Thursday, June 21, 2012

Thick as Thieves (A.K.A) The Code - என் பார்வை


எனக்கு ஸ்போர்ட்ஸ் படங்கள் பிடிக்கும் என்பதை இங்கே சொல்லியிருந்தேன். அதைப் போலவே எனக்குப் பிடித்த இன்னுமொரு genre, Heist படங்கள். தமிழில் இந்த இரண்டு genreலுமே படங்கள் இல்லை. மங்காத்தாவைத் தவிர்த்தால் இதுவரை தமிழில் வந்துள்ள ஹீய்ஸ்ட் படங்கள் எல்லாவற்றிலும் ஹீரோவை ராபின் ஹுட் போல நல்லது செய்ய வந்த கெட்டவன் போலத்தான் காட்டுவார்கள். இந்த வரிசையில் கடைசி வரையில் ஹீரோவை திருடனாகவே காட்டும் மங்காத்தா ஒரு மாற்றுப் படம் தான். 

வழக்கமாக இந்த ஹீய்ஸ்ட் படங்களில் ஹீரோ ஒரு குழுவோடு சேர்ந்து ஒரு பொருளைத் திருட திட்டம் போடுவார். பார்வையாளர்கள் கதை ஒரு நேர்க்கோட்டில் போவதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். இடையில் அங்கங்கே ட்விஸ்ட் வரும். ஹீய்ஸ்ட் எதிர்பார்த்த மாதிரி போகலையேன்னு நினைப்போம். கடைசியில அந்த ட்விஸ்ட் எல்லாம் ஏற்கனவே ப்ளான் செஞ்சதுதான்னு காட்டுவாங்க. மங்காத்தாவுல கடைசியில அர்ஜூனும் அஜித்தும் கூட்டணின்னு காட்டின மாதிரி. அந்த சுவாரசியத்துக்காகவே இந்த ஸ்டைல் படங்கள் பார்க்க எனக்குப் பிடிக்கும். அதோட திருட்டுக்கு அவங்க போடுற எக்ஸ்டென்சிவ் திட்டம். அதை எக்ஸிக்யுட் செய்யும்போது வர்ற கஷ்டங்கள் எல்லாம் சுவாரசியமா இருக்கும். தமிழ்ல குரு, என் சுவாசக் காற்றே, தில்லாலங்கடி போன்ற திரைப்படங்களில் திருடும் காட்சிகள் இதே போல சுவாரசியமா இருந்தது ஆனா இதெல்லாம் பெரும்பாலும் இங்கிலீஷ் படத்துல சுட்ட காட்சிகள் தான். இது மாதிரி படங்கள் தமிழ்ல நிறைய வரணும்.



The Code அல்லது Thick as Thieves 2009ல வந்த படம். இதுவும் ஒரு Heist படம் தான். என்னோட ஃபேவரைட் ஹீரோக்கள்ல ஒருத்தர் மோர்கன் ஃப்ரீமேன் நடிச்சது. படத்தோட கதை இதுதான். கேப்ரியல் மார்டின்(Antonio Banderas) ஒரு குட்டி திருடன். நியூயார்க் சப்வேல ஒருத்தன் கிட்ட இருந்து வைரம் கொண்டு வர்ற பெட்டியை பல பேர் முன்னாடியே திருடிட்டு ஓடுறான். இதைப் பார்க்கிறாரு கீய்த் ரிப்ளே(Morgan Freeman). அவரு ஒரு தில்லாலங்கடித் திருடன். நிறைய இடத்துல திருடி போலிஸ் கண்ணுல மண்ணைத் தூவிட்டு திரியிறவர். அவரைப் பிடிச்சே தீருவேன்னு சவால் விட்டுட்டு ப்ரொமோஷனே இல்லாம இருக்காரு வெபர்னு ஒரு NYPD போலீஸ்காரர். ரிப்ளீயோட நீண்ட நாள் ஃப்ரண்ட் விக்டர் கோரலென்கோ, ஒரு ரஷ்யன் மாப் கிட்ட கடன் வாங்கியிருக்கார். அந்தக் கடனைத் திருப்பித் தர்றதுக்காக கடைசியா ஒரு பெரிய திருட்டு - ஒரு ப்ரைவேட் மியூசியத்துல இருந்து ரெண்டு Faberge Eggs - செய்யத் திட்டம் தீடியிருக்காங்க. அந்தத் திட்டத்தை நிறைவேத்த நேரமானதால அந்த ரஷ்யன் மாப், விக்டரைக் கொன்னுடுறாங்க. பார்ட்னர் இல்லாம தன் திட்டத்தை நிறைவேத்த முடியாததால ரிப்ளே மார்ட்டினைத் துணைக்கு சேர்த்துக்குறார். விக்டரோட பொண்ணு அலெக்சாண்ட்ரா(Radha Mitchell) இப்ப ரிப்ளேயோட பாதுகாப்புல இருக்கா (இந்தப் பொண்ணோட காட்-ஃபாதர் ரிப்ளேதான்). மார்ட்டினுக்கும் அலெக்சாண்ட்ராவுக்கும் நடுவுல ஒரு ரிலேஷன்ஷிப் உருவாகுது. அதை ரிப்ளே எதிர்க்கிறார். ஆனா எதிர்க்க எதிர்க்கத்தானே காதல் உருவாகும். அது நடக்குது.

ரெண்டு பேரும் சேர்ந்து அந்த மியூசியத்துக்குள்ள திருட்டுத்தனமா, போலிஸ்க்கு கொடுக்கிற ஒரு பார்ட்டியில, நுழைஞ்சி படமெல்லாம் எடுத்துட்டு வர்றாங்க. திட்டம் முழு வடிவம் அடையுது. அதைச் செயல்படுத்த முன்னாடி, பொறுமை இழந்த நிக்கி (ரஷ்யன் மாபோட பாஸ்), அலெக்ஸாண்ட்ராவைக் கடத்திட்டுப் போயிடுறான். அந்த எக்ஸைக் கொண்டு வந்தாதான் அந்தப் பொண்ணை உயிரோட விடுவேன்னு சொல்லிடறான். 

ரிப்ளேயும் மார்ட்டினும் சேர்ந்து அந்த மியூசியத்துக்குள்ள பாதாளச் சாக்கடை வழியா புகுந்து, முட்டைகள் இருக்கிற லாக்கரை உடச்சி உள்ள புகுந்துடறாங்க. இன்னும் மூணு நிமிசத்துல அந்த லாக்கர் தானா மூடிரும்ங்கிற நிலமையில மார்ட்டின் துப்பாக்கியெடுத்து தான் திருடன் இல்லை, மியாமி போலிஸ். NYPD ரிப்ளீயைப் பிடிக்கிற திட்டத்துக்காக அண்டர் கவர்ல இருக்கேன்ங்கிற உண்மையச் சொல்லி முட்டைகளை கீய்த் கையில இருந்து வாங்கிட்டு கீய்த்தை லாக்கர் உள்ளயே விட்டுட்டுப் போயிடறான். 

அதுக்குப் பிறகு என்ன நடந்தது. கீய்த் வெளிய வந்தானா, ரஷ்யன் மாப் கிட்ட இருக்கிற அலெக்ஸாண்ட்ரா என்ன ஆனா, அப்பிடிங்கிறதுதான் கடைசியில வச்சிருக்கிற ட்விஸ்ட். 

மோர்கன் ஃப்ரீமேன் வழக்கப்படி கலக்கியிருக்காரு இந்தக் கேரக்டர்ல. அலெக்சாண்ட்ரா மேல காட்டுற பாசமாகட்டும், பேண்டரஸ் அத்து மீறும்போதெல்லாம் குட்டு வைக்கிறதாகட்டும், திருடும் காட்சியில் காட்டும் உழைப்பாகட்டும், ஃப்ரீமேன் ஸ்டைல். அண்டானியோ பேண்டரஸும் ஒரு திருடனா, அண்டர்கவர் காப்பா பொறுத்தமா நடிச்சிருக்கார். ராதாவை அசத்த சைனீஸ் சாப்பாடு வாங்கி பல்பு வாங்குற காட்சியிலையும், அதே ராதாவோடு நைட்டு ஃபுல்லா “இருந்துட்டு” அடுத்த நாள் மோர்கன் ஃப்ரீமேன்கிட்ட மாட்டிக்கிற காட்சியிலையும் வெளுத்துக் கட்டியிருக்கார். ஹீரோயின் ராதா மிட்செல் ஆஸ்திரேலிய நடிகை. ஆனா ஒரு ரஷ்யனோட முக வெட்டு அமைஞ்சிருக்கு. 

Heist Genre படங்கள் பிடிக்கிறவங்களுக்கு இந்த படம் ஒரு நல்ல பொழுதுபோக்கு.




1 comment:

Paleo God said...

மீ த பர்ஸ்ட்!