Thursday, September 17, 2009

கந்தசாமி - சில கேள்விகள்

அப்பாடா, ஒரு வழியா கந்தசாமி படத்தைப் பாத்துட்டேன். (என்னது எவ்வளவு காசு குடுத்தா? அந்த ரகசியமெல்லாம் சொல்ல மாட்டேன்பா). நானும் கந்தசாமி படம் ரிலீஸான நாள்ல இருந்து பல பேரு பல மாதிரி அதுக்கு விமர்சனம் போட்டுட்டாங்களா, பாக்கலாமா வேணாமான்னு ஒரே டைனமோல (என்னது அது டைலமாவா?) இருந்து கட்டக்கடசியா நம்ம தங்கமணி குடுத்த பிரசர்ல பாத்துட்டேன்.


படம் பாத்து முடிச்சதும் கந்தசாமிய கந்தல்சாமியாக்கி விமர்சனம் எழுதுன அத்தன பேர்க்கிட்டயும் சில கேள்வி கேக்கணுமுன்னு தோணுச்சி. அதான் எழுத விரலை எடுத்துக்கிட்டு உக்காந்துட்டேன்.


1. ஏங்க, சிவாஜி படத்துல ரஜினி பணக்காரங்களோட கறுப்புப் பணத்த கொள்ளை அடிச்சத மட்டும் ஒத்துக்கிட்டீங்க. அதையே எங்க சீயான் செஞ்சா மட்டும் கோச்சுக்கிறீங்க?

2. இருக்குறவுங்க கிட்ட எடுத்து இல்லாதவங்கக் கிட்ட அர்ஜூன் ஜெண்டில்மேன்ல குடுத்தா மட்டும் பாத்து விசிலடிச்சிங்க, எங்க சீயான் கோழி வேசம் போட்டு செஞ்சா திட்டித்தீக்குறீங்க?

3. யாரு யாரு கறுப்பு பணம் வச்சிருக்காங்கன்னு (லஞ்சம் வாங்கறாங்கன்னு) ஒரு நெட்வொர்க் வச்சு விஜயகாந்த் ரமணாவுல தெரிஞ்சிக்கிட்டா ஆஹா கை தட்டுறீங்க, எங்க சீயான் தன் ஃப்ரண்ட்ஸ வச்சு நெட்வொர்க் போட்டா மட்டும் ஒத்துக்க மாட்டேன்றீங்க. ஒருவேள எங்க சீயான் விண்டோஸ் மீடியா ப்ளேயர் இல்லாம கம்ப்யூட்டர் ஆப்பரேட் பண்ணினது உங்களுக்கு பிடிக்கலியா?

4. வடிவேலு ஹீரோவா நடிச்ச படத்த பாக்க வந்த குழந்தங்களுக்கு மீச குடுத்தப்பல்லாம் திட்டல, இப்போ குழந்தங்களுக்காகவே படம் எடுத்து அத பாக்க வர்ற குழந்தங்களுக்கு முகமூடி குடுத்தா மொறக்கிறீங்க?

4. மிய்யாவ் மிய்யாவ் பூனைன்னு, குழந்தைங்களுக்காக ஒரு புது ரைம்ஸ் பாட்டு போட்டுருக்காங்க, ரீஜண்டா எந்த சினிமாவுலயாவது கொழந்தங்களுக்கு பாட்டு வந்துச்சா? (என்னது பசங்கன்னு ஒரு படமே வந்துச்சா?)

5. இதுக்கெல்லாம் மேல ஒவ்வொரு தடவ எங்க சீயான் பறக்கும்போதும் அது எப்படி பறக்கறாருன்னு ஒரு செயல்முறை விளக்கமே குடுக்குறாங்க, (விஜயெல்லாம் கயறு கட்டாமலே மாடியில இருந்து பறந்து விழுந்து ஓடிக்கிட்டிருக்குற ரயிலைப் பிடிச்சி தப்பிக்கும்போது) அது கூடவா உங்களுக்குப் பிடிக்கல?

என்னமோ போங்க..
மேல இருக்குற போட்டோல என் மகன கைல வச்சிட்டு போஸ் குடுக்குறது வேற யாரும் இல்ல, நம்ம கந்தசாமி டைரடக்கர் சுசி.கணேசன்



சுசி கணேசன் வெளியிட சிடியை பெற்றுக் கொள்வது வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முகிலன். (இன்னொரு முக்கியமான விசயம். முகிலன கையில வச்சிருக்கிறது சத்தியமா நான் இல்லிங்கோ. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.மன்னர் ஜவஹர்)
பாவம் விக்ரமுக்கு தான் இவர் கூட படம் எடுக்க குடுத்து வக்கல. அன்னிக்கி ஏதோ வேற வேலை இருக்குன்னு போயிட்டார்.
ஓக்கே.. அப்பீட்டு

9 comments:

VSK said...

நியாயமான கேள்விகள்.
படத்தின் பிரம்மாண்டம் இது போன்ற ஹெவி சப்ஜெக்டுக்குத் தேவையான ஒன்று என நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த முந்தைய படங்களே நிரூபித்திருக்கின்றன.
நடக்கவே நடக்க முடியாத ஒன்றை [ஊழலை ஒழிப்பது] நடக்கவே நடக்க முடியாத ஒன்றின் மூல சொல்வதுதானே தர்மம்?

முடியற மாதிரி எதுனாச்சும் சொன்னா, அதை நம்ப மாட்டாங்க நம்ம ஆளுங்க!

இதெல்லாம் சும்மா 'டைம் பாஸ்' மச்சின்னு அவங்க சொல்றாங்க! நம்ம ஆளுங்களும் அப்படியே பார்த்திட்டு வழக்கப்படி பியூனுக்கு லஞ்சம் கொடுக்கக் கிளம்பறாங்க!

எனக்குப் படம் பிடிச்சிருந்தது!

குடுகுடுப்பை said...

படம் ஒகே தல , பையன் அழகா அம்சமா இருக்கான். எதிர்க்கட்சித்தலைவரா வரப்போற முகிலனுக்கு வாழ்த்துக்கள்.

(நம்ம ரெண்டு பேருக்கும் குடும்ப பாசம் ரொம்ப அதிகமோ)

Prabu M said...

அடேங்கப்பா.... ரொம்ப நியாயமான கேள்விகளைக் கேட்டிருக்கீங்க....

கரெக்ட்... சிவாஜி, ரமணா, ஜெண்டில்மேன் போன்றவர்கள் செய்ததையெல்லாம் சேர்த்து வைத்து கந்தசாமி செய்ததை மட்டும் ஏன் நம்மவர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும்???

அவங்கதான் செஞ்சுட்டாங்கள்ல.... இவரு எதையாச்சும் புதுசா சொல்லுவாரு அல்லது செய்வாருன்னு போய் படத்த பாத்தா...... ஊழல ஒழிச்சிட்டேன்... கருப்பு பணத்த அழிச்சுட்டேன்னு .... கொக்கரக்கோகோனு காமெடி பண்ணிட்டு இருக்காரு!!

ஆக மொத்தம் உங்களுக்கும் பாருங்க சிவாஜி,ஜெண்டில்மேன்,ரமணா பாத்த எஃபெட் கிடைச்சிருக்குனு ஒத்துக்கிட்டீங்க....

ஸோ.. நீங்க சுசிகணேசனோட ஃப்ரெண்டா இல்ல எனிமியா??

நல்ல காமெடி பாஸ்..

Unknown said...

//குடுகுடுப்பை said...
படம் ஒகே தல , பையன் அழகா அம்சமா இருக்கான்.
நன்றி நன்றி நன்றி

//எதிர்க்கட்சித்தலைவரா வரப்போற முகிலனுக்கு வாழ்த்துக்கள்.//

இந்தக் குசும்பு தான ஆகாதுங்கறது. இது இந்தியா இல்லப்பு. 8 வருசத்துக்கு மேல ஜனாதிபதியா இருக்க முடியாது. அதுனால முகிலன் பதவி ஏற்கும்போது மரியாதயா முன்னாள் ஜனாதிபதியா வந்து வாழ்த்திட்டுப் போங்க..(வின் - வின் சொல்யூஷன்?!)

//(நம்ம ரெண்டு பேருக்கும் குடும்ப பாசம் ரொம்ப அதிகமோ)//

கருணாநிதி அளவுக்கு இல்லன்னாலும் கொஞ்சம் கூட தான் இருக்கு போல..

Unknown said...

பிரபு . எம் said...
//
அவங்கதான் செஞ்சுட்டாங்கள்ல.... இவரு எதையாச்சும் புதுசா சொல்லுவாரு அல்லது செய்வாருன்னு போய் படத்த பாத்தா...... ஊழல ஒழிச்சிட்டேன்... கருப்பு பணத்த அழிச்சுட்டேன்னு .... கொக்கரக்கோகோனு காமெடி பண்ணிட்டு இருக்காரு!!
//

நம்ம மக்களுக்கு இன்னும் சர்க்காசம் (sarcasm) புரியல போல இருக்கே? இல்ல நான் சரியா எழுதலையா?

//
ஸோ.. நீங்க சுசிகணேசனோட ஃப்ரெண்டா இல்ல எனிமியா??
//
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

மணிகண்டன் said...

***
நம்ம மக்களுக்கு இன்னும் சர்க்காசம் (sarcasm) புரியல போல இருக்கே
***

புரிஞ்சாலும் புரியாத மாதிரி சீரியஸா எடுத்துக்கிட்டு பின்னூட்டம் போட்டு நடிப்பது ஒரு க்ரூப். ஏமாறாதீங்க !

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

அவங்கள நிறுத்தச்சொல்.... நான் நிறுத்தறேன். அந்தக் கதையா இருக்கு விக்ரம் + சுசியின் கதை. அவங்க என்னவேணா பண்ணினுப் போறாங்க... விக்ரம், நீங்களுமா? சுசியை மீண்டும் பார்த்தால், முழுப் படமாக எடுக்கச் சொல்லுங்க, slideshow எல்லாம் வேண்டாம் என்று. நீங்களே சொல்லுங்க நண்பா, படத்தில் ஒவ்வொரு காட்சியும் எத்தனை நொடிகள் வருகிறது என்று? என்ன எடிடிங் என்று சொல்வார்களா? MTV பாடல்கள் கூடத் தேவல. தலையே வெடித்து விட்டது. சுசி கணேசனிடம் சூப்பர் படங்களைத்தான் எதிர்பார்க்கிறோம். சிக்கன் சிக்ஸ்டிபைவ் பறக்கும் படங்களை அல்ல. படம் நல்லா இருக்கு. உங்க வாரிசின் புகைப்படத்தை சொன்னேன். சுத்திப் போடுங்க நண்பா. அவனுக்கு, சாரி, அவருக்கு என் வாழ்த்துக்கள்!

ரவி said...

ஏற்கனவே செய்ததை எதுக்கு மறுபடி செய்யனும்னு தானே கேள்வி ?

மற்றபடி வலையுலக விமர்சகர்கள் சொன்னமாதிரி படம் அவ்வளவு மோசமில்லை.

ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம்.

பின்னோக்கி said...

இதை விட கந்தசாமி படத்தை கடுமையாக யாரும் விமர்சிக்கவில்லை.
வாழ்த்துக்கள்.