Sunday, December 26, 2010

கம்யூனிசம் மலர்ந்தால்??

நேற்று இரவு தூங்கும்போது ஒரு கனவு வந்தது. (இன்செப்ஷம் படம் பார்த்துத் தொலைந்ததன் விளைவோ?) இந்தியாவில் திடீரென்று புரட்சி வெடித்து கம்யூனிசம் மலர்ந்துவிட்டது. ஒரே நாளில் இந்த மாற்றம் நிகழ்ந்துவிட்டது. இதுதான் கனவு.

பகலெல்லாம் அந்தக் கனவை அசைபோட்டுக்கொண்டிருந்ததன் விளைவு இந்தப் பதிவு. என்னை ஃபாலோ செய்யும் நீங்களும் இந்த மொக்கைக் கொடுமையை அனுபவித்தே தீரவேண்டும்.

கம்யூனிசம் மலர்ந்தால் என்ன நன்மைகள் விளையும் என்பதை என் கனவின் தொடர்ச்சியாகப் பார்ப்போம்.

நன்மைகள்:

1. ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகள் நீங்கி அனைவரும் ஏழைகளாகவே இருப்பார்கள். (பொலிட் பீரோ உறுப்பினர்கள் சொகுசு மாளிகைகளையும் படகுக் கார்களையும் அனுபவிப்பார்கள். ஆனால் அவர்கள் பணக்காரர்கள் என்று கருதப்படக் கூடாது).

2. அனைவருக்கும் சமமான கல்வி கட்டணம் ஏதுமின்றி கிடைக்கும் (இலவசம் என்ற வார்த்தையை சொல்லக்கூடாது.)

3. சமூகத்தின் ஒரு பிரிவு பட்டினியிலும், ஏனைய பிரிவுகள் தின்று கொழுத்தும் இருக்க மாட்டார்கள். (பட்டினி அத்தனை பேருக்கும் சமமாகப் பிரித்துத் தரப்படும்)

4. முதலாளிகளே இருக்க மாட்டார்கள். (அரசாங்கம் தான் முதலாளி. மற்ற அத்தனை பேரும் தொழிலாளிகளே).

5. ரேசன் கடையையே எட்டிப் பார்க்காமல் வெறும் ஆவணமாக மட்டும் ரேசன் கார்டை வைத்திருக்கும் பணக்காரர்கள் இருக்க மாட்டார்கள். (அத்தனை பேரும் ரேசனில் தான் பொருள் வாங்கி உண்ண வேண்டும்).

6. கடன் வேண்டுமா என்று கேட்டு தொல்லை செய்யும் பெண்கள் உங்கள் செல்ஃபோனுக்கு அழைக்க மாட்டார்கள் (செல்ஃபோனே இருக்காது உங்களுக்கு. இதில் ஃபோன் கால் வேறு வருமா?)

7. மசூதிகள் இடிக்கப்படுவதால் மதக் கலவரங்கள் நிகழாது (சர்ச், மசூதி, கோவில் உட்பட அத்தனை மத வழிபாட்டுத் தலங்களையும் அரசாங்கமே இடித்துவிட்ட பின் மற்றவர் இடிக்க என்ன இருக்கும்?)

8. உங்களை விட அதிகம் படித்த உங்கள் மேலதிகாரிக்கும் உங்களுக்கும் ஒரே வாழ்க்கைத் தரம் தான் இருக்கும்.(அதனால் என்ன படித்து என்ன புண்ணியம் என்று மேல் படிப்பு படிக்க விருப்பம் இல்லாதவர்கள் அதிகமாவார்கள்).

9. அரசாங்கம் வேலையில்லாத இளைஞர்களுக்கு மானியம் வழங்கும் (இதனால் சோம்பேறிகள் அதிகமாவார்கள்)

10. அரசாங்கத்தை எதிர்த்து உண்மைத்தமிழன் அண்ணன் எழுதும் 144 பக்க பதிவுகளை படிக்க வேண்டியிருக்காது. வினவு, மாதவராஜ் ஆகியோர் பொங்கல் வைக்கும் கட்டுரைகளையும் படிக்க வேண்டிய தேவையிருக்காது. (அரசாங்கத்துக்கு எதிராக யோசித்தாலே மூளை சிதறடிக்கப்படும். அப்புறம் எங்கிருந்து பதிவு எழுதுறது?)

11. மதங்கள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு மார்க்ஸியம் மட்டுமே மதமாக இருக்கும். மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் (துணை முதல்வர் இல்லப்பா), சே குவேரா ஆகியோர் கடவுள்களாக அறிவிக்கப் படுவர். (கடவுள்களை இகழ்பவர்கள் வீட்டுக்கு முன்னால் அரசாங்க ஊழியர்கள் ஆபாச நடனம் ஆடுவார்கள்.)

12. பெப்ஸியும் கோக்கும் அடியோடு தடை செய்யப்படும். (மிக்ஸிங்குக்கு என்ன செய்வதா? சரக்கே கிடைக்காது. அப்புறம் எங்கிருந்து மிக்ஸிங்?)

5 comments:

Anonymous said...

அவங்க அவங்க அவங்க வேலையைப் பார்த்திட்டு இருக்க வேண்டியது தான். அதாவாது சம்பாதி சாப்பிடு தூங்கு அவ்ளோ தான்

சண்முககுமார் said...

ANKITHA VARMA சொல்வதுதான் சரி என்று எனக்கு தோணுது



இதையும் படிச்சி பாருங்களேன்

குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம்

Philosophy Prabhakaran said...

என்னது சரக்கடிக்க முடியாதா...? நான் இந்த ஆட்டத்துக்கு வரலை...

NO said...

கம்யூனிசம் மலர்ந்தால்??? -

கம்யூனிசம் எங்கேயும் மலர்ந்ததாக சரித்திரமே இல்லை. ஜனத்தொகையில் இரண்டு முதல் ஐந்து சதவிகிதமே உள்ள ஒரு கூட்டம், ஏனைய மக்கள் சோர்ந்து போயிருக்கும் நேரத்தில் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, தாங்கள் எதிர்ப்பதாக ஊளையிட்ட அதே அடக்குமுறை சாதனங்களை கையிலெடுத்து, ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றும் வழிமுறையை "மக்கள்" புரட்சி என்று பொய் வர்ணம் பூசப்பட்ட கம்யூனிச புரட்சி!

சரித்திரமே அதற்க்கு சாட்சி! அது மலர்வது இல்லை என்று மிக திட்டவட்டமாக தெரிந்த ஒன்றுதான்! ஒரு சர்வாதிகாரகூட்டம் மற்றொரு சர்வாதிகார கூட்டத்தின் இடமிருந்து அல்லது ஒரு ஜனாயக முறையில் ஆளும் வர்கமிலிருந்து மிக்க வன்முறையுடன் ஆட்சி அதிகாரங்கள் பிடுங்கப்படுவதே கம்யூனிசம் மலர்ந்த கதைகள்! ஓரிரண்டு மாற்று நிகழ்வுகள் இருந்தாலும் கிட்டத்தட்ட தொண்ணூற்றி எட்டு சதவிகித கம்யூனிச புரட்சிகள் இந்த வகையை சேர்ந்ததுதான்!

கம்யூனிசம் என்பது சர்வாதிகார நோய்களின் ஒன்று. மன்னராட்சி சர்வாதிகாரங்கள் எவ்வளவு மடத்த்னமானவைகளோ, அதைவிட மடத்தனமானது மேலும்
ஆபத்தானது இந்த கம்யூனிச ஆட்சி முறை! இவர்களின் ஆட்சிகளில் நன்மை என்பதே கிடையாது! மானுடத்தன்மையை மொத்தமாக மூழ்கடிக்கும் மூர்க்க சித்தாந்தங்களின் மூலமே கம்யூனிசம்! மார்க்ஸ் உருவாக்கிய சித்தாந்தம் ஆப்படி ஒன்றும் சொல்லவில்லை என்று வாதிடலாம். அது ஓரளவுக்கு உண்மையும் கூட. ஆசைப்படதென்னவோ ஒரு பேதமில்லாத சமுதாயத்தை! ஆனால் கிடைத்ததோ கடைந்தெடுத்த சர்வாதிகார சீக்குபிடித்த உலகத்தை! ஸ்டாலின் முதல் மாவோ வரை, சாய்-பால் -சென் முதல் கிம்-இல்-சாங் வரை, என்விர் ஹோட்ஜா முதல் பால்-பாட் வரை எல்லாவருமே மானுடத்தன்மைகளை முற்றிலுமாக துலைத்த கடைந்தெடுத்த சர்வாதிகார சதிகாரர்கள்தான்!! அவர்கள் படைத்த சமுதாயங்களுக்குள் இருந்தோறேல்லாம் எப்படியாவது அந்த சாக்கடைகளிளிருந்து
தப்பிக்க வழி தேடிய சமூகங்கள்தான்! கம்யூனிசம் நல்லது, ஆனால் அதை சரியாக பின்பற்றாதவர்கள் அதை இந்த நிலைமைக்கு ஆளாக்கிவிட்டார்கள் என்று சொல்லுபவர்களுக்கு ஒரே கேள்வி / பதில் - அவ்வளவு "பின்பற்ற தெரியாதவர்களை" உலகிற்கு கொடுத்த ஒரு சித்தாந்தம் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்பதுதான்!

கம்யூனிசம் - கொலைக்கும் அழிவிற்கு அறிவார்ந்த பதில்கள் கொடுக்க சொல்லும் ஒரு வழிமுறை!!

THE UFO said...

கப்பல் போன்ற இப்பதிவில்... ஒரு சிறிய ஒட்டை உள்ளது. அது...

எங்குமே மலர வாய்ப்பே இல்லாத கம்யூனிசம் எப்படி உங்கள் கனவில் மலர்ந்திருக்க முடியும்?

அப்புறம்...

நாளேல்லாம் கடினமாய் உழைக்கும் ஏழை கூலித்தொழிலாளி வர்க்கத்தின் மிகவும் இன்றியமையாத அத்தியாவசிய ஜீவாதாரமான ஒன்றை...//சரக்கே கிடைக்காது//--சிறிய ஓட்டைக்கு உள்ளே ஒரு பெரிய ஓட்டை.