, ஆ, இ, ஈ சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அனாவுக்கு அடுத்து இனாவுக்குப் போய்விடுகிறார். கூடிய விரைவில் கற்றுக் கொள்வார்.

இந்த விஜயதசமிக்கு வித்யாரம்பம் செய்தாகிவிட்டது. தமிழகத்தில் இருந்த வரை அப்படியென்றால் என்னவென்றே தெரியாமலிருந்தேன். இங்கே உள்ள கோவிலில் வருடா வருடம் விஜயதசமியன்று குழந்தையை மடியில் வைத்து அரிசியில் அ அல்லது ஓம் எழுதி நாவில் தேன் தடவி நடனம் பயில ஆசைப் படுவோருக்கு சலங்கையும், பாட்டு படிக்க ஆசைப்படுவோருக்கு தாளமும் தருவார்கள். இந்த முறை தமிழ்நாட்டிலிருந்து மதியொளி சரஸ்வதி என்பவர் வருகை புரிந்திருந்ததால் அவர் கையால் (மூன்று வயதிலிருந்து 21 வயதுடைவர்களுக்கு) வித்யாரம்பம் செய்து வைத்தார். (பள்ளிக்குப் போக ஆரம்பித்து விட்டவர்களுக்கு வித்யாரம்பம் ஏன் என்று புரியவில்லை).

அண்ணா, அக்கா, மாமா, அத்தை, தாத்தா, பாட்டி என்று மற்றவர்களை அழைக்க முகிலனுக்குச் சொல்லிக் கொடுத்தது அவனுக்கு பயங்கரமாக ரெஜிஸ்டராகிவிட்டது. சிறுவயதினரை அக்கா, அண்ணா, இளைய மற்றும் நடுத்தர வயதினரை அத்தை, மாமா, வயதானவர்களைத் தாத்தா பாட்டி என்று அவனாகவே அழைக்கத் தொடங்கிவிட்டான். நல்ல ஃபிகர்களை சித்தி என்றழைக்க எப்படிக் கற்றுக் கொடுப்பது என்று விழித்துக் கொண்டிருக்கிறேன்.

31 comments:

vasu balaji said...

அடப்பாவிங்களா:)) தமிழன் தலைஎழுத்து சினிமா ரசனையை வச்சா நிர்ணயிக்கிறாய்ங்க. அப்ப நான்லாம் டமிலனே இல்லையா:)). இதுக்கு ராஜபக்சே ராணுவத்தான் கையால சாவலாம் போலருக்கே:))

ஷங்கர் படத்துலயே ஷங்கர தேடணுமா. ரைட்டு.

ஹி ஹி. எந்திரன் கதை படிச்ச வரைக்கும் சுஜாதா சொன்ன செவ்வாய்கிரக ஜோக்குதான் கவனம் வருது:))

எச்சூஸ்மி இனிமே முகிலன் அப்டேட்ஸ்ல ஜூனியர் சீனியர்னு பிரிச்சி போடுங்க. சந்தடி சாக்குல உங்க அப்டேட்ஸ் சேர்த்து விடுற வேலை வேணாம்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்ல ஃபிகர்களை சித்தி என்றழைக்க எப்படிக் கற்றுக் கொடுப்பது என்று விழித்துக் கொண்டிருக்கிறேன்.
//

ஓ..அதுவேற நடக்குதா?...

பின்னோக்கி said...

எந்திரன் - :)
சச்சின் - படித்தேன். நன்றாக இருக்கிறது.

பிரபாகர் said...

கொசு பிடிக்கிற சீனுக்கு இவ்வளவு விளக்கமா?... முடியல!...

பிரபாகர்....

பிரபாகர் said...

முகிலன் அப்டேட்ஸ்... கலக்கல். ஷேப்ஸ், கலர்ஸ், ஸ்பாட் த டிஃப்ரன்ஸ்-னு சொல்லிக்கொடுங்க. இதுதான் சரியான தருணம்.

பிரபாகர்...

க.பாலாசி said...

முதல்ல முகிலனுக்கு அழகான ஃபிகரெல்லாம் அத்தைன்னு சொல்லிக்கொடுக்கணும்...

VISA said...

முகிலன் அப்டேட்ஸ்... கலக்கல்.

Prathap Kumar S. said...

// ஃபிகர்களை சித்தி என்றழைக்க எப்படிக் கற்றுக் கொடுப்பது என்று விழித்துக் கொண்டிருக்கிறேன். //

ஹஹஹ... நான் நினைக்கிறேன் இந்த விசயத்துல உங்களுக்கு உங்க பையனுக்கும் பயங்கர போட்டி இருக்கும்னு...:))

vasu balaji said...

/ க.பாலாசி said...

முதல்ல முகிலனுக்கு அழகான ஃபிகரெல்லாம் அத்தைன்னு சொல்லிக்கொடுக்கணும்.../

அவனவன் கவலை அவனுக்கு:)))))

velji said...

Lஐ திருப்பி 7 சொல்ற பசங்கட்ட பார்த்து சூதானாமா இருக்கனும்.இடம் பார்த்து போட்டு கொடுத்துருவாங்க....(சித்தி மேட்டர்)

Unknown said...

Mukilan updates superb!

Yaar enna sonnalum Endhiran pattaya kilaparan. Ean ivlo naala kanum?

Radhakrishnan said...

:) நன்று.

Unknown said...

@வானம்பாடிகள் - தமிழ்ப் படம் பாக்காதவங்க - அதிலயும் பேரன்கள் தயாரிக்கும் தமிழ்ப்படம் - பாக்காதவங்களையெல்லாம் தமிழர்களே இல்லைன்னு சட்டம் போடப்போறாங்களாம் சார். சாக்ரத.

@பட்டாபட்டி - ஹி ஹி ஆமாங்க

@பின்னோக்கி - நன்றி பின்னோக்கி

@பிரபாகர் - எதாவது எழுதணும்ல.

@பிரபாகர் - ஷேப்ஸ் சொல்றார், கலர்ஸும் சொல்றார். போன அப்டேட்ஸ் படிக்கலையா நீங்க?

@க.பாலாசி - அடுத்ததா பாலாசியைப் பாத்தா சித்தப்பான்னு சொல்லிக்குடுக்கணும்

@விசா - நன்றி பாஸ்.. வலைச்சரத்துல கலக்கறேள்

@நாஞ்சில் பிரதாப் - நன்றி

@வானம்பாடிகள் - கரெக்டா சொன்னீங்க சார்

@வேல்ஜி - அவ்வ்வ் அது வேறயா?

@க்ரிஷ்_டெக் - நன்றிங்க. ஆணிதான் வேற என்ன?

@வி.ராதாகிருஷ்ணன் - நன்றி சார்.

சுசி said...

முகிலனுக்கு சுத்திப் போடுங்க :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கொசு சீனுக்கு நம்ம அமரிக்க சித்ரா நல்ல லாஜிக் ஒன்னு சொல்லி இருந்தாங்க.. படிச்சுப்பாருங்க..
மத்தபடி எல்லா பாயிண்ட்டும் கரெக்ட் ன்னு தான் தோணுது..

\\அதன் பிறகு பலமுறை முயன்றும் டூவிலிருந்து ஆரம்பிக்கிறாரே ஒழிய ஒன் சொல்வதே இல்லை.//
எங்க ஒன் டூ த்ரீ சொல்லு பாப்பம் .. ஹாங் ஒன் ன்னு ஆரம்பிச்சிருப்பீங்க.. அவரு வாட் கம்ஸ் நெக்ஸ்ட் ன்னு .. 2, 3 சொல்ல ஆரம்பிச்சிருப்பார்.. :)

எம்.எம்.அப்துல்லா said...

// நல்ல ஃபிகர்களை சித்தி என்றழைக்க எப்படிக் கற்றுக் கொடுப்பது என்று விழித்துக் கொண்டிருக்கிறேன்.

//

முயற்சியில வெற்றி அடைஞ்சா சொல்லிவுடுங்க :)

ராஜ நடராஜன் said...

பாஸ்!என்ன ஆறுன வடைய பரிமாறுங்க?பரவாயில்லை பக்கத்துல தொட்டுக்க சைட்டிஷ் கொடுத்தவரைக்கும் தப்பிச்சீங்க.

கலகலப்ரியா said...

ரைட்டு...

|| ராஜ நடராஜன் said...
பாஸ்!என்ன ஆறுன வடைய பரிமாறுங்க?பரவாயில்லை பக்கத்துல தொட்டுக்க சைட்டிஷ் கொடுத்தவரைக்கும் தப்பிச்சீங்க.||

என்ன பின்னூட்டம் போடறதுன்னு யோசிச்சிட்டிருந்தேன்... நன்றி ரா.ந.ரா.

ராஜ நடராஜன் said...

//எந்திரன் பற்றி ரஜினி ரசிகர்கள் எழுதியதை விட ரஜினியை வெறுப்பவர்கள் தான் அதிக இடுகைகளைப் போட்டார்கள். அது கூட ஒரு மாதிரி விளம்பரப் பிரியம் தான்.//

புரியுது!புரியுது:)

ராஜ நடராஜன் said...

//நல்ல ஃபிகர்களை சித்தி என்றழைக்க எப்படிக் கற்றுக் கொடுப்பது என்று விழித்துக் கொண்டிருக்கிறேன். //

தமிழில் எளிதாக குழந்தைகள் Catch செய்யும் வார்த்தைகள்

அம்மா
அப்பா
தாத்தா
பாப்பா

டிப்ஸ்!தித்தி ட்ரை பண்ணலாம்:)
ஏன்னா பெப்சிக்கு பெத்சி சொன்ன குரலை நான் கேட்டிருக்கிறேன்.

Ahamed irshad said...

பித‌ற்ற‌ல் அச‌த்த‌ல்..ஐஸீக்காக‌ நான் கொடுத்த‌ டிக்கெட் செல‌வு 20 ரியாலுக்கு ப‌ர‌ம‌ திருப்தி.. சித்தி மேட்ட‌ர் என்ற‌தும் என‌க்கு 'பூவ‌ர‌சி' ஞாப‌க‌ம் வ‌ந்துவிட்ட‌து..பைய‌ன் ப‌த்திர‌ம்..

Chitra said...

அடுத்த கட்டமாக தமிழ் எழுத்துகள் அறிமுகம் துவங்கியிருக்கிறது. அ, ஆ, இ, ஈ சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அனாவுக்கு அடுத்து இனாவுக்குப் போய்விடுகிறார். கூடிய விரைவில் கற்றுக் கொள்வார்.
...so cute! சமத்து குட்டி!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

எனக்கு காரமா சிக்கன் பிரியாணிய புல் கட்டு கட்டறது தான் பிடிக்குது.. நானு தமிழச்சி தானே? :)

நூலகச் சுட்டிக்கு மிக்க நன்றி.. (தமிழுங்கோ :) )

நாங்கல்லாம் முகிலனுக்கு (பதிவர் இல்ல, ஜூனியர் :) ) அக்கா லிஸ்ட் ல வர்றோம் :)

நசரேயன் said...

//கொசு சீனுக்கு நம்ம அமரிக்க சித்ரா நல்ல லாஜிக் ஒன்னு சொல்லி இருந்தாங்க.. படிச்சுப்பாருங்க..
மத்தபடி எல்லா பாயிண்ட்டும் கரெக்ட்
ன்னு தான் தோணுது..//

கண்டிப்பா

குடுகுடுப்பை said...

நல்ல ஃபிகர்களை சித்தி என்றழைக்க எப்படிக் கற்றுக் கொடுப்பது என்று விழித்துக் கொண்டிருக்கிறேன்.

//
mukilan amma blog padikiratha vittachaa?

Anisha Yunus said...

//நல்ல ஃபிகர்களை சித்தி என்றழைக்க எப்படிக் கற்றுக் கொடுப்பது என்று விழித்துக் கொண்டிருக்கிறேன். //
உலகத்துல ஒரு நல்ல பிள்ளை இருந்தா புடிக்காதே உங்களுக்கு??

உங்க வீட்டு சார் மாதிரி இங்கே ஒரு சாரும் உருதுவையும் தமிழையும் பிச்சு வாங்கிட்டு இருக்கார்....எப்படித்தான் இந்த மொழி இவ்வளவு அழகாகிறதுன்னு யோசிக்க வேண்டியிருக்கு. என்சாய்ங்ணா!! :)

Unknown said...

///நல்ல ஃபிகர்களை சித்தி என்றழைக்க எப்படிக் கற்றுக் கொடுப்பது என்று விழித்துக் கொண்டிருக்கிறேன். ///

ஒரு + வாக்கு... இதுக்காகவே

a said...

//
நல்ல ஃபிகர்களை சித்தி என்றழைக்க எப்படிக் கற்றுக் கொடுப்பது என்று விழித்துக் கொண்டிருக்கிறேன்
//
ha ha ha........

மரா said...

அல்பாபெட்ஸ் முடிச்ச கையோட சாவா,சி,சிபிபி அல்லாம் கத்து குடுத்துருங்கண்ணே :) சித்தீஈஈஈஈ.......... நன்று.

Paleo God said...

என்னது எந்திரன் ரிலீஸ் ஆயிடிச்சா??

:)

குழந்தைகளுக்கு வார்த்தைகள் சொல்லிக் கொடுக்கும் போதுதான் நம்முடைய அறியாமையின் உச்சம் வெளிப்படுகிறது!

பனித்துளி சங்கர் said...

///நான் இதுவரை கொலு என்பதை சினிமாவில் மட்டுமே பார்த்து வந்திருக்கிறேன். அங்கே என்ன செய்வார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது. எங்களை இந்த முறை ஒரு வீட்டில் கொலுவுக்கு அழைத்திருந்தார்கள். (சுண்டல் தருவார்கள் என்று சொல்லியிருந்ததால்) //////////

என்ன தல வெறும் சுண்டலை மட்டும் கொடுத்து ஏமாத்திட்டாங்களோ !!?