Tuesday, September 9, 2008

தமிழ் சினிமாவில் GOOFகள்

முதலில் கூஃப் க்கு தமிழில் என்னப்பா? கவனக்குறைவுகள் என்று சொல்லலாமா?


சமீபத்தில் ஒரு வலைப்பூவில் தசாவதாரம் படத்தில் உள்ள நுணுக்கமான விஷயங்களையும் அதில் இயக்குனரும் அவரது உதவியாளர்களும் தவற விட்ட சில குறைபாடுகளையும் பதித்திருந்தார் ஒரு நண்பர். வழக்கமாக சினிமா பார்க்கும்போது இந்த மாதிரி சின்ன சின்ன தவறுகளை உற்று நோக்கி உடன் பார்ப்பவர்களிடம் பந்தா செய்வது என் வழக்கம். அவற்றையெல்லாம் ஏன் ஒரு வலைப்பூவாய் பதிக்கக்கூடாது என்று எண்ணினேன். அந்த எண்ணம் இதோ உங்கள் முன்.


கில்லி

====

இத்திரைப்படத்தில் மதுரை ரயில்நிலையம் என்று காட்டுவது மதுரை ரயில் நிலையமே இல்லை. சில விசயங்களை தவிர்த்திருந்தால் நான் கூட நம்பியிருப்பேன் மதுரை என்று. ஒரு காட்சியில் கேமரா டாப் ஆங்கிளில் பிரகாஷ் ராஜை காட்டும்போது மின்சார வண்டிக்கான மின் கம்பிகள் செல்வது திரையில் தெரியும். மதுரையில் மின் வண்டிகள் செல்ல வசதி இல்லை.


வரலாறு

======

ஃப்ளாஷ் பேக் காட்சியில் மருத்துவராக அறிமுகமாவார் நம்ம ரவிக்குமார். அப்போது அவர் இடுப்பில் செல்போன் கட்டியிருப்பது அபத்தம்.


பூப்பறிக்க வருகிறோம்

=================

பல பேருக்கு இப்படி ஒரு படம் வந்ததே நினைவிருக்காது. சிவாஜி கணேசனும் நம்ம விஷாலோட அண்ணனும் நடித்த படம். அதில் ஒரு காட்சியில் மதுரை விமான நிலையத்தைக் காட்டி இருப்பார்கள். மதுரை விமான நிலையம் என்ற ஒரு பேனர் தொங்கும். சரிதான்பா, நீங்க ரொம்ப லோ பட்ஜெட் படம் எடுக்குறீங்க, ஏர்போர்ட்டுக்கு எல்லாம் போய் படம் எடுக்க முடியாது. அதுக்காக மதுரை ஏர்ப்போர்ட்டுக்குள்ள பிரிட்டீஷ் ஏர்வேஸ் கவுண்ட்டர் எல்லாமா போடுறது. ஒரு அளவில்லையா?


இது பாராட்டு - சுப்பிரமணியபுரம்

========================

மொக்கசாமி தன் ஆசை நாயகியின் வீட்டுக்கு செல்லும் காட்சி. வெளியே கதவை கஞ்சா கருப்பும் அவரது நண்பர்களும் பூட்டி விட்ட சத்தம் கேட்டு இருவரும் கதவருகே நின்று உரையாடும்போது, அந்தப் பெண்மணியின் பின்னால் ஒரு புகைப்படம் தொங்கும். அது அந்தப்பெண்ணின் இளம் வயது புகைப்படம். அதில் அந்தப் பெண்ணின் தோற்றம் அன்றைய தேதியிலிருந்து (1980) 10, 15 வருடம் முன்னால் என்ன ஃபேஷனோ அந்த ஃபேஷனில் இருக்கும். இந்த அளவுக்கு நுணுக்கமாக பார்த்து பார்த்து சீன் அமைத்தால் தான் அது பீரியட் படம். 100 கோடி செலவு செய்து எடுத்த தசாவதாரத்திலும் சிவாஜியிலும் இல்லாத ஒரு அம்சம் இது.

No comments: