Monday, July 19, 2010

பிதற்றல்கள் - 07/18/2010

ன்று செய்திகளில் பா.ஜ.க நடத்தும் போராட்டம் பற்றி பார்த்தேன். மத்திய அரசு ஏழை சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குகிறதாம். அதை சிறுபான்மை மாணவர்களுக்கு மட்டும் வழங்குவதால் மாணவர்கள் மத்தியில் மத உணர்வு தூண்டப்படுமாம். ஆகவே எல்லா மத மாணவர்களுக்கும் வழங்க வேண்டுமாம்.

மத உணர்வு தூண்டப்படுவதைப் பற்றி பா.ஜ.க பேசுவதைக் கேட்டால் என்ன என்னவோ பழமொழிகள் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

மாருதி சுசுகியின் கார்களுக்கு வரும் இரண்டு விளம்பரங்களை மிகவும் ரசித்தேன். முதல் விளம்பரத்தில் ஒரு பெரிய யாட்(yatch) ஒன்றில் உள்ள வசதிகளை ஒருவர் விளக்கிக் கொண்டே வருவார். கடைசியில் நம்மூர்க்காரர் அவரிடம் ஒரு கேள்வி கேட்பார். இன்னொரு விளம்பரத்தில் ஸ்பேஸ் கிராஃப்ட் ஒன்றை விஞ்ஞானி ஒருவர் விளக்கிவிட்டு எனி க்வெஸ்டின்ஸ் என்று கேட்பார். அதற்கு நம்மூர்க்காரர் அதே கேள்வியைக் கேட்பார்.

“(லிட்டருக்கு) எவ்வளவு (மைலேஜ்) கொடுக்கும்?”

அடுத்து மாருதியின் பஞ்ச் லைன் - “மைலேஜே குறியாக இருக்கும் நாட்டுக்காக தயாரிக்கப்பட்டது”

அருமையான விளம்பரம்.

மீபத்தில் இந்தியா வந்திருந்த போது நான்கு படங்களை திரையரங்குகளில் கண்டு களிக்க வாய்ப்புக் கிடைத்தது. சிங்கம்(பி.வி.ஆர்), முரட்டு சிங்கம் (சத்யம்), களவாணி (மாயாஜால்) மற்றும் ராவணன் (மதுரை மணி இம்பாலா).

இதில் சத்யம் தவிர மற்ற மூன்று தியேட்டர்களுக்கும் நான் சென்றதே இல்லை.  பிவிஆர் நன்றாக இருந்தது. மாயாஜால் வார நாட்களில் போனதாலோ என்னவோ கூட்டமில்லாமல் இருந்தது. மணி இம்பாலாவைப் பற்றி கடைசியில் சொல்கிறேன்.

சிறப்பம்சம் என்னவென்றால் எல்லா தியேட்டர்களுக்குமே ஆன்லைனில் டிக்கெட் வாங்கப்பட்டது. வாங்கித் தந்தது என் மைத்துனன் செங்குட்டுவன் ராஜா.

நான்கு படங்களில் நான் மிகவும் ரசித்தது களவாணி. என் மைத்துனன் செங்குட்டுவன் - என் பதிவுகளையும் என் வலைப்பூ மூலம் பற்ற பதிவுகளையும் படிப்பவன் - இண்டெர்வெலிலும் படம் முடிந்த பின்னும் விடாமல் ஆற்றாமையால் புலம்பிக் கொண்டே இருந்தான் - ‘இந்த படத்துக்கு ஏன் நல்லா இல்லைன்னு கேபிள் சங்கர் விமர்சனம் எழுதினாரு?’. உடன் இருந்த நண்பர், பதிவர் பிரபாகர் “நான் நாளைக்கே கேபிளுக்கு ஃபோன் போட்டுக் கேக்கப் போறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். கேட்டாரா தெரியவில்லை.

ணி இம்பாலா அவர்களது வெப் சைட்டில் மதுரையின் முதல் மல்டிப்ளெக்ஸ் என்று விளம்பரம் தருகிறார்கள். ப்ரியா காம்ப்ளெக்ஸ், மாப்பிள்ளை விநாயகர்- மாணிக்க விநாயகர், அம்பிகா காம்ப்ளெக்ஸ் எல்லாம் மல்டிப்ளெக்ஸில் வராதா என்று தெரியவில்லை. மேலும் தியேட்டரில் தமிழ்நாட்டின் முதல் ஐ-மேக்ஸ் த்ரி-டி என்று போட்டிருக்கிறார்கள். உள்ளே 70 எம் எம் ஸ்கீரின் கூட இல்லை. இதுவா உங்க ஐமேக்ஸ்? மற்றபடி வழக்கமான மதுரை தியேட்டர்கள் போல பாதியில் ஏ.சியை ஆஃப் செய்யாமல் கடைசிவரை போட்டிருந்தார்கள் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

ந்தியா வந்த போது நான்கு பதிவர்களை சந்தித்தேன் - பாலா சார், பலாபட்டறை சங்கர், எறும்பு ராஜகோபால் மற்றும் சிங்கை சிங்கம் பிரபாகர். ஒருவரோடு தொலைபேசியில் கதைத்தேன் - விதூஷ் வித்யா.

பாலா சாரை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். அவரது அலுவலகத்தின் வரலாறையும் மற்ற சிறப்புகளையும் பற்றி ஒரு தொடர் எழுதும் அளவுக்கு பேசிக் கொண்டே இருந்தார். நானும் பலா பட்டறையும் திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தோம். அங்கே கழித்த 2 மணி நேரங்களில் நிறைய தெரிந்து கொண்டேன். மீண்டும் ஒரு முறை அவரை அதே அலுவலகத்தில் தங்கமணியுடன் சந்தித்தேன். அப்போது பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்துப் போட்ட பேட் ஒன்றை பாலா சார் எனக்குக் கொடுத்தார். நன்றி பாலா சார். நெக்ஸ்ட் டைம் சச்சின் ஆட்டோகிராஃப். :)

பலா பட்டறை சங்கரையும், எறும்பு ராஜகோபாலையும் அடையார்-இந்திரா நகர் தோஸா காலிங்க் ரெஸ்டாரண்டில் சந்தித்தேன். மழையோடு நடந்த அந்த சந்திப்பும் மகிழ்ச்சியாகவே நிகழ்ந்தது. எறும்பு விதூஷை தொலைபேசியில் அழைத்துக் கொடுத்தார். பேசினேன்.

பிரபாகரோடு மாயா ஜாலுக்கு திரைப்படம் பார்க்கச் சென்றோம். அங்கே சாப்பிட்டது, படம் பார்த்தது, என்று நான்கு மணி நேரம் மிகவும் மகிழ்ச்சியாகக் கழிந்தது. சோகத்தில் இருந்த பிரபாகருக்கு ஒரு மாற்றாக அந்த சந்திப்பு இருந்திருக்கும் என்று நம்புகிறேன். (எடுத்த ஃபோட்டோவை பப்ளிஷ் செய்யுங்க பிரபா).



40 comments:

பின்னோக்கி said...

மாருதி ஏமாத்துறாங்க... லிட்டருக்கு 18 . கே சீரிஸ் எஞ்சின்னு சொன்னாங்க. 9 ல இருந்து 10க்கு மேல குடுக்க மாட்டேங்குதுங்க :(.
என்னதான் சிட்டின்னாலும், இவ்வளவு கம்மியா எதிர்பார்க்கலை.

---

உதவித்தொகை.. எல்லாருக்கும் குடுத்தா நல்லது தானே ? என்ன.. அத ப்.ஜா.கா வேற மாதிரி சொல்லி கேட்குறது தான் பிரச்சினை.

-----

களவாணிக்கு தனி பதிவே போட்டுருக்கேன். ரொம்ப புடிச்சுருந்துது படம். இத்தனைக்கும் பெரிய கதைன்னு ஒண்ணும் இல்லை..

-----

பாலா சார் ரொம்ப யூத்தா தெரியுறாரு பாருங்க :)

----

Vidhoosh said...

பேசினீங்க சரிதான்... கடைசி வரைக்கும் அடையாறு தோசா காலிங்-ல தான் இருக்கோம்ன்னு சொல்லவே இல்லையே?

:)

Anonymous said...

களவாணி சீக்கிரம் பாக்கணும். எல்லாரும் ஆர்வத்தைக்கிளப்பறீங்க

http://rkguru.blogspot.com/ said...

போட்டோ கூட நல்ல இடத்துலதான் எடுத்திருக்கிங்க.......

நாடோடி said...

ஆஹா... நீங்க‌ போட்டோ எடுத்திருக்கிற‌ இட‌த்தை ட்ரெயினில் போகும் போது பார்த்திருக்கிறேன்.. சென்னை வ‌ந்த‌வுட‌ன், அந்த‌ இட‌த்தை பார்கிற‌துக்குனே பாலா சாரை பார்க்க‌ போய்விட‌ வேண்டிய‌து தான்...

vasu balaji said...

நம்மை விட உயரமா இருந்தும் எப்படி ஷங்கர் லோ ஆங்கிள்ல தொப்பைய எய்ம் பண்ணி ஷாட் எடுத்தாரு:))

/நெக்ஸ்ட் டைம் சச்சின் ஆட்டோகிராஃப். :)/

இலங்கையிலிருந்து திரும்பும்போது அனேகமா வந்துடும்:)

கலகலப்ரியா said...

||என்ன என்னவோ பழமொழிகள் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.||

சாத்தான் வேதம்..?!

.. அப்புறம் படத்தில ரெண்டு பேரு வயித்ல பானையக் கட்டிக்கிட்டு நிக்கறாங்களே அவங்க யாரு..?

(பாலா சார் ஒரு மில்லிமீட்டர் வளர்ந்த மாதிரி இருக்கே...)

க.பாலாசி said...

அனுபவங்கள் இனிமை...

//என்ன என்னவோ பழமொழிகள் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.//

உங்களுக்கு பழமொழி மட்டும்தான் ஞாபகம் வருதா!!!!

//கலகலப்ரியா said...
(பாலா சார் ஒரு மில்லிமீட்டர் வளர்ந்த மாதிரி இருக்கே...)//

க்கும்... கண்ணு வைக்காதீங்க...

Paleo God said...

அட நீங்க வெச்சிருந்தது ஐபோன் 4ஜியா ?

இந்த அளவுக்கு வரும்னு தெரிஞ்சிருந்தா இன்னும் நல்லா ட்ரை பண்ணி இருப்பேன்.:)



@பின்னோக்கி: மாருதி வாங்கினதா சமீபத்தில இடுகை எழுதினீங்களே? இவ்ளோ மோசமாவா மைலேஜ்? கொடுமைங்க”(

/அப்போது பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்துப் போட்ட பேட் ஒன்றை பாலா சார் எனக்குக் கொடுத்தார்.//

கிர்ர்ர்ர்ர்ர்...

//வாங்கித் தந்தது என் மைத்துனன் செங்குட்டுவன் ராஜா.//

நம்மகூட பானகம் குடிச்சாரே அவர்தானே? :)

அந்த புல்லட் படத்தை விட்டுட்டீங்களே ராசா? நியாயமா?

எறும்பு said...

//லிட்டருக்கு 18 . கே சீரிஸ் எஞ்சின்னு சொன்னாங்க. 9 ல இருந்து 10க்கு மேல குடுக்க மாட்டேங்குதுங்க :(//

பின்னோக்கி, நல்லா கேடீங்களா? கே சீரிசனா கேண சீரிசா இருகப்பபோகுது.
:)

எறும்பு said...

//அந்த புல்லட் படத்தை விட்டுட்டீங்களே ராசா? நியாயமா//

ஆமா ஷங்கர், அதுல முகிலன் வரும்போது எனக்கு ராசுகுட்டி பாக்யராஜ் மாதிரி இருந்தது.. என்ன அந்த ஜிகு ஜிகு சட்டை மிஸ்ஸிங்.

:)

எறும்பு said...

//கடைசி வரைக்கும் அடையாறு தோசா காலிங்-ல தான் இருக்கோம்ன்னு சொல்லவே இல்லையே?//

சொல்லி, நீங்க கிளம்பி வந்துட்டா என்ன பண்றது அதான் சொல்லலை.

:)

நசரேயன் said...

//என் மைத்துனன் செங்குட்டுவன் - என் பதிவுகளையும் என் வலைப்பூ மூலம்
பற்ற பதிவுகளையும் படிப்பவன்//

உங்க இம்சை தாங்க முடியாம தான் மைத்துனர் படிப்பாருன்னு நினைக்கிறேன்

நசரேயன் said...

//மாயாஜால் வார நாட்களில் போனதாலோ என்னவோ கூட்டமில்லாமல் இருந்தது.//

முகிலன் படம் பார்க்க வருகிறார்னு விஷயம் வெளியே தெரிந்து இருக்கும்

Unknown said...

// பின்னோக்கி said...

மாருதி ஏமாத்துறாங்க... லிட்டருக்கு 18 . கே சீரிஸ் எஞ்சின்னு சொன்னாங்க. 9 ல இருந்து 10க்கு மேல குடுக்க மாட்டேங்குதுங்க :(.
என்னதான் சிட்டின்னாலும், இவ்வளவு கம்மியா எதிர்பார்க்கலை.
//

நீங்களும் ஏமாந்துட்டீங்களா?

//
உதவித்தொகை.. எல்லாருக்கும் குடுத்தா நல்லது தானே ? என்ன.. அத ப்.ஜா.கா வேற மாதிரி சொல்லி கேட்குறது தான் பிரச்சினை.
//

அதே அதே

//
களவாணிக்கு தனி பதிவே போட்டுருக்கேன். ரொம்ப புடிச்சுருந்துது படம். இத்தனைக்கும் பெரிய கதைன்னு ஒண்ணும் இல்லை..
//

நானும் நினைச்சேன். பாத்து ரொம்ப நாள் ஆயிட்டதாலே ரசிச்சதைஎல்லாம் நினைவுல வச்சி எழுத முடியல.

//
பாலா சார் ரொம்ப யூத்தா தெரியுறாரு பாருங்க :)
//

நீங்களும் ஏமாந்துட்டீங்களா?

Unknown said...

// Vidhoosh(விதூஷ்) said...

பேசினீங்க சரிதான்... கடைசி வரைக்கும் அடையாறு தோசா காலிங்-ல தான் இருக்கோம்ன்னு சொல்லவே இல்லையே?

:)//

எறும்பு சொன்ன பதில் தான்.

Unknown said...

// சின்ன அம்மிணி said...

களவாணி சீக்கிரம் பாக்கணும். எல்லாரும் ஆர்வத்தைக்கிளப்பறீங்க
//
நம்ம தங்கமணியும் பாக்கனும்னு சொல்றாங்க. டி.வி.டி இன்னும் வரலை போல.

கார்த்திகைப் பாண்டியன் said...

என்ன நண்பா.. திருநகர் வரைக்கும் வந்திருக்கீங்க... கூப்பிட்டு இருந்திருக்கலாமே?

Unknown said...

// rk guru said...

போட்டோ கூட நல்ல இடத்துலதான் எடுத்திருக்கிங்க..
//
நன்றி குரு.

Unknown said...

நாடோடி said...

ஆஹா... நீங்க‌ போட்டோ எடுத்திருக்கிற‌ இட‌த்தை ட்ரெயினில் போகும் போது பார்த்திருக்கிறேன்.. சென்னை வ‌ந்த‌வுட‌ன், அந்த‌ இட‌த்தை பார்கிற‌துக்குனே பாலா சாரை பார்க்க‌ போய்விட‌ வேண்டிய‌து தான்//

போங்க போங்க. பாலா சார் நிறைய கதை சொல்லுவாரு.

பின்னோக்கி said...

ஷங்கர் - எறும்பு

- நானும் போய் கேட்டேன். ஏன்யா என் வண்டி 9-10 கி.மீ தான் குடுக்குதுன்னு சொல்றாங்க. அதுக்கு அவங்க, நீங்க வண்டி ஓட்டுற விதம் சரியில்லை, பாதி தூரம் இஞ்சின் ஆன் பண்ணாம ஓட்டுங்க 18 கி.மீ குடுக்கும்னு சொல்றாங்க :)

கே - கேண :)

ஈரோடு கதிர் said...

ரயில் எஞ்சினிக்கும் பக்கத்துல ரொம்ப யூத்தா ... அந்த நீலச்சட்டைதான் பாலாங்ளா?

செம யூத்தா இருக்காரே

Unknown said...

// வானம்பாடிகள் said...

நம்மை விட உயரமா இருந்தும் எப்படி ஷங்கர் லோ ஆங்கிள்ல தொப்பைய எய்ம் பண்ணி ஷாட் எடுத்தாரு:))
//
நானே கேக்கனும்னு நினைச்சேன். தனியா எதுவும் கிளாஸ் படிச்சிருப்பாரோ


// /நெக்ஸ்ட் டைம் சச்சின் ஆட்டோகிராஃப். :)/

இலங்கையிலிருந்து திரும்பும்போது அனேகமா வந்துடும்:)
//
super

Unknown said...

// கலகலப்ரியா said...

||என்ன என்னவோ பழமொழிகள் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.||

சாத்தான் வேதம்..?!
//
அதுவும் தான்.


//.. அப்புறம் படத்தில ரெண்டு பேரு வயித்ல பானையக் கட்டிக்கிட்டு நிக்கறாங்களே அவங்க யாரு..?
//

கிர்ர்ர்ர்

//(பாலா சார் ஒரு மில்லிமீட்டர் வளர்ந்த மாதிரி இருக்கே...)//

ஹிஹிஹிஹி

Unknown said...

// க.பாலாசி said...

அனுபவங்கள் இனிமை...

//என்ன என்னவோ பழமொழிகள் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.//

உங்களுக்கு பழமொழி மட்டும்தான் ஞாபகம் வருதா!!!!
//

டீசண்டா பழமொழின்னு சொன்னா விடுவீங்களா?

//கலகலப்ரியா said...
(பாலா சார் ஒரு மில்லிமீட்டர் வளர்ந்த மாதிரி இருக்கே...)//

க்கும்... கண்ணு வைக்காதீங்க//

வச்சிட்டாலும்

Unknown said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

அட நீங்க வெச்சிருந்தது ஐபோன் 4ஜியா ?

இந்த அளவுக்கு வரும்னு தெரிஞ்சிருந்தா இன்னும் நல்லா ட்ரை பண்ணி இருப்பேன்.:)
//

இந்த லொள்ளு தான ஆவாது. நான் வச்சிருந்தது ஒரு ஓட்டை நோக்கியா போன். நிஜம்மாவே ஓட்டை தான், ஜூனியர் முகிலன் புண்ணியத்துல. என் ஐ-போன் இந்தியாவுல வொர்க் பண்ணாது -லாக்ட்

//
@பின்னோக்கி: மாருதி வாங்கினதா சமீபத்தில இடுகை எழுதினீங்களே? இவ்ளோ மோசமாவா மைலேஜ்? கொடுமைங்க”(

/அப்போது பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்துப் போட்ட பேட் ஒன்றை பாலா சார் எனக்குக் கொடுத்தார்.//

கிர்ர்ர்ர்ர்ர்...

//
ஹிஹிஹிஹி


//வாங்கித் தந்தது என் மைத்துனன் செங்குட்டுவன் ராஜா.//

நம்மகூட பானகம் குடிச்சாரே அவர்தானே? :)
//

அவரே தான்.


//அந்த புல்லட் படத்தை விட்டுட்டீங்களே ராசா? நியாயமா?
//
அடுத்த பதிவுல போட்டுருவோம்.

Unknown said...

@எறும்பு - பாவம் பின்னோக்கி. அவரைப் புண்ணாக்குறீங்களே?
@ எறும்பு - நல்ல வேலை பின்னாடி உக்காந்து வந்தவர் குடை பிடிக்கலைன்னு சொல்லாம விட்டீங்களே?
@ எறும்பு - நல்ல பதில்

Unknown said...

//// நசரேயன் said...

//என் மைத்துனன் செங்குட்டுவன் - என் பதிவுகளையும் என் வலைப்பூ மூலம்
பற்ற பதிவுகளையும் படிப்பவன்//

உங்க இம்சை தாங்க முடியாம தான் மைத்துனர் படிப்பாருன்னு நினைக்கிறேன்//


குடும்ப ரகசியங்களை எல்லாம் வெளிய விடக் கூடாது.

Unknown said...

// நசரேயன் said...

//மாயாஜால் வார நாட்களில் போனதாலோ என்னவோ கூட்டமில்லாமல் இருந்தது.//

முகிலன் படம் பார்க்க வருகிறார்னு விஷயம் வெளியே தெரிந்து இருக்கும்//

மதுரைக்காரன்கிரதால அருவாளோட வருவேன்னு நினைச்சிருப்பாங்களோ

Unknown said...

//கார்த்திகைப் பாண்டியன் said...

என்ன நண்பா.. திருநகர் வரைக்கும் வந்திருக்கீங்க... கூப்பிட்டு இருந்திருக்கலாமே?//

மன்னிச்சுக்குங்க பாஸ். மதுரையில ரொம்ப நாள் தங்க முடியலை. அதோட வாகன வசதியும் லேது. அதுனால நட்புக்களைச் சந்திக்கலை.அடுத்த முறை கண்டிப்பா கூப்புடுறேன்.சந்திப்போம்.

Unknown said...

//ஈரோடு கதிர் said...

ரயில் எஞ்சினிக்கும் பக்கத்துல ரொம்ப யூத்தா ... அந்த நீலச்சட்டைதான் பாலாங்ளா?

செம யூத்தா இருக்காரே//

பாலா சார். அடுத்த தடவை கதிர் ப்ளாக்ல அவரை யூத்னு சொல்லிடுங்க. சரியாப் போயிரும்.

Prathap Kumar S. said...

தல தொப்பையை குறைங்க முதல்ல

ஒண்ணு கண்டுபுடிச்சுட்டேன்...

முதல் போட்டோவை எடுத்தது ஷங்கர்ஜி, இரண்டவாது போட்டோவை எடுத்தது பாலா சார்...கரக்டா..?:))

பிரபாகர் said...

கலக்கலா பகிர்ந்திருக்கீங்க! இதோ இடுகை புகைப்படங்களோடு...

பிரபாகர்...

Thamira said...

சுவாரசியமான பகிர்வுகள் முகிலன். பதிவர் சந்திப்புகளை சிம்பிளாக முடித்துக்கொண்டுவிட்டீர்கள் போலிருக்கிறது. :-))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

unga photo vaa athu? :)) mugaththa kaamichchutteengalla. aduththa maasam roch varum pothu, kandippaa kandupudichchiduven :)

neenga photo eduththa idam central stationkku pakkaththula irukkara railway office munnaadi eduththathaa?

//.. அப்புறம் படத்தில ரெண்டு பேரு வயித்ல பானையக் கட்டிக்கிட்டு நிக்கறாங்களே அவங்க யாரு..? //

well said priya.. :)))))))))))

சாமக்கோடங்கி said...

எனக்கும் அந்த விளம்பரம் ரொம்பப் பிடித்து இருந்தது.. நன்றி..

பனித்துளி சங்கர் said...

புகைவண்டிக்கு அருகில் புகைப்படங்கள் ஆஹா மிகவும் அருமை நண்பரே . பகிர்வுக்கு நன்றி

குடுகுடுப்பை said...

அந்தப்போராட்டம் மதச்சார்புடன் உடைய பாஜக நடத்துவது கேளிக்குரியது, அதனை மதச்சாற்பற்ற காங்கிரஸ் முன்னின்று நடத்து அனைத்து மத மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கி மதச்சார்பின்மையின்யின் மாண்பை நிரூபித்திருக்கலாம்.

அது சரி(18185106603874041862) said...

மொதப்படத்துல நீங்களும் பாலாவும் நிக்கிறதை பார்த்தா ஃபோட்டோ எடுக்கறா மாதிரி தெரியலியே? அந்த பழைய எஞ்சினை பேரீச்சம்பழத்துக்கு ஏலம் விட்றா மாதிரியே இருக்கே பாஸூ??

(ஆமா, வெலை படிஞ்சதா?)

Cable சங்கர் said...

ivvalavu thuuram vanthittu.. kuupidama poyiteengale... :(