ஒரே கரு பல முட்டைகள் அப்பிடின்னு நம்ம பலா பட்டறை ஷங்கர் ஒரு பதிவு போட்டுட்டு, அது மாதிரி தொடர வேற செய்யச் சொல்லிட்டாரு. என்னா ஒரு கொலை வெறி.
இதுல அவரே பல மாதிரி எழுதிட்டாரு. மிச்ச சொச்சம் இருக்கிறத மத்தவங்க எழுதனுமாம். அதுலயும் கொறஞ்சது மூணு மாதிரி எழுதனுமாம். நம்ம ஸ்டைல்ல இருக்கவே கூடாதாம்.
சரி முயற்சி செஞ்சி பாப்போமேன்னு ஆரம்பிச்சிட்டேன்..
கரு: ராணின்னு ஒரு பொண்ணு பிள்ளையார் கோவிலுக்குப்போய் சாமி கும்பிட்டுவிட்டு சூரத் தேங்காய் உடைச்சிட்டு குழந்தை பிறக்கனுமேன்னு வேண்டிகிட்டு, திரும்பி வீட்டுக்கு போறா
***
ABMமிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு திரும்பும் போது ராணி மேடம் கண்ணை மூடிக் கொண்டு எதோ முணுமுணுப்பது கேட்டது. அவர்களுக்குத் தெரியாமல் அருகில் சென்று கேட்ட போது ஏதோ சுலோகம் போல இருந்தது.
என் முகத்தில் தெரிந்த ஆச்சரியத்தைப் பார்த்த பக்கத்து சீட் கல்பனா நான் நினைப்பதைப் புரிந்து கொண்டார்கள். “அது ஒண்ணுமில்ல அகிலா. அவங்களுக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வருசமாச்சி. இன்னும் குழந்தை இல்லை. அதான் எதாவது விரதம் இருக்கிறது, சுலோகம் சொல்றதுன்னு செஞ்சிக்கிட்டே இருப்பாங்க” என்றாள்.
குழந்தை இல்லாமலிருப்பது பெரும் குறைதான். மனதால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை அறியாமல் சுற்றுப் புறமும் சொந்தங்களும் காயப்படுத்திப் பார்க்கும். குழந்தை இல்லாமல் போனதற்கு என்ன காரணமாய் இருக்கும்? டாக்டர் யாரையாவது பார்த்தார்களா தெரியவில்லை.
வேலைப் பளுவில் அதை மறந்தே போனேன்.
வெள்ளிக்கிழமை வேலை முடிந்ததும் ஹாஸ்டலுக்கு நடந்து போய்க் கொண்டிருந்தோம். அப்போது ராணி மேடம் கோவில் வாசலில் இருந்த கடையில் தேங்காய் வாங்கிக் கொண்டு நின்றிருந்தார்கள். கல்பனாவிடம் சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமாகப் போய் ராணி மேடத்தின் முன்னால் நின்றேன்.
“ஹலோ மேடம். என்ன இந்தப் பக்கம்?”
“ஓ.. அகிலா. கோவிலுக்குப் போகலாம்னு..” என்று இழுத்தார். என் வரவை இடைஞ்சலாக நினைத்தாரோ என்னவோ. ஆனாலும், நான் விடவில்லை.
“நானும் கோவிலுக்குத் தான் வந்தேன் மேடம்” என்று அவரோடு சேர்ந்து நடந்தேன். இருவரும் சன்னிதி சுற்றி விட்டு அந்தக் கோவிலின் மூலையில் இருந்த பிள்ளையார் சன்னிதி முன் நின்றோம். கிட்டத்தட்ட பத்து நிமிடம் கண் மூடி வணங்கி விட்டு கையில் இருந்த தேங்காயை சிதறுகாய் போடும் தொட்டியில் அடித்து சிதறடித்தார்.
கோவில் மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்தோம்.
“என்ன மேடம். ஒரே பக்தியா இருக்கு?” என்று நான் கேட்டதுதான் தாமதம், மடை திறந்த வெள்ளம் போல என் தோளில் சாய்ந்து அழுது கொண்டே அத்தனைத் துயரத்தையும் கொட்டினார். நான் உம் கொட்டிக்கொண்டே இருந்தேன்.
கண்களைத் துடைத்துக் கொண்டு “சரி நேரமாயிருச்சி. பஸ் போயிரும்” என்ற அவரோடு நானும் பஸ் ஸ்டாப் வரை நடந்தேன்.
“மேடம் உங்க ஹஸ்பெண்டை டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போனீங்களா?” என்றேன்.
அதற்குள் அவர் பஸ் தூரத்தில் வந்து விட “இல்லை அகிலா. அவர் பாண்டிச்சேரியில வொர்க் பண்றார். வீட்டுக்கு வர்றதே மாசத்துல ரெண்டு நாள். இதுல எங்கருந்து டாக்டர் கிட்ட போறது?” என்று பஸ்ஸில் ஏற ஓடினார்.
நான் அவர் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
****
“எலேய் கருப்பா.. நீ சொன்ன டீ வந்துருச்சிலே. இந்தா பிடி” என்று என்னிடம் டீயை நீட்டினான். என் கண்ணோ அங்கோ பஸ்ஸில் அமர்ந்திருந்த அவளையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது. வடக்கூர்காரிகள் போல நல்ல நிறம். பார்துக்கிட்டெ இருக்கலாம் பொல.
“டேய் டீயப் பிடிடா” சுயநினைவு வந்து டீயை வாங்கினேன். அதர்க்குள் பஸ் போய்விட்டது.
“என்னடா? நானும் போன வாரத்துல இருந்து பாக்குறென். நீ அந்த ஃபிகரயே பாக்க்குற”
“ஆமாண்டா மாப்ள. எனக்கு அந்தப் பொண்ணை ரொம்பப் பிடிசிருக்கு”
“அப்ப துண்டு போட்ற வேண்டியதுதன?”
போட்றவேண்டியதுதான்னு மனசுக்குள் நினைத்துக் கொண்டேன். இதுவரைக்கும் பல பெண்ட்களுக்கு துண்டு போட்டுஇருக்கிறேன். யரும் சீண்டியது கூட இல்லை. பத்தோடு பதினொன்னாக இதற்கும் போட்டுவிட வேண்டியதுதான்.
இன்னும் ரெண்டு மூனு நாலைக்கு அந்த பஸ்ல அவ டெய்லி வராளான்னு நோட்டம் விட்டேன். சில நாள் சுடிதார்ல வரா. சில நாள் சேலைல. ஆனா எதுல பாத்தாலும் வடக்கூர்க்காரி மாதிரிதான் தெரியிறா. ஒரு வேள வடக்கூர்க்காரியாவே இருந்து அவ பெசுற இந்தி நமக்குப் புரியாம நாம பேசுற தமிழ் அவளுக்குப் புரியாமப் போச்சின்னா? என்ன செய்யறதுன்னு ஒரு தயக்கமா இருந்தது.
அடுத்த நாள் காலேசுக்கு கட்டடிச்சிட்டு அவ போற பஸ்ல ஏறிட்டேன். அவ உக்காந்திருந்த சீட்டுக்கு பக்கத்துல போயி நின்னேன். அவலுக்குப் பக்கத்துல உக்காந்திருந்தவக் கிட்ட அவ பேசிக்கிட்டிருந்தா. நல்ல வேலை. தமிழ்லதான் பேசினா.
அடுத்த ஸ்டாப்ல அவ இறங்கின. நானும் துண்டு போட்ரலாம்னு அவ பின்னாடியே இறங்கினேன். அவ நேரா அங்கிருந்த ஒரு கோவில் வாசல்ல இருக்கிற கடைல தேங்காப்பழம் வங்கினா. கோவிலுக்குள்ள போயி அங்கிருந்த பிள்ளயார் சன்னிதியை 21 தடவ சுத்தி வந்தா. அப்புறம் சுரத்தேங்காய் உடச்சா.
அய்யர் உள்ள இருந்து கையில தீபாரதனைத் தடோட வந்தாரு. நான் போய் அவளுக்கு எதிர நின்னுக்கிட்டேன்.
“வாம்மா ரானி. ஆத்துல எல்லாரும் சௌக்கியமா?” அப்பிடின்னு அய்யர் கேட்டாரு. ஆகா அப்ப இவ பேரு ராணியா?
அய்யர் குங்குமம் குடுக்கவும் அவ ஜாக்கெட்டுக்குள்ள இருந்து தாலிய எடுத்து அதுல குங்குமத்த வச்சிக்கிட்டா. எனக்குள்ள எதோ வெடிக்கிற சத்தம் கேட்டுச்சி.
கடைசியில் இவளும் என் துண்டை தாண்டிப் போனாள்..
****
தோழி பிள்ளையார் முன் தேங்காயை உடைத்தாள். “சுமக்க முடியவில்லையா?” என்றேன். “சுமக்கத்தான் உடைத்தேன்” என்றாள்.
****
அப்பாடி. ஒரு வழியா மூணு மாதிரி எழுதிட்டேன். இந்த சவாலுக்கு அடுத்ததா நான் அழைக்கிறது - சாரு சங்கர்.

17 comments:
அடடே!!!
மூணு விதமா தேங்காயை உடைச்சுட்டீங்களே!!!
முதல்து யாருன்னு தெரில- எனக்கு?
நசரேயன் பார்ட் கலக்கல். அதே மாதிரி ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு... வளவலத்தாளை நான்தான் ரொம்ப மிஸ் செய்கிறேன் போலருக்கு. :)) ம்ம்...நடக்கட்டும்.
தேங்காய் போறாக்க வந்தேன் அதற்குள்ள வேறு யாரோ போறக்கிட்டுப் பொய்ட்டாங்க .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
என்னடா ககாஅ தலைவர் OOPS போட்டு காணாம போய்ட்டாரேன்னு நினைச்சேன். நியாயமா அவரு பார்ட்டுக்கு 1/3 வோட்டு அவருக்கு போயிரணும். இல்லீன்னா சட்டத்துறைக்கு இன்னோரு ஊழல் கேஸ் கைவசம்:). சூப்பர்
நிசமாவே நீங்கள் முகிலந்தானா?..
கலக்கல் பதிவு சார்...
ஒரு குரூப்பாத்தான்யா கெளம்பிருக்காய்ங்க....
மூணு விதமா சொல்லியாச்சி.... சூப்பர்..
கலக்கல் முகிலன்.
மூணவது யாருன்னு தெரியலை.
//முதல்து யாருன்னு தெரில- எனக்கு?
//
விதூஷ், நம்ப பக்கம் அப்பப்ப எட்டிப்பாக்கணும். அப்பத்தான் புரியும்
//தோழி பிள்ளையார் முன் தேங்காயை உடைத்தாள். “சுமக்க முடியவில்லையா?” என்றேன். “சுமக்கத்தான் உடைத்தேன்” என்றாள்.//
மொத்த கருவும் இவ்ளோதாங்க... கொஞ்சம் மாத்தி எழுதுறப்பவும் நல்லாத்தான் இருக்கு..
காலையில ஷங்கர் சொல்றப்பவே நெனச்சேன்... இன்னைக்கு ஒரு கொலை உண்டுன்னு... ஹி...ஹி.... (நீங்களே சொல்லிகிட்டா எப்புடி நாங்களும் சொல்லுவம்ல...)
நல்ல கதைகள்...
இத.. இதத்தான்,
நான் எதிர்பார்த்தேன். சூப்பர் முகிலன். :))
சாறு சங்கரா? ம்ம் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்..:)))
தோழி பிள்ளையார் முன் தேங்காயை உடைத்தாள். “சுமக்க முடியவில்லையா?” என்றேன். “சுமக்கத்தான் உடைத்தேன்” என்றாள்.
//
இது டாப்பு..:))
:-))) நசரேயன் - செம...அதுவும் அந்த வடக்கூர்-ன்னதும் தெரிஞ்சுபோச்சு...தல ஸ்டைலாச்சேன்னு!
@சைவக்கொத்துபரோட்டா - நன்றி
@விதூஷ் - அதுலயே க்ளூ இருக்கேங்க?
@பனித்துளி சங்கர் - வாங்க.
@வானம்பாடிகள் - இதப் பாத்தாவது வெளிய வருவாங்களான்னு பாக்குறேன்.
@பட்டாபட்டி - நன்றி பட்டா. நான் முகிலன் தான்
@துபாய் ராஜா - ஆமாங்கோவ்.. நன்றி
@நாடோடி - நன்றி நாடோடி..
@சின்ன அம்மிணி - கார்க்கி
@க.பாலாசி - நன்றி பாலாசி
@ஷங்கர் - எங்க. அந்தாளு படம் காட்டுறதோட நின்னுக்கிறாரு. மூணு நாளா ஒரு பதிவு எழுதப் போறேன். பதிவு எழுதப் போறேன்னு ஒரே அலம்பல். பதிவத்தான் காணோம்.
@ஷங்கர் - நன்றி
@சந்தனமுல்லை - வடக்கூர்னப்புறம் தான் தெரிஞ்சதா? கருப்பான்னு சொன்னதுமே தெரிஞ்சிருக்கணும்.. ம்ம்ம்.
தோழி பிள்ளையார் முன் தேங்காயை உடைத்தாள். “சுமக்க முடியவில்லையா?” என்றேன். “சுமக்கத்தான் உடைத்தேன்” என்றாள்.
.... :-)
படீர் என்று பதிவில் மூன்று விதமாக போட்டு உடைத்து இருக்கீங்க. சூப்பர்!
ஷங்கரைத்தொடர்ந்து நீங்களும் கலக்குறீங்க! அருமை...
பிரபாகர்...
ஒரே கல்லில் மூணு தேங்காய் உடைச்சாச்சா :-)))
Post a Comment