Thursday, August 19, 2010

புரட்சியாளன் ஆவது எப்படி? - ஒரு சிறு கையேடு

உங்களுக்கு இரண்டு கையேடுகள்.

அ. புரட்சி செய்வது எப்படி - அதை இங்கே பாருங்கள்.


ஆ. புரட்சியாளன் ஆவது எப்படி

1. தினமும் காலையில் செய்தித்தாளைப் பாருங்கள். 

2. அதில் சூடான செய்தி என்ன என்று பார்த்துக் கொள்ளுங்கள் 

3. அந்தச் செய்தியின் நாயகன் என்ன சாதி என்று போட்டிருக்கிறதா பாருங்கள் 

4. போடவில்லையென்றால் யாரையாவது வினவுங்கள் 

5. கணினியைத் திறந்து, இணையத்தை தொடர்பு கொண்டு, ஓசி ப்ளாக்கருக்குள் செல்லுங்கள் 

6. சூடான செய்தியை தலைப்பாகக் கொடுத்து, உங்களுக்குத் தோன்றியதை எழுதுங்கள். 

7. நடு நடுவே மானே தேனே பொன்மானே சேர்க்க மறக்க வேண்டாம். 

8. அந்த செய்தி நாயகனின் சாதியைப் பற்றியும் அந்த சாதித் தனத்தைப் பற்றியும் கடும் கண்டனம் வைக்க மறக்க வேண்டாம். 

9. மற்ற பதிவர்கள் இந்த விசயத்தைப் பற்றி ஏன் எழுதவில்லை என்று அவர்கள் பெயரைச் சேர்த்து கண்டியுங்கள் 

10. மறக்காமல் தமிழ்மணம்/இண்ட்லியில் உங்கள் இடுகையைச் சேர்த்து ஓட்டுப் போடுங்கள்.


11. மெய்ம்மறந்து எழுதிவிட்டு அடுத்த ஆளைக் கைகாட்டி விட்டுவிட வேண்டும்


12. நன்றாக காறி துப்பப் பழகிக்கொள்ள வேண்டும். அங்கிங்கெனாதபடி வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் துப்ப வேண்டும்.

17 comments:

LK said...

romba simplea irukku

பட்டாபட்டி.. said...

ரைட்டு......

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஏம்ப்பா இந்தப் புரட்சி எப்ப முடிவுக்கு வரும்?!

முகிலன் said...

@LK

அவ்வளவுதான் எல்.கே

@பட்டாபட்டி

அய்யய்யோ புரட்சி லெஃப்டுங்க

@ஷங்கர்

அவங்களை நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்துறேன். ;)

Bala said...

சே குவேரா போன்றவர்களின் வரலாற்று புத்தகங்களை படித்ததினால் சந்திரமுகியில் ஜோதிகாவுக்கு ஏற்பட்டது போன்ற நிலைதான் இவர்களுக்கும். நாமும் புரட்சியாளன் ஆகிவிட முடியாதா என்ற அதீத கற்பனையின் விளைவு.
balapakkangal.blogspot.com

Muthukumar said...

ungalukku ethavathu pattam kudukanumey....puratchi blogger ok va? :-)

Muthukumar said...

ethayavathu panni pirabalam aagidalamnu pakaranga mugilan...

வானம்பாடிகள் said...

நேற்று பஸ்ஸில் சொன்ன ஆலோசனையை சேர்த்துட்டா போச்சு என்று ஒத்துக் கொண்டு சேர்க்காமல் விட்டது ஏன்? 1 ராசி எண் என்பதாலா? பேச்சு வார்த்தையில் ஒத்துக் கொண்டு பிறகு வாக்குறுதியைக் கைவிட்டதிலிருந்தே நீங்கள் நடுத்தரோ மேல்தட்டோ முதலாளித்துவயிஸத்தை ஆதரிப்பவர் என்பது வெள்ளிடை மலை ( ஐ நானும் இந்த வார்த்தையை எங்கடா யூஸ் பண்றதுன்னு இருந்தேன்.) இதை எதிர்த்து என் புரட்சி இன்று நடக்கலாம்.
கபர்தார்:)) யா யா. எந்திரன் இசை வெளியீட்டுல ரஜனி சொன்னாராமே அதே கபர்தார்தான்.

NO said...

அன்பான நண்பர் திரு முகிலன்,

புரட்சி பேசும் பித்தலாட்டக்கார பிணம் தின்னிகளின் நடுவில் உங்களைப்போன்ற சிலர், எல்லாம் இன்னும் கெட்டுப்போய் விடவில்லை என்பதற்கு ஒரு உதாரணம்! நல்ல பதிவு. வாழ்த்துகள்!

புரட்சி பற்றி ஏதோ என்னால் முடிந்தது .....

புரட்சியாளன் ஆவது எப்படி (பதிவுலகில் மட்டும்தான் புரட்சியாளன் ஆக முடியும் ஏனென்றால் வெளியே சொன்னால் ஒன்று அவர் வேலை வெட்டி இல்லாதவர் என்று எல்லோருக்கும் புரிந்து விடும், அதையும் தாண்டி உளறிக்கொண்டிருந்தால் லூசு என்று எல்லோரும் ஒதுங்கி போவார்கள், அதையும் தாண்டி கத்திக்கொன்டிருந்தால் உள்ளே தள்ளப்படுவார்கள்) -

1 சேகுவேர, மாவோ, போச்க்குவூ முச்கூவூ போன்ற வாயில் வராத பெயர்களை வைத்துக்கொண்டு அந்த கொலைகாரர்களின் படத்தையும் இட்டு வினவு தளத்திற்கு அல்லது வேறு புரட்சி தளங்களுக்கு வந்து சிங்கி அடிக்கவேண்டும்!

2 ஸ்டாலினிஸ்ட் அல்லது மாவோவிஸ்ட் தவிர எல்லோரையும் திட்டி கண்டபடி பதிவு போட வேண்டும்!

3 ஜெயா, கருணாநிதி, ரஜினி, கமல் என்று எல்லோரையும் திட்டி அக்மார்க் புரட்சியாளர்கள் போடும் பதிவில் போய் ஆமாம் சாமி போடவேண்டும்!

4 முதிலில் இந்து மதத்தை (அதாவது பார்பன மதத்தை) கண்டபடி திட்டவேண்டும். ஒரு ஐந்து இந்து சாடல் பதிவுகளுக்கு பின்னர், இஸ்லாமிய மதத்தை பதம் பார்க்கவேண்டும் (அதாவது நேராக திட்டாமல் அராபியாவை அல்லது குரானை விமர்சிப்பது), கடைசியாக கிருத்துவமதத்தை ஒரு குட்டு வைக்க வேண்டும்!
ஆனால் பாருங்கள் இந்த எழவெடுத்த கம்யூனிச மதத்தை பற்றி குறிப்பாக ஆண்டவன் லெனின், மார்க்சு, புனித ஸ்டாலின், மாவோ போன்ற மிக புனிதமான நேர்மையான கடவுள்களை பற்றி.....மூச்சு விடக்கூடாது!

5 எவனாவது இவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அன்னாரின் ஜாதியை கண்டுபிடித்து, பார்பன பட்டம் தரவேண்டும், கண்டபடி திட்டி பதிவு போடவேண்டும்!

6 மருத்துவர்கள் யாராவது தெரிந்தால், அவருக்கும் வேலை வெட்டி இல்லாமல் இருந்தால் அவர்களை துணைக்கு அழைத்து, இதோ பார் இவரே சொல்லுகிறார், அதனால்தான் புரட்சி வேண்டும் என்று சொல்லவேண்டும்!

7 இந்தியாவை முற்றிலுமாக வெறுக்கவேண்டும்! நம் நாட்டை துண்டாட நினைத்த கயவர்களின் படங்களை போட்டு ஆராதனை செய்யவேண்டும்!

இன்னும் பல வேலை வெட்டி இல்லாதவர்களின் அடையாளங்கள்தான் இந்த புரட்சி பம்மாத்துகள்!

என்ன, நமக்கு வேலை இருக்கிறது.......... அதான் இத்தோடு முடித்துக்கொள்கிறேன்!

நன்றி

சேட்டைக்காரன் said...

இதை, இதைத் தான் நான் ரொம்ப நாளாத் தேடிட்டிருந்தேன். ரொம்ப நன்றி! ஓங்குக புரட்சி! :-)

ப்ரியமுடன் வசந்த் said...

தினேஷ் நான் கொஞ்சூண்டு தெரிஞ்சிட்ட புரட்சி சொல்லவா?

1.நாத்தம் புடிச்ச சாக்ஸ நாலு வாரம் துவைக்காம ஆபீஸ் போட்டுட்டு போறது சாக்ஸ் புரட்சி... # சில சமயம் மரணப்புரட்சி

2.மீந்து போன சாப்பாட்டை பிச்சைக்காரனுக்கு கூட போடாம நாலு நாளைக்கு சுடவச்சி சாப்பிடறது பஞ்ச புரட்சி

3.ஆங்கிலமே தெரியாம ஆங்கிலப்படம் பார்க்கிறது ஆங்கிலப்புரட்சி

4.தமிழ் பாடத்துல பிட் அடிச்சு பாஸாகி தமிழ் வாத்தியரானால் தமிழ் புரட்சி

5.முக்காம கக்கூஸ் வந்தா கக்கூஸ் புரட்சி

6.அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவிலிருந்து உயிரோட திரும்பி வந்தால் மரணப்புரட்சி

Riyas said...

GOOD IDEA... MUHILAN SIR

சுசி said...

:))

நசரேயன் said...

நன்றி முகிலன்

எப்பூடி.. said...

தமிழக போலி கணணி கம்யூனிச்டுகளுக்கும் கணணி புரட்சிக்காரர்களுக்கும்(ஹி ஹி ஹி... ) காலையில 'கக்கா' போகலைன்னாலும் ரஜினியும் எந்திரனும்தான் காரணம்.

எம்.எம்.அப்துல்லா said...

@ அண்ணன் NO -

:))))))))))))

எம்.எம்.அப்துல்லா said...

@ அண்ணன் NO -

நீங்க சொன்ன எல்லாத்துக்கு yes. except சேகுவெராவை கொலைகாரன் பட்டியலில் சேர்த்ததைத் தவிர.