Saturday, June 19, 2010

நியூட்டனின் மூன்றாம் விதி

தங்க்லீஷ்/இங்க்லீஷ்

இணையத்தையும் ப்ளாக்கரையும் கண்டுபிடித்தவன் வெள்ளைக்காரன். அதனால் தான் உரலிகள் எல்லாம் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. ஆனால் நாம் என்ன செய்கிறோம். அந்த ஆங்கில உரலிகளையும் நம் வலைப்பூவின் தலைப்புகளையும் தங்கிலீஷில் வைக்கிறோம். அது சரியா? அது ஆங்கிலத்துக்கு சரியான மரியாதை கொடுப்பதாக இருக்குமா? அதனால் என்னால் முடிந்த அளவுக்கு சில பிரபலப் பதிவர்களின் பதிவுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளேன்.

பிரியமுடன் வசந்த் - வசந்த் - With Love Sprin by Sprin

கசியும் மௌனம் - கதிர் - Leaking Silence by Ray

பாமரன் பக்கங்கள் - வானம்பாடிகள் - Simpleman's Pages by SkySingers


முகிலனின் பிதற்றல்கள் - முகிலன் - Cloudman's blabbering by Cloudman


கலகலப்ரியா - ப்ரியா - Jovial Lovely by Lovely


மணியின் பக்கங்கள் (எழிலாய்ப் பழமைபேச) - பழமைபேசி - Bell's Pages (To beautifully speak about past) PastSpeaker


குமரன் குடில் - சரவணக்குமரன் - Son's Hut - The Son of the Handsome


பொன்னியின் செல்வன் - கார்த்திகைப் பாண்டியன் - Goldie's Son - August Tamilan

அடுத்த செட் மொழிபெயர்ப்பு அடுத்தடுத்த பதிவுகளில்


தீவிரவாதப் பன்னாடைகள்

வணக்கம் தோழர்களே! நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பதிவை எழுதுகிறேன். இந்தியப் பயணம் இரவுபகலாகச் செனறதால் கடந்த பல நாட்களாக செய்தித்தாள் எதையும் படிக்கவில்லை. அதனால் இந்தியாவில் நடந்த பிரச்சனைகள் எனக்குத் தெரியவில்லை. நேற்று என் மைத்துனன் மூலம் “காந்தி” பிரச்சனை தெரியவந்தது. அது குறித்த பதிவுகள் பல இடங்களில் இருந்தாலும் ஒரு படம் பார்த்து அதைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

இந்தியாவும் மற்ற மேலை நாடுகளைப்போலவே சாக்கடையாக்த்தான் மாறிக்கொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ஒரு பெண்ணைப் பழிவாங்கும் நோக்கிலேயே தீவிரவாதிகள் இந்த செயலை செய்திருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை. ஆனால் இது ஒரு பெண்ணைப் பழிவாங்கும் செயல் மட்டுமல்ல. ஒரு இயக்கத்தையே அவமானப்படுத்தும் நிகழ்வு.

அவரின் பாதுகாப்பாளன் என்ற ஒரு மிருகம் ஒரு புண்ணிய ஆத்மாவைக் கொலைசெய்திருக்கிறது. இதுவே என் பார்வை. இதை ஒரு கட்சியின் பிரச்சனை என்று கறை பூசாதீர்கள். நம் அனைவருக்கும் நேர்ந்த இழப்பு என்று எண்ணுங்கள். அவர்கள் தனிப்பட்ட விரோதம் தனி இடத்தில் தாக்கிக் கொண்டார்கள் என்றால் அது பற்றி நாம் கவலை கொள்ளப் போவதில்லை.

ஆனால் இந்தப் பிரச்சினை நடந்திருப்பது நம் நாட்டில் தலைநகரில் ஒரு பொது இடத்தில். அதுவும் சக இந்தியனுக்கு சக இந்தியனால் நிகழ்ந்திருக்கிறது. இதை வெறும் செய்தி போல பாவித்து பலர் தங்கள் அனுதாபங்களையும், எதிர்ப்புகளையும் அரசியல் கட்சிகள் போலவேக் காட்டியிருந்தனர். நன்றாக இருக்கிறது உங்கள் அரசியல்.

இந்திய நாட்டு மக்களாகிய நாமும் நம் தெரு டீக்கடையில் இதைப் பற்றி ஒரு வாரத்துக்குப் பேசிவிட்டு பின் அதைப் பற்றி மறந்து போகிறோம். இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு யார் தீர்வு காண்பது? என்று யாரும் யோசிப்பதில்லை.

இதற்கு உடனடியாக ஒரு தீர்வு கொண்டு வர வேண்டும். ஒரு பெண்ணின் மரணத்திற்குப் பதில் வேண்டும்.

26 comments:

Unknown said...

யாராவது தமிழிஷ் தமிழ் மணத்துல சேத்து +ஸோ -ஸோ வோட்டுப் போடுங்க பாஸூ

vasu balaji said...

மை வடை:). சவுக்கியமா ஊர் சேர்ந்தாச்சா?. அதென்ன உரலி?=)).
கதிரோடது சேஞ்சஸ்தானே:))

கலகலப்ரியா said...

அடப்பாவிங்களா... எங்க இருந்து புடிக்கறீங்க ஐடியா... ம்ம்.. மிஸ்டர் தட்ஸ் ரைட்டு எங்க போனாரு...

அது சரி(18185106603874041862) said...

//
மணியின் பக்கங்கள் (எழிலாய்ப் பழமைபேச) - பழமைபேசி - Bell's Pages (To beautifully speak about past) PastSpeaker
///

ROTFL :)))))

அது சரி(18185106603874041862) said...

PastSpeaker :))) Hilarious mate!!!

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
அடப்பாவிங்களா... எங்க இருந்து புடிக்கறீங்க ஐடியா... ம்ம்.. மிஸ்டர் தட்ஸ் ரைட்டு எங்க போனாரு...

June 19, 2010 4:49 PM
//

Oh...he is on Leave :))

ஹேமா said...

முயற்சி நல்லாவேயிருக்கு முகிலன்.

http://rkguru.blogspot.com/ said...

அருமையான பதிவு...

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_08.html

Anonymous said...

மொழிபெயர்ப்பு முயற்சி நல்லாவே இருக்கு. ரெண்டாவது விஷயம் என்னா. ஏதாவது நியூஸ் லிங்க் குடுங்க.

எல் கே said...

/
கலகலப்ரியா - ப்ரியா - Jovial Lovely by லோவேலி//

இதன் அருமைஈ

எல் கே said...

/மொழிபெயர்ப்பு முயற்சி நல்லாவே இருக்கு. ரெண்டாவது விஷயம் என்னா. ஏதாவது நியூஸ் லிங்க் குடுங்க. ///

அம்மஈனி, இந்திரா காந்தி படுகொலை பத்தி சொல்றார்

அண்ணே சரியா

Chitra said...

1 st one. :-)

2 nd one. :-(

Paleo God said...

பயணம் சுகமா? :))

அன்புடன் அருணா said...

கலக்கல் ஐடியா!

ஜில்தண்ணி said...

மொழிபெயர்ப்பு நல்ல முயற்சி
:)

பின்னோக்கி said...

மொழிபெயர்ப்பு தட்டீஸ் டிரான்ஸ்லேஷன் சூப்பர்.

ரெண்டாவது மேட்டர் எதைப் பத்தின்னு தெரியலை. நியூஸ் சேனல் எதுவும் பார்க்குறது இல்லை. என்ன மேட்டர் ?

சாந்தி மாரியப்பன் said...

:-)))))))))))

:-(((((((((((

ஈரோடு கதிர் said...

முதல் மேட்டர்.. கிச்சுகிச்சு

//ரெண்டாவது விஷயம் என்னா. ஏதாவது நியூஸ் லிங்க் குடுங்க.//

அதே...

ராஜ நடராஜன் said...

பாஸ்!என்ன சொல்ல வர்றீங்கன்னு ஒரே நியூட்டன் குழப்பம்.

அது சரி(18185106603874041862) said...

ஆமா, ரெண்டாவது மேட்டர் தூங்கிக் கிட்டே எழுதுனதா?? தலையும் புரியலை வாலும் புரியலை...என்னவோ தூக்க கலக்கத்துல பேசுற மாதிரி இருக்கு...என்ன மேட்டர் பாஸ்??

Prathap Kumar S. said...

மொழிபெயர்ப்பு தூள் வாத்தியரே... ஆனா ஒண்ணும் பிரில.....

ஷர்புதீன் said...

:)

பனித்துளி சங்கர் said...

மொழிபெயர்ப்புகள் அனைத்தும் நல்ல இருக்குங்க

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

மொழிபெயர்ப்பு.. நல்லாயிருக்கு.. :)) ஒரு சின்ன திருத்தம்.. பழம மீன்ஸ் நாயம் பேசறது.. கதைப்பது.. உதாரணத்துக்கு - ”வேல செய்யாம அங்க என்ன பழம பேசிட்டு இருக்கற.. இந்தப்பக்கம் வா” past ன்னு அர்த்தம் வராது..

ரெண்டாவது.. என்ன puzzle ஆ? நாங்க விடை கண்டுபிடிச்சு சொல்லனுமா? :))

க.பாலாசி said...

ஹய்யோ...ஹய்யோ...

சரி..ரெண்டாவது என்ன? ஒண்ணும் புரியல...

Unknown said...

நான் இன்னும் இந்தியாவில் தான் இருக்கிறேன். நியூட்டனின் மூன்றாம் விதி - ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு

முதல் எதிர்வினை

இரண்டாம் எதிர்வினை