“ஆனா
உன்னை என்னோட காதலனாவோ கணவனாவோ ஏத்துக்க எனக்கு எதுவோ தடுக்குது. சாரிப்பா”
ட்வின்
டவர் மேல் ஏரோப்ளேனை வைத்து இடித்துவிட்டு சாதாரணமாக சாரி என்கிறாள். என்ன சொல்வதென்றே
தெரியவில்லை. நான் தான் தப்பாக நினைத்துவிட்டேனோ? ஆனால் செந்தில் கூட சொன்னானே? அப்படித்தான்
இருக்கும் என்று? திடீரெண்டு நாக்கு வரண்டு போனது. டீஹட்ரேட் ஆனது போல நாக்கு மேலண்ணத்தோடு
ஒட்டிக் கொண்டது.
“இதுதான்
உன் முடிவா?”
சத்தியமாக
நான் பேசியது எனக்கே கேட்கவில்லை. ஆனாலும் மாலா பதில் சொன்னாள்.
“தேவா.
இங்க பாரு. திஸ் இஸ் நாட் என் எண்ட் ஆஃப் அவர் ஃப்ரெண்ட்ஷிப். இந்த ஒரு சம்பவம் நடக்காததாவே
இருக்கட்டும். நாம பழையபடியே நல்ல ஃப்ரண்ட்ஸா இருப்போம்”
“மாலா
நீ ஈஸியா சொல்லிட்ட. ஆனா நான் நிறைய எதிர்பார்த்திட்டேன். எனக்கு இது ஒரு பெரிய ஏமாற்றம்
தான். இதைத் தாங்கிக்கவும் கடந்து போகவும் எனக்குக் கொஞ்சம் அவகாசம் வேணும். அதனால
கொஞ்ச நாளைக்கு நீ பழைய தேவாவை எதிர்பார்க்காதே”
“தேவா.
என்ன சொல்ற?”
“ஆமாம்
மாலா. ஃபார் சம் டைம் லெட்ஸ் பீ ஜஸ்ட் கோவொர்க்கர்ஸ். அஃபிஷியலா மட்டும் பேசிக்குவோம்.
எனக்கு இதை சாதாரணமா எடுத்துக்கற பக்குவம் வர்ற வரைக்கும் உனக்கு நான் ஃபோன் பண்ண மாட்டேன்.
நீயும் பேசாத. ஓக்கே?” அவள் பதிலுக்குக் காத்திராமல் வைத்துவிட்டேன். லேப்டாப் ஸ்க்ரீன்
மங்கலாகத் தெரிந்தது. கண்களில் கோர்த்திருக்கும் நீர்தான் காரணம். யாரும் பார்க்காத
வண்ணம் முழுக்கைச் சட்டையின் கஃபால் துடைத்துக் கொண்டேன். ஓங்கிக் கத்தி அழவேண்டும்
போல இருந்தது. ஆஃபிஸ் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. ரூமுக்குப் போக இன்னமும் நேரம்
இருக்கிறது. ஒரு தம்மடிக்கலாம் போல இருந்தது. எல்லா இடத்தையும் காட்டியவள் தம்மடிக்கும்
இடத்தைக் காட்டவே இல்லையே? ரீனாவிடம் போய் கேட்டு விடலாமா என்று யோசித்தேன். ரீனா அறிமுகப்
படுத்திய ஜேக்கின் மேஜை மீது சிகரெட் பாக்கெட் ஒன்றைப் பார்த்த நினைவு வந்தது. ஜேக்கின்
இடத்துக்கு சென்றேன்.
“ஹாய்
ஜேக். மே ஐ நோ வேர் ஐ கேன் ஸ்மோக்?”
“வாவ்.
யு ஆர் அ ஸ்மோக்கர்? ஃபைனலி ஐ காட் கம்பெனி இன் திஸ் ப்ளேஸ். கம் ஐ வில் ஷோ யூ” என்று
ஆரவாரத்துடன் எழுந்து அழைத்துச் சென்றான். ஒன்றுக்கு இரண்டாய் சிகரெட்டுகளைக் கரைத்தேன்.
ஜேக் இண்டியா, இண்டியன் கேர்ள்ஸ், ப்ரெட்டி, ஐஷ்வர்யா ரோய் என்றெல்லாம் என்னன்னவோ பேசினான்.
ம்ம், யெஸ் என்று எதோ பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் மனசெல்லாம் மாலா தான் நிறைந்திருந்தாள்.
**************************
அடுத்து
வந்த நாட்களில் மாலாவிடம் அஃபிஷியலாகக் கூட பேசுவதைக் குறைத்துக் கொண்டேன். எதுவாக
இருந்தாலும் ஈமெயிலிலேயே முடித்துக் கொண்டேன். செந்திலிடம் பேசி அழுதேன். செந்தில்
அவனால் முடிந்த அளவுக்குத் தேற்றினான்.
இரண்டு
வார ஓட்டல் தங்கலுக்குப் பிறகு ரீனாவின் பக்கத்து வீட்டு பேஸ்மெண்டில் ஒரு ஸ்டூடியோ
அப்பார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டேன். மாதம் $600 டாலர் வாடகை. அந்த வீடு
ரீனாவின் அத்தையினுடையது. அத்தை ரிட்டையராகி ஃப்ளோரிடாவில் செட்டில் ஆகிவிட்டாள். அவள்
வீட்டை பல அப்பார்ட்மெண்டுகளாகப் பிரித்து வாடகைக்கு விட்டு வாடகையை அத்தையின் அக்கவுண்டில்
சேர்க்கும் பொறுப்பை ரீனா ஏற்றுக் கொண்டிருந்தாள். அதனால் எனக்கு $600க்கு சல்லிசாகக்
கிடைத்தது. ஸ்டுடியோ அப்பார்மெண்ட் என்றால் படுக்கை அறை, சமையல் அறை, ஹால் என எல்லாம்
ஒரே இடத்தில் இருக்கும். ஏற்கனவே ஒரு ஃபுல்சைஸ் பெட் போடப்பட்டிருந்தது. மேலே விரிக்க
ஷீட்ஸும், போர்த்திக்கொள்ள கம்ஃபர்ட்டரும் புதிதாக வாங்கிக்கொள்ளச் சொல்லி ரீனா அட்வைஸினாள்.
ஒரு 32 இன்ச் ஃப்ளாட் ஸ்க்ரீன் டிவியும் இருந்தது. கிச்சனில் கிட்டத்தட்ட தேவையான பாத்திரங்கள்
எல்லாம் இருந்தன. சாப்பிடும்போது டைனிங் டேபிளாகவும், மற்ற நேரம் லேப்டாப் டேபிளாகவும்
இருக்கும் வண்ணம் ஒரு டேபிள் சேரும் இருந்தது. பழைய காலத்து வீடு என்றாலும் பாத்ரூம்
ஃபிட்டிங்க்ஸ் ஹோட்டலில் பார்த்தது போல புதிதாகவே இருந்தது. என் அபார்ட்மெண்ட் பேஸ்மெண்டில்
இருந்த படியால் எனக்கு மட்டும் தனி எண்ட்ரன்ஸ் அமைந்திருந்தது. அதனால் வீட்டின் மற்ற
பகுதிகளில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கூட அறியாமல் இருந்தேன். தினமும் ரீனாவுடனே
கிளம்பி அலுவலகம் போவது, அவளுடனே சேர்ந்து திரும்புவது என்றாகிப் போனது.
நான்கு
தெரு தள்ளி ஒரு பட்டேல் பிரதர்ஸின் கடை இருந்தது நம்மூர் காய்கறிகளில் இருந்து மசாலா
வரை எதுவேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள ஏதுவாய்ப் போனது. ஒரு வருடமாக சொந்த சமையல் செய்த
அனுபவம் வயிற்றுக்குப் பாதிப்பில்லாமல் காலம் தள்ள உதவியது. பொழுது போக்கிற்கு மாதம்
$50 கட்டினால் இண்டர்நெட்டும் கேபிள் டிவியும் தரும் டைம் வார்னர் கனெக்ஷன் ஒன்றைப்
பெற்றுக் கொண்டேன். பெங்களுரில் கூட வாங்கி வைத்துக்கொள்ளாத ஸ்மார்ட் ஃபோன் ஒன்றும்
வாங்கிக் கொண்டேன். இங்கேதான் காண்ட்ராக்ட்டில் கையெழுத்துப் போட்டால் சல்லிசு விலையில்
நல்ல நல்ல ஃபோன்கள் கிடைக்கிறதே.
சோசியல்
செக்யூரிட்டி நம்பருக்கு விண்ணப்பிப்பதில் ஆரம்பித்து, பேங்க் அக்கவுண்ட் துவங்குவது,
டிரைவிங் லைசன்ஸ் எடுக்கும் வரைக்கும் ஜேக் உதவினான். அலுவலகத்தில் சில இந்தியர்கள்
காண்ட்ராக்டர்களாக வேலை பார்த்து வந்த போதிலும் தமிழ் ஆள் யாரும் இல்லாததால் அவர்களை
விட ஜேக் நெருங்கியவனாகிப் போனான். அவனுடன் சேர்ந்து வார இறுதிகளில் ஸ்டிரிப் க்ளப்கள்,
பார்கள் என்று போகத் துவங்கினேன். வருகிற சம்பளத்தில் செலவு போக நல்ல தொகையாக சேமிக்கவும்
முடிந்தது. மாதம் ஒரு முறை ஒரு பெரிய தொகையை அப்பாவுக்கு அனுப்பி வைக்கவும் முடிந்தது.
இங்கேயே நிரந்தரமாக வேலை கிடைத்தால் தங்கிவிடலாம் என்ற முடிவுக்குக் கூட வந்துவிட்டேன்.
மாலா கொடுத்த ஏமாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக மனதை விட்டு அகல ஆரம்பித்தது. ஆனாலும் பழைய
மாதிரி பேச ஆரம்பிக்கவில்லை.எப்போதாவது பேசும் செந்திலும் மாலாவைப் பற்றிப் பேசுவதை
நிறுத்தியிருந்தான்.
மூன்று
மாதங்கள் ஓடிப் போனது. இடையில் ஒரு முறை நயகராவுக்கும் ஒரு முறை அட்லாண்டிக் சிட்டிக்கும்
போய் வந்திருந்தேன். அலுவலகத்தில் இயர்லி மீட்டிங் ஒன்று ஏற்பாடாகிக் கொண்டிருந்தது.
நகரத்தின் மத்தியில் பெரிய ஹால் ஒன்றை புக்கியிருந்தனர். இன்னும் இரண்டு வாரங்களில்
நடக்கப் போகும் அந்த மீட்டிங்குக்கு சிகாகோவிலிருந்து சி.இ.ஓ முதலான பல பெரிய தலைகள்
வரப்போவதால் ரீனா உட்காரக்கூட நேரமில்லாமல் இயங்கிக் கொண்டிருந்தாள். ஆஃப்ஷோர் ரிலேஷன்ஷிப்
முழுப் பொறுப்பையும் என் தலையில் கட்டிவிட்டு இதற்கெனவே சுற்றிக் கொண்டிருந்தாள்.
மாலா
இரண்டொரு நாள் விடுப்பில் போயிருந்தாள். நிச்சயதார்த்தமாக இருக்குமோ? என்ற எண்ணம் என்
மனதில் எழாமல் இல்லை. ஆனாலும் இன்னமும் அவளிடம் சகஜமாகப் பேசும் அளவுக்கு என் மனம்
பக்குவப்படவில்லை. அதை நினைக்கும்போது எனக்கே சற்று அவமானமாகத்தான் இருந்தது. ஒரு நிராகரிப்பை
ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு கீழ்த்தரமாகப் போய்விட்டேனோ என்ற எண்ணம் எழும்போதெல்லாம்
புகையையோ சரக்கையோ விட்டு அமுக்கிக்கொண்டிருந்தேன். செந்திலும் சொல்லி சொல்லி களைத்துப்
போய் விட்டான். அவனுடன் பேசுவதும் குறைந்து கொண்டே வந்தது.
**************************
அன்று
ஞாயிற்றுக் கிழமை. முந்தின நாள் ஜேக்குடன் இந்த அறையிலேயே வைத்து குடித்த நிகழ்வின்
எச்சமாக காலி ப்ளாக் லேபிள் பாட்டிலும் சிக்கன் விங்க்ஸின் எலும்புத்துண்டுகளும் தரையில்
சிதறிக் கிடந்தன. எடுத்து குப்பையில் போட்டுவிட்டு அறையை சிறிது சுத்தம் செய்தேன்.
சமைக்க சோம்பேறித்தனமாக இருந்தது. முந்தைய நாள் ஆர்டர் செய்த பிஸ்ஸாவை மைக்ரோவேவில்
சூடு செய்து மிச்சம் இருந்த ஒரு டின் ஹெய்னெக்கனோடு சேர்த்து சாப்பிட்டேன். வயிறு நிரம்பியதும்
தூக்கம் வந்தது. சிறிதுநேரம் டிவி பார்த்துக் கொண்டே தூங்கிப் போனேன்.
கதவை
யாரோ தட்டும் சத்தம். முதலில் டிவியிலோ என்று நினைத்தேன். அறைக்கதவு தான் என்று உறுதியானதும்
எழுந்தேன். கண்ணைக் கசக்கிக் கொண்டு மணி பார்த்தேன். மூன்று மணி. மாலை மூன்று மணிக்கு
யார் வருகிறார்கள்? ரீனா அப்படி எல்லாம் டிஸ்டர்ப் செய்யும் பழக்கம் உடையவள் அல்லவே
என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறந்தேன்.
மாலா.
3 comments:
நிறைய புதிய வார்த்தைகள் கத்துக்கிறேன்.
:-)
good going:)
Eagerly waiting for அடுத்த அத்தியாயம்
Post a Comment