மஞ்சுவின் கை மேடிட்டிருந்த வயிற்றை அனிச்சையாகத் தடவிக் கொண்டது. வீட்டின் ஜன்னலுக்கு வெளியே ஒரு கழியில் மாட்டப்பட்டிருந்த பேர்ட் ஃபீடரில் இருந்த தானியங்களைக் கொத்திக் கொண்டிருந்த பறவையை வேடிக்கைப் பார்த்தாள். அந்தப் பறவையின் கூட்டில் இது கொண்டு வரும் உணவுக்காக ஒன்றிரண்டு குஞ்சுகள் காத்திருக்கும் என்ற யோசனையே ஒரு இனம் புரியாத குறுகுறுப்பை ஏற்படுத்தியது.
தாய்மை ஒரு பெண்ணை முழுமைப் படுத்துகிறது என்பது முழுக்க முழுக்க உண்மை. எட்டு மாதம் முன்பு என்ன உணவு உண்கிறோம், எத்தனை மணிக்கு உண்கிறோம் என்பதைப் பற்றி அவள் கவலைப்பட்டதே இல்லை. ஆனால் இப்போது? நேரா நேரத்துக்கு சத்தான உணவை உண்ண வேண்டும் என்ற எண்ணம் எங்கிருந்து வந்தது?
ஒலித்த தொலைபேசியை எடுத்தாள்.
“ஹேய் அபர்ணா. எப்பிடி இருக்க?”
----
“ஆமாண்டி வயிறு தெரிய ஆரம்பிச்சுடுச்சி”
----
“ரமேஷ் தாண்டி ரொம்ப கஷ்டப்படுறாப்ல. காலங்காத்தால எழுந்து ப்ரேக்ஃபாஸ்ட் லன்ச் ரெண்டும் செஞ்சி அவருக்கு பாக்ஸ்ல எடுத்துட்டு, எனக்கும் பேக் பண்ணி ஃப்ரிஜ்ல வச்சிட்டுப் போறாப்ல. அது போக ஜூஸ் வேற எடுத்து வச்சிட்டுப் போறாப்ல”
----
“எங்கம்மாவும் அப்பாவும் இப்போ தான வந்துட்டுப் போனாங்க”
----
“அவங்கப்பாவும் அம்மாவும் இந்த வீக் எண்ட் வர்றாங்க. அவங்கதான் டெலிவரி வரைக்கும் இருப்பாங்க. என்னடி பண்றது. இப்பிடி கண்காணாத தேசத்துல வந்து கஷ்டப்படணும்னு தலைவிதி”
----
“வாஸ்தவம்தான். எங்கம்மா இருந்து செய்யற மாதிரி வராதுதான். ஆனா அவங்க ரமேஷப் பாத்துக்கிட்டா போதும். ரமேஷ் என்னயப் பாத்துக்கிடுவாப்ல”
---
“ஓக்கேடி. அப்புறம் கூப்பிடு”
ரமேஷும் மஞ்சுவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். முதலில் லேசான எதிர்ப்பு இருந்தாலும் பின்னர் இரு வீட்டாரும் இணங்கிவிட்டார்கள். திருமணம் முடிந்து இரண்டு முறை கரு உருவாகி தங்காமல் போய் நான்கு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் எட்டு மாதம் வரை தாக்குப் பிடித்திருக்கிறது,
டாக்டர் வேறு இவள் வீக்காக இருப்பதாகவும் நேரத்துக்கு சத்தாக சாப்பிட வேண்டும் என்றும் சொல்லிவிட்டார். இந்தக் காலத்தில் எல்லாப் பெண்களையும் போல மஞ்சுவும் அம்மா மடி தேடி ஏங்கிக் கொண்டிருக்கிறாள். அந்த ஏக்கம் வேறு அவளது ஸ்ட்ரெஸ் லெவலை அதிகமாக்கிக் கொண்டிருக்கிறது. அதையும் பார்த்துக் கொள்ளும் படி டாக்டர் ஆலோசனை சொல்லியிருக்கிறார்.
ரமேஷ் தான் பாவம். இவளுக்கு சமையலையும் செய்துகொண்டு பிரசவ கால ஹார்மோன் மாற்றத்தால் அவளுக்கு ஏற்படும் உடற்கோளாறுகளுக்கும் மனக் கோளாறுகளுக்கும் வைத்தியமும் பார்த்துக் கொண்டு வேலைக்கும் போய் வருகிறான். அவன் பெற்றோர்கள் வந்துவிட்டால் இவன் வேலை பாதியாகிவிடும்.
மஞ்சு டிவிக்கு மேல் ஒளிர்ந்து கொண்டிருந்த எலெக்ட்ரானிக் கடிகாரத்தில் மணி பார்த்தாள். 2:00 மணி. ஃப்ரிட்ஜைத் திறந்து ரமேஷ் பிழிந்து வைத்திருந்த மாதுளை ஜூஸை ஒரு கப்பில் ஊற்றி சிப்பினாள். ரமேஷ் வர இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது, ரிமோட்டால் டிவியை இயக்கினாள். ஏற்கனவே டி.வி.ஆரில் ரெக்கார்ட் செய்திருந்த அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியைத் தெரிவு செய்து சோஃபாவில் அமர்ந்து ரசிக்கத் துவங்கினாள். இது போன்ற சிரிப்பு நிகழ்ச்சிகள் அவள் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க உதவுகின்றன.
********************************************************************************************
சோஃபாவில் அமர்ந்தபடியே கண்ணசந்துவிட்ட மஞ்சு கராஜ் திறக்கும் ஓசை கேட்டுக் கண் விழித்தாள். கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த ரமேஷைப் பார்த்ததும் அவள் உதட்டில் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.
"ஏண்டா லேட்டு?”
“நான் எங்கம்மா லேட்டு. நாலு மணிக்கு வந்திட்டேனே?”
“மணி பாரு. நாலு ரெண்டு. ரெண்டு நிமிஷம் லேட்டா வந்திருக்க”
“அய்யோ. சாரிங்க மேம். லேட்டா வந்ததுக்கு என்ன பனிஷ்மெண்ட்?”
“என்ன மாலுக்குக் கூட்டிட்டுப்போ”
“உடனே போகணுமா இல்ல நான் ஃப்ரெஷ்னப் பண்ணிட்டு வந்துடவா?”
“ஃப்ரெஷ்ஷா வந்து வெள்ளக்காரச்சிகளை சைட்டடிக்கப் போறியா?”
“நான் ஏன் வெள்ளக்காரச்சிகள சைட் அடிக்கணும்? அவளுக வேணுமின்னா என்ன சைட் அடிக்கட்டும்”
“அடி செருப்பால. உன்னால வயித்தத் தள்ளிக்கிட்டு நான் இருக்கிறப்போ உனக்கு வெள்ளக்காரச்சி கேக்குதோ?”
“நீ வயித்தத் தள்ளிக்கிட்டு இருக்குறதுனாலதான் கேக்குது. அவளுகளப் பாரு எக்ஸர்சைஸ் பண்ணி நல்ல டோன் பண்ணி வச்சிருக்காங்க.”
எல்லாப் பெண்களையும் போல சடுதியில் கண்களில் நீர்கோர்த்தாள். “நிஜம்மாவே நான் அசிங்கமாயிட்டேனா ரமேஷ்? குழந்த பெறந்ததும் என்ன வெறுத்துடுவியா?”
தாவி அவளைக் கட்டி அணைத்துத் தோளில் சாய்த்து - “அய்யோ அப்பிடியில்லடா கண்ணம்மா. எனக்கு நீ தாண்டா தேவதை. உன்னப்போய் நான் வெறுப்பேனா?”
அவன் மார்பில் கை வைத்துத் தள்ளினாள். “நீ வெறுத்துடுவ. உள் மனசுல இருக்குறதுதான வெளிய வரும்” சோஃபாவில் அமர்ந்து இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டு விசும்பி விசும்பி அழுதாள்.
அவள் முன் மண்டியிட்டு கைகளை விலக்கி அவள் முகத்தை இரு கைகளால் ஏந்தி கண்ணீரைத் துடைத்தான். “இங்க பாரு மஞ்சு. நீ உங்க குடும்பத்த விட்டு என்ன நம்பி இவ்வளவு தூரம் வரைக்கும் வந்திருக்க. உன்னப் போய் நான் வெறுப்பேனா? சும்மா கிண்டலுக்கு சொன்னேண்டா. ப்ளீஸ் அழாதம்மா. இப்பிடி இருக்கும்போது அழக்கூடாது. அப்புறம் குட்டிப் பையன் அழுமூஞ்சியாப் பொறந்துடுவான்”
“சரி இனிமே வெளாட்டுக்குக் கூட அப்பிடி சொல்லக்கூடாது சரியா?”
“சரிடா”
“எனக்கு மால்ல ஐஸ்க்ரீம் வாங்கித் தருவியா?”
“ஒண்ணே ஒண்ணுதான் வாங்கித்தருவேன்”
“ம்ஹூம் எனக்கு ரெண்டு வேணும்”
“டாக்டர் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லலயா?”
“எனக்கு ரெண்டு வேணும்”
“சரி சரி வாங்கித் தர்றேன்”
இருவரும் சேர்ந்து எழுந்தனர்.

ஞாயிறு காலை 5:00 மணி.
“குட்டிம்மா. நான் ஜே.எஃப்.கே கிளம்புறேன். 6:30க்கு ஃப்ளைட். உனக்கு சாப்பாடு ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்கேன். நேரத்துக்கு சாப்பிடு சரியா?”
“சரிப்பா. பாத்து போயிட்டு வா. ஆண்ட்டி அங்கிளுக்கு சாப்பாடு எடுத்துட்டுப் போறியா?”
“ஆமா. லெமன் ரைஸ்ஸும் புளியோதரையும் எடுத்துட்டுப் போறேன். நைட் வந்துடுவோம். உனக்கு போர் அடிச்சா சாரதாவக் கூப்பிட்டுக்கோ. ஓக்கே?”
“ஓக்கேடா”
அவன் காரில் ஏறி கார் ட்ரைவ் வேயை விட்டு விலகும் வரைப் பார்த்திருந்துவிட்டு கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தாள். இன்று இரவு ரமேஷின் அப்பாவும் அம்மாவும் வந்துவிடுவார்கள். அட் லீஸ்ட் சமைக்கும் வேலையாவது ரமேஷுக்கு இனி இருக்காது. அந்த நேரத்தை என்னுடன் செலவிடுவான். இந்த எண்ணமே மஞ்சுவைக் குஷிப் படுத்தியது.
விசிலடித்துக் கொண்டே பெட்ரூமை நோக்கி நகர்ந்தாள். ஒரு ஓரமாக நின்றிருந்த விதி அவளைப் பார்த்து சிரித்தது
(தொடரும்)

10 comments:
//விசிலடித்துக் கொண்டே பெட்ரூமை நோக்கி நகர்ந்தாள்//
நற்குடியில் பிறந்த பெண்கள் விசிலடிப்பார்களான்னு யாராவது கேட்டிங்க, தொலச்சுப்புட்டேன் ஆமா
முகிலன் said...
/ நற்குடியில் பிறந்த பெண்கள் விசிலடிப்பார்களான்னு யாராவது கேட்டிங்க, தொலச்சுப்புட்டேன் ஆமா//
:)). அடங்கமாட்டிங்கறாங்கப்பா. லேபிள்ள நற்குடும்பம்னு இல்ல. அதனால கேக்கமாட்டம்.
நல்லா போகுது கதை.
//ஒரு ஓரமாக நின்றிருந்த விதி அவளைப் பார்த்து சிரித்தது//
இப்படியெல்லாம் சோகமா இருந்தா கடைசில ஒண்ணா படிச்சுக்கறேன்.
//சிப்பினாள்//
ada ithu nala irukea..
//முகிலன் said...
//விசிலடித்துக் கொண்டே பெட்ரூமை நோக்கி நகர்ந்தாள்//
நற்குடியில் பிறந்த பெண்கள் விசிலடிப்பார்களான்னு யாராவது கேட்டிங்க, தொலச்சுப்புட்டேன் ஆமா
//
யோவ் .. அடங்க மாட்டியறா
//"அவளுக வேணுமின்னா என்ன சைட் அடிக்கட்டும்"//
இப்படில்லாம் நடக்குதா ?
அருமை... தொடரட்டும்...
*whistles*..
கதை அழகாய் எடுத்து சொல்கிறீர்கள். . தொடருங்கள். விரைவில். காத்திருந்து வாசிக்கிறேன்.
Good start Mukilan...
ம்ம்... அப்பறம்??
Post a Comment