Sunday, February 14, 2010

என் காதல்கள் - காதலர் தின சிறப்புப் பதிவு

இதை எல்லாம் டீன் - ஏஜ் கொசுவத்தி பதிவுலயே எழுதியிருக்கலாம். ஆனா அது ரொம்ப பெருசாயிடும் அப்பிடிங்கிறதாலயும், காதலர் தினத்துக்கு எழுத ஒண்ணும் இல்லாமப் போயிரும்ங்கிறதாலயும், இப்போ வெளிவருது.


என் முதல் காதல் - சைக்கிள். சின்ன வயதிலிருந்தே சைக்கிள் ஓட்டுவது என்றால் எனக்கு அலாதி பிரியம். நான் வாடகை சைக்கிள் ஓட்ட செலவழித்த காசில் இரண்டு புது சைக்கிள்கள் வாங்கியே இருக்கலாம். ஆனாலும் என் அப்பா எனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுக்கவில்லை. ஒரே பையனாம். நான் ஹைஸ்கூல் சேர்ந்ததும் பக்கத்து கேர்ள்ஸ் ஸ்கூலில் படித்த என் அக்காவுக்கு ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்து என்னை ஸ்கூலுக்கு கூட்டிச் செல்லும் ரிக்‌ஷாவாக்கிவிட்டார். 


பின்னாளில் ஏழாம் வகுப்பு வந்ததும் ஒரு நாள் அப்பாவின் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஸ்கூலுக்கு வந்து, திரும்பும்போது சைக்கிள் செயின் கழன்று, ஃப்ரீவீல் பிடிக்காமல் போய் வீட்டில் கொண்டு வைத்ததும், அப்பா செய்த முதல் காரியம் சைக்கிள் வாங்கிக் கொடுத்தது - சிவப்பு கலர் ஹெர்குலிஸ் கேப்டன் (விஜயகாந்த் இல்லை)


ஸ்கூல் ப்ரேயரில் உயரம் குறைவாக இருந்த காரணத்தால் முதல் வரிசையில் நின்றாக வேண்டிய கட்டாயம். பிரேயரில் மேடையில் நின்று பாடும் அந்தப் பெண்கள் குழுவில் ஒருத்தியான அவளை விடாமல் பார்த்து வந்திருக்கிறேன். பின்னால் ஒரு நாள் அந்தப் பெண் எனக்கு தூரத்துச் சொந்தம் என்று தெரிய வந்த நாளில் என்னை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்த அந்தப் புண்ணியவானிடம் - ஓ நான் பாத்துருக்கேன். ப்ரேயர்ல மேடைல நின்னு பாடுவா என்று சொன்னதும், நானும் உங்களப் பாத்திருக்கேன், முத வரிசைல நிப்பிங்களே? - என்று அவள் சொன்னதும் பாரதிராஜா படம் போல ஆயிரம் வீணைகளை எனக்குள் யாரோ மீட்டினார்கள். இதை காதல் என்று நான் அப்போது நினைத்தாலும், இந்த ஒரு சம்பவத்திற்குப் பிறகு இருவருக்கும் வேறு எதுவும் தோன்றவில்லை. 


கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், கணிதம் இந்த மூன்று வகுப்புகளுக்கும் கெமிஸ்ட்ரி மேஜர் வகுப்போடு கம்பைண்ட் க்ளாஸ். கெமிஸ்ட்ரியில் படித்த அவளை சும்மா இல்லாமல் நண்பனோடு பெட் கட்டி விடாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டே இருப்பேன். காதலாகவும் இல்லை கத்திரிக்காயாகவும் இல்லை. போகப் போக அவளும் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தாள்.


ஒருநாள் - வழக்கமாக கரண்ட் கட்டான மதியம் - என் வீட்டு வராந்தாவில் சட்டையில்லாமல் படுத்திருந்த போது யாரோ என் அக்காவின் பேரைச் சொல்லி அழைப்பது கேட்டு எழுந்து பார்த்தால் - என் பக்கத்து வீட்டுப் பெண் (அவளும் என் காலேஜ் தான் சீனியர்) உம், அவளுடன் அந்த கெமிஸ்ட்ரி ஃபிகரும். அதிர்ச்சியில் உள்ளே இருந்த என் அக்காவை கை காட்டிவிட்டு நான் சட்டையை மாட்டிக்கொண்டு வீட்டை விட்டே போய்விட்டேன். 


பின்னர் அவள் என் அக்கா-அம்மாவுடன் நட்பு பேணிக்கொண்டு அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து போக ஆரம்பித்தாள். ஒரு நாள் என் வீட்டில் அனைவரும் வெளியூருக்குப் போயிருந்த அந்த சமயத்தில் என் சீனியர்கள் - ஆண் பெண் இருபாலரும் - சிலரோடு லன்ச் சமைக்க திட்டம் தீட்டியிருந்தோம். ஆனால் என் சீனியர்கள் வருமுன் அவள் வந்து விட்டாள். புத்தகம் எடுக்க வந்ததாக சாக்கு சொல்லி. சிறிது நேரம் அவளுடன் பொதுவாகப் பேசிக் கொண்டிருக்கும் சமயம் என் சீனியர்கள் வந்துவிட சிறிது நேரம் பேசிச் சென்றபின் அவர்கள் என்னை ஓட்டிய ஓட்டு இன்னமும் மறக்க முடியாது.


அதன் பிறகு இது போல சில சந்தர்ப்பங்கள். ஒவ்வொரு முறையும் யாராவது தடை. ஒரு நாள் அவள் என்னை மதியம் ஒரு மணிக்கு அவள் வீட்டுக்கு வரச்சொல்லி என் வகுப்புத் தோழனிடம் செய்தி விட்டுப் போயிருந்தாள். என்னால் ஏனோ போக முடியவில்லை. இதையும் - ஒரு மணி அடித்தால்.. என்று என் நண்பர்கள் கேலி செய்து திரிந்தனர். 


எனக்கு அவள் மீது காதல் என்று எதுவுமில்லை. ஆனால் அவளுக்கு இருந்ததா என்று எனக்குத்தெரியாமலே போய் விட்டது. 


அடுத்தது என் தோழி ஒருத்தியிடம் தென்னை மரத்தில் தேள் கொட்டி பனை மரத்தில் நெறி கட்டியது போல எதற்காகவோ ஒரு அவசர முடிவெடுத்து இல்லாத என் காதலை அறிவிக்க, அவளும் அதற்காகக் காத்திருந்தது போல அதை ஏற்றுக் கொண்டாள். சில நாட்களிலேயே அது உண்மைக் காதல் அல்ல, அது தொடரவும் முடியாது என்பதை உணர்ந்து கொண்ட நான் - நான் மட்டுமே, நாங்கள் இல்லை - என்னால் முடிந்த அளவுக்கு அவளுக்கும் உணர வைக்க முயற்சி செய்தேன். நான் பிரிந்து விட்டேன். அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சில காலம் என்னிடம் சாம, பேத, தண்ட முறைகளில் காதலை புதுப்பிக்க முயற்சி செய்தாள். என்னிடம் மறுப்பு மட்டுமே பதிலாக இருந்தது.


சென்னையில் என்னுடைய கடைசி செமஸ்டர் ப்ராஜக்ட் முடிந்து ஜூலை 2ம் தேதிக்காக - பெங்களூரில் உள்ள அந்த மென்பொருள் நிறுவனத்தில் சேர வேண்டிய நாள் - காத்திருந்த போது ஜூன் 15ம் தேதியே இன்னொரு நிறுவனத்தில் சேர்ந்த என்னுயிர்த்தோழி - இதுவரை பெற்றோரைப் பிரிந்திராத அவள், அந்த ஏக்கத்தில் என்னை அழைத்தாள், அழுதாள். அவள் அழைப்பிற்காக அந்த சனிக்கிழமையே கிளம்பி அவளைப் பார்க்க பெங்களூர் சென்றேன். அன்றைய தினத்தை அவளுடன் கமர்சியல் ஸ்ட்ரீட்டிலும், பிரிகேட் ரோட்டிலும், எம்.ஜி.ரோட்டிலும், கப்பன் பூங்காவிலும் செலவழித்து அடுத்த நாள் திரும்பி என் ஊர் சென்றேன்.


பின்னர் நானும் பெங்களூரில் சேர்ந்ததும், பிரிகேட் ரோடும், கமர்சியல் ஸ்ட்ரீட்டும் எங்களைப் பார்க்காத வாரக்கடைசி நாட்களே இல்லை எனலாம்.


திடீரென்று அவளை சென்னையில் உள்ள கிளைக்கு மாற்றம் செய்ததும் அவளும் பிரிந்து போனாள். அந்தப் பிரிவு எங்களுக்குள் ஆழத்தில் ஏதோ மாற்றம் செய்ய, இருவருமே ஒருவர் மீது மற்றவருக்கிருந்த காதலை உணர்ந்த தருணம் அது. இருவரும் எங்களின் பொது நண்பியிடம் எங்கள் காதலைச் சொல்லி அவள் கருத்தை எதிர்பார்த்திருந்த போதுதான் இருவருக்குமே மற்றவரிடம் அப்படி ஒரு எண்ணம் இருப்பதை உணர்ந்தோம். சொல்லிக்கொள்ளாமலேயே எங்கள் காதல் மலர்ந்தது. கடைசியாக இது உண்மையான காதல் என்பதற்கு எங்களின் 6 வருட திருமண வாழ்வும் ஒரு வயது மகனுமே சாட்சி.. 




என் காதல் மனைவியோடு அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.


Happy Valentines Day



30 comments:

தர்ஷன் said...

வாழ்த்துக்கள்
யதார்த்தமான பதிவு

Anonymous said...

வாழ்த்துக்கள்.

காதலர் தினத்துக்கு ஏத்த பதிவு.

Paleo God said...

:))))))

வாழ்க பல்லாண்டு.

புலவன் புலிகேசி said...

கதலர் தின வாழ்த்துக்கள்...

பின்னோக்கி said...

நல்ல காதலர் தின பதிவு.
உங்க வீட்டுல சண்டை புடிக்கலையா கல்யாணத்துக்கு ?. அத தனிப்பதிவா போடுங்க.

Subankan said...

அட!

வாழத்துகள்!!

செ.சரவணக்குமார் said...

அருமையான பதிவு. நல்ல நடையில் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் நண்பா.

பா.ராஜாராம் said...

மிக அருமையான நடையில் மிக அருமையான பதிவு!

Bavan said...

ரொம்ப பெரிய்ய்ய... ஆட்டோகிராப்..ஹிஹி

காதலர்தின வாழ்த்துக்கள் முகிலன் அண்ணே..;)

கலகலப்ரியா said...

ஆஹா... அருமையான ஆட்டோக்ராஃப்... வாழ்த்துகள் மக்கா...

//ஜூலை 2ம் தேதி//

இந்த டேட்ல பெரிய பெரிய மகான்கள் எல்லாம் பொறந்திருக்காங்க...

Chitra said...

Thats a nice story. வாழ்த்துக்கள்.

பழமைபேசி said...

நன்று முகிலன்!

gulf-tamilan said...

வாழ்த்துக்கள்!!!

Unknown said...

@தர்ஷன் - நன்றி தர்ஷன்.

@சின்ன அம்மிணி - நன்றி.

@ஷங்கர் - நன்றி ஷங்கர்.. என்ன பார்கோடெல்லாம் புதுசா இருக்கு?

@புலவன் புலிகேசி - நன்றி புலிகேசி.

@பின்னோக்கி - அது தனிப் பதிவா இருக்கு.. :)

@சுபாங்கன் - நன்றி சுபாங்கன்.

@செ.சரவணக்குமார் - நன்றி சரவணன்

@பா.ராஜாராம் - நன்றி ஐயா..

@பவன் - நன்றி தம்பி

@கலகலப்ரியா - வாங்கக்கா ரொம்ப நாளா ஆளையே காணோம்? கண்டிப்பா அன்னிக்கு வாழ்த்திருவோம்.. :))

@சித்ரா - நன்றி

@பழமைபேசி - வாங்கண்ணா, நான் எழுதனும்னு வச்சிருந்ததை வேற மாதிரி எழுத வச்சதுக்கு நன்றி.. :)

@கல்ஃப்-தமிழன் - வருகைக்கு நன்றி தமிழன்

@நசரேயன் - நன்றி தளபதி.

vasu balaji said...

நல்லாருக்கு நனவோடை.

குடுகுடுப்பை said...

வாழ்த்துகள்.

ப்ரியமுடன் வசந்த் said...

என் முதல் காதல் - சைக்கிள்.//

பாஸா பெயிலா?

ப்ரியமுடன் வசந்த் said...

சிவப்பு கலர் ஹெர்குலிஸ் கேப்டன் (விஜயகாந்த் இல்லை)//

ஹே ஹேய் கருப்புன்னாத்தானே வி.க ஞாபகம் வரும்...

:))))

ப்ரியமுடன் வசந்த் said...

//எனக்கு அவள் மீது காதல் என்று எதுவுமில்லை. ஆனால் அவளுக்கு இருந்ததா என்று எனக்குத்தெரியாமலே போய் விட்டது. //

போய்யா...

ப்ரியமுடன் வசந்த் said...

கடைசியாக இது உண்மையான காதல் என்பதற்கு எங்களின் 6 வருட திருமண வாழ்வும் ஒரு வயது மகனுமே சாட்சி..
//

ஜூப்பர் தினேஷ் மனமார்ந்த ஒரு உண்மையான காதல்ஜோடிக்கு காதலர்தின வாழ்த்துக்கள் சொல்றதில நெம்ப சந்தோஷம்...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

யதார்த்தமான பதிவு முகிலன்.. இன்று போல் என்றும் தொடரட்டும் உங்கள் காதல்..

ஆமா.. இப்பவே எல்லாத்தையும் சொல்லிட்டா அப்புறம் அடுத்த காதலர் தின சிறப்பு பதிவா என்னத்த எழுதுவீங்க? :))

Unknown said...

@வானம்பாடிகள் - நன்றி சார்

@குடுகுடுப்பை - நன்றி

@வசந்த் - பாஸ் தான். அதான் அப்பா வாங்கிக் குடுத்துட்டாரே?

@எல் போர்ட் - நன்றி சந்தனா. அடுத்த காதலர் தினத்துக்கு இதை மறு பதிவா போடுவோம்.. :)

S Maharajan said...

வாழ்த்துக்கள்!!!

புல்லட் said...

நான் கடைசியும் தேள்கறிசாபபிட்டு நெறிகட்டினகதைமாதிரி ஏோவாயிரும் எண்ட போயிட்டிருக்கப்ப டப்க்குன்னு சுபம் பொட்டிட்டீங்க.. பிறகென்ன.. வாழ்த்துக்கள்.. அவங்கதான் கம்பராமயணம் புகழ் டங்கமணியா.. நல்ல லவ் ஸ்டோரி.. :)

vasu balaji said...

பாண்டியரே! உம் ஆணையின் படி பரிசில் வந்து சேர்ந்தது மன்னா! மிக்க நன்றி.:))

அது சரி(18185106603874041862) said...

//
இதை எல்லாம் டீன் - ஏஜ் கொசுவத்தி பதிவுலயே எழுதியிருக்கலாம். ஆனா அது ரொம்ப பெருசாயிடும் அப்பிடிங்கிறதாலயும், காதலர் தினத்துக்கு எழுத ஒண்ணும் இல்லாமப் போயிரும்ங்கிறதாலயும், இப்போ வெளிவருது.
//

இதுக்குப் பேருதான் எதையும் "பிளான் பண்ணி பண்ணனும்"கிறதா???

அது சரி(18185106603874041862) said...

//
சில காலம் என்னிடம் சாம, பேத, தண்ட முறைகளில் காதலை புதுப்பிக்க முயற்சி செய்தாள். என்னிடம் மறுப்பு மட்டுமே பதிலாக இருந்தது.
//

அடி வாங்கினதை இப்படி சிம்பிளா முடிச்சா எப்படி? சாம, பேத, தானமெல்லாம் வேண்டாம்...அந்த தண்டம் மேட்டரு மட்டும்....எக்ஸ்பிளனேஷன் ப்ளீஸ் :0))))

நினைவுகளுடன் -நிகே- said...

அசத்தல்
வாழ்த்துக்கள்!!!

Paleo God said...

எனக்கு மெயில் அனுப்புங்க Pls.. palaapattarai@gmail.com

Prathap Kumar S. said...

ஆஹா...சாரி தல கொஞ்சம் லேட்டா வந்துட்ப்போலருக்கு...
காதல் அனுபவம் படுஜோர்.... உங்களுக்கும் தாமதமான் காதலர்தின வாழ்த்துக்கள். :)