உன்னைப்போல் ஒருவன் வந்தாலும் வந்தது, பலரும் கமலைப் போற்றியும் தூற்றியும் பதிவுகள் பல போட்டுவிட்டார்கள். என் பங்குக்கு இது.
கமல் ஒரு நல்ல நடிகன்:
கமல் ஒரு நல்ல நடிகன் என்பதை யாரும் மறுக்க முடியாது. அன்பே சிவம் படத்தில் கண் மட்டும் தெரியுமாறு கட்டு போடப்பட்டு மருத்துவமனையில் படுத்திருப்பார். நாசர் மற்றும் அவரது சகாக்கள் சுற்றி நிற்கும்போது அந்த ஒரு கண்ணில் கமல் காட்டும் உணர்ச்சிகள் எத்தனை எத்தனை? இது போல கமலின் நடிப்புத்திறமைக்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சொல்லிக்கொண்டே போகலாம்.
கமல் மட்டுமே நல்ல நடிகனா?
கண்டிப்பாக இல்லை. கமலைப் போல, சில நேரங்களில் கமலை மிஞ்சும் நடிகர்கள் தமிழில் இருக்கிறார்கள்.
பிரகாஷ் ராஜ்: பல படங்களில் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கிறார். உதாரணத்திற்கு அறிந்தும் அறியாமலும் படத்தில் நவ்தீப் தூங்கிக் கொண்டிருப்பார். அவரை வைத்த கண் வாங்காமல் பக்கத்தில் உக்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பார் பிரகாஷ் ராஜ். அந்த முகத்தில் ஒரு தந்தையின் பெருமிதமும், தன் மகனைப் பார்க்கும் பாசமும் கொப்பளிக்கும். அங்கே பிரகாஷ் ராஜ் தெரிய மாட்டார், பாசமான ஒரு தந்தைதான் தெரிவார்.
பசுபதி: வில்லத்தனமோ இல்லை குணசித்திரப் பாத்திரமோ அதை மிகையில்லாமல் செய்யக்கூடிய ஒரு சில கலைஞர்களில் பசுபதிக்கு தனி இடமுண்டு. வெயில் படத்தில் பஸ் ஸ்டாண்டில் சொந்தத் தம்பியே யாருண்ணே நீங்க என்று கேட்கும் காட்சியில் வார்த்தை தொண்டையில் சிக்க அண்ணண்டா என்று சொல்லும் காட்சி ஒன்று போதும் பசுபதியின் நடிப்புக்கு. ஆனாலும் இன்னொன்று. விருமாண்டியில் கொ என்று எழுதிய அருவாளை எடுத்துக் கொண்டு வந்து சண்டை போடுவார் கமல். அப்போது பசுபதியின் க்ளோசப் - கண்களில் முதலில் தெரிவது பயம். சட்டென்று ஒரு நொடியில் அந்தப் பயத்தை விட்டு சாமர்த்தியம் தெரிய அது காணாமல் போன அருவாள் என்று கதையை மாற்றும் காட்சி இன்னொரு சான்று.
மேலே சொன்ன இருவருக்கும் டைமிங்கும் நன்றாகவே வரும்.
கமலிடம் என்ன குறை:
1. பாத்திரமாக மாறுவது இல்லை கமல்
கமலின் நடிப்பில் குறை கூறவே முடியாது. ஆனால் எந்த பாத்திரத்தில் கமல் நடித்தாலும் அதில் கமல் தான் தெரிவாரே ஒழிய அந்தப் பாத்திரத்தைப் பார்க்க முடியாது. But, there are some exceptions. ஒரு சில படங்களைத் தவிர. அன்பே சிவம் படத்தில் சிவம் கமலிடம் துளி கூட கமல் தெரியாது. ஆனால் நல்லாவிடம் நல்லாவே தெரியும். ஆறு வயதிலிருந்து நடிக்கும் ஒரு நடிகன், கிட்டத்தட்ட எல்லாப் பாத்திரங்களையும் போட்டுவிட்டவர். அவரிடம் அப்படித்தான் தெரியும் என்று வாதம் செய்பவர்களுக்கு, டாம் ஹாங்க்ஸைப் பாருங்கள்.
2. உடன் நடிக்கும் நடிகர்களுக்கு நடிக்கவே வாய்ப்பு தருவதில்லை:
இதைப் பற்றி நான் விளக்கமாக சொல்ல வேண்டியதில்லை. வெற்றி விழாவில் பிரபுவுக்கு இருக்கும் முக்கியத்துவத்துக்கும் - தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன் படத்தில் பிரபுவுக்கு இருக்கும் முக்கியத்துவத்துக்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் அறிவர். காதலா காதலா படத்தில் பிரபு தேவாவை திக்குவாயாக்கி அவர் வசனத்தையும் இவரே சேர்த்துப் பேசிவிடுவார்.
3. சக நடிகர்களை/கலைஞர்களை பாராட்டுவதில்லை:
கமலுக்கு தன்னைத் தவிர வேறு யாரும் நடிகனே இல்லை என்ற எண்ணம். வாய் திறந்து பாராட்டி விடவே மாட்டார். பேரழகன் பட ஒலித்தட்டு வெளியீட்டு விழா. அனைவரும் கூனனாக நடித்த சூரியாவைப் பாராட்டினர். கமல் ஒரு மூத்த கலைஞனாக சூர்யாவைப் பாராட்டிப் பேசியிருக்க வேண்டும். அவர் பேசியது இதுதான் - நான் ஒரு நடிகனாக இல்லாமல் இருந்திருந்தால் இந்தப் படத்தின் சில காட்சிகளில் விசில் அடித்து ரசித்திருப்பேன். அப்படியென்றால் நடிகனாக இருந்தால் கைத்தட்டி விசில் அடித்து மற்றவர்களின் படங்களைப் பார்த்து ரசிக்கக் கூடாதா?
ஆஸ்கார் நாயகன் என்று அவரது ரசிகர்கள் அழைக்கும் போதெல்லாம் அவருக்கு ஆஸ்கார் அமெரிக்க மக்கள் ரசிக்கும் நல்ல திரைப்படங்களுக்கு அமெரிக்காவில் கொடுக்கும் விருது என்பது அவருக்குத் தெரியவில்லையா? ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய பின் தான் அவருக்கு தெரியவந்ததா?
சிவாஜியையும் நாகேஷையும் மட்டும் தான் பாராட்டுவார் கமல்.
ஆக மொத்தத்தில், கமல் ஒரு நல்ல நடிகர். நல்ல வசனகர்த்தா, நல்ல திரைக்கதை ஆசிரியர், நல்ல இயக்குனர், நல்ல நடனக் கலைஞர், நல்ல நகைச்சுவையாளர். எல்லாம் சரி ஆனால் அவர் தலை சிறந்த நடிகர் இல்லை. கிரிக்கெட் பாஷையில் சொன்னால். கமல் ஒரு நல்ல ஆல் ரவுண்டர். எல்லத் துறையிலும் சிறப்பாக அவரால் பணியாற்ற முடியும். ஆனால் சச்சின் டெண்டுல்கர் மாதிரி நடிப்பின் கடவுள் இல்லை அவர். அவரையும் மிஞ்ச முடியும் அதை பல படங்களில் பலர் செய்தும் காட்டியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் கமல் நல்ல நடிகன் தான். ஆனால் எல்லாரும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடும் அளவுக்கு மாமேதை இல்லை
(கொஞ்சம் பெரிய) பின்குறிப்பு: தசாவதாரம் படத்தில் கமல் 10 வேடம் போட்டிருக்க வேண்டிய அவசியம் என்ன? மூன்று அல்லது நான்கு வேடங்களோடு நிறுத்தி விட்டு மற்ற நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். புஷ் கேரக்டர் எல்ல்லாம் தேவையில்லாத ஒன்று. அந்த மேக்கப்ப்புக்கு செலவு செய்த காசை கிராஃபிக்ஸ் போட பயன்படுத்தி இருக்கலாம்.

47 comments:
பத்து வேஷத்தில் நடித்த்வர் என்ற பெயருக்காக இருக்கலாம் இல்லையா. பிரியாங்கா சோப்ரா 12 வேடத்தில் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கிறார். அவரெல்லாம் நடிக்கலாம் நம்ம கமல் நடிக்க கூடாதா????
பிரகாஷ் ராஜ் ,பசுபதி ஆகியோர் கமல்ஹாசனை விட சிறந்த நடிகர்கள்..ஹி..ஹி...நல்ல காமெடி பதிவு.
மன்னிக்கவும் ..'பிதற்றல்கள்' ..இப்போ தான் கவனித்தேன். :)
your view are superbbbbbbbbb...gud artcle
//கிரிக்கெட் பாஷையில் சொன்னால். கமல் ஒரு நல்ல ஆல் ரவுண்டர். எல்லத் துறையிலும் சிறப்பாக அவரால் பணியாற்ற முடியும். ஆனால் சச்சின் டெண்டுல்கர் மாதிரி நடிப்பின் கடவுள் இல்லை அவர்.//
Superb.....Nichayama Nadippin kadavul illai....
super comedy
:)))))))))))))))))
//காதலா காதலா படத்தில் பிரபு தேவாவை திக்குவாயாக்கி அவர் வசனத்தையும் இவரே சேர்த்துப் பேசிவிடுவார்.//
உங்களுக்கு காமெடி நல்லா வரும்போல இருக்குதே:)
(சிவாஜியே உட்கார்ந்திருந்த நாற்காலிய கொடுத்துட்டுப் போயிட்டார்.)
//நான் ஒரு நடிகனாக இல்லாமல் இருந்திருந்தால் இந்தப் படத்தின் சில காட்சிகளில் விசில் அடித்து ரசித்திருப்பேன்.//
வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த பதிவை யாராச்சும் சொன்னாங்கன்னு எடுத்துடாதீங்க :)
கமலை குறைச் சொல்லவில்லையென்றால் சிலருக்கு தூக்கம் வருவதில்லை போலிருக்கிறது... அதற்காக கமலை தாக்கிப் பதிவிடுவதற்கு பதிலாக ஒரு நல்ல மருத்துவரையோ அல்லது மனோதத்துவ நிபுணரையோ சந்தித்துவிட்டு வருவது நலம்.
நிச்சயமாக ஒத்துக்கொள்கிறேன் , கமலை விட சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள் நம் தமிழ் திரையிலேயே, ஆனால் என்ன வித்தியாசம் என்றால் , கமல் ஒரு 'Good looking personality'. பிரகாஷ் ராஜை விட, பசுபதியை விட கமல் பார்பதற்கு நன்றாக இருப்பார், இருக்கிறார். மேலும் அவர் ஒரு கதாநாயகன், மற்றவர்கள் குணச்சித்திர நடிகர்கள்.
கமலுடன் ஒப்பிட வேண்டியது, மிக முக்கியமான ஒரு நபர், அவர் விக்ரம் , அவரையும் கமலியும்தான் ஒப்பிடவேண்டும்.
மற்றபடி நீங்கள் கமலிடம் சொன்ன குறைகள் அனைத்தும் உண்மை.
ரங்கா ராவ் , எம்.ஆர்.ராத எல்லோருமே மிகச்சிறந்த நடிகர்கள் , ஆனால் சிவாஜி அடைந்த புகழ் இவர்கள் அடையவில்லை, அதற்கு காரணம், அவர்கள் கதாநாயகர்கள் அல்ல.
கதாநாயகனுக்கு மட்டும்தான் புகழா என்று கேட்டால் , தமிழ் மண் அப்படித்தான் நினைத்து கொண்டு இருக்கிறது.
அட்டகாசமான பதிவு . நீங்கள் சொன்ன அனைத்தையும் ஏற்க முடிகிறது . வெற்றி விழா பிரபு மார்க்கெட் நன்றாக இருந்த சமயத்தில் வந்த படம் . அப்போதே அவரை மட்டம் தட்டி இருப்பார் . அதை விட வசூல் ராஜா படத்தில் பிரபுவை ஏதோ அல்லக்கை போல ஆக்கியிருப்பார் கமல் . பிரபு ஒரு நல்ல நடிகர் . அவரை இப்போது வரும் படங்களில் கூட நன்றாக பயன்படுத்தி வருகின்றனர். வெற்றி விழா, காதலா காதலா பற்றி நீங்கள் கூறியதை நானும் என் நண்பர்களிடம் முன்பே கூறியிருக்கிறேன் .
கமல் ஒரு நல்ல நடிகர் நல்ல கலைஞர் . ஆனால் நல்ல மனிதர் அல்ல .
மற்றவர்கள் சொல்ல தயங்குவதை (தெரிந்தும் கூற மறுப்பதை ) சொல்லியதற்கு நன்றி .
yes, one thing is Kamal never appreciates other actors and their talents.
Kamal's fanalias Anony, Sivajihad a chair to offer. His destination his place is unique which no one can reach man.
Samaanyan
// அமுதா கிருஷ்ணா said...
பத்து வேஷத்தில் நடித்த்வர் என்ற பெயருக்காக இருக்கலாம் இல்லையா. பிரியாங்கா சோப்ரா 12 வேடத்தில் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கிறார். அவரெல்லாம் நடிக்கலாம் நம்ம கமல் நடிக்க கூடாதா????//
நானும் பத்து வேசத்துல நடிச்சேன்னு பேர் வாங்கறதுக்காக செய்யறது ஒரு "உலக நாயகனுக்கு" அழகா? நேத்து வந்த பிரியங்கா சோப்ராவோடு கம்ப்பேர் பண்ணி நீங்களே கமலைத் தாழ்த்திக் கொண்டீர்கள்.
// ஜோ/Joe said...
பிரகாஷ் ராஜ் ,பசுபதி ஆகியோர் கமல்ஹாசனை விட சிறந்த நடிகர்கள்..ஹி..ஹி...நல்ல காமெடி பதிவு.
//
நான் பிரகாஷ் ராஜும் பசுபதியும் கமலை விட சிறந்த நடிகர்கள் என்று சொல்லவில்லை. ஆனால் கமல் இவர்களை விட சிறந்தவரும் இல்லை, இவர்களும் கமலுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. நான் இன்னொரு முக்கியமானவரை சொல்லவில்லை. நாசர்.
//மன்னிக்கவும் ..'பிதற்றல்கள்' ..இப்போ தான் கவனித்தேன். :)
//
ஆம் பிதற்றல்கள்தான். சில நேரங்களில் என் பிதற்றல்கள் கமலஹாசனின் "கருத்துக்களை" விட சிறந்ததாகவே இருக்கும்.
//கமலை குறைச் சொல்லவில்லையென்றால் சிலருக்கு தூக்கம் வருவதில்லை போலிருக்கிறது... அதற்காக கமலை தாக்கிப் பதிவிடுவதற்கு பதிலாக ஒரு நல்ல மருத்துவரையோ அல்லது மனோதத்துவ நிபுணரையோ சந்தித்துவிட்டு வருவது நலம்.
//
மனநிலை சரியில்லாதவர்கள் குருட்டுத்தனமாக கமலை தொழுபவர்களே அன்றி நான் இல்லை.
எனக்கு கமலை பிடிக்கும். பல இடங்களில் அவர் படத்தை ரசித்திருக்கிறேன். ஆனால், அதற்காக குருட்டுத்தனமாக இவர் போல சிறந்த நடிகர் இந்தப்பூவுலகில் இல்லை இவரே உலக நாயகன் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட நான் மன நல மருத்துவரைப் பார்க்க வேண்டுமென்றால், நான் பைத்தியக்காரனாகவே இருந்து விடுகிறேன்.
// Gokul said...
நிச்சயமாக ஒத்துக்கொள்கிறேன் , கமலை விட சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள் நம் தமிழ் திரையிலேயே, ஆனால் என்ன வித்தியாசம் என்றால் , கமல் ஒரு 'Good looking personality'. பிரகாஷ் ராஜை விட, பசுபதியை விட கமல் பார்பதற்கு நன்றாக இருப்பார், இருக்கிறார். மேலும் அவர் ஒரு கதாநாயகன், மற்றவர்கள் குணச்சித்திர நடிகர்கள்.
கமலுடன் ஒப்பிட வேண்டியது, மிக முக்கியமான ஒரு நபர், அவர் விக்ரம் , அவரையும் கமலியும்தான் ஒப்பிடவேண்டும்.
//
விக்ரம் இன்னும் பல படிகள் தாண்ட வேண்டும். கந்தசாமி, பீமா போன்ற படங்களை நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
//மற்றபடி நீங்கள் கமலிடம் சொன்ன குறைகள் அனைத்தும் உண்மை.
//
நன்றி. என்னைப் பொருத்தவரை தன் peerகளைப் பாராட்டாதவன் ஒரு கலைஞனே அல்ல.
//
ரங்கா ராவ் , எம்.ஆர்.ராத எல்லோருமே மிகச்சிறந்த நடிகர்கள் , ஆனால் சிவாஜி அடைந்த புகழ் இவர்கள் அடையவில்லை, அதற்கு காரணம், அவர்கள் கதாநாயகர்கள் அல்ல.
கதாநாயகனுக்கு மட்டும்தான் புகழா என்று கேட்டால் , தமிழ் மண் அப்படித்தான் நினைத்து கொண்டு இருக்கிறது.
//
மிகச் சரியாக சொன்னீர்கள்.
நல்ல காமெடி என்று மட்டும் கமெண்ட் எழுதிப் போனவர்களே, உங்களால் நான் கமலைப் பற்றி கூறிய குறைகளை மறுக்க முடியுமா?
சிவாஜி தன் நாற்காலியைக் கொடுத்துவிட்டுப் போனதாக கமலேதான் சொல்லிக் கொள்கிறார். சிவாஜிக்கு கொடுத்துவிட்டுப் போகிற பெருந்தன்மை இருந்தது. கமலுக்கு?
அவரிடம் "உங்களுக்குப் பிறகு இந்த நாற்காலிக்கு யார் வருவார் என நினைக்கிறீர்கள்" என்ற கேள்விக்கு கமல் இப்படி சொல்லியிருந்தால்கூட நான் சந்தோசப்பட்டிருப்பேன் - பல நடிகர்கள் இப்போது நன்றாக நடிக்கிறார்கள் யார் வருவார்கள் என்று இப்போதே சொல்ல முடியாது. ஆனால் கமல் சொன்ன பதில் என்ன தெரியுமா? - "இந்த நாற்காலி அடைவது அவ்வளவு சுலபம் அல்ல. நான் கஷ்டப் பட்டு அடைந்து விட்டேன். எனக்கு பிறகு இந்த நாற்காலி காலியாகக் கூட இருக்கலாம்" இவரைப் போய் சிவாஜியோடு சேர்த்துப் பேசிக்கொண்டு..
முதலில் கமலை விமர்சிப்பதற்கு ஒரு தகுதி வேண்டும். கீபோர்டு அடிக்க தெரிஞ்சவனெல்லாம் விமர்சனம் செயுய முடியாது.
சரி உங்கள் வாதத்திற்கு வருவோம்.
பிரகாஷ்ராஜ் ஒரு சிவாஜிகாலத்து நடிகர். நான் என்ன சொல்லவர்ரேன்னா அவர் ஒரு ஓவர் ஆக்டிங் நடிகர். பல வேசங்கள் அவர் போட்டாலும் தன் குரலை மாற்ற மாட்டார். அந்த வாய்ஸ் மாடுலேசம் எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஒரே மாதிரிதான் இருக்கும். நீங்கள் சொன்னது போல அனைத்திலும் பிரகாஷ்ராஜ் தான் தெரிவார். வேஷம் மட்டும் தான் மாறுமே தவிர மேனரிஸங்கள் மாறாது.
பசுபதி ஒரு சிறந்த நடிகர் தான் அதனால் தான் கமல் அவரை விருமாண்டியில் சரியாக பயன்படுத்தி இருந்தார். பசுபதியும், அப்படத்தில் பேய்க்காமனாக நடித்தவரும் அந்த படத்தில் கமலுக்கு இனையாக பேசப்பட்டவர்கள். எனவே கமல் மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்ற உங்களின் கூற்று பொய்யானது. படத்தில் கதாநாயகனைச் சுற்றிதான் கதை இருக்கும் ஆகையால் மற்றவர்களுக்கு அதிக காட்சிகள் இருக்காது என்பதையும் நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும். கமல் நன்றாக நடிக்கும் நடிகர்களுக்கு எப்போதுமே நல்ல கதாபாத்திரங்கள் கொடுத்து தீனி போடக்கூடியவர். உதாரணமாக நாசர்,நாகேஸ், பசுபதி, தலைவாசல் விஜய், சத்தியராஜ் போன்றோரை அவர் பயன்படுத்தியது போல வேறு யாரும் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள்.
-- ஜெயக்குமார்
//முதலில் கமலை விமர்சிப்பதற்கு ஒரு தகுதி வேண்டும். கீபோர்டு அடிக்க தெரிஞ்சவனெல்லாம் விமர்சனம் செயுய முடியாது.
//
கமலை விமர்சிக்க அவர் படத்தை காசு குடுத்து பார்ப்பவன் என்ற தகுதி ஒன்றே போதும். கடவுளாக இருக்க தேவையில்லை. அப்படி யாரும் விமர்சிக்கக் கூடாது என்றால் அவர் படத்தை அவர் மட்டும் போட்டு பார்த்துக் கொள்ளட்டும்.
//கமலை விமர்சிக்க அவர் படத்தை காசு குடுத்து பார்ப்பவன் என்ற தகுதி ஒன்றே போதும்.//
ஆனால் உன்னைப்போல் திருட்டு வீசிடியில் பார்ப்பவனாக இருக்கக் கூடாது.
super padhivu
வடிவேலு,பசுபதி, மாதவன், கவுதமி போன்ற நல்ல நடிகர்களுக்கெல்லாம் இவர்களுக்கெல்லாம் நன்றாக நடிக்க களம் அமைத்துக்கொடுத்தவர் கமல்தானே.
விருமாண்டியில் கமலைவிட பசுபதியின் நடிப்பு அற்புதம்.காரணம் பசுபதி மண்ணின் மனிதராக தெரிந்தார், கமலை விருமாண்டியாக நாம் பார்க்கவில்லை.
கமல் சில பாத்திரங்களில் ஒட்டாது போல் தெரிவதற்குக்காரணம் தமிழ் சினிமாவிற்கு உரித்தான எதிர்பார்க்கப்படும் ஹீரோயிசம்.
சிவாஜி தேவர்மகனில் செய்தது போல் கமல் செய்யும் காலம் வரும்.
அப்போது அவர் நடிப்பின் உச்சத்தை அடைவார் என எதிர்பார்க்கலாம்.
நானா படேகரின் பொம்மலாட்டம் ஒருமுறை பாருங்கள்.
மேலே ஜெயக்குமார் சொன்னது போல் விருமாண்டியில் வரும் அந்த மதுரை வக்கீல் கேரக்டர் கூட மறக்கமுடியாது.
வெற்றிவிழா ஹீரோயிசம் காட்டும் படம். பிரபு நடித்ததே சிவாஜி பிலிம்ஸ் படம் என்பதால்தான் என நினைக்கிறேன்.
விருமாண்டி - பசுபதி
குருதிப்புனல், தேவர் மகன் - நாசர்
தெனாலி - ஜெயராம்
சதி லீலாவதி - ரமேஸ் அரவிந்த்
மகாநதி - தலைவாசல் விஜய்
நம்மவர் - கரன், நாகேஸ்
உன்னைப்போல் ஒருவன் - மோகன்லால்
தமிழ் படங்களில் புதுமைகளையும், நவீன தொழில் நுட்பங்களையும் கொண்டுவரவேண்டும் என்று நினைப்பவர்களில் கமல் முதன்மையானவர். சினிமா மூலம் சம்பாதித்த அனைத்தையும் அதேலேயே முதலீடு செய்யும் முன்னனி நடிகர் இவர் மட்டும் தான்.
எனவே பிதற்றுவதை உங்கள் குடும்பத்தோட நிறுத்திக்கொள்ளவும்.
கமல் ஒரு இயக்குனராக, கதையாசிரியனாக, வசன கர்த்தாவாக நன்றாக செய்யக்கூடியவர் தான். அவரிடம் உள்ள இயக்குனர் தலை தூக்கும்போது நல்ல நடிகர்களுக்கு நல்ல வாய்ப்பு தருவார். நடிகன் தலை தூக்கும்போது அவர்களை அமுக்கப் பார்ப்பார்.
விருமாண்டியில் கமல் இயக்குனராக வெற்றி பெற்றிருந்தார். நடிகனாக இல்லை. அதே விருமாண்டி வேடத்தில் அவர் வேறு யாரையாவது நடிக்க வைத்து டைரக்ஷனை மட்டும் இவர் செய்திருக்கலாம். எல்லா வேடத்திலும் தான் தான் நடிக்க வேண்டும் என்பதில்லையே. மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் பிணமாக நடித்திருப்பார். அதற்கு விருதும் வாங்கினார். அதே படத்தை இந்தியில் எடுத்த போது நாகேசைக் கூப்பிடாமல் தானே நடித்தார். ஏன்? நாகேசை விட தான் நன்றாக நடித்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தினால். அதே போல தான் நஸ்ருதீன் ஷா வை விட தான் பெரிய நடிகன் என்று காட்ட வேண்டி வெட்னஸ்டேயை தமிழ்ப் படுத்தியிருப்பார்.
Boss....
Neenga Loosa?
//Boss....
Neenga Loosa?//
confirmed.
நஸ்ருதீன் ஷா ஏற்கனவே நடித்த ஒரு இந்தி படத்தின் தமிழாக்கம் தான் குருதிப்புனல்.
கமல் நடித்து இயக்கிய ஹேராமில் நஸ்ருதீன் ஷா நடித்துள்ளார். நஸ்ருதீன் ஷா சிறந்த நடிகராக இருந்தாலும் அவரால் இந்தியில் பெரிய அளவில் வளரமுடியவில்லை. ஆனால் அவரின் அருமை அறிந்து அவரை மதிக்கும் நல்ல கலைஞன் தான் கமல்.
முகிலன்: நல்ல பதிவு!
கமல் ஜால்ராக்களை பார்த்து, கேட்டு எரிச்சல்தான் வருகிறது.
உங்களை மாதிரி ஒரு சிலராவது கமலஹாசன் இல்லாமல் ஹாலிவுட் பாலிவுட் எல்லாம் ஓடிக்கிட்டுதான் இருக்குனு முகத்தில் அறைவது போல சொல்லனும், இந்த கமல் ஜால்ராக்களுக்கு!
கமல்ஹாசன் எவ்வளவோ பரவாயில்லை, அவருடைய ஆனவம்பிடித்த மேதாவி விசிறிகளைப் பார்க்கும்போது!
பெரிய மேதாவி மாதிரி இவனுகதான் நடிப்புக்கு இலக்கணம் எழுதியதுபோல வாய்கிழியப்பேசுவார்கள்!
கடவுள்ட்டய குறையிருக்கு, கம்லஹாசன் என்ன கேவலம் மனுஷந்தானே?!
//கமல் நடித்து இயக்கிய ஹேராமில் நஸ்ருதீன் ஷா நடித்துள்ளார். நஸ்ருதீன் ஷா சிறந்த நடிகராக இருந்தாலும் அவரால் இந்தியில் பெரிய அளவில் வளரமுடியவில்லை. ஆனால் அவரின் அருமை அறிந்து அவரை மதிக்கும் நல்ல கலைஞன் தான் கமல்//
இதைப்போல பெரிய காமடி இதுவரை நான் படிக்கவில்லை. நஸ்ருதீன் ஷா கமலஹாசனின் recognition தேவைப்படும் அளவுக்கு வெற்றி பெறாத நடிகன் இல்லை. அவர் நடிப்பை உலகமே அறியும். நீங்கள் League of extrodinary Gentlemen படம் பார்த்ததில்லையோ? கமலுக்குத் தான் நஸ்ருதீன் ஷாவின் ரெகக்னிஷன் தேவை.
முகிலன் அவர்களுக்கு
நீங்கள் டாம் ஹாங்ஸின் பல படங்களை பார்த்திருக்கக்கூடும், இல்லை மற்றவர்கள் சொல்வதை வைத்தே ஹாலிவுட்டை புகழ்ந்து தள்ளும் மனநிலை உள்ளவராக இருக்கக்கூடும்(சிலருக்கு இது தான் பொழப்பே, நீங்கள் அப்படிப்பட்டவராக இல்லாமலிருப்பீர்கள் என நம்புகிறேன்). ஆனால் எங்களுக்கு வெட்னெஸ்டேயை அறிமுகப்படுத்துவதற்கே கமல் போன்றோர் தேவைப் படுகிறார்கள்.
//பாத்திரமாக மாறுவது இல்லை கமல்//
மிகவும் கஷ்டம். இனி யார்வந்து தமிழில் நடித்தாலும் உங்களுக்கு இப்படியேத் தோன்றும், உங்கள் டாம் ஹாங்ஸே என்றாலும். ஆகவே புமுகங்களின் படங்களை மட்டுமே பார்க்கவும்.
//வெற்றி விழாவில் பிரபுவுக்கு இருக்கும் முக்கியத்துவத்துக்கும் - தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன் படத்தில் பிரபுவுக்கு இருக்கும் முக்கியத்துவத்துக்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் அறிவர்//
குரு சிஷ்யன் படத்தில் ரஜினிக்கு ஜால்ரா மட்டுமே போடுவரே பிரபு அதைவிட வெற்றிவிழா மோசமானதா..???
//சக நடிகர்களை/கலைஞர்களை பாராட்டுவதில்லை//
எப்படி பாராட்ட வேண்டும் எங்கிறீர்கள் ?? வருங்கால முதல்வரே என்றா?? கமல் தனது மனதிற்கு நெருக்கமான கலை படைப்பையும், கலைஞனையும் பாராட்டாது இருந்ததில்லை. அநேகமாக நீங்கள் இப்படி எதிர் பார்க்கக் கூடும், ஒரு நடிகன் நன்றாக நடித்தால் அவரைப் பாராட்டி அறிக்கை ஒன்றோ அல்லது ப்ரஸ் மீட் வைத்தோ சொல்லவேண்டும். இப்படிச் செய்யத் தொடங்கினால் அவருக்கு அதைச்செய்ய மட்டுமே நேரமிருக்கும்.
//கிரிக்கெட் பாஷையில் சொன்னால். கமல் ஒரு நல்ல ஆல் ரவுண்டர். எல்லத் துறையிலும் சிறப்பாக அவரால் பணியாற்ற முடியும். ஆனால் சச்சின் டெண்டுல்கர் மாதிரி நடிப்பின் கடவுள் இல்லை அவர். //
194 ரங்களை சச்சினால் இன்னமும் குவிக்க முடியவில்லை, அதனால் சயீத் அன்வர் தான் சச்சினைக் காட்டிலும் பெரிய பேட்ஸ்மேன் என்று ஒத்துக்கொள்வீர்களா????? இதைப் போலத்தானிருக்கிறது நீங்கள் சொல்லுவதும்.
//அவரையும் மிஞ்ச முடியும் அதை பல படங்களில் பலர் செய்தும் காட்டியிருக்கிறார்கள்.//
முப்பது வருடங்கள் தொடர்ச்சியாக யாராவது செய்ய முடியுமா என்பதையும் யோசித்துப்பாருங்கள், கமலைத் தவிர .
//தசாவதாரம் படத்தில் கமல் 10 வேடம் போட்டிருக்க வேண்டிய அவசியம் என்ன? மூன்று அல்லது நான்கு வேடங்களோடு நிறுத்தி விட்டு மற்ற நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்//
ஆஸ்கார் ரவிச்சந்திரன் கேட்காத கேள்வியெல்லாம் நீங்கள் கேட்கறீர்கள். நவராத்திரியில் சிவாஜி எதற்காக 9 வேடங்களில் நடிக்க வேண்டும். அதற்காகத் தான் கமலும்.
//நீங்கள் League of extrodinary Gentlemen படம் பார்த்ததில்லையோ? கமலுக்குத் தான் நஸ்ருதீன் ஷாவின் ரெகக்னிஷன் தேவை.//
உங்களுக்கு கற்பனாத்திறன் அதிகம்...
வருண் அவர்களுக்கு:
//உங்களை மாதிரி ஒரு சிலராவது கமலஹாசன் இல்லாமல் ஹாலிவுட் பாலிவுட் எல்லாம் ஓடிக்கிட்டுதான் இருக்குனு முகத்தில் அறைவது போல சொல்லனும், இந்த கமல் ஜால்ராக்களுக்கு//
கோலிவுட்டை யார் ஓட்டுவது வருண்?????????
Anony:
Kollywood is already running without "genius" Kh. If you are SO BLIND to see, nobody can help you! Keep living in your ignorant world!
கமலை உலகநாயகன்னு சொல்லும் போது கூட ரசிக குஞ்சாமணிகள் அப்படித்தான்னு விட்டுறலாம்!
ஆனால் வாழும் கடவுள்னு சொல்லும்போது எல்லா ஓட்டையிலும் எரியுது!
//
Kollywood is already running without "genius" Kh. If you are SO BLIND to see, nobody can help you! Keep living in your ignorant world!//
உன்னோட ஊர்ல நிறையபேருக்கு சாராயம் புடிக்கும் எனபதற்காக தெருவுக்கு தெரு சாராயம் காச்சிரது அல்லது சாரயக்கடை திறக்கிறது தான் உன்னோட புத்திசாலித்தனமா?
அல்லது பலச்சாறு நல்லது என்று வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறைசொல்லிவிட்டு செல்வது தான் சிறந்ததா?
உண்மையில் நீ புத்திசாலி என்றால் நான் சொல்லவந்தது என்ன என்று உனக்கு புரிந்திருக்கும்.
யப்பா “வருனு”
விஜய்,ரீமேக் “ரவி” மற்றும் அவனோட அண்ணன் மாதிரி ஏற்கனவே சமைச்ச மசாலாவ திரும்ப மட்டமான ஆயில்ல போட்டு கிளறி கொடுத்தா சப்புகொட்டி தின்னுட்டு “சூப்பரா” இருக்குன்னு சொல்லுற உன்னைமாதிரி ஆட்களுக்கு அவர் படம் எடுக்கவில்லை. அதனால மூடிக்கிட்டு அடுத்து ரீமேக்காகி வரும் தெலுங்கு மசாலக்கலை தெருவோர போஸ்டரில் பார்த்துவிட்டு “குப்புறப்படுத்து” வழக்கமா செய்யவேண்டியதை செய்துட்டு தூங்குற வழியைப்பாரு.
Anony: You still are talking some worthless crap with your filthy skills on personal attack!
Why are you bringing up Vijay and Jeyam Ravi as if I was supporting them?
Hear this in your "deaf ears"!
Ameer's Paruththiveeran was way better quality than genius's virumaNdi!
"Chandiyar" was way better than "singapUran".
There are so many young talents we see including the latest movie "pasanga".
I dont think kollywood is going to miss a Kh or Rajni!
Dont live in a small world! Grow up! Let the young talents and artists rule and old ones get some rest! Please you do take rest for a while without more crap! Thank you!
பருத்திவிரனில் அமிர் நிறைய சறுக்கி இருப்பது அந்த பக்கதில் இருந்த வந்த (கமுதிக்கும் எங்க ஊர் மானாமதுரைக்கும் 25 கிலோமிட்டர்தான் மாமூ) எங்களுக்குத்தான் தெரியும். மதுரை பாசை பேசனும்னு நிறைய இடங்களில் வழுக்கட்டாயமாக் திணிக்கப்பட்ட காட்சிகளையும் அதை அவர்கள் கஷ்டப்பட்டு பேசும் இடங்களையும் முதன் முதலாக பார்க்கும் போதே கண்டுபிடித்துவிட்டேன்.
கிராமத்து பொண்ணு கர்நாடக சங்கீதம் அதுவும் எங்கப்பக்கத்தில் உள்ள கிராமத்திலிருந்து ஒரு சேருவாறு வீட்டுப் பொண்ணு சான்சே இல்லை.
அமிரே ஒரு பேட்டியில் சொன்னார் இது எனக்கு புதிதான மண் என்று.
விருமாண்டியில் காட்டப்படும் காட்சிகள் செட் போடப்பட்டு எடுக்கப்பட்டதால் பல காட்சிகள் ஒட்டாமல் போனது என்னவோ உண்மைதான். கமலின் கலருக்கு விருமாண்டி கதாபாத்திரம் சரியாக பொருந்தவில்லை இருந்தாலும் நடிப்பில் விருமாண்டியாக வாழ்ந்தார். தொழில்நுட்ப விசயங்களில் இப்படம் ஆங்கலப்ப்டங்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்த படம். ஒரே கதை ஒரே காட்சி ஆனால் அதை சொல்லும் நபர்களைப் பொருத்து பார்ப்பவர்களின் பார்வை மாறும் என்பதை மிக அழகாக சொல்லிருப்பார். இது போன்ற முயற்சிகள் தமிழில் அறிது. அதையெல்லாம் எடுக்க துணிச்சல் வேண்டும்.
உன்னைப்போன்ற ரசிகர்கள் இருக்கும் வரைக்கும் தமிழ் சினிமா தரமற்ற சினிமாவாகத்தான் இருக்கும்.
***பருத்திவிரனில் அமிர் நிறைய சறுக்கி இருப்பது அந்த பக்கதில் இருந்த வந்த (கமுதிக்கும் எங்க ஊர் மானாமதுரைக்கும் 25 கிலோமிட்டர்தான் மாமூ) எங்களுக்குத்தான் தெரியும்.***
அப்படியா? நீங்க மானாமதுரை சண்டியரா? :))))
முதுகுளத்தூர் ஏரியால ஏதுங்க சேருவாரு? அவங்க காட்டுவது மறவர் பற்றி!
உங்க ஊர்லதான் சேருவாரு இருப்பாங்க! :)
****கிராமத்து பொண்ணு கர்நாடக சங்கீதம் அதுவும் எங்கப்பக்கத்தில் உள்ள கிராமத்திலிருந்து ஒரு சேருவாறு வீட்டுப் பொண்ணு சான்சே இல்லை.***
இப்போ பிராமின்ஸ் மட்டுமில்லாமல் எல்லாப் பொண்ணுங்களும் பரத நாட்டியம், பாட்டு எல்லாம் கத்துக்கிறாங்க. நீங்க எந்தக்காலத்தில் இருக்கீங்க, பெரியவரே? :)))
****விருமாண்டியில் காட்டப்படும் காட்சிகள் செட் போடப்பட்டு எடுக்கப்பட்டதால் பல காட்சிகள் ஒட்டாமல் போனது என்னவோ உண்மைதான். கமலின் கலருக்கு விருமாண்டி கதாபாத்திரம் சரியாக பொருந்தவில்லை இருந்தாலும் நடிப்பில் விருமாண்டியாக வாழ்ந்தார்.****
அந்த மாத்ரி சிங்கப்பூரான் நான் மதுரைப்பக்கத்தில் உள்ள "பட்டி"களில் இன்னும் பார்த்ததில்லைங்க!
***உன்னைப்போன்ற ரசிகர்கள் இருக்கும் வரைக்கும் தமிழ் சினிமா தரமற்ற சினிமாவாகத்தான் இருக்கும்.***
உங்க ரசனைய நீங்களே மெச்சுக்க வேண்டியதுதான் பெரியவரே! :)))
//உங்க ஊர்லதான் சேருவாரு இருப்பாங்க! :)//
படத்தை இன்னொரு தடவை நல்லா பாரு. அதுல சாதி பெயரை தெளிவா சொல்லுவனுங்க.
//இப்போ பிராமின்ஸ் மட்டுமில்லாமல் எல்லாப் பொண்ணுங்களும் பரத நாட்டியம், பாட்டு எல்லாம் கத்துக்கிறாங்க. நீங்க எந்தக்காலத்தில் இருக்கீங்க, பெரியவரே? :)))
//
அது நகரங்களிலும், பெரிய ஊர்களிலும். படத்தில் காட்டுவது போல உள்ள கிராமத்திலயா? அதிலும் ஒரே வகுப்பில் பல வருடம் உக்காந்திருக்க பொன்னா?
//அந்த மாத்ரி சிங்கப்பூரான் நான் மதுரைப்பக்கத்தில் உள்ள "பட்டி"களில் இன்னும் பார்த்ததில்லைங்க!
//
உங்க ஊரில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்க பக்கத்தில் சிங்கபூரிலும், மலேசாயவிலும் சம்பாதித்து இங்கு வந்து அளப்பற பன்னுரவனுங்களும் இருக்காங்க, தொழில் செய்றவனுங்களும் இருக்கானுஙக. சில குடும்பங்களின் பெயரே சிங்கபூரான் தான்றத உங்கள மாதிரி ஆட்களுக்கு தெரிய நியாயமில்லைதான். இந்த படம் எடுப்பதற்கு முன் எங்கள் கல்லூரி தமிழ் பேராசியர் கு.ஞானசம்பந்ததுடன் அப்பகுதியில் பல முறை சுற்றி வந்து அந்த மண்ணைப்பற்றி முழுதுமாக அறிந்த பிறகுதான் அப்படத்தை தரமாக கொடுத்தார்.
பெரியவரே அனானி!
படத்தை நீங்கதான் பார்க்கனும்!
"காட்டிக்கொடுக்கிறதும் கூட்டிக்கொடுக்கிறதும் தேவனுக்கு பழக்கம் இல்லடா" னும் சொல்லுவார்.
"சேருவாரு"னு முக்குலத்தோர் எல்லோரும் சொல்லுவாங்க!
நீங்க மானாமதுரையா?? இல்லை சென்னைல ஏதாவது ஸ்லம்மா?
மானாமதுரைக்காரர்கள் கண்டவனையும் மரியாதை இல்லாமல் "வா போ"னு சொல்லமாட்டாங்க. சென்னையில உள்ள ஏதாவது சேரியில் உள்ள அரைவேக்காடுதான் இப்படிப்பேசும்!
மானாமதுரைக் காரன்ங்க நல்லவன்ங்க தான். ஆனால் உன்னை மாதிரி வீனாப்போனவன்ங்களுக்கு என்ன மரியாதை கொடுக்கனும்னு அவன்ங்களுக்கு நல்லாவே தெரியும். படத்த இன்னொருதடவை நல்லா பாரு. படம் முழுக்க கமுதி, பார்த்திபனூர், நரிக்குடி பகுதிகளைப்பற்றிதான் பேசியிருப்பார்கள்.
தேவர்னு சொல்லுரது பொதுவா ஆனால் "சேறுவாரு" வீட்டுல பொறந்துட்டு ஏண்டா "கொறத்தி" வீட்டுல வந்து கெடக்கிறன்னு சொல்லுவானுங்க. இதுல தான் அமிர் பெரிய அளவில் சறுக்கியிருப்பார். "கொறத்தி" ங்கிறது சாதிப்பிரச்சனை வரக்கூடாதுங்கிறதக்காக சொல்லப்பட்ட சாதி (ஏன்னா அவனுங்கதானே சண்டைக்கு வரமாட்டாங்க). ஆனால் அவர் அங்க சொல்ல நினைச்ச சாதி என்னன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்.
அய்யா வருன்,
//சென்னையில உள்ள ஏதாவது சேரியில் உள்ள அரைவேக்காடுதான் இப்படிப்பேசும்//
நீங்க கமல் ஹாசனை எப்படி வேண்டுமானாலும் திட்டி கொள்ளுங்கள்.. அதேபோல் மானாமதுரையை எப்படி வேண்டுமானாலும் புகழ்ந்துகொள்ளுங்கள், அதற்காக ஊருக்கு இளைத்து சென்னை என்று சென்னை குப்பத்தை (உங்கள் பாஷையில் சேரியை) சேர்ந்தவர்களை அரைவேக்காடு என்று சொல்ல வேண்டாம் , நீங்கள் அவ்வளவு மரியாதை கொடுக்கும் நபர் என்றால் , அரைவேக்காடு என்று சொல்வானேன். மேலும் குப்பம் வேறு சேரி வேறு, குப்பம் ஒரு வர்க்கம் சார்ந்த சொல் , சேரி ஒரு ஜாதி சேர்ந்த சொல்.
அவ்வளவு மரியாதை கொடுக்கும் மானாமதுரையை சேர்ந்தவர்கள் ஏன் மரியாதையையே இல்லாத சென்னைக்கு வரவேண்டும் , மானாமதுரையிலே இருக்கலாமே?
மரியாதை கொடுக்கும் ஊர் செய்யாததை சென்னை செய்கிறது , அது சோறு போடுகிறது பல லட்சம் மக்களுக்கு.
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி, ஊரிலேயே இளைத்தது சென்னை
//மரியாதை கொடுக்கும் ஊர் செய்யாததை சென்னை செய்கிறது , அது சோறு போடுகிறது பல லட்சம் மக்களுக்கு.//
சூப்பர்பு...
உலகத்திலேயே கேவலமான விசயம் மத்தவங்களை கேவலமா பேசுற மனித சாதிதான். சாக்கடை என்ற ஒரு வடிகால் இல்லாவிட்டால் ஊர் நாரிவிடும் ஆனால் வருன் போன்றவர்கள் அந்த சாக்கடையை கேவலமாக பார்ப்பவர்கள் நல்லவர்கள் எல்லாமட்டதிலும் இருப்பது போல கேவலமானவர்கள் எல்லா மட்டத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பாலுமகேந்திரா, கமல், மணிரத்னம், பாலா, அமிர், சேரன் போன்ற இயக்குனர்கள் உள்ள இதே சினிமாவில் தான் சிம்பு, விஜய், அஜித், பேரரசு, ஹரி,சன் நெட்நொர்க் போன்றவர்களும் இருக்கிறார்கள்.
Mr.Gokul: Thanks for your free lecture and your advice which is worth million bucks! LOL!
My intention is not bringing up any "particular group" or whatsoever, which might be yours.
There is an idiot who addressed me "வா போ", so I was trying to tell him "not to" do that by bringing up chennai. may nbe it was a bad idea. I am notinterested in continuing on this digressed topic or deal with that anony idiot who will never learn! Take care of yourself!
இடியட் வா,போ ன்னு தான் சொன்னான் ஆனால் ஒரு மூன்றாம் தர பொறம்போக்கு அவனை இடியட்னு சொல்லுது.
மானாமதுரை காரனுக்கு மரியாதையாவும் பேசத்தெரியும் "ங்கோத்தா","ங்கொம்மா" ன்னும் பேசத்தெரியும்.
அதனால ஒழுங்கா வந்து மன்னிப்பு கேளு. இல்லாட்டி மேல சொன்ன மரியாதைதான் உனக்கு கிடைக்கும்.
Post a Comment