Sunday, December 27, 2009

பிதற்றல்கள் - 12/27/2009

விளையாட்டில் அரசியல்

சிங்களவர்கள் மட்டுமே (முரளி நீங்கலாக) பங்கெடுக்கும் இலங்கைக் கிரிக்கெட் அணியைப் பின்பற்றும் பல புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை எனக்குத் தெரியும். இலங்கையில் இவ்வளவு நடந்த பின்னும் விடாமல் பின்பற்றுவார்கள். இவர்கள் விளையாட்டையும் அரசியலையும் வெவ்வேறாகப் பார்ப்பவர்கள்.

ஆனால், இலங்கையில் ஒவ்வொரு முறை கிரிக்கெட் போட்டி நடக்கும்போதும் அதில் அரசியலைக் கலக்க சிங்களப் பேரினவாத அரசு தவறுவதே இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் 100 அல்லது 200 காயமடைந்த - கால் இழந்த. கை இழந்த - ராணுவ வீரர்களுக்கு இலவச பாஸ் வழங்கி, போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது வரிசையாக நடத்தி அழைத்து வந்து அமர வைப்பார்கள். இதன் மூலம் உலகிற்கு விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் எனவும், அவர்களால் இலங்கை பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பது போலவும் காட்டி பரிதாபத்தைத் தேடிக்கொள்ளும் நோக்கமே.

சரி இது கேடு கெட்ட அரசியல்வாதிகளிடம்தான் விளையாட்டு வீரர்கள் அப்படி இருக்கமாட்டார்கள் என்று தான் நம்பியிருந்தேன், பாகிஸ்தானில் தீவிரவாதிகள் இலங்கை அணியின் வாகனத்தைத் தாக்கியது வரை. அப்போதைய இலங்கை அணித்தலைவர் மகேள ஜயவர்த்தனே அந்த தாக்குதலைப் பற்றி சொல்லும்போது - எங்கள் நாட்டிலும் தீவிரவாதிகள் இருப்பதால் அந்த நிலையில் என்ன செய்யவேண்டும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம் என்று சொன்னார். எத்தனை முறை புலிகள் இலங்கை அணியைத் தாக்க முயற்சி செய்தனரோ அது ஜயவர்த்தனேவுக்கே வெளிச்சம். ஒருவேளை ஜயவர்த்தனே என்ற பெயர் வைத்தவர்களே இப்படித்தானோ?

அதெல்லாம் சரி, இப்போது எதற்கு இதைப் பற்றி பேசுகிறேன்? காரணம் இருக்கிறது. நான் அரசியலையும் விளையாட்டையும் வெவ்வேறாகப் பார்ப்பவனாதலால், சர்வதேச கிரிக்கெட்டில் இருபது வருடங்களைப் பூர்த்தி செய்த சனத் ஜெயசூர்யவுக்கு என் வாழ்த்துக்களை இங்கே பதிவு செய்து கொள்கிறேன். அவர் இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரராக அவர் பேரனுடன் ஜோடி சேர்ந்து ஆட வேண்டும் என்பது என் ஆசை.

அரசியல் விளயாட்டு

நடந்து முடிந்த இடைத்தேர்தலிலும் ஆளுங்கட்சிக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார் அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகிரி. பணத்தைக் கொடுத்து வெற்றியை வாங்கி விடலாம் என்ற உண்மையை மீண்டும் நிரூபித்து விட்டார். மக்களும் வாங்கி வாங்கிப் பழகி விட்டனர். காசு கொடுத்து பழக்கமில்லாத கம்யூனிஸ்ட்கள் போன்ற கட்சிகளுக்கு இனி திண்டாட்டம் தான். வாக்குக் கேட்டுப் போகக்கூட முடியாது போல.

பேசாமல் தேர்தல் ஆணையம் செலவு செய்து இப்படித் தேர்தல்கள் நடத்துவதை விட அந்தத் தொகுதிகளை ஏலம் விட்டு அதிக பணம் கொடுத்து ஏலம் எடுக்கும் கட்சிக்குக் கொடுத்துவிடலாம். தேர்தல் செலவும் மிஞ்சும், நல்ல காசும் கிடைக்கும். வேட்பாளர்களும் பயந்து பயந்து பணப்பட்டுவாடாவும், ஏதேதோ பெயர் சொல்லி பிரியாணி போடுவதையும் விட்டுவிடலாம். அப்படி ஏலம் எடுக்கும் பணத்துக்கு வரி விலக்கு கூட அளிக்கலாம். பொதுத் தேர்தல்களில் இம்முறையை அமுல் படுத்த முடியாவிட்டால் கூட இடைத்தேர்தல்களிலாவது இந்த முறையைப் பயன்படுத்தலாம். யோசிப்பார்களா?

விளையாட்டே அரசியல்

(கிரிக்கெட்) விளையாட்டில் அதிக அரசியல் செய்யும் அணி எது என்று கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம் - ஆஸ்திரேலியா என்று. ஒரு அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் புறப்படும்போதே அங்குள்ள பத்திரிக்கைகள் அரசியலை ஆரம்பித்து விடும். வரும் அணியின் சிறந்த ஆட்டக்காரரைப் பற்றி அவதூறாக எதாவது எழுத ஆரம்பித்துவிடுவார்கள். இது மனோதத்துவ ரீதியான முதல் தாக்குதல்.

பின் அந்த அணி வந்து இறங்கியதும் ஆஸ்திரேலிய அணி ஆட்டக்காரர் - கேப்டன் இல்லை - ஒருவர் எதிரணியின் வீரர் ஒருவரைப் பற்றி எதாவது பற்ற வைப்பார். உதாரணத்திற்கு - டிராவிட்க்கு வயசாகி விட்டது. அவரது ஆட்டத்திறன் குறைந்து வருகிறது. அவர் ஓய்வு பெற்றுவிடுவது உத்தமம் என்று. இது இரண்டாவது தாக்குதல்.

அடுத்து ஆட்டக்களத்தில் - ஸ்லெட்ஜிங் - என்று அழைக்கப் படும் மோசமான தாக்குதல். தனிப்பட்ட முறையில் ஆட்டக்காரர்களைப் பற்றி தரக்குறைவாக அவருக்கு கோபம் வரும் வண்ணம் பேசுதல், லேசாகக் கோபப்படும் பந்துவீச்சாளரை மேலும் கோபமூட்டும்படி எதாவது சொல்லி தூண்டுதல் ஆகியன மூன்றாவதுத் தாக்குதல்.

கடைசியாக யாரையாவது உச்சக்கட்டமாகக் கோபமூட்டி எதாவது கைகலப்பில் ஈடுபட வைத்து அவரை சஸ்பெண்டு ஆக வைப்பது. ஐ.சி.சி விதிகளின் படி தூண்டுபவர்களுக்கு தண்டனை குறைவு. கைகலப்பில் முதலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை. ஒருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டால் தண்டனை இன்னும் குறைந்துவிடும். ஆக இவ்வளவையும் செய்துவிட்டு தப்பை ஒத்துக் கொண்டு குறைந்த பட்ச தண்டனையோடு தப்பிவிடுவார்கள் ஆஸ்திரேலிய அணியினர்.

அவர்களின் தலைவர் இருக்கிறாரே ரிக்கி பாண்டிங். அவர் இதில் ஆஸ்திரேலிய அழகிரி. ஜெயிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.

பாவம், மேற்கிந்திய அணி வீரர் பென். ஹாட்டினும் ஜான்சனும் வீசிய தூண்டிலில் மாட்டி பாவம் இரண்டு ஒருநாள் போட்டி விளையாடத் தடை என்னும் தண்டனை அடைந்துள்ளார். அவரது துரதிருஷ்டம் அவர் இந்திய அணியில் இல்லாதது. இந்திய வீரர் யாருக்காவது இது நடந்திருந்தால் பி.சி.சி.ஐ மேட்ச் ரெஃப்ரி க்ரிஸ் ப்ராடை மண்டி போட வைத்திருக்கும்,

19 comments:

VISA said...

//ஆஸ்திரேலிய அழகிரி//

நல்ல கற்பனை.

Cable Sankar said...

ஸ்லெட்ஜிங் என்றதும் எனக்கு நினைவுக்கு வந்தது.. “பாடிலைன்” என்கிற டிவி தொடர் தான் பார்த்திருக்கிறீர்களா..??

வானம்பாடிகள் said...

/துவக்க ஆட்டக்காரராக அவர் பேரனுடன் ஜோடி சேர்ந்து ஆட வேண்டும் என்பது என் ஆசை./

ம்கும். அவர்தான் மேட்சுக்கு முன்னாள் க்ளப்ல வேற ஆட்டம் ஆடுனாராமே.

/அந்தத் தொகுதிகளை ஏலம் விட்டு அதிக பணம் கொடுத்து ஏலம் எடுக்கும் கட்சிக்குக் கொடுத்துவிடலாம். /

அப்படியே ஜனநாயகம் என்ற வார்த்தையை செம்மொழி மாநாட்டில் பண நாயகம் என மாற்றி பதிவும் செய்யலாம்.

நல்லாருக்கு முகிலன்.:)

குடுகுடுப்பை said...

/துவக்க ஆட்டக்காரராக அவர் பேரனுடன் ஜோடி சேர்ந்து ஆட வேண்டும் என்பது என் ஆசை./

ம்கும். அவர்தான் மேட்சுக்கு முன்னாள் க்ளப்ல வேற ஆட்டம் ஆடுனாராமே.//

கப்பல் பேரன் வந்து ஆடட்டும்.

பின்னோக்கி said...

சுளீர்ன்னு இருக்குங்க.

ஆஸ்திரேலியா ஸ்லெட்ஜிங், கடைசி டூர்ல நம்ம கிட்ட எடுபடாது பி.சி.சி.ஐயின் பணபலத்தை வைத்து அவர்களை கதற வைத்தோம். நம் அணியிலும் ஸ்லெட்ஜிங் செய்ய ஆட்கள் வந்துவிட்டார்கள். ராகுல், சச்சின் இருவரையும் ஸ்லெட்ஜிங் செய்ய ஆஸி யோசிப்பார்கள். இவர்கள் இருவரும் எதற்கும் கலங்காது அவர்களை உதைப்பார்கள். பழைய டீம் போயிடுச்சு ஆஸிக்கு..இன்னும் கொஞ்சம் நாள் ஆகும்.

கலகலப்ரியா said...

எனக்கு கிரிக்கெட்டு தெரியாது... (நல்ல வேளை..)... ஆனா இப்டி எல்லாமா அரசியல் பண்ணுராய்ங்க.. +"*ç%&/(..

முகிலன் said...

// VISA said...
//ஆஸ்திரேலிய அழகிரி//

நல்ல கற்பனை.
//

நன்று விசா

முகிலன் said...

// Cable Sankar said...
ஸ்லெட்ஜிங் என்றதும் எனக்கு நினைவுக்கு வந்தது.. “பாடிலைன்” என்கிற டிவி தொடர் தான் பார்த்திருக்கிறீர்களா..??
//

முதல் பின்னூட்டத்துக்கு நன்றி கேபிள்ஜி. ஒன்றிரண்டு பகுதிகள் பார்த்திருக்கிறேன். ஆஸ்திரேலியாவும் ஸ்லெட்ஜிங்கும் உடன் பிறந்தது.

முகிலன் said...

//வானம்பாடிகள் said...
/துவக்க ஆட்டக்காரராக அவர் பேரனுடன் ஜோடி சேர்ந்து ஆட வேண்டும் என்பது என் ஆசை./

ம்கும். அவர்தான் மேட்சுக்கு முன்னாள் க்ளப்ல வேற ஆட்டம் ஆடுனாராமே.
//
அதத்தான் வழக்கம்போல அவிங்க அப்பிடியெல்லாம் இல்லன்னு முழுப்பூசணிய சோத்துல மறைக்கிறாய்ங்களே

/அந்தத் தொகுதிகளை ஏலம் விட்டு அதிக பணம் கொடுத்து ஏலம் எடுக்கும் கட்சிக்குக் கொடுத்துவிடலாம். /

அப்படியே ஜனநாயகம் என்ற வார்த்தையை செம்மொழி மாநாட்டில் பண நாயகம் என மாற்றி பதிவும் செய்யலாம்.

//
சென்சாலும் செஞ்சிருவாரு தமிழினத்தலைவரு

நல்லாருக்கு முகிலன்.:)
//
நன்றி சார்

முகிலன் said...

// குடுகுடுப்பை said...
/துவக்க ஆட்டக்காரராக அவர் பேரனுடன் ஜோடி சேர்ந்து ஆட வேண்டும் என்பது என் ஆசை./

ம்கும். அவர்தான் மேட்சுக்கு முன்னாள் க்ளப்ல வேற ஆட்டம் ஆடுனாராமே.//

கப்பல் பேரன் வந்து ஆடட்டும்.
//

யாரது கப்பல் பேரன்?

முகிலன் said...

//கலகலப்ரியா said...
எனக்கு கிரிக்கெட்டு தெரியாது... (நல்ல வேளை..)... ஆனா இப்டி எல்லாமா அரசியல் பண்ணுராய்ங்க.. +"*ç%&///

நீங்க கண்டிப்பா கிரிக்கெட் கத்துக்கணும்..

முகிலன் said...

//பின்னோக்கி said...
சுளீர்ன்னு இருக்குங்க.

ஆஸ்திரேலியா ஸ்லெட்ஜிங், கடைசி டூர்ல நம்ம கிட்ட எடுபடாது பி.சி.சி.ஐயின் பணபலத்தை வைத்து அவர்களை கதற வைத்தோம். நம் அணியிலும் ஸ்லெட்ஜிங் செய்ய ஆட்கள் வந்துவிட்டார்கள். ராகுல், சச்சின் இருவரையும் ஸ்லெட்ஜிங் செய்ய ஆஸி யோசிப்பார்கள். இவர்கள் இருவரும் எதற்கும் கலங்காது அவர்களை உதைப்பார்கள். பழைய டீம் போயிடுச்சு ஆஸிக்கு..இன்னும் கொஞ்சம் நாள் ஆகும்.
//

ஆமாம் பின்னோக்கி

அது சரி said...

//
பேசாமல் தேர்தல் ஆணையம் செலவு செய்து இப்படித் தேர்தல்கள் நடத்துவதை விட அந்தத் தொகுதிகளை ஏலம் விட்டு அதிக பணம் கொடுத்து ஏலம் எடுக்கும் கட்சிக்குக் கொடுத்துவிடலாம். தேர்தல் செலவும் மிஞ்சும், நல்ல காசும் கிடைக்கும். வேட்பாளர்களும் பயந்து பயந்து பணப்பட்டுவாடாவும், ஏதேதோ பெயர் சொல்லி பிரியாணி போடுவதையும் விட்டுவிடலாம். அப்படி ஏலம் எடுக்கும் பணத்துக்கு வரி விலக்கு கூட அளிக்கலாம். பொதுத் தேர்தல்களில் இம்முறையை அமுல் படுத்த முடியாவிட்டால் கூட இடைத்தேர்தல்களிலாவது இந்த முறையைப் பயன்படுத்தலாம். யோசிப்பார்களா?
//

ஏன் இப்படி கெட்ட ஐடியால்லாம் சொல்லிக் கொடுக்கறீங்க?? எலக்ஷன் நடக்கிறதுனால தான் அவனுங்க கொள்ளை அடிச்சதுல கொஞ்சமாவது திருப்பி வருது...ஏலமெல்லாம் விட்டா ஆஃபிசருக்கு கட்டிங் கொடுத்துட்டு அந்த பணத்தையும் அவனுங்களே வச்சிப்பானுங்க...:0)))

அது சரி said...

//
அவர்களின் தலைவர் இருக்கிறாரே ரிக்கி பாண்டிங். அவர் இதில் ஆஸ்திரேலிய அழகிரி. ஜெயிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.
//

கிழிஞ்சது போங்க! அண்ணனுக்கு அடுத்து என்ன பட்டம் குடுக்கறதுன்னு அவனுங்களே திணறிக்கிட்டு இருக்கானுங்க...இப்ப‌ "தமிழகத்தின் ரிக்கி பாண்டிங்கே"ன்னு நாளைக்கே மதுரையில கட் அவுட் வச்சிருவானுங்க!

:0)))

Anonymous said...

அரசியலுக்கும் நமக்கும் ரொம்பத்தூரமப்பா :)

முகிலன் said...

//ஏன் இப்படி கெட்ட ஐடியால்லாம் சொல்லிக் கொடுக்கறீங்க?? எலக்ஷன் நடக்கிறதுனால தான் அவனுங்க கொள்ளை அடிச்சதுல கொஞ்சமாவது திருப்பி வருது...ஏலமெல்லாம் விட்டா ஆஃபிசருக்கு கட்டிங் கொடுத்துட்டு அந்த பணத்தையும் அவனுங்களே வச்சிப்பானுங்க...:0)))
//

அய்யோ.. பேசாம ஐ.பி.எல் தல லலித் மோடிக்கிட்ட இந்த ஏல விவகாரத்த குடுத்தா என்ன?

முகிலன் said...

//கிழிஞ்சது போங்க! அண்ணனுக்கு அடுத்து என்ன பட்டம் குடுக்கறதுன்னு அவனுங்களே திணறிக்கிட்டு இருக்கானுங்க...இப்ப‌ "தமிழகத்தின் ரிக்கி பாண்டிங்கே"ன்னு நாளைக்கே மதுரையில கட் அவுட் வச்சிருவானுங்க!//

அட அது கூட நல்லாத்தான் இருக்கும். அண்ணன் அழகிரிக்கு ஆஸ்திரேலிய யூனிஃபார்ம் போட்டு கைல பேட்டையும் குடுத்துருவாய்ங்க.

முகிலன் said...

// சின்ன அம்மிணி said...
அரசியலுக்கும் நமக்கும் ரொம்பத்தூரமப்பா :)//

நியூசிலாந்து இந்தியால இருந்து அமெரிக்காவ விடவா தூரம்?

குடுகுடுப்பை said...

கிளப்பதான் , கப்பல்னு உள்றிட்டேன்