Monday, April 19, 2010

யார் காரணம்?

நம்ம வீட்டுக் குழாயத் திறந்தா தண்ணி சாக்கடைக் கலர்ல புழுவோட வருதுன்னா அதுக்கு யார் காரணம்? நம்ம வீட்டுக் குழாயா?

இல்ல...

ஊருக்கு வெளிய உயரத்துல ரெண்டு டேங்க் இருக்குது பாருங்க? வாட்டர் டேங்க். அதுதான் காரணம். அது சுத்தமா இல்ல. அதுனாலதான் நம்ம வீட்டுக் குழாயில சாக்கடையும் புழுவும் வருது.

அதுக்கு இப்போ நாம என்ன செய்யணும்?

எல்லாருமாச் சேந்து, விளக்கமாத்த எடுத்துக்கிட்டு மேல போயி, நல்லா அடி அடி அடி அடி அடின்னு அடிச்சி....

நான் டேங்க்க சுத்தம் பண்றதப் பத்தி சொல்றேன்..

அடிச்சி சுத்தம் பண்ணோம்னா, நம்ம குழாயில சாக்கடை வர்றது நின்னுடும்

செய்வோமா நாம?

(நன்றி: பாரதி கிருஷ்ணகுமார் - எப்போதோ மதுரை தமுக்கம் மைதானத்தில் த.மு.எ.ச கலை இரவில் பேசியது)

27 comments:

Chitra said...

ரொம்ப சரியா சொல்லி இருக்கிறார். விளக்குமாறு இருக்கு. கை இருக்கு. ஆள் இருக்கு. எங்கே அழுக்கு என்றும் தெரியுது. அடிக்கவும் தெரியுது..... ம்ம்ம்ம்ம்ம்....... சுத்தம் செய்ய வேண்டியது tank மட்டும் தானா? சரிங்க.

ஈரோடு கதிர் said...

அடி அடி அடி அடி அடின்னு அடிச்சி.

:)))))))

Paleo God said...

கரப்பான் பூச்சிங்க அனுகுண்டுக்கே சாவாதாமே???

vasu balaji said...

யார்ப்பா அங்க. விளக்குமாத்தடி ஸ்பெசலிஸ்ட் பாலாசிய கூப்புடுங்க:)))

சங்கர் said...

ரெண்டு டேங் தானா?

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
யார்ப்பா அங்க. விளக்குமாத்தடி ஸ்பெசலிஸ்ட் பாலாசிய கூப்புடுங்க:)))//

நல்லவேள வௌக்கமாத்து அடிவாங்குன பாலாசிய கூப்புடுங்கன்னு சொல்லாம விட்டீங்களே...........

Unknown said...

//Chitra said...
ரொம்ப சரியா சொல்லி இருக்கிறார். விளக்குமாறு இருக்கு. கை இருக்கு. ஆள் இருக்கு. எங்கே அழுக்கு என்றும் தெரியுது. அடிக்கவும் தெரியுது..... ம்ம்ம்ம்ம்ம்....... சுத்தம் செய்ய வேண்டியது tank மட்டும் தானா? சரிங்க//

டேங்க்னா டேங்க்.. வேறன்னா வேற..

Unknown said...

//ஈரோடு கதிர் said...
அடி அடி அடி அடி அடின்னு அடிச்சி.

:)))))))//

நன்றி கதிர்

Unknown said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
கரப்பான் பூச்சிங்க அனுகுண்டுக்கே சாவாதாமே???//

ஷூ ஹீலால மிதிச்சிப் பாத்ததில்லையா?

Unknown said...

//வானம்பாடிகள் said...
யார்ப்பா அங்க. விளக்குமாத்தடி ஸ்பெசலிஸ்ட் பாலாசிய கூப்புடுங்க:))//

பாலாசீ எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

Unknown said...

//சங்கர் said...
ரெண்டு டேங் தானா?//

ரெண்டுங்கிறது ஒரு குறியீடு... அதை எத்தனையா வேணும்னாலும் எடுத்துக்கலாம்.. :)))))

Unknown said...

//க.பாலாசி said...
//வானம்பாடிகள் said...
யார்ப்பா அங்க. விளக்குமாத்தடி ஸ்பெசலிஸ்ட் பாலாசிய கூப்புடுங்க:)))//

நல்லவேள வௌக்கமாத்து அடிவாங்குன பாலாசிய கூப்புடுங்கன்னு சொல்லாம விட்டீங்களே..//

வெளக்கமாத்தடி ஸ்பெஷலிஸ்ட்னா அர்த்தம் அது இல்லையா?

பழமைபேசி said...

க்கும்.... ரெண்டாவது பொண்டாட்டிக்கு அலைபேசில அழைப்பு வந்ததோட நேத்தைய பகுதி முடிஞ்சு போச்சு... அது என்னாச்சுன்னு பார்க்கணும்.... பக்கத்த்து வீட்டு பொம்பளைக்காகப் புருசன் தெருமுனையில காத்திட்டு இருந்ததை இவ கண்டுபுடிச்சாளா, இல்லையான்னு மனசு கிடையாக் கிடந்து தவிக்கிதே?

இதுக்கு நடுவுல சீமாரா? பகிடி செய்யாதீங்க தம்பி!

சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல சவுக்கடி!!

ராஜ நடராஜன் said...

//கரப்பான் பூச்சிங்க அனுகுண்டுக்கே சாவாதாமே???//

ஷூ ஹீலால மிதிச்சிப் பாத்ததில்லையா? //

மிதிச்சாலும் குஞ்சு பொறிக்குமே.

Ganesh Babu said...

முகிலன் உங்கள் பதிவுகள் அருமை

தமிழர், மற்றும் தமிழ் வலை பதிவர்களுக்காக tamilar.co.cc என்று புதிய தளத்தை ஆரம்பித்து உள்ளேன், அதில் சேர்ந்து தமிழர்களுடன் உரையாடுங்கள், அது twitter+tamilish போன்றதொரு சேவை.

இப்படிக்கு
டென்த் ரிசெல்டுக்கு வெயிட் பண்ணும் மாணவன்

கணேஷ் பாபு

Jackiesekar said...

நல்ல சொன்னதை பதிவேத்தி இருக்கிங்க.. முகிலன்..

நாடோடி said...

சாட்டைய‌டி முகில‌ன் சார்...

Anonymous said...

கோபம்தான் வருது. என்ன பண்ண முடியுது

க‌ரிச‌ல்கார‌ன் said...

போட்டுத் தாக்கு

க‌ரிச‌ல்கார‌ன் said...

போட்டுத் தாக்கு

settaikkaran said...

சரியாச் சொல்லியிருக்கீங்க! மேலே தான் சுத்தம் பண்ணனும்! பண்ணியே ஆகணும்!!

பனித்துளி சங்கர் said...

///////எல்லாருமாச் சேந்து, விளக்கமாத்த எடுத்துக்கிட்டு மேல போயி, நல்லா அடி அடி அடி அடி அடின்னு அடிச்சி....///////

ஏலே மக்கா இப்படி பண்ணினா டேங்க் சுத்தம் ஆகாத்துல விளக்காமாருதான் நாசமா போகும் .

அன்புடன் அருணா said...

யப்பா!!!என்னா அடி!

ஜெய்லானி said...

முத அடி எங்க அடிக்கனும் ?

R.Gopi said...

ஹல்லோ....

என்னோட ப்ரதர் மைக் இருக்காரா?

என்ன டாங்க் க்ளீனிங்ல பிஸியா?

ஹல்லோ... டாங்க் க்ளீன் ஆயிடுச்சா?

ஓக்கே... நெக்ஸ்ட் மீட் பண்றேன்...

Thamira said...

இவ்ளோ பேர் ரெடியா இருக்கறதைப்பார்த்தா அடிச்சு சுத்தம் பண்ணப்போறது டாங்க்கை இல்லைன்னு தெளிவா தெரியுது. :-)