உடம்பு சரியில்லாமல் போய் இப்போது தான் கொஞ்சம் தேறி இருக்கிறேன். உடல்நிலை சரியில்லை என்றாலும் தவறாமல் நான் ஃபாலோ செய்யும் அனைவரின் பதிவுகளையும் படித்து வந்தேன். என்னால் தான் பதிவெழுத முடியவில்லை.
உடல்நிலை சரியில்லாத போதும் சில திரைப்படங்களைப் பார்க்கத் தவறவில்லை. முதலில், ஆதவன் பார்த்தேன். பலர் விமர்சனம் எழுதியபடி, வடிவேல் காமெடிக்காகப் பார்க்கலாம். இப்படி இன்னும் இரண்டு படம் நடித்தால் சூர்யா இருக்குமிடம் தெரியாமல் போய்விடுவார் என்பது மட்டும் நிச்சயம். கே.எஸ்.ரவிக்குமார் கப்பல் கப்பலாக நம் காதில் பூச்சுற்றுவதோடு ஹெலிகாப்டரில் வேறு வந்து பூ தூவி விட்டுப் போகிறார். யதார்த்த சினிமாவில் திருவிழாக்காட்சிகளுக்கும் கமர்சியல் சினிமாவில் வீடு நிறைய உறவினர்களுக்கும் யாராவது தடை கொண்டுவந்தால் பரவாயில்லை.
Outsourced (2006) என்ற ஆங்கிலத்திரைப்படம் பார்த்தேன் (உபயம்: நெட்ஃப்ளிக்ஸ்). அவுட் சோர்சிங் பற்றி கேலியும் கிண்டலும் கலந்தடித்துள்ளார்கள். டாட் ஆண்டர்சன் என்பவர் சியாட்டிலில் உள்ள ஒரு அமெரிக்க நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். அவரது நிறுவனம் அவரின்கீழ் உள்ள கால் செண்டரை இந்தியாவுக்கு அவுட் சோர்ஸ் செய்ய முடிவெடுத்து, இந்தியக் கிளையின் மேலாளருக்கு பயிற்சி கொடுக்க டாடை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்தியாவின் ஏழ்மையை படம்பிடித்துக் காட்டியிருந்தாலும், கௌரவமாகத்தான் படம்பிடித்துள்ளனர்.
அமெரிக்க கலாச்சாரத்துக்கும் இந்தியக் கலாச்சாரத்துக்கும் உள்ள இடைவெளியையும், அமெரிக்க ஆங்கிலத்துக்கும் இந்திய ஆங்கிலத்துக்கும் உள்ள வித்தியாசங்களையும் வைத்து காமெடி நடத்தியிருக்கிறார்கள். இந்தியர்களின் புத்திசாலித்தனத்தையும், அமெரிக்கர்களின் சாமர்த்தியத்தையும் ஒரு சேர மெச்சுகிறது இத் திரைப்படம். நான் ரசித்த சில காட்சிகள்:
“பென்சில் வாங்கிய ஒரு பெண்மணியிடம் ரப்பரை விற்க முயற்சி செய்யும் பணியாளரின் தொலைபேசி உரையாடலைப் போட்டுக்காட்டி, இதில் என்ன தவறு என்று கேட்கிறான் டாட். இந்தியப் பணியாளர்கள் யாருக்கும் அதற்கு பதில் தெரியவில்லை (ஒவ்வொருவர் கையிலும் ஒரு ரப்பர் இருக்கிறது). டாட், தனது கையிலிருக்கும் ரப்பரைக் காட்டி - 'This is called Eraser. Rubber means Condom' என்கிறார். உடனே ஒருவர் - ‘like a flat?' என்று கேட்க, இன்னொருவர் - ‘நோ நோ. தே கால் இட் அன் அப்பார்ட்மெண்ட்’ என்று திருத்த.. டாட் ‘நோ நோ காண்டொம். நாட் காண்டொ. யூ நோ பர்த் கண்ட்ரோல்’ என்று சொல்ல, இன்னொருவர் தனது கையிலுருக்கும் ரப்பரைப் பார்த்துக் கொண்டே - ‘டஸ் இட் வொர்க்?’ என்று அப்பாவியாகக் கேட்கும் போது கண்டிப்பாக வாய் விட்டு சிரித்துவிடுவீர்கள்.
முதலில் இந்திய கலாச்சாரம் புரியாமல் தடுமாறும் டாட் போகப்போக அதனைப் புரிந்து கொண்டு தனது புத்திசாலித்தனத்தால் மினிட்ஸ் பெர் இன்சிடண்ட்டை 6.0 க்கு கொண்டுவருகிறார். கடைசியில் இந்தியாவில் இருக்கும் கால் செண்டரை சீனாவுக்கு மாற்றுவதாக டாடின் பாஸ் வந்து சொல்கிறார். டாட் 6.0 க்கு கீழே எம்.பி.ஐ போனதைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஊழியர்களிடம் டாட் அதை அறிவிக்கிறார். ஒரு செகண்ட் அனைவரும் அமைதியாகிவிட்டு அடுத்த செகண்ட் விட்ட இடத்திலிருந்து பேச்சை தொடர்கின்றனர். டாட் இந்திய மேலாளரிடம், “என்ன இவர்கள் யாருமே அதிர்ச்சி அடைந்ததைப் போல தெரியவில்லையே?” என்று கேட்க, “அவர்களுக்கென்ன? நாம் கொடுத்த ட்ரெயினிங்கை வைத்து ஒரே வாரத்துக்குள் அவர்கள் வேறு ஏதாவது அலுவலகத்தில் போய் சேர்ந்து விடுவார்கள்” என்று சொல்கிறார். நிதர்சனமான இந்திய உண்மை இது சரிதானே?
நான் பார்த்த மற்றுமொரு ஆங்கிலப் படம் - Vantage Point (2007). அமெரிக்க ஜனாதிபதி ஒரு சம்மிட்டுக்காக ஸ்பெயினுக்கு வரும்போது அவரை யாரோ சுட்டு விடுகிறார்கள். இந்த ஒரு சம்பவத்தை பல கோணங்களில் காட்டி ஒவ்வொரு கோணத்திலும் கதையை கொஞ்சம் கொஞ்சமாக நகற்றி கடைசியில் முடிக்கிறார்கள். சில இடங்களில் லாஜிக் ஓட்டை இருந்தாலும் இந்த வித்தியாசமான கதை நகர்த்தலுக்காக ஒரு தடவை படம் பார்க்கலாம். இந்த உத்தியில் ஒரு கதை எழுதலாம் என்று முடிவெடுத்துள்ளேன். நல்ல கரு கிடைத்தால் எழுதுகிறேன்.
இப்போதைக்கு அம்புட்டுத்தான். அப்பீட்டு..

6 comments:
அவுட்சோர்சிங் நல்லா இருக்கும்போல இருக்கே. கண்டிப்பா பாக்கணும்
அவுட் சோர்சிங் இல்ல அம்மிணி, அவுட் சோர்ஸ்ட்.
ennaachu..? wish you a speedy recovery..! nalla pathivu..!
cut out marks paththi... post la last la add panni irukken parunga..!
Outsourced நான் கூட Star Movies ல பார்த்திருக்கேன், நல்ல படம், அப்படியே Office space ம் பாருங்களேன்
vantage point பார்க்கனும்.
அவுட்சோர்ஸ் படத்துல, கம்பியூட்டர் தண்ணில மூழ்கும் போது அடிக்குற லூட்டி நல்லாயிருக்கும்
உடம்புக்கு என்ன சார் ? பார்த்துக்க்கோங்க.
Post a Comment