Wednesday, September 2, 2009

சச்சின் சுயநலவாதியா?

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நண்பரின் இல்லத்தில் விருந்துக்கு அழைத்திருந்தனர். வழக்கம் போல சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆவதற்காக பேசிக் கொண்டிருந்த போது பேச்சு கிரிக்கெட் பக்கம் சென்றது. வந்திருந்த நண்பர்களில் ஒருவர் "டெண்டுல்கர் ஒரு பெரிய சுயநலவாதி. தன் சொந்த சாதனைகளுக்காக மட்டுமே விளையாடுபவர்." என்று வாதத்தை துவக்கி வைத்தார்.

சில நண்பர்கள் - "அப்படி எப்படி சொல்லலாம்?" என்று பதில் வாதம் செய்தனர்.

அவர்களின் வாதத்தை உங்கள் முன் எடுத்து வைக்க வேண்டிய தார்மீகக் கடமை (?!) இருப்பதால் அதை அப்படியே செய்கிறேன்.

டெண்டுல்கர் சுயநலவாதி என்பவர்களின் வாதம்:
டெண்டுல்கர் தொண்ணூறு ரன்களை எட்டி விட்டதும் கட்டையைப் போட ஆரம்பித்து விடுகிறார். சரி, நூறு அடிக்கிறாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை. 97, 98 என்று அவுட்டாகி விடுகிறார். அதற்கு கட்டை போடாமல் அடித்து ஆடி அவுட் ஆகியிருந்தாலாவது அடுத்து வரும் பேட்ஸ்மேன் ரன் எடுத்திருப்பார். இப்படி எத்தனை முறை நடந்திருக்கிறது?

டெண்டுல்கர் சுயநலவாதி இல்லை என்பவர்களின் மறு வாதம்:
சுய சாதனைகளுக்காக ஆடுவது என்பது ஒவ்வொரு ஆட்டக்காரர்களிடமும் இருக்கின்ற ஒரு தன்மை. எந்த ஆட்டக்காரராவது நூறு அடித்ததும் பேட்டைத் தூக்கி பெவிலியனுக்கு காட்டாமல் அடுத்த பந்துக்கு தயாராவது உண்டா? அப்படி இருக்க டெண்டுல்கரை மட்டும் குறை சொல்வது ஏன்? அதோடு ஏதாவது ஒரு ஆட்டம், டெண்டுல்கர் கட்டை போட்டதால் தோற்று விட்டோம் என்று காட்டுங்கள். டெண்டுல்கர் மட்டுமே ஆடியதால் இந்தியா ஜெயித்த ஆட்டங்களை கொஞ்சம் நஞ்சமல்ல"

டெண்டுல்கர் சுயநலவாதி:
ப்ரஷ்ஷர் கேம்களில் டெண்டுல்கர் சோபித்ததே இல்லை. வேகமாக அவுட் ஆகி விடுகிறார். இதனால் எத்தனை ஆட்டங்களை இந்தியா இழந்திருக்கிறது?

டெண்டுல்கர் சுயநலவாதி இல்லை:
எல்லா ப்ரஷ்ஷர் கேம்களிலும் டெண்டுல்கர் வேகமாக ஆட்டமிழந்தது இல்லை. ஷார்ஜாவிலும், சமீபத்தில் ஆஸ்திரேலியாவிலும் டென்ஷன் ஆட்டங்களில் டெண்டுல்கர் ஆடவில்லையா? 2003 உலக கோப்பையில் ரசிகர்களுக்கு வாக்களித்ததன் படி இந்தியாவை இறுதிப்போட்டி வரை இழுத்துக் கொண்டு செல்லவில்லையா? அந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் பறக்க விட்ட சிக்ஸர்களை மறக்க முடியுமா? சச்சின் மட்டும் நன்றாக ஆடினால் போதுமா? மற்றவர்கள் ஆட வேண்டாமா? முதுகு வலியோடு சென்னை டெஸ்ட்டில் வெற்றியின் விளிம்பு வரை கொண்டு போனாரே? மூன்று விக்கட்டுகள் இருந்தும் 17 ரன்கள் எடுக்க முடியாமல் மண்ணைக் கவ்வினோமே இதற்கும் சச்சினா காரணம்?

சுயநலவாதி:
அதே 2003 உலகக் கோப்பை போட்டியிலேயே இறுதி ஆட்டத்தில் வேகமாக ஆட்டமிழந்து விடவில்லையா? அது மட்டுமா? 2007 உலகக்கோப்பையில் இலங்கையிடம் வேகமாக ஆட்டமிழக்கவில்லையா? அவர் எப்போதெல்லாம் வேகமாக ஆட்டமிழக்கிறாரோ அன்றெல்லாம் இந்தியா தோல்வி அடைந்திருக்கிறது.

சுயநலவாதி இல்லை:
எல்லா போட்டியிலும் நன்றாக விளையாட முடியுமா? தவறு நிகழ்வது சகஜம் தானே? ஆனால் டெண்டுல்கரின் டெடிகேஷன் வேறு யாருக்காவது இருக்கிறதா? தன் தந்தை மரணமடைந்த போதிலும் அவர் இறுதிச் சடங்கை முடித்து விட்டு உலகக் கோப்பை போட்டியில் விளையாட இங்கிலாந்துக்குப் பறந்து செல்லவில்லையா? சுய சாதனைக்காகவா சென்றார்?

சுயநலவாதி:
ஏன் சச்சினால் நல்ல கேப்டனாக இருக்க முடியவில்லை? ப்ரஷ்ஷர் ஹேண்டில் செய்ய முடியாததால் தானே?

இப்படி விவாதம் எல்லையில்லாமல் சென்று கொண்டிருந்தது.

இப்போது நீங்கள் சொல்லுங்கள். சச்சின் சுயநலவாதியா? இல்லையா?

சச்சினைப் பற்றி குறை சொல்ல நினைப்பவர்கள் இங்கே சென்று பார்த்துவிட்டு வரவும்.

(பத்த வச்சிட்டியே பரட்ட)

8 comments:

Anonymous said...

Ponga da vennaingala.yara poi suyanalavathinu soldreenga.mudinja avara purinjuka parunga ellaya moodikittu summa erunga.eppadi pesarathil erunthey ungalukku sachin pathi ella cricket pathi kuda onnum theriyathunu nallave theriyuthu."Sachin the god of world crickt".

senguttuvanraja said...

சச்சின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அதிகபட்சமாக 3;

1.Selfish
2.Scoring Against weaker Oppostions
3.Failing in pressure situation

நானும் பலதடவை இது போன்ற வாக்குவாதங்களில் ஈடுபட்டதுண்டு. அத்துணை குற்றச்சாட்டுகளுக்கும் என்னால் பதில் கூற இங்கே இடம் இல்லாத காரணத்தால் சச்சினை குறை கூறும் நண்பர்கள் அனைவரும் தவறாமல் இந்த Link- ல் உள்ள article- ஐ படிக்கவும். சச்சின் ஒரு சுயநலவாதி இல்லை என்பதை தெளிவாக அதே நேரத்தில் அவரை வெறுப்பவர்கள் கூட விரும்பும் அளவுக்கு மிக அருமையாக பல உதாரணங்களோடு விளக்கி உள்ளார்கள்...
"Sachin is God of Cricket" நான் மட்டும் அல்ல பல நாடுகளை சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரர்களும் ஒத்துக்கொண்ட ஒரு உண்மை...!!!

senguttuvanraja said...

http://sachinandcritics.com/

Anonymous said...

சச்சினை பல இக்கட்டான நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் ஆடுயதை எல்லாம் பார்த்த பிறகும் இப்படி சொல்வது சரியல்ல......... நச்சு வேலை இது

பனிமலர்.

குடுகுடுப்பை said...

நீங்கதான் ஓய் சுயநலவாதி. நல்லா சாப்பிட்டுட்டு டெண்டுலகர பத்தி எழுதறீர்.

டாலஸ் பக்கம் வர்றதா இருந்தா சொல்லுங்க சாப்பிட்டு என்சாய் பண்ணிருவோம்

Unknown said...

சச்சின் முதல் தர கிரிக்கெட் விளையாட ஆரம்பித்ததில் இருந்து நான் அவரது ரசிகன். (வெறியன் அல்லது பக்தன் என்றும் சொல்லலாம்). அன்று சச்சினுக்கு எதிராக பேசியவர்கள் "விதண்டாவாதம்"தான் செய்தனர். நம் பதிவர்களில் பலர் நல்ல ஞானத்துடன் உள்ளவர்கள். அவர்களில் யாராவது சச்சினுக்கு எதிராக சரியான வாதத்தை எடுத்து வைக்கிறார்களா என்ற நோக்கத்திலேயே இந்தப் பதிவு. மற்றபடி சச்சினைத் தாழ்த்திப் பேசுவோரை தாய் தடுத்தாலும் விடேன். :)

Unknown said...

குடுகுடுப்பை சார் வருகைக்கு நன்றி. டாலஸ் பக்கம் வந்தால் கண்டிப்பாக தகவல் தருகிறேன். நீங்களும் நயாகரா பக்கம் வந்தால் சொல்லுங்கள். சந்திப்போம்.

காலப் பறவை said...

Sachin is God of Cricket