Monday, September 20, 2010

புள்ளிவிபரம்

தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை - 6800.
ஒரு குவாட்டரின் விலை ரூ.50 என்று வைத்துக் கொள்வோம். ஒரு நாளைக்கு ஒரு கடையில் 1000 குவாட்டர் விற்றால் மொத்த வருமானம் ரூ.50000/- 6800 கடைகளிலும் மொத்த வருமானம் -  ரூ.34 கோடி. பண்டிகை நாட்களில் இது மூன்று அல்லது நான்கு மடங்காகும்.

டாஸ்மாக்கில் குடிப்பவர்கள் யார்? ஒரு நாள் தினக்கூலியாக ரூ.100/- வாங்கி அதில் அம்பது ரூபாய்க்குக் குடுத்தழிப்பவர்கள் தான் இதில் பெரும்பான்மையினர். இதில் எத்தனை பேர் மனைவியின் தாலியை அடமானம் வைத்துவிட்டு குடித்தார்களோ, மகளின் சங்கிலியை விற்றுவிட்டு குடித்தார்களோ. அது அவர்களுக்கே வெளிச்சம். இப்படி ஏழைகளின் பாக்கெட்டில் கை விட்டு திருடும் “புனித” செயலை அரசாங்கமே செய்கிறது.

தமிழகத்தில் சராசரியாக மூன்று வருடங்களுக்கு ஒருமுறை சாலைகள் புதிதாக இடப்படுகின்றன. ஒரு கிராமத்தில் 2 கி.மீ ரோடு போடும் காண்ட்ராக்ட் என்று வைத்துக் கொள்வோம். ரோடு போட இரண்டு லட்சம் ரூபாய் பட்ஜெட் என்றால், அதில் பல தலைகளுக்கு கமிஷனாக ஒரு லட்சம் ரூபாய் ஏப்பம் விடப்படுகிறது. அதன் பின் லாபம் போக காண்ட்ராக்டர் செலவிடும் தொகை வெறும் 75000 தான் இருக்கும். தமிழ்நாடு முழுக்க 1,99,040 கி.மீ ரோடு இருக்கிறது. ஆக மொத்தம் கமிஷனாக ஏப்பம் விடப்படும் தொகை - ரூ.995 கோடி.

ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவதில் ஊழல்
தொலைபேசி ஸ்பெக்ட்ரம் ஏலம் விட்டதில் ஊழல்
சர்க்கரையில் ஊழல்
ரயில் பெட்டியில் ஊழல்
தொட்டில் குழந்தையில் ஊழல்
சுடுகாட்டுக் கூரையில் ஊழல்
இப்படி ஊழல் இல்லாத இடமே இந்தியாவில் இல்லை.
இப்படி ஊழலில் சராசரியாக வருடத்துக்கு 2000 கோடி ரூபாய் ஏப்பம் விடப்படுகிறது.


டிஸ்கி: நான் எந்திரன் பார்ப்பேன்.

18 comments:

எல் கே said...

நீங்க எந்திரன் பாக்காம இருந்தா நாடு முன்னேறிடும்

Anonymous said...

நல்லா ஆராய்ச்சி பண்ணிருக்கீங்க..
பி.எச்.டி பட்டமே குடுக்கலாம்.

Unknown said...

நான் எந்திரன்
dhan பார்ப்பேன

Prathap Kumar S. said...

நீங்க புள்ளிவிவரம் கொடுத்தருக்கறதைப்பார்த்த விஜயகாந்த படம் பார்ககபோறது மாதிரில்லா
இருக்கு... :) வர்ட்டா ஆங்...

அன்பரசன் said...

என்ன ஆச்சுங்க?
புள்ளிவிபரம் எல்லாம் பயங்கரமா இருக்கு.

தர்ஷன் said...

அருமை
நீங்கள் மட்டுமா எதிர்க்கும் அனைவரும் கூட பார்க்கத்தான் போகின்றார்கள்.

VISA said...

டிஸ்கி தான் இடிக்கிது

பெசொவி said...

//ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவதில் ஊழல்
தொலைபேசி ஸ்பெக்ட்ரம் ஏலம் விட்டதில் ஊழல்
சர்க்கரையில் ஊழல்
ரயில் பெட்டியில் ஊழல்
தொட்டில் குழந்தையில் ஊழல்
சுடுகாட்டுக் கூரையில் ஊழல்
இப்படி ஊழல் இல்லாத இடமே இந்தியாவில் இல்லை.
இப்படி ஊழலில் சராசரியாக வருடத்துக்கு 2000 கோடி ரூபாய் ஏப்பம் விடப்படுகிறது.
//

"இந்தியன்" கூடத்தான் எல்லாரும் பாத்தாங்க, ஆனாலும் இந்த வரிகள் இன்னும் உண்மையாத்தான இருக்கு? அதுனால நானும் "எந்திரன்" பாப்பேன்!

க.பாலாசி said...

அதுக்கும் இதுக்கும் சரியாப்போச்சுங்கிறீங்களா?

பிரபாகர் said...

நடக்கட்டும்...நடக்கட்டும்... நாமும் பார்ப்போமுல்ல!

பிரபாகர்...

Ahamed irshad said...

ரமணா பார்ட் - 2 வா..

Unknown said...

/நீங்க புள்ளிவிவரம்
கொடுத்தருக்கறதைப்பார்த்த
விஜயகாந்த படம்
பார்ககபோறது மாதிரில்லா
இருக்கு ... :) வர்ட்டா ஆங்.../

Appo 'virudhagiri' ah?
Avvvvv...

நசரேயன் said...

நானும் எந்திரன் பார்ப்பேன்

குடுகுடுப்பை said...

நானும் பார்ப்பேன், தந்திரனுக்கு எதிராக பதிவும் எழுதுவேன்.

அருவிப்பதிவு எங்கே?

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//இப்படி ஊழலில் சராசரியாக வருடத்துக்கு 2000 கோடி ரூபாய் ஏப்பம் விடப்படுகிறது.//

அவ்ளோ தானா?

பழமைபேசி said...

//இப்படி ஊழலில் சராசரியாக வருடத்துக்கு 2000 கோடி ரூபாய் ஏப்பம் விடப்படுகிறது.//

இதுல எதோ ஊழல் நடந்திருக்கு....

ஆண்டுக்கு 2000 கோடி மட்டுந்தானா??

Unknown said...

@L.K - ஆமாம். அதுனால தான் நான் பாக்கப்போறேன். :))

@இந்திரா - நன்றிங்க.

@க்ரிஷ்_டெக் - சபாஷ்..

@நாஞ்சில் பிரதாப் - :))

@அன்பரசன் - எதிர்க்கிறவங்களும் புள்ளி விபரம் குடுக்குறாங்க. நானும்.

@தர்ஷன் - ஆமாங்க. அவங்கதான் முதல்ல பாத்துட்டு படம் குப்பைன்னு விமர்சனம் எழுதுவாங்க

@விசா - கொஞ்சம் தள்ளி உக்காந்து படிங்க

@பெயர் சொல்ல விருப்பமில்லை - நன்றி சார்.. :))

@க.பாலாசி - எந்திரனைப் புறக்கணிக்கிறதால, இதுல எதாவது ஒன்னு மாறிடும்னா, நானும் புறக்கணிக்கிறேன்..

@பிரபாகர் - பாருங்க பாருங்க

@அஹமது இர்ஷாத் - ரமணா? திருவண்ணாமலைல ஆசிரமம் வச்சிருக்காரே அவரா?

@க்ரிஷ்_டெக் - ஹாஹாஹா

@நசரேயன் - முடிஞ்சா நாம ரெண்டு பேரும் சேந்து பாப்போம் தல.

@குடுகுடுப்பை - எழுதுங்க எழுதுங்க (வந்திருச்சே)

@எல் போர்ட் - ஆமாங்க. வெளிய வர்றது அவ்வளவுதான்.

@பழமைபேசி - பொதுக்குழுக் கூட்டத்துல எடுத்த முடிவை வெளில சொல்றதில்லைங்க்ண்ணா..

பின்னோக்கி said...

எலக்‌ஷன் நேரத்துல இந்த புள்ளிவிவரம் எல்லாம் குடுத்தா, ரெண்டு கட்சி இதை அபேஸ் பண்ணிடுவாங்க :)