Wednesday, September 30, 2009

தசாவதாரம் ஏன் 2008ன் சிறந்த படம்?

நண்பர் SUREஷ் அவர்கள் இங்கே சிவாஜி படத்துக்கு விருது வழங்கியதைப் பற்றி எழுதியிருந்தார். அதைத் தொடர்ந்து..

தசாவதாரம் ஏன் 2008ன் சிறந்த படம் என்பதற்கு 10 காரணங்கள்:

1. முதல் காட்சியிலேயே கலைஞர் கருணாநிதியைக் காட்டியதன் மூலம் விருதை நோக்கி நடை போடத் துவங்கிவிட்டது இந்தப் படம்.
2. இந்தியாவில் இப்போது வகுப்பு வாதம் மலிந்திருக்கிறது என்று யாரும் வருத்தப் பட வேண்டாம். 12ம் நூற்றாண்டிலேயே சைவமும் வைணவமும் சண்டை போட்டுக் கொண்டுள்ளது. இது நமக்கெல்லாம் சகஜம் என்று மக்கள் மத்தியில் ஒரு சகிப்புத் தன்மையை வளர்த்த காரணத்திற்காக.
3. தெலுங்குக்காரர்களைக் காலை வாரியதன் மூலம் உள்ளுக்குள் வெந்துகொண்டிருக்கும் (என் போன்ற) ஆயிரக்கணக்கான தமிழ் மென்பொருளாளர்களை வாய் விட்டு சிரிக்க வைத்ததற்காக.
4. உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முதலாக 10 வேடங்களில் ஒரு நடிகர் நடித்ததற்காக (இப்படித்தான் இந்தப் படத்துக்கு விளம்பரம் செய்தார்கள்)
5. மற்றொரு நாட்டின் ஜனாதிபதியைப்போல காமெடியன் ஆக்கியதற்காக(இது வரைக்கும் இந்த வேசம் எதுக்கு போட்டார்னே தெரியல)
6. பட்டர் ஃபிளை எஃபக்டை சாதாரண தமிழனும் புரிந்து கொள்ளும்படி பாடம் நடத்தியதற்காக
6.5 பட்டர் ஃபிளை எஃபக்டை புரிந்து கொண்டதும் இந்தியா வல்லரசாகிவிடும் என்று எல்லோரும் நம்புவதற்காக
7. இந்திப் படத்தில் மட்டுமே கவர்ச்சிக் கன்னியாகத் திகழ்ந்த மல்லிகா ஷெராவத்தை தமிழ்ப்படத்தில் நடிக்க வைத்ததற்காக.
8. கமலே நினைத்துப் பார்க்காத வகையில் இந்தப் படத்தின் பத்து வேடங்களை விஷ்ணுவின் பத்து அவதாரங்களோடு ஒப்பிட்டு வலைமனை முழுதும் பலரை எழுத வைத்ததற்காக.
9. ஜெயலலிதா ஆட்சியில் சுனாமி வந்தாலும் அப்போது உலகத்தைக் காப்பாற்றிய விஞ்ஞானிக்கு கலைஞரின் ஆட்சியில் தான் பாராட்டு விழா எடுப்பார்கள் என்று கலைஞருக்கு ஐஸ் வைத்ததற்காக.
10. எல்லாவற்றிற்கும் மேலே, அந்த வருடத்தில் வேறு கமல் படம் எதுவும் வராத காரணத்திற்காக.

17 comments:

நாமக்கல் சிபி said...

//இந்தியாவில் இப்போது வகுப்பு வாதம் மலிந்திருக்கிறது என்று யாரும் வருத்தப் பட வேண்டாம். 12ம் நூற்றாண்டிலேயே சைவமும் வைணவமும் சண்டை போட்டுக் கொண்டுள்ளது. இது நமக்கெல்லாம் சகஜம் என்று மக்கள் மத்தியில் ஒரு சகிப்புத் தன்மையை வளர்த்த காரணத்திற்காக.//

Superb Punch! Very Nice!

நாமக்கல் சிபி said...

//Post a Comment On: பிதற்றல்கள்//

இதைப் பார்த்து நானே சித்த குழம்பிட்டேன்!

மணிகண்டன் said...

:)-

Unknown said...

நன்றி நாமக்கல் சிபி. நீங்களும் இதே போல ஒரு ப்ளாக் வைத்திருக்கிறீர்கள் என்பதை கொஞ்சம் லேட்டாகத்தான் தெரிந்து கொண்டேன். அதை வைத்து ஒரு மொக்கைப் பதிவு போட்டிருக்கிறேன் பார்த்தீர்களா?

கிரி said...

இந்த விருதெல்லாம் எதுக்குங்க தலைவரின் "சூப்பர் ஸ்டார்" என்ற ஒரு பெயரே போதும் :-)

மக்களின் மனதில் இடம் பிடிப்பதே பெரிய விருது ..அதை தலைவர் எப்போதோ செய்து விட்டார் ..இதில் யாரும் ரஜினியை மிஞ்ச முடியாது.

Srinivas said...

//கிரி said...
இந்த விருதெல்லாம் எதுக்குங்க தலைவரின் "சூப்பர் ஸ்டார்" என்ற ஒரு பெயரே போதும் :-)
//

Attakasam...Super Star Pugalai eduthuraitha Super Puyal Giri Vaalga:)

Anonymous said...

//8. கமலே நினைத்துப் பார்க்காத வகையில் இந்தப் படத்தின் பத்து வேடங்களை விஷ்ணுவின் பத்து அவதாரங்களோடு ஒப்பிட்டு வலைமனை முழுதும் பலரை எழுத வைத்ததற்காக.//

நானே அதை செஞ்சேனே :)

Anonymous said...

:)




பி.கு: அருமையான பெயர் உங்களுக்கு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நீங்க மறைமுகமாக சொல்லியிருக்கற மேட்டர் தெளிவாத் தெரியது தல

குடுகுடுப்பை said...

சூப்பர்லூ

குடுகுடுப்பை said...

இல்ல சூப்பரூ

Unknown said...

// கிரி said...
இந்த விருதெல்லாம் எதுக்குங்க தலைவரின் "சூப்பர் ஸ்டார்" என்ற ஒரு பெயரே போதும் :-)

மக்களின் மனதில் இடம் பிடிப்பதே பெரிய விருது ..அதை தலைவர் எப்போதோ செய்து விட்டார் ..இதில் யாரும் ரஜினியை மிஞ்ச முடியாது.
//

ரஜினி என்ற "மனிதனை" எனக்கு எப்போதுமே பிடிக்கும். வருகைக்கு நன்றி.

Unknown said...

//சின்ன அம்மிணி said..

நானே அதை செஞ்சேனே :)//

நானும் அதைப் படிச்சேனே.

Unknown said...

// ♥ தூயா ♥ Thooya ♥ said...
:)




பி.கு: அருமையான பெயர் உங்களுக்கு//

நன்றி தூயா. உங்கள் பெயரும் அருமை. by the way முகிலன் என் மகனின் பெயர்.

Unknown said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
நீங்க மறைமுகமாக சொல்லியிருக்கற மேட்டர் தெளிவாத் தெரியது தல//

அய்யய்யோ தெரியக்கூடாதுன்னு தான் மறைமுகமா சொன்னேன். தெளிவாயிடுச்சா?
வருகைக்கு நன்றி பாஸ்.

Unknown said...

//குடுகுடுப்பை said...
இல்ல சூப்பரூ//

தேங்க்ஸூ

svijay said...

Hi ongula padatula kamikalana ovra pesurada. nenga aru padam edhtu utturka vendyathana.

Heading

Mukilan Makkaikal (In 2000 ketups)