Tuesday, February 2, 2010

பிதற்றல்கள் - 2/2/2010

ஏ.ஆர்.ரஹ்மானின் கிரீடத்தில் மற்றுமொரு வைரமாக கிராமி விருதுகள் வந்து சேர்ந்திருக்கிறது. பண்டிட் ரவிசங்கர், ஜாக்கிர் உசேன், விக்கு விநாயக் ராம் ஆகியோரைத் தொடர்ந்து கிராமி விருதை வென்றிருக்கும் நான்காவது இந்தியர் இவர்.

வழக்கம்போல பல ஜாம்பவான்களோடு போட்டியிட்டு வெற்றிக்கனியைப் பறித்துவந்திருக்கிறார். ஆஸ்கர் விருதைப் போலவே சிறந்த திரைப்பட பின்னணி இசைக்கும் சிறந்த திரைப்படப் பாடலுக்குமாக இரண்டு விருதுகள்.

கமலஹாசன்கள் “கிராமி விருது என்பது அமெரிக்கர்கள் ரசிக்கும் அமெரிக்க இசைக்கு அமெரிக்கர்கள் கொடுக்கும் விருது. அது ஒன்றும் உலக விருது அல்ல” என்றும், பிற இசையமைப்பாளர்கள் “விருது வாங்கிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துகள், நானெல்லாம் விருதுக்கு அப்பாற்பட்டவன்” என்றும் வாழ்த்துகளை வழங்கத் துவங்கிவிடுவர்.

பாகிஸ்தான் அணியின் அஃப்ரிதி மறுபடி ஒரு கேவலமான செயலைச் செய்துள்ளார். நான்கு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி தொடரை கோட்டை விட்ட பாகிஸ்தான் கடைசி போட்டியில் வென்று மானத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுவிட்ட நிலையில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று பந்தைப் பல்லால் கடித்து சிதைத்திருக்கிறார்.

ஏற்கனவே உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வென்ற பின் அந்த அணித் தலைவர் இம்ரான் கான் தான் சோடா பாட்டில் மூடியை வைத்து பந்தை சிதைத்ததை ஒத்துக் கொண்டார். இப்போது அஃப்ரிடி. அதிலும் ஒரு போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி செய்தேன். பந்தை சிதைப்பது எல்லோரும் செய்வதுதான். அதை வெளியே தெரியும்படி செய்ததே தவறு என்று பொருள் படும்படியாகப் பேசி இருக்கிறார். குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டதால் இரண்டு T-20 போட்டிகள் விளையாட மட்டும் தடையோடு தப்பித்துவிட்டார்.

அவதார் திரைப்படம் 2 பில்லியன் டாலர் வசூல் என்ற உச்சத்தை எட்டிவிட்டது. இதற்கு முன் டைட்டானிக் படம் 1.8 பில்லியன் வசூல் செய்ததுதான் சாதனையாக இருந்து வந்தது. அதை அவதார் முறியடித்துவிட்டது. தன் வசூல் சாதனையை தானே முறியடிக்கும் விசயத்தில் ஜேம்ஸ் காமரூன் ஹாலிவுட் ரஜினி.

நாணயம் திரைப்படம் பார்த்தேன். ஒரு ஆங்கிலத் திரைப்படம் பார்ப்பது போல விறுவிறுப்புடன் இருந்தது. பாவம் சிபிதான் அல்லக்கையாகிவிட்டார். படத்தின் புரமோஷன்களில் பிரசன்னாவுக்கும் சிபிக்கும் இணையான பாத்திரம் என்றெல்லாம் கதை விட்டார்கள். படம் பார்த்தால் அப்படியெல்லாம் தெரியவில்லை. பிரசன்னாவே எல்லாம் செய்கிறார். சிபியின் அடியாள் வரும் அளவுக்குக் கூட அவர் வருவதில்லை படத்தில். எஸ்.பி.பிக்கு ஒரு வித்தியாசமான வேடம். என் மனைவி அவர் இந்த வேடத்தில் நடித்திருக்கக் கூடாது என்று சொன்னார். நான் அவர் இந்த வேடத்தில் நடித்திருந்ததால் தான் கடைசியில் நல்ல ட்விஸ்டாக இருந்தது, வேறு யாராவது என்றால் நாம் யூகித்திருப்போம் என்றேன்.

குடுகுடுப்பை தன் சொந்தக் கட்சி கு.ஜ.மு.கவில் அவரைத் தவிர யாரும் உறுப்பினாராக முடியாத படி கட்சியின் கொள்கை அமைந்துவிட்ட படியாலும், உறுப்பினராக சேர விருப்பக் கடிதம் அனுப்பும் தொண்டர்களின் எண்ணிக்கை பல கேடியை ச்சீ கோடியைத் தாண்டிவிட்டபடியாலும் புதிதாக திராவிட கு.ஜ.மு.க என்ற கட்சியைத் தொடங்கிவிட்டார்.

இப்போதைக்கு அவரே கட்சியின் பொதுச்செயலாளராக நீடிக்க வேண்டும் என்று தாய்க்கழகத்தின் பொதுக்குழு கூடி ஜனநாயக முறையில் முடிவெடுத்துள்ளது. புதிய கட்சியின் மாணவரணித் தலைவராக திரு.வானம்பாடிகள் அவர்களும்(அவரது புகைப்படத்தை பார்த்ததும் எடுக்கப்பட்ட முடிவு), இலக்கிய (!?) அணித்தலைவராக நானும் (என் இலக்கியச் செறிவு வாய்ந்த பதிவுகளைப் படித்ததன் விளைவு), கள்ளக்காதல் அணித்தலைவராக நசரேயனும் (நல்ல காதலுக்கு துண்டு பலபோட்டும் அமையாததன் காரணத்தால்), சட்ட அவைத் தலைவராக அது சரியும் (இது தான் எதுக்குன்னே தெரியலை) நியமிக்கப் பட்டுள்ளனர். மற்ற பதவிகளுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். (அதுவரை தொண்டர்கள் அமைதி காக்கவும்). 2011ல் கழக ஆட்சி அமைப்போம். (2013ல் அமெரிக்க ஆட்சியைக் கைப்பற்றுவோம்).

31 comments:

முகிலன் said...

இந்த வார பிதற்றல்கள் அருமை.

டெம்ப்ளேட் பின்னூட்டம் போட விரும்புபவர்கள் மேலே உள்ள வரியை காப்பி/பேஸ்ட் செய்யலாம். :)

KarthigaVasudevan said...

//திராவிட கு.ஜ.மு.க என்ற கட்சியைத் தொடங்கிவிட்டார்.//

உறுப்பினர்கள் எல்லாரும் உருப்பட்டா சரி. :)))

வரதராஜலு .பூ said...

//இந்த வார பிதற்றல்கள் அருமை.

டெம்ப்ளேட் பின்னூட்டம் போட விரும்புபவர்கள் மேலே உள்ள வரியை காப்பி/பேஸ்ட் செய்யலாம். :)//

பதிவை போலவே முதல் கமெண்டும் நல்லாவே இருக்கு
:-)

கலகலப்ரியா said...

ரொம்ப நல்லாருக்கு பதிவு...! லாஸ்ட் மேட்டர் ... ஹும்... அழிம்பு தாங்க முடியலை... (அப்புறம் ஃப்ளு தப்பிச்சிடுத்து...)

நாஞ்சில் பிரதாப் said...

நாணயம் நானும் பார்த்தேன்...நல்லாப்பண்ணிருக்காங்க... ஆனா லேசர் பீமை டேன்சர்வச்சு கிராஸ் பண்றதுல்லாம் ரொமப ஓவர்... கிர்ர்ர்ர்ர்.
எஸ்பிபி வச்சு ஒரு ட்விஸ்ட் இருக்கும்னு கடைசில எதிர்பார்த்ததுதான். ஆனா அந்தமாதிரி எதிர்பார்காதுதான் ஹைலட்...

//திராவிட கு.ஜ.மு.க என்ற கட்சியைத் தொடங்கிவிட்டார்.//

வெளங்கிடும்... திரும்பவும் முதலேருந்தா...


//உறுப்பினர்கள் எல்லாரும் உருப்பட்டா சரி. :)))//

கலகலப்ரியா said...

//இந்த வார பிதற்றல்கள் அருமை.//

adadaa... ithaik kavanikkaama miss pannittene... pls pls... ellaa post layum ithu podunga... romba udhaviyaa irukkum....

ஷங்கர்.. said...

கலகலப்ரியா said...
//இந்த வார பிதற்றல்கள் அருமை.//

adadaa... ithaik kavanikkaama miss pannittene... pls pls... ellaa post layum ithu podunga... romba udhaviyaa irukkum....//

இத போடாமலே ப்ளு தப்பிடிச்சின்னு சொல்லி சமாளிச்சிருக்கலாம் ::))
----
ஆமா அப்ரிடிக்கு பதினாலு வயசு முடிஞ்சிரிச்சா..??

வானம்பாடிகள் said...

இலக்கிய அணித்தலைவருக்கு வாழ்த்துகள். எதுக்கும் தலைவர கேட்டுடுங்க. அப்புறம் இதில பிரிச்சி பின் நவீனத்துவம், முன் நவீனத்துவம்னு 2 போஸ்ட் ஆக்கிடுவாரு. வாழ்த்துகள்

இப்படிக்கு மாணவரணித்தலைவர்.

ஷங்கர்.. said...

முகிலன் said...
இந்த வார பிதற்றல்கள் அருமை.

டெம்ப்ளேட் பின்னூட்டம் போட விரும்புபவர்கள் மேலே உள்ள வரியை காப்பி/பேஸ்ட் செய்யலாம். :)//

நல்லாதான் பிதற்றுகிறீர் அந்த வரியை வைத்துக்கொண்டு காப்பியும் பேஸ்ட்டும் செய்ய இயலவில்லை முகிலாரே..:))

க.பாலாசி said...

(அவரது புகைப்படத்தை பார்த்ததும் எடுக்கப்பட்ட முடிவு)//

புகைப்படத்தைப்பார்த்து எடுத்த இந்த நல்ல முடிவை நான் வரவேற்கிறேன்.

முகிலன் said...

//KarthigaVasudevan said...
//திராவிட கு.ஜ.மு.க என்ற கட்சியைத் தொடங்கிவிட்டார்.//

உறுப்பினர்கள் எல்லாரும் உருப்பட்டா சரி. :)))
//

கட்சியும் உருப்பட்டு, உறுப்பினர்களும் உருப்பட்டு (அதுனாலதான் உறுப்பினர்னு பேரோ?) என்னையையும் கட்சில சேத்துக்கோங்கன்னு நீங்க வாசல்ல தவம் கிடக்கிற நாள் தூரத்துல இல்ல கார்த்திகாக்கா..

முகிலன் said...

//வரதராஜலு .பூ said...
//இந்த வார பிதற்றல்கள் அருமை.

டெம்ப்ளேட் பின்னூட்டம் போட விரும்புபவர்கள் மேலே உள்ள வரியை காப்பி/பேஸ்ட் செய்யலாம். :)//

பதிவை போலவே முதல் கமெண்டும் நல்லாவே இருக்கு
:-)//

வருகைக்கு நன்றி வரதராஜுலு.பூ. :)

முகிலன் said...

//கலகலப்ரியா said...
ரொம்ப நல்லாருக்கு பதிவு...! லாஸ்ட் மேட்டர் ... ஹும்... அழிம்பு தாங்க முடியலை... (அப்புறம் ஃப்ளு தப்பிச்சிடுத்து...)
//

அப்பாடா, பேக் டு ஃபார்மா??

க.பாலாசி said...

//இந்த வார பிதற்றல்கள் அருமை.
டெம்ப்ளேட் பின்னூட்டம் போட விரும்புபவர்கள் மேலே உள்ள வரியை காப்பி/பேஸ்ட் செய்யலாம். :) //

அருமை.. :))

முகிலன் said...

//நாஞ்சில் பிரதாப் said...
நாணயம் நானும் பார்த்தேன்...நல்லாப்பண்ணிருக்காங்க... ஆனா லேசர் பீமை டேன்சர்வச்சு கிராஸ் பண்றதுல்லாம் ரொமப ஓவர்... கிர்ர்ர்ர்ர்.
எஸ்பிபி வச்சு ஒரு ட்விஸ்ட் இருக்கும்னு கடைசில எதிர்பார்த்ததுதான். ஆனா அந்தமாதிரி எதிர்பார்காதுதான் ஹைலட்...

//

அதை ப்ராக்டீஸ் பண்ற மாதிரி கொஞ்சம் காட்டியிருக்கலாம்

//
வெளங்கிடும்... திரும்பவும் முதலேருந்தா...
//
இப்பதாங்க ஆரம்பம்.. இனி அதகளம்தான்...

முகிலன் said...

//கலகலப்ரியா said...
//இந்த வார பிதற்றல்கள் அருமை.//

adadaa... ithaik kavanikkaama miss pannittene... pls pls... ellaa post layum ithu podunga... romba udhaviyaa irukkum....//

போட்டுட்டா போச்சி. ஒரே ஒரு கண்டிஷன். அதை அப்பிடியே போட்டுடணும் ஆமா.. இப்போதைக்கு இன்னொண்ணு..

இலக்கிய அணித்தலைவர் வருங்கால முதல்வர் முகிலன் வாழ்க வாழ்க..

முகிலன் said...

//ஷங்கர்.. said...
ஆமா அப்ரிடிக்கு பதினாலு வயசு முடிஞ்சிரிச்சா..??
//

பதினாலு முடிஞ்சி பதிமூணு ஆரம்பிச்சிருச்சி..

முகிலன் said...

//வானம்பாடிகள் said...
இலக்கிய அணித்தலைவருக்கு வாழ்த்துகள். எதுக்கும் தலைவர கேட்டுடுங்க. அப்புறம் இதில பிரிச்சி பின் நவீனத்துவம், முன் நவீனத்துவம்னு 2 போஸ்ட் ஆக்கிடுவாரு. வாழ்த்துகள்

இப்படிக்கு மாணவரணித்தலைவர்.
//

தொண்டர்களை விட்டு தீக்குளிக்க வச்சிர மாட்டோம்? ஒரே கட்சி ஒரே இலக்கிய அணி.. :)

இலக்கிய அணித் தலைவர்.

முகிலன் said...

/ஷங்கர்.. said...
நல்லாதான் பிதற்றுகிறீர் அந்த வரியை வைத்துக்கொண்டு காப்பியும் பேஸ்ட்டும் செய்ய இயலவில்லை முகிலாரே..:))
//

அது இந்தியால வொர்க் ஆவாதாம்.. 110 வோல்ட்லதான் வொர்க் ஆவுமாம்.. அடுத்த வெர்சன் கண்டு பிடிக்கிற வரைக்கும் வீட்டுல தங்கமணி கையால காப்பியும் கோல்கேட் பேஸ்டும் யூஸ் பண்ணிக்குங்க.

முகிலன் said...

/க.பாலாசி said...
(அவரது புகைப்படத்தை பார்த்ததும் எடுக்கப்பட்ட முடிவு)//

புகைப்படத்தைப்பார்த்து எடுத்த இந்த நல்ல முடிவை நான் வரவேற்கிறேன்
//

:))

முகிலன் said...

//க.பாலாசி said...
//இந்த வார பிதற்றல்கள் அருமை.
டெம்ப்ளேட் பின்னூட்டம் போட விரும்புபவர்கள் மேலே உள்ள வரியை காப்பி/பேஸ்ட் செய்யலாம். :) //

அருமை.. :))
//

டெம்ப்ளேட்டுக்கே டெம்ப்ளேட்டா?? என்ன கொடுமை சார் இது?

KarthigaVasudevan said...

ஓவர் டோஸ் ஆயிடப் போகுது... தற்பெருமை (!!!) ,உங்க கட்சில சேர நான் வேற வாசல்ல வந்து நிக்கனுமா?

வெளங்கி வெள்ளக்கோழி கூவிடும் வேறென்ன கட்சி தான்!!! :)))

அண்ணாமலையான் said...

நடக்கட்டும்...

புலவன் புலிகேசி said...

தலைவர் ரகுமானுக்கு வாழ்த்துக்கள்...மேலும் பின்னூட்ட டெம்ப்ளேட் கூட நல்ல ஐடியா..

VISA said...

A.R.RAHMAN matter SUPER.
Blog Template not good.

Maduraimalli said...

Vikku vinayak appuram thaan ARR winning Gramy awards..

முகிலன் said...

@ கார்த்திகா - உங்கள் சாபங்களையும் மீறி ஜெயிப்போம்.. :))

@அண்ணாமலையான் - :)

@புலவன் புலிகேசி - நன்றி

@விசா - போங்க சார். இனிமேலும் டெம்ப்ளேட் மாத்துறதா இல்லை.

@மதுரை மல்லி - மாத்திட்டேன் சார்.

வினோத்கெளதம் said...

நாணயம் எனக்கும் பிடிச்சு இருந்துச்சு..
SPB எதோ பண்ணபோறார்னு தெரிஞ்சிச்சு..ஆனா அப்படி எதிர்ப்பார்க்கவில்லை..!

AR Rehman எல்லாம் வாய்ப்பே இல்லை..இன்னும் பலப்படங்களுக்கு சிறப்பான இசையை கொடுக்க வாழ்த்துவோம்..

சின்ன அம்மிணி said...

அப்ரிதி பண்ணினது அசிங்கம். அவரை நிரந்தரமா தூக்கணும்

எல் போர்ட் said...

//2013ல் அமெரிக்க ஆட்சியைக் கைப்பற்றுவோம்//

ந்யூயார்க் செனேட்க்கு என்னத் தான நிறுத்துவீங்க? : ))))))))))))

துபாய் ராஜா said...

இந்த வார பிதற்றல்கள் அருமை. :))