"she
is sex-deprived"
"what?"
"S-E-X
deprived"
"ஓ”
மண்டையை ஆட்டிவிட்டு சீட்டுக்கு வந்தேன். சத்தியமாய் மாலா என்ன சொன்னாள் என்று புரியவேயில்லை.
கூகுளாண்டவரே துணை. ஓப்பனாகியிருந்த க்ரோமில் ஒரு புது டேப் திறந்து, “sex
deprived" என்று தட்டினேன். ஃப்ரூட் ஃப்ளைஸ் எனப்படும் கண் வலி ஈக்கள்
sex-deprived ஆக இருக்கும்போது அதிகமாய்க் குடிக்கின்றனவாம். அது சரி. நான் தேடியது
இதை அல்லவே? கூகுளின் பிரச்சனை இதுதான். அதற்குத் தெரியாத விசயமே இல்லை. ஆனால் சரியான
கேள்வியைக் கேட்க வேண்டும். sex-deprived meaning என்று அடித்ததும் கொட்டிவிட்டது.
விரும்பியும்
கிடைக்காததை டிப்ரைவ்ட் என்று சொல்கிறார்கள். ஆக, செக்ஸ் டிப்ரைவ்ட் என்றால் கௌசல்யா
விரும்பும் செக்ஸ் அவருக்குக் கிடைப்பதில்லை என்று சொல்கிறாள். சுள்ளென்று கோபம் மண்டையில்
ஏறியது. என்னதான் முசுடு என்றாலும் கௌசல்யா ஒரு பெண். ஒரு பென்ணைப் பற்றி இன்னொரு பெண்ணே
இப்படி சொன்னால் எப்படி? அது மட்டுமில்லாமல் அவளுக்கு எப்படி இது தெரியும்? சரியாகத்
தெரியாமல் ஒருவரைப் பற்றி இப்படி முடிவெடுக்க இவள் என்ன சைக்காலஜியா படித்திருக்கிறாள்.
எப்படியாவது அவளிடம் கேட்டுவிட வேண்டும்.
ஆனால்
அன்று மாலையோ அடுத்தடுத்த நாட்களிலோ எனக்கு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. வேலைப் பளுவில்
அதை மறந்தும் போனேன்.
இன்னும்
சில மாதங்கள் ஓடிப் போயின. அன்றைக்கு கௌசல்யா மிகவும் சந்தோசமாக இருந்தார். யாரிடமும்
கோபிக்கவில்லை சிடுசிடுவென்று விழவில்லை. காரணம் மதியம் வைத்த டீம் மீட்டிங்கில் தெரிந்து
விட்டது. கௌசல்யா, ஆன்சைட் ப்ராஜெக்ட்டுக்குப் போகிறார். ப்ராஜக்ட் லீடாக இருந்த சுந்தர்
இனிமேல் ப்ராஜக்ட் மேனேஜர். எங்கள் மாட்யூல் லீட் சைதன்யா இப்போது ப்ராஜக்ட் லீட்.
ஆச்சர்யப்படத்தக்க வகையில் மாலாவுக்கு மாட்யூல் லீட். ஒரு வருட எக்ஸ்பீரியன்ஸ்க்குள்ளாக
மாட்யூல் லீட் பதவி கிடைத்த முதல் ஆள் என்று பேசிக் கொண்டார்கள். எங்கள் மாட்யூலில்
என்னையும் சேர்த்து எல்லாருமே ஃப்ரெஷர்களாக இருந்ததும் காரணமாக இருக்கலாம். எது எப்படியோ
எங்களுக்குக் கொண்டாட ஒரு காரணம் கிடைத்தது. செந்திலுக்கும், ஓமனாவுக்கும் மெயிலடித்தேன்.
வார இறுதியில் பார்ட்டி கொண்டாடிவிடுவது என்று முடிவெடுத்தோம்.
வார
இறுதியும் வந்தது. எனக்கு கொஞ்சம் வேலை இருந்ததால் மாலாவைப் போகச் சொல்லிவிட்டேன்.
டெஸ்டிங் வேலை முடிந்த பின் ஆட்டோ எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போக மணி ஒன்பதாகிவிட்டது.
மாலா, செந்தில், ஓமனா மூன்று பேரும் எனக்காக ரிசப்ஷனிலேயே காத்திருந்தார்கள்.
“என்னடா
இவ்வளவு லேட்டா வர்ற? இதுக்கு அப்புறம் எங்க போக?” செந்தில் கேட்க, அருகில் இடுப்பில்
கை வைத்தவாறு முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் மாலா.
“சாரி
டா. சாரி மாலா. அந்த க்ரெடிட் கார்ட் பேமெண்ட் சைட் கொஞ்சம் கழுத்தறுத்துருச்சி. நாளைக்குப்
போகலாமா?”
“ட்ரீட்டுக்குப்
போறோம்னு இன்னைக்கி சமைக்கலை. இப்ப எங்க சாப்புடுறது?”
“நம்ம
பஹன்ஜி தாபாக்குப் போகலாமா?”
“சரி
போய்த் தொலவோம். வேற வழி?” - மாலா.
“ஓக்கே.
நான் போய் ரிஃப்ரெஷ் பண்ணிட்டு வந்துர்றேன்”
முகம்
கழுவி உடைமாற்றிக் கீழே வந்தேன். எங்கள் அப்பார்ட்மெண்ட் இருக்கும் தெருவில் இருந்து
இரண்டு தெரு தள்ளி ஒரு பஞ்சாபி தாபா இருக்கிறது. சிறிய அறை ஒன்றில் மூன்று மேஜைகள்
ஒவ்வொரு மேஜையைச் சுற்றிலும் நான்கு நாற்காலிகள் என்று போடப்பட்டிருக்கும். சிறிய தாபாவாக
இருந்தாலும் ருசியில் அதை அடித்துக் கொள்ள முடியாது. வாரம் ஒரு முறையாவது அங்கே போய்விடுவோம்.
உள்ளே
நுழைந்ததும், பஹன்ஜி “ஆயியே ஆயியே” என்று வரவேற்றார். எங்கள் நால்வருக்குமே இந்தித்
தகராறென்று அவருக்குத் தெரியும். அதனால் ஆயியேக்குப் பிறகு சைகை பாஷை தான். நல்ல வேளையாக
மெனு கார்ட் ஆங்கிலத்தில் இருக்கும்.
சாப்பிட்டு
முடிந்ததும், செந்தில் பீடா வாங்கப் போனான். ஓமனா அவனோடு போக, மாலா என்னுடன் நடந்தாள்.
பைக்குள் இருந்து சிகரெட் பாக்கெட் எடுத்து, மாலாவைப் பார்த்தேன். “அடிச்சித் தொலை”
என்று கர்ச்சீப்பை மூக்குக்கு மேலாகப் பிடித்துக் கொண்டாள். பற்ற வைத்து ஆழ உள்ளிழுத்து,
எதிர்காற்றாக இருந்ததால் சைடாகத் திரும்பி புகையை விட்டு விட்டு, மாலாவைப் பார்த்து
கேட்டேன். “ஆமா, அன்னைக்கி கௌசல்யாவைப் பத்தி ஏன் அப்பிடி சொன்ன?”
“எப்பிடி
சொன்னேன்?”
“செக்ஸ்
டிப்ரைவ்ட்னு”
“உண்மை
தானே?”
“அதெப்படி
அப்பிடி ஆணித்தரமா ஒருத்தரைப் பத்தி சொன்ன? என்ன தெரியும் அவங்களைப் பத்தி உனக்கு?”
“அவங்க
ஹஸ்பண்ட் ரெண்டு வருசமா ஆன்சைட்ல இருக்காரு. இவங்க போக முயற்சி பண்ணாங்க. கம்பெனியில
குடுக்கலை. வேலையை விட்டுட்டுப் போகவும் மனசில்லை. இங்கயே இருந்தாங்க”
“அதை
வச்சி இப்பிடி ஒரு முடிவுக்கு வந்துருவியா??”
“ஆன்சைட்
ப்ராஜக்ட் கிடச்சன்னைக்கு பார்த்தியா எவ்வளவு சந்தோசமா இருந்தாங்கன்னு?”
“ஆமா.
அது ஆன்சைட் கிடைச்ச காரணமா கூட இருக்கலாமே?”
“டேய்
உனக்கு எங்களோட ஹார்மோன்ஸ் பத்தி என்ன தெரியும்? பீரியட்ஸ் இருக்கும்போது எனக்கெல்லாம்
எரிச்சலாவே இருக்கும். சின்னச் சின்ன விசயத்துக்கும் சள்ளு சள்ளுனு விழத்தோணும். அதுக்கு
என்ன காரணம்னு நினைக்கிற?”
என்னிடமும்
எரிந்து விழுந்த சில தருணங்கள் நினைவில் ஒடின.
“அவங்களுக்கும்
அதே மாதிரிதான். வேண்டியது கிடைக்காததால கோவம் வருது. குறிப்பா பசங்களைப் பார்த்தா.
அதிலையும் பொண்ணுங்களோட கடலை போடுற பசங்களைப் பார்த்தா”
“அப்போ
ஆம்பளைங்களுக்கும் வர்ற கோபமும் அப்படித்தானா?”
“ம்ஹ்ம்ம்.
அவங்க தேவை எப்பிடியும் நிறைவேறிடும். இந்தப் பாழாப் போன சமூகம் பெண்களை அப்பிடி இருக்க
விடுமா?? வேற பேர் வச்சிராது?”
“சமூகத்தைப்
பத்தி ஏன் கவலைப் படணும்? தேவை இருக்கிறதை தீர்த்துக்க வேண்டியதுதானே?”
“அப்பிடி
செய்ய முடியாம அவங்க மதிக்கிற சமூகம் அவங்களைத் தடுக்கிறதும் தான் அவங்க சிடுசிடுப்புக்குக்
காரணம்”
“எப்பிடி
இவ்வளவு தெளிவா சொல்ற?”
“ரெண்டு
காரணம். ஒண்ணு, நானும் ஒரு பொண்ணு. ரெண்டாவது, இண்டஸ்ட்ரியல் சைக்காலஜி படிச்சிருக்கேன்”
சட்டென்று
மனதில் அந்தக் கேள்வி எழுந்தது. அதைக் கேட்கும் முன் வார்த்தைகளைச் சரியாய்ப் போட வேண்டும்.
இல்லையென்றால் தப்பாகிவிடும். மனதுக்குள் வார்த்தைகளைக் கோர்த்து இரண்டு முறை சொல்லிப்
பார்த்துக் கொண்டேன்.
“என்ன
சட்டுனு அமைதியாயிட்ட? இதுதான்பா ஆம்பளைங்க. நல்ல வேளை அவங்க இன்னைக்கு ஃப்ளைட் ஏறிடுவாங்க.
இல்லைன்னா திங்கட்கிழமை நீ அவங்களைப் பார்க்கிற பார்வை வேற மாதிரியிருந்திருக்கும்”
சொல்லிவிட்டு கலகலவென சிரித்தாள்.
“ஏய்
என்ன..”
“சரி
சரி கோவப்படாத” அப்பார்ட்மெண்டுக்குள் நுழைந்திருந்தோம். ரிசப்ஷனில் கிடந்த சோஃபாவின்
மீது அமர்ந்தாள். எதிரில் கிடந்த சோஃபாவில் உட்கார்ந்தேன். செந்திலையும் ஓமனாவையும்
இன்னும் காணோம்.
“ம்ம்..
இது சம்மந்தமா ஒரு கேள்வி. கோச்சுக்கமாட்டேன்னு நினைக்கிறேன்”
“பீடிகை
போடறதைப் பார்த்தா விவகாரமான கேள்வியா இருக்கும் போலருக்கே?”
“அப்பிடியெல்லாம்
இல்லை. இப்ப நீ செக்ஸ் டிப்ரைவ்ட்னு சொன்ன இல்லையா?? நானும் நீயும் கூடத்தான் செக்ஸ்
டிப்ரைவ்ட். ஆனா நமக்குக் கோவம் வரமாட்டேங்குதே”
“நமக்கு
இன்னமும் கல்யாணம் ஆகலை லூசே.ஒரு வேளை நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆன பிறகு கௌசல்யா
மாதிரி பிரிஞ்சி இருந்தோம்னா நானும் அவங்களை மாதிரியே கோவப்படுவேனோ என்னவோ?”
செந்திலும்
ஓமனாவும் வந்திருக்க, அவர்களை வரவேற்பது போல எழுந்து நின்றாள் மாலா.
அவள்
சொன்ன வாக்கியத்தின் அர்த்தம் என்ன என்று விளங்காமல் முழித்துக் கொண்டிருந்தேன்.
1 comment:
//sex-deprived meaning என்று அடித்ததும் கொட்டிவிட்டது.//
நானும் கூகிலிட்டுதான் தெரிஞ்சிகிட்டேன். இன்று உங்களுக்கு விட்ட +ல் கூட அதை டைப்பி டெலிட்டினேன்,
:-))))
Post a Comment