சென்னையில் நான் மிகக் குறுகிய காலமே வாசம் புரிந்திருக்கிறேன்.
மேலே சொன்ன கேள்விகள் அனைத்துக்கும் விடை சொன்னது அங்காடித்தெரு.
சில பல மிகைப் படுத்தப்பட்ட காட்சிகள் இருந்தாலும் அந்தக் கடைகளில் கஷ்டப்படும் தென் தமிழக இளைஞர்களின் வாழ்க்கை முறையை படம் எடுத்துக் காட்டிய வசந்த பாலனுக்கு நன்றி. இனி அந்தக் கடைகளின் பக்கம் செல்லும் யாருக்கும் அங்காடித்தெரு நினைவுக்கு வராமல் போகாது.
அடுத்த முறை நான் ரங்கநாதன் தெருவுக்குப் போனாலும் அந்தக் கடைக்குள் நுழைய மாட்டேன். இந்த முறை காரணம் மட்டமான கஸ்டமர் சர்வீஸ் இல்லை. அந்தக் கடைகளை புறக்கணிப்பதன் மூலம் அவர்களுக்கு ஒரு விடிவு காலம் வராதா என்ற ஒரு குருட்டு நம்பிக்கை தான்.
என் தங்கமணி அப்போது எனக்கு நெருங்கிய நண்பர்(நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர். அப்போது காதலி ஆகவில்லை). அவரும் நானும் சென்னையில் இறுதிவருட ப்ராஜெக்ட் செய்வதற்காக வந்திருந்தோம். ஒரு முறை தங்கமணியின் பெற்றோர் அவரைப் பார்ப்பதற்காக சென்னை வந்திருந்தனர்.
சென்னை வந்த பின் என்ன செய்வார்கள்? மகளை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் செய்யலாம் என்று கிளம்பினர். என் கெட்ட நேரம் நானும் அவர்களோடு அழைத்து, மன்னிக்கவும் இழுத்துச் செல்லப்பட்டேன்.
மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கி நடைப்பாலம் ஏறி அந்தப் பக்கம் வந்து இறங்கினால் ரங்கநாதன் தெரு. பாலத்திலிருந்து படிகளில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு காசு எதுவும் போடாமல் கீழே இறங்கி வந்தால் நேராக ஒரு ஓட்டல் இருக்கும். அந்த ஓட்டலின் வாசலில் கோன் ஐஸ் விற்பார்கள். அதிலிருந்து நான்கு கடைகள் தள்ளி இருந்த ஒரு ஜவுளிக் கடையில் ஆரம்பித்தார்கள்.
அந்தச் சுடிதார் எடுத்துப் போடுங்க. இந்தச் சுடிதார் எடுத்துப் போடுங்க, என்று கிட்டத்தட்ட கடையில் இருக்கும் அத்தனை சுடிதார்களும் எங்கள் முன் பரப்பப்பட்டு இருந்தன. ஒரு சுடிதாரை எடுத்து மகளின் மீது வைத்து அழகு பார்ப்பார். “இது நல்லாருக்குல்ல அத்தான்?” என்று கணவரிடம் ஒரு கேள்வி. அவர் மையமாகத் தலையசைப்பார். “சரி இருக்கட்டும்”.
மேலே சொன்னது கிட்டத்தட்ட அனைத்துக் கடைகளிலும். இப்படி அங்கே ஆரம்பித்து ஒரு ஜவுளிக்கடை விடாமல் புகுந்து வெளியேறி கடைசியாக நாங்கள் நிலை கொண்டது போத்தீஸ். இதுவரை ஒரு கர்ச்சீஃப் கூட வாங்கவில்லை.
கடைசியாக போத்தீஸ்ஸில் துணி வகைகள் எடுத்துக் கொண்டு திரும்பினோம். நான் தங்கமணியிடம் கேட்ட கேள்வி - “இதுக்கு முதல்லயே போத்தீஸ் வந்திருக்கலாமே?”. அவர் பதில் “அதெப்படி? வேற எங்கயாவது நல்ல சுடிதார் இருந்து அதை மிஸ் பண்ணியிருந்தா?”
இதில் நாங்கள் அந்த ஒரு கடைக்குள் மட்டும் நுழையவில்லை. என் இப்போதைய மாமனாருக்கு அங்கே போகாதது ஒரு பெரிய குறை. என் இன்னாள் மாமியாருக்கோ அங்கு இருக்கும் கூட்டத்தைப் பார்த்தாலே அலர்ஜி. அதோடு அவர்கள் மிகவும் குறைந்த விலையில் பொருட்களை விற்பதால் அந்தப் பொருட்களின் தரத்தின் மீதும் சந்தேகம். அதனால் அவர் அந்தக் கடைக்குள் நுழையவில்லை.
என் மாமனார் அந்தக் கடை உரிமையாளருடன் தனக்கிருந்த நட்பைப் பற்றியும் அவர் எவ்வளவு சிறிய கடையாக ஆரம்பித்து பெரிய ஸ்தாபனமாக வளரச் செய்தார் என்பதைப் பற்றியும் சிலாகித்துக் கொண்டே வந்தார்.
என்னதான் முயற்சி செய்தாலும் குறுகிய காலத்தில் இப்படி ஒரு அசுர வளர்ச்சி என்பது என்னை ஆச்சரியப்படுத்தும் ஒரு விசயம். பொருட்களின் தரத்திலோ இல்லை வேறு எதாவது கோல்மாலோ இல்லாமல் எப்படி இவர்களால் இப்படி ஒரு வளர்ச்சியை எட்ட முடியும்?
நான் சில முறை அந்தக் கடைக்குள் நுழைந்திருக்கிறேன். அந்தக் கடை தவிர வேறு கடைகளில் வியாபாரம் செய்யும் அளவுக்கு என்னிடம் பணமில்லாத பொழுது. குறைந்த விலைக்காக அங்கு கிடைக்கும் மட்டமான கஸ்டமர் சர்வீஸை சகித்துக் கொண்டிருந்திருக்கிறேன். எனக்கொன்றும் ஓசியில் கொடுக்கவில்லையே? குறைந்த விலையேயானாலும் என் கைக்காசைப் போட்டுத்தானே வாங்குகிறேன். பின் எதற்கு இப்படி ஒரு கேவலமான பார்வை? சுள்ளென்று எரிந்து விழும் பணியாளர்கள்?
போத்தீஸிலும் ஆர்.எம்.கே.வியிலும் வாங்கும் அளவுக்கு என் நிலை உயர்ந்ததும் கஸ்டமர் சர்வீஸ் என்ற ஒரே காரணத்துக்காக சரவணா ஸ்டோர்ஸுக்குள் நுழைவதை தவிர்த்திருக்கிறேன்.
மேலே சொன்ன கேள்விகள் அனைத்துக்கும் விடை சொன்னது அங்காடித்தெரு.
சில பல மிகைப் படுத்தப்பட்ட காட்சிகள் இருந்தாலும் அந்தக் கடைகளில் கஷ்டப்படும் தென் தமிழக இளைஞர்களின் வாழ்க்கை முறையை படம் எடுத்துக் காட்டிய வசந்த பாலனுக்கு நன்றி. இனி அந்தக் கடைகளின் பக்கம் செல்லும் யாருக்கும் அங்காடித்தெரு நினைவுக்கு வராமல் போகாது.
இது மாதிரி படங்களுக்கு குறைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு நம் முழு ஆதரவையும் அளிக்க வேண்டும்.
அனைவரும் இந்தப் படத்தை ஒரு முறையாவது பாருங்கள்.
அடுத்த முறை நான் ரங்கநாதன் தெருவுக்குப் போனாலும் அந்தக் கடைக்குள் நுழைய மாட்டேன். இந்த முறை காரணம் மட்டமான கஸ்டமர் சர்வீஸ் இல்லை. அந்தக் கடைகளை புறக்கணிப்பதன் மூலம் அவர்களுக்கு ஒரு விடிவு காலம் வராதா என்ற ஒரு குருட்டு நம்பிக்கை தான்.
39 comments:
me the first ( அய்.. நாந்தான் முதலு)
ஆமா சார்.. இந்த சென்னை, சென்னைநு சொல்றாங்களே..
அது எங்கிருக்குது சார்?..
நல்ல வேளை சார்.. எனக்கு இனியும் அந்த அனுபவம் கிடைக்கல..
// என் கெட்ட நேரம் நானும் அவர்களோடு அழைத்து, மன்னிக்கவும் இழுத்துச் செல்லப்பட்டேன். ///
அய்யோ....அய்யோ.... இதுபோல மாட்டினா ரெம்ப கொடுமை சார்...
நானும்
அந்த கடைக்கு போககூடாது என்பதை பல வருடங்களாக கடைபிடித்து வருகிறேன்
///////அந்தச் சுடிதார் எடுத்துப் போடுங்க. இந்தச் சுடிதார் எடுத்துப் போடுங்க, என்று கிட்டத்தட்ட கடையில் இருக்கும் அத்தனை சுடிதார்களும் எங்கள் முன் பரப்பப்பட்டு இருந்தன. ஒரு சுடிதாரை எடுத்து மகளின் மீது வைத்து அழகு பார்ப்பார். “இது நல்லாருக்குல்ல அத்தான்?” என்று கணவரிடம் ஒரு கேள்வி. அவர் மையமாகத் தலையசைப்பார். “சரி இருக்கட்டும்”. /////
சரியாக சொல்லி இருக்கீங்க !
/என் கெட்ட நேரம் நானும் அவர்களோடு அழைத்து, மன்னிக்கவும் இழுத்துச் செல்லப்பட்டேன். /
அடங்கப்பா! சாமி. அண்டப் புளுகு ஆகாசப் புளுகு எல்லாம் இதுக்கு முன்னாடி எதுவுமேஇல்லை:))
/“இது நல்லாருக்குல்ல அத்தான்?” என்று கணவரிடம் ஒரு கேள்வி. அவர் மையமாகத் தலையசைப்பார். “சரி இருக்கட்டும்”. //
அப்பவே ப்ரோபேஷன் ஆரம்பிச்சாச்சா? ரைட்டு:))
தங்கமணின்னா அப்படித்தான் இருப்பாங்க.. அதெல்லாம் கண்டுக்கக்கூடாது :))
நானும் அந்தப் படம் பார்க்கனும்ன்னு நினைச்சிருக்கேன்..
கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்னு இருக்குங்க. அதுவும் கிட்டத்தட்ட இப்படித்தான்
நண்பா!
நமது பார்வைகளை கொஞ்சமேனும் மாற்றியிருக்கும் வசந்தபாலனுக்கு கண்டிப்பாய் நன்றி சொல்லவேண்டும்...
பிரபாகர்...
unga thangamani itha innum padikalaya? illati avanga email id kudunga link anuparen
உங்க தங்கமணி இந்த பதிவை பார்து கோபபடலியா?
மட்டுமல்ல ஏதோ தீவிர வாதிகளை பரிசோதிப்பதுபோல் அவர்களின் ஆடைக்ள்,கைப்பைகள் போன்றவற்றை தடவி பரிசோதிப்பது மிகவும் அருவெறுப்பான செயல்.இத்தனையும் மீறி அந்த கடைக்கு செல்பவர்கள் கண்டிப்பாக தன்மானத்தை சற்று நேரம் கழற்றிவைத்துவிட்டுத்தான் அங்கு ஷாப்பிங் செய்யவேண்டும்.கண்டிப்பாக இத்தகைய நிறுவணங்களை மக்கள் புறம் தள்ளி பாடம் கற்பிக்க வேண்டு,நல்லதொரு பகிர்வு.
சோகம் பிழிந்து எடுத்துவிட்டான்....
படம் நல்ல பாடம்....
ஊர் கூடினாத்தான் எதுவும் செய்ய முடியுமுங்க.... அதுக்கு முன்னாடி, பாதிக்கப்படுறவுங்க உணரணுமே??
சூப்பரா சொன்னிங்க தல... அந்தக்கடை எப்பவுமே மர்மம்தான்... வாசல்லமட்டும் பட்டுப்புடவையோ வரிசயை நின்னு வரவேற்புல்லாம் பலமா இருக்கும்..உள்ளப்போனா நிலைமையே வேற.... நல்லா காசு பார்க்குறானுங்க...
//மன்னிக்கவும் இழுத்துச் செல்லப்பட்டேன்.//
இப்பவும் அப்டித்தானுங்களா?
நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க... நமக்கு பிளாட்பாரத்தவிட்டா வேறெந்த கடைகளும் கண்ணுக்கு தெரியமாட்டுதுங்க... அய்யா பழமை சொன்னமாதிரி... உணரவேண்டியவர்களும் உணரனும்....
தீபாவளிக்கு போனீங்கன்னா கூட்டம் கம்மியா இருக்கும்.:))
அந்தக் கடைகளை புறக்கணிப்பதன் மூலம் அவர்களுக்கு ஒரு விடிவு காலம் வராதா என்ற ஒரு குருட்டு நம்பிக்கை தான்.
..... நீங்க வேற. மக்கள், குறைவான விலையில், பொருள் கிடைக்குதா என்று மட்டும் பார்ப்பாங்க. மனிதர்கள் மதிப்பு பற்றி யார் கவலைபட்டா? அப்படி எல்லாம் இருந்திருந்தா இந்த மாதிரி கடைகள், இவ்வளவு வெற்றிகரமா நடக்காது. :-(
//
என் தங்கமணி அப்போது எனக்கு நெருங்கிய நண்பர்(நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர். அப்போது காதலி ஆகவில்லை).
//
ம்ம்ம்...அதெல்லாம் ஒரு பொற்காலம்னு சொல்ல வர்றீங்களா? :)))
//பட்டாபட்டி.. said...
me the first ( அய்.. நாந்தான் முதலு)
//
பட்டாபட்டி எப்பத்துல இருந்து மேஜர் சுந்தரராஜனா மாறுனீங்க?
//பட்டாபட்டி.. said...
ஆமா சார்.. இந்த சென்னை, சென்னைநு சொல்றாங்களே..
அது எங்கிருக்குது சார்?..
//
பட்டி வீரன் பட்டியில இருந்து பதினாலு கல்லு மாட்டு வண்டியில போயி அங்கன இருக்குற கம்மாயில இறங்கி நடந்து போனா ஒரு ஆலமரம் வரும். அதுக்குப் பின்னால இருக்கு.
//நல்ல வேளை சார்.. எனக்கு இனியும் அந்த அனுபவம் கிடைக்கல.//
கல்யாணம் ஆகட்டும் மவனே.. அப்ப இருக்கு..
//நாடோடி said...
// என் கெட்ட நேரம் நானும் அவர்களோடு அழைத்து, மன்னிக்கவும் இழுத்துச் செல்லப்பட்டேன். ///
அய்யோ....அய்யோ.... இதுபோல மாட்டினா ரெம்ப கொடுமை சார்.//
யாரடி நீ மோகினி படத்துல தனுஷுக்கு நேர்ந்த அதே நிலைமை. :(
//பாபு said...
நானும்
அந்த கடைக்கு போககூடாது என்பதை பல வருடங்களாக கடைபிடித்து வருகிறேன்//
நல்ல முடிவு
//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
///////அந்தச் சுடிதார் எடுத்துப் போடுங்க. இந்தச் சுடிதார் எடுத்துப் போடுங்க, என்று கிட்டத்தட்ட கடையில் இருக்கும் அத்தனை சுடிதார்களும் எங்கள் முன் பரப்பப்பட்டு இருந்தன. ஒரு சுடிதாரை எடுத்து மகளின் மீது வைத்து அழகு பார்ப்பார். “இது நல்லாருக்குல்ல அத்தான்?” என்று கணவரிடம் ஒரு கேள்வி. அவர் மையமாகத் தலையசைப்பார். “சரி இருக்கட்டும்”. /////
சரியாக சொல்லி இருக்கீங்க //
நன்றி பனித்துளி..
//வானம்பாடிகள் said...
/என் கெட்ட நேரம் நானும் அவர்களோடு அழைத்து, மன்னிக்கவும் இழுத்துச் செல்லப்பட்டேன். /
அடங்கப்பா! சாமி. அண்டப் புளுகு ஆகாசப் புளுகு எல்லாம் இதுக்கு முன்னாடி எதுவுமேஇல்லை:))
/“இது நல்லாருக்குல்ல அத்தான்?” என்று கணவரிடம் ஒரு கேள்வி. அவர் மையமாகத் தலையசைப்பார். “சரி இருக்கட்டும்”. //
அப்பவே ப்ரோபேஷன் ஆரம்பிச்சாச்சா? ரைட்டு:))//
நன்றி பாலா சார்.
//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
தங்கமணின்னா அப்படித்தான் இருப்பாங்க.. அதெல்லாம் கண்டுக்கக்கூடாது :))
நானும் அந்தப் படம் பார்க்கனும்ன்னு நினைச்சிருக்கேன்//
பாருங்க பாருங்க. கொஞ்சம் சோகம் பிழியும். தாங்க முடியும்னா பாருங்க.
//சின்ன அம்மிணி said...
கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்னு இருக்குங்க. அதுவும் கிட்டத்தட்ட இப்படித்தான்//
ஜெயச்சந்திரனை விட்டுட்டீங்க?
@தலைவன்.. ஓக்கே தலைவா செஞ்சிருவோம்..
//பிரபாகர் said...
நண்பா!
நமது பார்வைகளை கொஞ்சமேனும் மாற்றியிருக்கும் வசந்தபாலனுக்கு கண்டிப்பாய் நன்றி சொல்லவேண்டும்...
பிரபாகர்..//
கரெக்டா சொன்னீங்க பிரபாகர்.
//LK said...
unga thangamani itha innum padikalaya? illati avanga email id kudunga link anuparen//
தங்கமணிக்கிட்ட முன் அனுமதி வாங்கித்தான் இந்தப் பதிவு.. :))
//malar said...
உங்க தங்கமணி இந்த பதிவை பார்து கோபபடலியா?//
L.Kக்கு சொன்னதுதான் உங்களுக்கும் மலர்
//ஸாதிகா said...
மட்டுமல்ல ஏதோ தீவிர வாதிகளை பரிசோதிப்பதுபோல் அவர்களின் ஆடைக்ள்,கைப்பைகள் போன்றவற்றை தடவி பரிசோதிப்பது மிகவும் அருவெறுப்பான செயல்.இத்தனையும் மீறி அந்த கடைக்கு செல்பவர்கள் கண்டிப்பாக தன்மானத்தை சற்று நேரம் கழற்றிவைத்துவிட்டுத்தான் அங்கு ஷாப்பிங் செய்யவேண்டும்.கண்டிப்பாக இத்தகைய நிறுவணங்களை மக்கள் புறம் தள்ளி பாடம் கற்பிக்க வேண்டு,நல்லதொரு பகிர்வு//
நன்றி ஸாதிகா..
//malar said...
சோகம் பிழிந்து எடுத்துவிட்டான்....
படம் நல்ல பாடம்//
சோகம் மிகைதான்..
//பழமைபேசி said...
ஊர் கூடினாத்தான் எதுவும் செய்ய முடியுமுங்க.... அதுக்கு முன்னாடி, பாதிக்கப்படுறவுங்க உணரணுமே??//
பாதிக்கப்பட்டவங்க உணர்ந்து தான் இருப்பாங்க. ஆனா அவங்களுக்கு வேற வழி தெரியாததால சும்மா இருக்காங்கன்னு நினைக்கிறேன்.
//நாஞ்சில் பிரதாப் said...
சூப்பரா சொன்னிங்க தல... அந்தக்கடை எப்பவுமே மர்மம்தான்... வாசல்லமட்டும் பட்டுப்புடவையோ வரிசயை நின்னு வரவேற்புல்லாம் பலமா இருக்கும்..உள்ளப்போனா நிலைமையே வேற.... நல்லா காசு பார்க்குறானுங்க..//
அதே..
//க.பாலாசி said...
//மன்னிக்கவும் இழுத்துச் செல்லப்பட்டேன்.//
இப்பவும் அப்டித்தானுங்களா?
//
இப்ப எல்லாம் விருப்பமாக்கிக்கிட்டாச்சி.
//
நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க... நமக்கு பிளாட்பாரத்தவிட்டா வேறெந்த கடைகளும் கண்ணுக்கு தெரியமாட்டுதுங்க... அய்யா பழமை சொன்னமாதிரி... உணரவேண்டியவர்களும் உணரனும்.//
அதே..
//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
தீபாவளிக்கு போனீங்கன்னா கூட்டம் கம்மியா இருக்கும்.:))//
ஆமா. கரெக்டு. சென்னை குளிர்ல ஜெர்கின் இல்லாம எப்பிடி சமாளிக்கிறீங்க ஷங்கர்?
//Chitra said...
அந்தக் கடைகளை புறக்கணிப்பதன் மூலம் அவர்களுக்கு ஒரு விடிவு காலம் வராதா என்ற ஒரு குருட்டு நம்பிக்கை தான்.
..... நீங்க வேற. மக்கள், குறைவான விலையில், பொருள் கிடைக்குதா என்று மட்டும் பார்ப்பாங்க. மனிதர்கள் மதிப்பு பற்றி யார் கவலைபட்டா? அப்படி எல்லாம் இருந்திருந்தா இந்த மாதிரி கடைகள், இவ்வளவு வெற்றிகரமா நடக்காது. :-(//
நம்ம மக்களுக்கு அது வர ரொம்ப நாளாகும்.
நுகர்வோர் அமைப்புல ஒண்ணு சொல்லுவாங்க. ஒரு கடைல வாங்கின சட்டை சுருங்கிடுச்சின்னு கடைக்காரன்கிட்ட கேட்டும் அவன் பணத்தைத் திருப்பிக் குடுக்கலைன்னா அதே சட்டையை ஒரு கம்புல மாட்டி இது இங்க வாங்கின சட்டைனு எழுதி கடை வாசல்ல நில்லுங்க. கடைக்காரனே கூப்பிட்டு காசு குடுப்பான்னு. ஆனா நாம அப்பிடி பிடிச்சிக்கிட்டு நின்னாலும் நம்ம மக்கள் கடைக்குள்ள போயிட்டுத்தான் இருப்பங்க.
//அது சரி said...
//
என் தங்கமணி அப்போது எனக்கு நெருங்கிய நண்பர்(நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர். அப்போது காதலி ஆகவில்லை).
//
ம்ம்ம்...அதெல்லாம் ஒரு பொற்காலம்னு சொல்ல வர்றீங்களா? :))//
குடும்பத்துல குழப்பம் பண்ணாம போக மாட்டீங்களா?
Post a Comment