பல வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கிரிக்கெட் சம்மந்தப்பட்ட பதிவுகள் இந்த வலைப்பூவுக்கு மாற்றப்பட்டுள்ளது. உங்கள் மேலான ஆதரவை அங்கேயும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கிரிக்கெட் பிதற்றல்கள்
=======================
ரொம்ப நாளா நான் எழுதுற கிரிக்கெட் பதிவுகள் பிடிக்காத ஒருத்தர் இனிமே நீ கிரிக்கெட் பத்தி எழுதினா உன் ப்ளாக் பக்கமே வர மாட்டேன். ஸ்விட்சர்லாந்திலயே இருந்திருவேன்னு சொன்னதால, வேற வழியே இல்லாம என்னோட கிரிக்கெட் அரிப்பைத் தணிச்சிக்கிறதுக்காக கிரிக்கெட் பதிவுகளை தனியா ஒரு ப்ளாக்ல போட்டுட்டேன் - கிரிக்கெட் பிதற்றல்கள் .
இனிமே என்னோட கிரிக்கெட் பத்தின இடுகைகளைப் பாக்க வேண்டாம் அப்பிடின்னு நினைக்கிறவங்க இங்கயே நின்னுக்கலாம். கிரிக்கெட் இடுகைக்கு மட்டும் தான் வர்றோம்னு சொல்றவங்க அங்க மட்டும் நின்னுக்கலாம். ரெண்டுமே பாப்போம்னு சொல்றவங்க வேற வழியில்ல ரெண்டு வீட்டுக்கும் வந்து தான் ஆகணும். ரெண்டுமே வேணாம்டான்னு சொல்றவங்க வேற நல்ல ப்ளாக் பாத்து போங்க.. :)) இப்ப நான் எழுதுற இந்த கிரிக்கெட் தான் இந்த ப்ளாக்ல நான் கடைசியா எழுதுற அந்த விளையாட்டப் பத்தின வார்த்தை.
இந்தியா - பாகிஸ்தான்
======================
ரொம்ப சந்தோசம்ங்க. இந்தியா இன்னிக்கி பாகிஸ்தானை தோறகடிச்சிருச்சி. அதான் கிரிக்கெட் பத்தி எழுத மாட்டேன்னு சொல்லிட்டேன்ல. இது ஹாக்கி மேட்டர். 4-1 அப்பிடிங்கிற கோல் கணக்குல வெற்றிக்கனியைத் தட்டிப் பறிச்சிருக்கு. இதே வேகத்தோட உலகக் கோப்பையையும் பிடிங்கிட்டு வந்தா ரொம்ப சந்தோசப்படுவேன்.
அனோமா பொன்சேகா
======================
எனக்கு வந்த ஆத்திரத்துக்கு இந்தம்மா பேரை எழுதி அந்தப் பேப்பரை சுக்கு நூறா கிழிச்சி எறிஞ்சேன். அப்புறம் என்னங்க. அந்தாளு செயில்ல இருந்துக்கிட்டே தேர்தல்ல நிக்கிறதுக்கு மனு தாக்கல் செஞ்சாராம். காந்தி, மண்டேலாவுக்கு அப்புறம் இவருக்குத்தான் அந்தக் குடுப்பினை கெடச்சிருக்காம். யார யாரு கூட கம்ப்பேர் பண்றதுன்னு ஒரு விவஸ்தை வேணாம்? இவங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது.
த்ரீ இடியட்ஸ்
=============
ஓப்பனிங் சீன். காலேஜ்ல சீனியர்ஸ் எல்லாம் ஜூனியர்ஸ ராக்கிங் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அப்ப ஜூனியர்ஸ் எல்லாம் ரொம்ப கஷ்டப் படுறாங்க. ஒருத்தர் சொல்றாரு “இதை எல்லாம் யாரு கேக்கப்போறாங்க?”
“அதுக்குன்னு ஒருத்தன் பொறந்திருப்பான்”
உடனே கட் பண்ணி வெளிய காட்டுறாங்க. ஷூ போட்ட ரெண்டு கால் மட்டும் வேகமா ஓடி வருது. அப்பிடியே மேல கேமரா போகுது. முதுகுல ஒரு பேக்பாக் மாட்டிக்கிட்டு ஒரு உருவம் வேகமா ஒடுது. அப்பிடியே ஓடி ஒரு பஸ்ஸை ஓவர் டேக் பண்ணி திரும்பி அந்த டிரைவரைப் பாத்து ஒரு லுக்கு விடுது. அப்பிடியே அந்த பஸ்ஸோட கண்ணாடி வழியாக் காட்டுறாங்க. கையச் சுழட்டி ஒரு சல்யூட் வக்கிது. அப்பிடியே ஒரு குத்து ஓப்பனிங் சாங்.
அப்புறம் அந்தக் காலேஜுக்குள்ள நுழையிறாரு. சீனியர்ஸ் அவரையும் ராக்கிங் பண்ணப் பாக்குறாங்க. அப்ப சொல்றாரு - “என்ன ராக்கிங்க் பண்ணனும்னா நானா பண்ணிக்கிட்டாத்தான் உண்டு. வேற வேற வேற எவனாலயும் பண்ண முடியாது”
இப்பிடித்தான் இருக்கப் போவுது தமிழ்ல.. ஏன்னா அதுல விஜய் நடிக்கப்போறாராம். இந்த விசயம் கேள்விப் பட்டதுல இருந்து சரியா தூக்கமே வர மாட்டேங்குது. தமிழ் கூறும் நல்லுலகம் இன்னும் என்ன எல்லாம் சோதனைய அனுபவிக்கனுமோ தெரியலை.
பனிப் பொழிவு
==============
கடந்த நாலு நாளா இங்க சரியான பனிப் பொழிவு. வீட்டச் சுத்தி ஒரே பனி. நம்ம ஜூனியர் இதுவரைக்கும் பல தடவை பனிப் பொழிவைப் பாத்திருந்தாலும், இதுவரைக்கும் அதுல விளையாடினது இல்ல. இந்தத் தடவை கொஞ்சம் அதிகமாவே இருக்கவும் அவருக்கு ஸ்னோ ஜாக்கெட் போட்டு விட்டு வெளிய இறக்கி விட்டோம். நல்லா எஞ்சாய் செஞ்சாரு. அதுக்கப்புறம் அடிக்கடி வெளிய போகணும்னு அடம்புடிக்க ஆரம்பிச்சிட்டாரு.
22 comments:
விஜய் மேட்டர் கலக்கல். திரீ இடியட்ஸ்க்கு தமிழ்ல்ல மூன்று முட்டாள்கள் - ன்னு வச்சா தமிழ் தாத்தா கோவிச்சுக்குவாரு....
அதனால திரீ இடியட்ஸ்க்கு தமிழ்ல்ல...
"மூன்று தமிழ் திரைப்பட ரசிகர்கள்" அப்படியின்னு தலைப்பு வைக்கலாம். ஏன்னா நாம தானே காலம் காலமா காலங்காத்தலேருந்து முட்டாளா இருக்கோம். ஹீ ஹீ ஹீ....
என்னது த்ரீ இடியஸ்ட்ல இ.தளபதியா? வெளங்கிரும்...ஒரு நல்லப்படத்தை நாறடிக்கிறதுக்குன்னே தமிழ்ல எடுக்குறானுங்களே... இவனுகளை கன்ட்ரோல் பண்ண யாருமே இல்லயா? இதை துக்க செய்தியாக அனுஷ்டிக்கிறேன்.
போட்டோ சூப்பர்... இன்னும் ரெண்டு பனிப்பொழிவு படங்களை போடுங்க தல...
அப்ப இனிமேல் நிறைய கிரிக்கெட் பதிவு எழுதப்போறேன்னு சொல்லுங்க
ஏன் முகிலன் விஜய் கொஞ்சம் உருப்படியா நடிச்சு அப்படியே வேறொரு ரூட்ல பயணிக்க வாய்ப்பே இல்லையா
Best wishes for your blog on cricket.
Your son looks very cute. The photo is very nice.
அட! குட்டி பென்குவின். செம க்யூட்:)
ஜூனியருக்கு காரட் மூக்கு எல்லாம் வைச்சு ஸ்னோமேன் செய்து காட்டலியா நீங்க.
விஜய் 3 இடியட்ஸ் ரீமேக்ல நடிக்கறது பரவாயில்லை. ஆனா ஆமிர்கான் பாத்திரத்துல நடிக்காம இருந்தானா பரவாயில்லை. அந்த ஏழைக்குடும்பத்து பையனா நடிக்கலாம்.
அட திருஷ்டி சுத்தி போடுங்க... உங்க பிளாக்குக்கும் சேர்த்து...
பூவிதழில்... பனித்துளி பார்த்ததுண்டு....
பனித்துளியில்.... பூவிதழ்
பார்கின்றேன்.
wow... junior mukilan... soooooo cute...
என்னது.... கிரிக்கெட் பதிவு படிக்க மாட்டேன்னு சொல்லுறாங்களா... யாருங்க அது... கிரிக்கெட் பேட் வச்சு ரெண்டு தட்டு தட்டணும்... நான் எல்லாம் கிரிக்கெட் பத்தி தொடர் இடுகை எழுதுறதா இருக்கேனாக்கும்...
ஜூனியர்-க்யூட்ட் :)
//அதுக்கப்புறம் அடிக்கடி வெளிய போகணும்னு அடம்புடிக்க ஆரம்பிச்சிட்டாரு.//
ஹா.. ஹா.. க்யூட்
விஜய் இன் த்ரீ இடியட்ஸ்.. நல்ல கற்பனை..
கலக்கல்.. போட்டோ.:))
இங்க அடிக்கிற வெயில்ல ஃபால்ஸ் (சீலிங்) ஸ்னோ மாதிரி விழுது..:(
ஏங்க..விஜய் நல்ல படம் பண்ண மாட்டரர்னு சொல்லிறிங்க..இதேமாதிரி ஒரு நல்ல படத்தை விஜயை வைத்து ரீமேக் பண்ணபோரங்கனு சொன்னாலும் ஓட்டுறிங்க..அப்புறம் அவர் என்னதான் பண்ணுவாரு..:)
@விசா - சரியாச் சொன்னீங்க போங்க
@நாஞ்சில் பிரதாப் - பனிப் பொழிவு படங்களைப் போட முயற்சி பண்றேன் நாஞ்சில்
@தர்ஷன் - ஆமாங்க நிறைய எழுதப் போறேன்..
விஜய் அப்பிடி நல்ல ரூட்டைப் பிடிச்சி முன்னேறினா கண்டிப்பா சந்தோசப் படுவேங்க
@சித்ரா - நன்றிங்க.
@வானம்பாடிகள் - உங்க கமெண்ட் சூப்பர் சார்
@சின்ன அம்மிணி - ஸ்னோ மேன் செஞ்சோம் அகிலா, அது ஸ்னோ பாய் மாதிரி இருந்தது. அதுனால ஜூனியர் அதை அடிச்சி நொறுக்கிட்டார் - படம் எடுக்குறதுக்குள்ள
விஜய் அமீர் பாத்திரத்தில நடிச்சாக்கூட ஓக்கே தான். ஆனா பாத்திரத்தை நசுக்கிறாம இருக்கணும்.
@க.பாலாசி - நன்றிங்க
@சி.கருணாகரசு - உங்க கவிதை சூப்பர்
@கலகலப்ரியா - Thanks, ஆமாங்க டெய்லி பஸ்ல வந்து மிரட்டுராய்ங்க. என்னான்னு கேளுங்க
@புபட்டியன் - வாங்க நண்பா.. நன்றி
@ஷங்கர் - நல்ல காமெடி
@வினோத்கௌதம் - நல்ல படமா இருக்கிறதுனாலதாங்க பயமா இருக்கு. விஜய் இந்தப் படத்தை அமீர்கானோட டெடிகேஷனோட செஞ்சா நான் பாராட்டாமயா போயிரப்போறேன். நான் பதிவுல சொன்னா மாதிரி ஆயுடுமோன்னு தான் பயமா இருக்கு.
பதிவுகள் சூப்பராக இருக்கின்றன..
இன்னும் படித்துக்கொண்டு இருக்கிறேன் சார்...
இவ்வளவு நாம் எப்படி என் கண்ணில
படாமலிருந்தீர்..
சரி சார்.. அடிக்கடி வருவேன்...
//ரொம்ப நாளா நான் எழுதுற கிரிக்கெட் பதிவுகள் பிடிக்காத ஒருத்தர் இனிமே நீ கிரிக்கெட் பத்தி எழுதினா உன் ப்ளாக் பக்கமே வர மாட்டேன். ஸ்விட்சர்லாந்திலயே இருந்திருவேன்னு சொன்னதால, வேற வழியே இல்லாம என்னோட கிரிக்கெட் அரிப்பைத் தணிச்சிக்கிறதுக்காக கிரிக்கெட் பதிவுகளை தனியா ஒரு ப்ளாக்ல போட்டுட்டே//
நான் சொல்லலாமுன்னு நினைச்சேன், அவங்க சொல்லிட்டாங்க
ரீமேக் கமெண்ட் ஜூப்பர்..
ஜூனியர் க்யூட்.. கருணாகரசு கவிதை நல்ல பொருத்தம்..
ஜூனியர் ஸோ க்யூட். சுத்திப்போடுங்க அவருக்கு..
வெய்யில் ஆரம்பிச்சிருக்கிற இந்த நேரத்தில் பனிப்பொழிவு போட்டோக்கள் குளுமையா இருக்கு.
//
ரொம்ப நாளா நான் எழுதுற கிரிக்கெட் பதிவுகள் பிடிக்காத ஒருத்தர் இனிமே நீ கிரிக்கெட் பத்தி எழுதினா உன் ப்ளாக் பக்கமே வர மாட்டேன்
//
இதை நான் வழி மொழிகிறேன்...க்ரிக்கெட் பத்தி படிக்காம ரொம்ப சந்தோஷமா இருக்கு...
நீங்க அடிக்கடி க்ரிக்கெட் பத்தி எழுதறதால எனக்கு உங்க பதிவு பக்கம் வரவே பயம்...அதுவும் ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒருத்தர் பேரை மட்டும் முழு இடுகைக்கும் அடிச்சி வச்சிருந்தீங்க...அய்யோன்னு ஆயிடுச்சி...
இனிமே அடிக்கடி வரலாம்...:0))))
க்ரிக்கெட்டை பத்தி இனிமே எழுத மாட்டேன்னு சொன்னதுக்காகவே உங்களுக்கு ரெண்டு வோட்டு! :0)))
// இந்தியாவில் பிறந்து இந்தியாவில் படித்து அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு உழைத்துக் கொட்டும் //
இந்தியாவிலும் இதான் நடக்குது கண்ணூ!
இந்தியாவில் பிறந்து இந்தியாவில் படித்து, அமெரிக்காவில் அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு உழைத்துக் கொட்டும் ஒருவரது சகா நான்! இது எப்பூடி?? இஃகிஃகி!
//இப்பிடித்தான் இருக்கப் போவுது தமிழ்ல.. ஏன்னா அதுல விஜய் நடிக்கப்போறாராம். இந்த விசயம் கேள்விப் பட்டதுல இருந்து சரியா தூக்கமே வர மாட்டேங்குது//
அப்புடி ஒரு அசம்பாவிதம் நடக்கவே நடக்காது..கவலப்படாம தூங்குங்க
நல்லாதான் எழுதுறீங்க சுவாரசியாமாக.
Post a Comment