அத்தியாயம் - 2
அத்தியாயம் - 1
விரலுக்கிடையில் புகையும் சிகரெட்டின் புகை வளைந்து வளைந்து போவதையே பார்த்துக் கொண்டிருந்தான் அருண்.
“சார்! செத்துப்போன சுஷ்மாவும் ரமேஷும் லவ் பண்ணியிருக்காங்க சார். இந்தப் பையன் அவள ரொம்ப உருகி உருகிக் காதலிச்சிருப்பான் போல. ஆனா அந்தப் பொண்ணு சும்மா வெளாட்டா இருந்திருக்கு. இவன் கூட பழகுற மாதிரி இன்னும் ரெண்டு மூணு பேரு கூடயும் பழகியிருக்கும் போல. இவனுக்குத் தெரிஞ்சி சண்டை போட்டிருக்கான். அது இவனப் போடான்னு சொல்லிட்டுப் போயிருச்சி. இவன் ஃப்ரெண்ட்ஸ் கிட்டயெல்லாம் கோவமா அவளத் திட்டிப் பேசிட்டு இருந்திருக்கான்”
“ஆனா இது நடந்தது ஆறு மாசத்துக்கு முன்னால தான? இப்ப அவன் அந்த மாயாவ லவ் பண்ணிட்டு இருக்கானே?”
“ஆமா சார். ஆனா இப்ப அந்த சுஷ்மாவுக்கு கல்யாணம் நிச்சயம் ஆனது தெரிஞ்சதும் இவனுக்கு மறுபடி கோவம் வந்துரிச்சி போல. அந்தப் பொண்ணுக்கு சம்பவத்தன்னிக்கு ரெண்டு மூணு தடவ பேசியிருக்கான். இவங்க ரெண்டு பேரும் பழகுனப்ப எடுத்த ஃபோட்டோ, கிஃப்ட் எல்லாம் வச்சி மிரட்டியிருக்கான். காசு கேட்டிருக்கான். காச வாங்க அந்த இடத்துக்கு வர சொல்லியிருக்கான். அப்ப ஆத்திரப்பட்டு அவள கொன்னுட்டான். திருட்டு மாதிரி காட்டுறதுக்காக அவ காசு செல்ஃபோன் எல்லாம் எடுத்துட்டு ஓடிப்போயிருக்கான். இவன நாங்க அரெஸ்ட் பண்ணும்போது அவன் வீட்டுல இந்த பேக்ல எல்லா டாகுமெண்ட்சும் இருந்திச்சி. நாலு தட்டு தட்டினா எல்லா உண்மையையும் சொல்லிடுவான். ரெண்டு நாள்ல ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்கிருவேன்.”
“நேர்ல பாத்த மாதிரி சொல்றீங்களே கருப்பையா?”
“எல்லாம் ஒரு அனுமானம் தான் சார். எத்தன கேஸ் பாத்துருக்கோம்”
“சரி கருப்பையா. நானும் கொஞ்சம் விசாரிச்சிப் பாக்குறேன். எனக்கு எதாவது க்ளூ கிடைச்சா உங்களுக்குச் சொல்றேன். சரியா?”
“அருண். உங்களுக்கு எதுக்கு சிரமம்? அதிலயும் இந்தக் கேஸ்ல எல்லா எண்டும் மூடியிருக்கு.தெவையில்லாத வேலை” சற்றே எரிச்சல் தொனிக்க சொன்னார் கருப்பையா.
சிகரெட்டைப் பாதி இழுத்த அருண் சட்டென்று நிமிர்ந்து அவரைப் பார்த்தான்.
அருணைக் கவனிக்காமல் கருப்பையா தொடர்ந்தார். “நீங்க பேசாம இருங்க. இப்ப டிப்பார்ட்மெண்ட்ல வேற இல்ல. உங்களுக்கு வீண் தொந்தரவு” எரிச்சல் எச்சரிக்கையாக மாறி விட்டிருந்தது.
“ஓக்கே கருப்பையா. நான் ரமேஷ்கிட்ட பேசிட்டுப் போறேன்”
“சரி அருண். பத்து நிமிசம் பேசிட்டு உங்க வேலையப் பாத்துட்டுப் போங்க.”
அருண் மீதமிருந்த சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் நசுக்கிவிட்டு எழுந்தான். கருப்பையாவின் அறையை விட்டு வெளியே வந்தான். வெளியே இருந்த பெஞ்சில் மாயா உட்கார்ந்திருந்தாள். காலையில் பார்த்ததை விட இப்போது தெளிவாக இருந்தாள். தலையை வாரி குதிரை வால் போட்டிருந்தாள். காட்டன் குர்தாவும் ஜீன்ஸ் பண்ட்டும் போட்டிருந்தாள். அருணைப் பார்த்ததும் எழுந்து ஒரு ஸ்நேகமான புன்னகையை உதிர்த்தாள்.
“ஹாய் மாயா. வா நாம போய் ரமேஷைப் பாத்துட்டு வந்திடலாம்.”
“ஓக்கே அருண்.”
இருவரும் அந்த நீளமான வராந்தாவில் நடந்து லாக்கப் அருகில் இருந்த அறைக்குள் நுழைந்தார்கள். அங்கே ஒரு மேசையும் அதன் ஒரு பக்கத்தில் ஒரு நாற்காலியும் இன்னொரு பக்கத்தில் இரண்டு நாற்காலிகளும் போடப் பட்டிருந்தன.
“இது தான் இன்கொயரி ரூம். சிட்” என்று நாற்காலியைக் காட்டினான். ஒரு சிகரெட்டை பாக்கெட்டில் இருந்து உறுவியவாறு,, “ஐ கெஸ் யூ டோண்ட் மைண்ட்”
“ஓ. நோ ப்ராப்ளம். இன் ஃபாக்ட் ஐ கேன் ஹாவ் ஒன் டூ” என்று அருண் நீட்டிய பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உறுவி உதட்டில் பொறுத்திக் கொண்டாள்.
அருண் லைட்டரால் இருவரின் சிகரெட் நுனிகளையும் சிவப்பாக்கினான். பெண்மையின் நளினத்தோடு அவள் புகைப்பதைப் பார்த்துக்கொண்டே நுரையீரலைப் புகையால் நிரப்பினான்.
ரமேஷை இரண்டு காவலர்கள் உள்ளே நடத்திக் கொண்டு வந்தனர். அவன் சட்டைப் பொத்தான்கன் எல்லாம் அறுந்து போயிருந்தன. உதட்டின் ஓரம் கிழிந்து ரத்தம் கட்டிப் போயிருந்தது. கண்ணுக்குக் கீழே கன்றிப் போய் கறுப்பாகப் பொட்டு வைத்ததுபோல இருந்தது. அடி வாங்கி வாங்கிக் களைத்துப் போயிருந்தான்.
“ரமேஷ்!” என்று அலறியபடி எழுந்தாள் மாயா. அவள் விழிகளில் இன்ஸ்டண்ட் கண்ணீர்.
மாயாவின் கையைப் பிடித்து அமர்த்தினான் அருண் “நோ மாயா. டோண்ட் கெட் எக்சைட்டெட்” அருணின் குரலில் ‘போலீஸ்ல இதெல்லாம் சகஜமப்பா’ என்ற தொனி.
ரமேஷ் மேசையின் அந்தப்பக்கம் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். மாயாவைப் பார்த்ததும் சிரிக்க முயற்சி செய்து அவன் உதடுகள் வலியால் கோணிக்கொண்டன.
மாயா அருணை ரமேஷுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். ரமேசின் கண்களில் ஒரு நம்பிக்கைக் கீற்று தெரிந்தது.
“சார் சத்தியமா நான் சுஷ்மாவக் கொலை பண்ணல சார்”
“நான் நம்புறேன் ரமேஷ். ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு சில கேள்விகளுக்கு விடை தெரியணும். நீ எதுக்கு பத்து மணிக்கு அங்க போன?”
“சுஷ்மாவப் பாக்க”
“அவள எதுக்குப் பாக்கப் போன?”
“அவளோட ஐட்டம்ஸ் கொஞ்சம் என் கிட்ட இருந்தது. அவளுக்கு கல்யாணம் ஆகப் போறதுனால அதெல்லாம் என் கிட்ட இருக்குறது நியாயமாப் படல. அதான்..”
“மாயாவுக்கு இதெல்லாம் தெரியுமா?”
“இதையெல்லாம் குடுத்துடச் சொன்னதே அவ தான். ஆனா அன்னிக்கு குடுக்கப் போனது அவளுக்குத் தெரியாது. சர்ப்ரைஸா வச்சிருந்து அடுத்த நாள் சொல்லலாம்னு இருந்தேன்.”
“எத்தன மணிக்கு சுஷ்மாவ மீட் பண்றதா ப்ளான்?”
“8:30 க்கு”
“ஏன் நீ லேட்டாப் போன”
“மாயாவொட ஷாப்பிங் பொனதுல லேட் ஆயிடுச்சி. நான் சுஷ்மாவுக்கு கால் பண்ண ட்ரை பண்ணேன் சிக்னல் கிடைக்கல. 9:30க்கு அங்க போனேன். அவ இல்ல. அங்க இருந்த ஒரு பெட்டிக்கடைல கேட்டேன். அவன் பாக்கலன்னு சொல்லிட்டான். மறுபடி மறுபடி ட்ரை பண்ணேன். மொபைல் ஸ்விட்ச்ட் ஆஃப்னு மெஸ்ஸேஜ் வந்திச்சி. 10:30 வரைக்கும் வெயிட் பண்ணிட்டு வீட்டுக்குப் போயிட்டேன்.”
“நீ வீட்டுக்கு வந்ததப் பாத்த சாட்சி யாராவது இருக்காங்களா?”
சிறிது யோசித்துவிட்டு தலையை இட வலமாக ஆட்டினான். "யாரும் பாக்கல. ஆனா நான் வீட்டுக்குப் போனதும் மாயாவுக்குக் கால் பண்ணேன்”
“இந்த மோதிரம் யாருதுன்னு தெரியுதா?”
“இது நான் சுஷ்மாவுக்கு குடுத்த கிஃப்ட் சார். இது உங்களுக்கு எப்பிடி கிடச்சது”
“எப்பிடியோ கிடச்சது. இது சாகிற வரைக்கும் சுஷ்மா கிட்ட தான் இருந்ததா?”
“ஆமா சார். நாங்க மீட் பண்ணும்போது நான் அவளுக்குக் குடுத்த கிஃப்டையும் கொண்டு வர்றதா சொல்லியிருந்தா சார்.”
“ம்ஹ்ம். நீ பொய் சொல்ற மாதிரி தெரியல. ஆனா சந்தர்ப்ப சூழ்நிலை உனக்கு பாதகமா இருக்கு. நல்ல ஒரு லாயர் கிடச்சா உன்னை இந்தக் கேஸ்ல இருந்து வெளிய கொண்டு வந்துடலாம். ஆனா யார் இந்தக் கொலைய செஞ்சிருப்பாங்கன்னு கண்டு பிடிக்கணும். தட்ஸ் மோர் இம்ப்பார்ட்டண்ட்”
“அருண் உங்க டைம் ஓவர்.” கருப்பையாவின் குரல் பின்னாலிருந்து ஒலித்தது.
நாற்காலியில் இருந்து எழுந்து கொண்டே அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்தான். வாசலில் குறுக்காகக் கையை வைத்தபடி நின்றிருந்த கருப்பையாவைப் பார்த்து ஒரு புன்னகையை தவழ விட்டான். கருப்பையா அதை ஒரு முறைப்பைப் பதிலாகக் கொடுத்து “நோ ஸ்மோக்கிங் இன்சைட்” என்றார் சற்றே கடுமையான குரலில்.
“ஓ சாரி” என்று சிகரெட்டை மேசை மேல் அணைத்து குப்பைத்தொட்டிக்குள் எறிந்தான்.
“நான் உங்கள அப்புறமா மீட் பண்றேன்”
வெளியே வந்ததும் மாயாவை ஏறிட்ட அருண். “லுக் ஹியர் மாயா. ரமேஷை ஈஸியாக் காப்பாத்திடலாம். ஆனா, அதோட மட்டும் நான் நிறுத்திக்க முடியாது. ஐ வாண்ட் டொ சட்ச்ஹ் தெ கில்லெர். எனக்கு இந்த இன்ஸ்பெச்டொர் கிட்ட கோ-ஆப்பரேஷன் கிடைக்கும்னு தோணல. ஐ ஆம் கோயிங் டு அப்ரோச் மை அதெர் சோர்ஸஸ்.”
“ஓக்கே அருண். நான் ஏதாவது பண்ணனுமா?”
“யெஸ். தம்புச் செட்டி தெருவில லாயர் கணேஷ்னு ஒருத்தர் இருக்கார். வெரி குட் லாயர். அவரப் பிடிச்சி ரமெஷை ஜாமீன்ல எடுக்கப் பாரு. ஐ வில் டாக் டு யூ லேட்டர்”
அருண் தன் காரில் ஏறி எஞ்சினை உயிர்ப்பித்து ஏசியைப் போட்டான். ‘இந்த கேசில் எந்த முடிச்சை முதலில் அவிழ்ப்பது’ என்ற யோசனையுடன் ட்ராஃபிக்கில் கலந்து காணாமல் போனான்.
(தொடரும்)

6 comments:
சத்தியமா சுஜாதாவோட ஹீரோக்களை வச்சு கதை எழுத மாட்டேன்.
//லாயர் கணேஷ்னு ஒருத்தர் இருக்கார்//
//முகிலன் said... சத்தியமா சுஜாதாவோட ஹீரோக்களை வச்சு கதை எழுத மாட்டேன்//
:-?.... சரி பார்ப்போம்....
// கலந்து காணாமல் போனான்//
நீங்க காணாம போகாம... எழுதி முடிங்க...
இந்த தொடரை இப்ப தான் படிக்க ஆரம்பிக்கிறேன்...ஃபுல்லா குடிச்சிட்டு ச்சே ஃபுல்லா படிச்சிட்டு சொல்றேன்...:0)))
Pretty good flow...makes reading very interesting....Please continue Mukilan...
If I am representing Ramesh as his lawyer, I would say there is no motive for him to kill his ex-girl friend....Just because she was his ex-GF, it doesn't mean he got to kill her..Did they have any problem between them?
The evidences police got are all circumstantial...Was there any finger print on the body? Any eye witness? Any murder weapon? If not, where is it? Why the police did not recover it?
Also, the shop owner says he found the body with a cut in throat...That makes it a planned murder...If anybody planning for a murder, will they wait for their victim in a public place? No...That makes Ramesh an innocent...That's how I will argue :0))
But, as a reader, I would guess the killer could be XXXXXX....No, i dont want to spoil the fun :0)))
கலகலப்ரியா - கண்டிப்பா நான் காணாமப் போக மாட்டேன்.
அதுசரி -
Yes. You are right about the arguments to save Ramesh. But I am not going to write about those. I will write about solving the case.
And sorry your guess is not right..
Post a Comment