மெகா சீரியல் பாக்கிற ஆட்களை கிண்டல் செய்வது என் வழக்கம். இப்போது நானே நாதஸ்வரம் சீரியல் பார்க்க ஆரம்பித்து விட்டேன். வழக்கமான சீரியல் அழுகை/செண்டிமெண்ட் இதில் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது. அதனால் பார்க்க முடிகிறது. கோபியும் மலரும் அந்த அறைக்குள் பேசிக் கொண்டு இருப்பதைப் பார்க்கும் மகா என்ன பேயாட்டம் ஆடப் போகிறார் என்று கவலையாக இருக்கிறது.
இதில் வரும மகா போலவே ஒரு பாத்திரம் என் வாழ்விலும் வந்து போயுள்ளது. மகாவின் செயல்கள் ஒவ்வொன்றும் எனக்கு அந்த நபரையே நினைவு படுத்துகிறது. ஒரு வேளை நான் இந்தத் தொடரைப் பார்ப்பதற்கும் அது ஒரு காரணமா தெரியவில்லை.
போன வாரம் முழுக்க புரச்சி செய்து ஓய்ந்து போய் விட்டேன். அதற்கு ஒரு புரச்சி நண்பர் தன் பாணியில் எதிர் வினை ஆற்றி இருக்கிறார். அதற்காக நான் வருத்தப் படவில்லை. அவருக்குத் தெரிந்த முறை இதுதான். என்ன செய்ய பாவம்.
முகிலன் இப்போதெல்லாம் பேப்பர் எடுத்து எதையாவது கிறுக்க ஆசைப் படுறார். சும்மா இல்லாமல் ஒருநாள் அவங்கம்மா என்ன தம்பி வரையிற என்று கேட்டதற்கு அவர் பதில் - ஏப்பேன்(ஏரோ ப்ளேன்) இன்னொரு கிறுக்கலைக் காட்டி டாக்கி(doggy) என்று சொல்லி இருக்கிறார். இன்று வெளியே சாப்பிடப் போனோம். அந்த இந்தியன் ரெஸ்டாரண்டில் முதலில் அப்பளம் வைப்பார்கள். அதைப் பிய்த்து என்னிடம் காட்டி கீகீ என்றார். அந்தத் துண்டு எங்கள் வீட்டில் இருக்கும் ஒரு puzzle-ன் கிளித் துண்டு போலவே இருந்தது. அதை கொஞ்சம் வாயில் போட்டு விட்டு கையில் மிச்சம் இருந்த சின்னத் துண்டைக் காட்டி பொட்டு என்றார்.
அவர் இரவில் தூங்க அடம் பிடித்தால் அவங்கம்மா உபயோகப் படுத்தும் வித்தை பூச்சாண்டி. பூச்சாண்டி வந்துடுவான் என்றால் சகலமும் அடங்கி படுக்கையில் படுத்துக் கொள்கிறார். கார் சீட்டில் உக்கார மாட்டேன் என்று அடம் பிடித்து டிரைவர் சீட்டுக்குப் போனவரை பூச்சாண்டி வந்துடுவான் என்று சொன்னதும் தாவி வந்து கார் சீட்டில் உக்கார்ந்து கொண்டார்.
இந்த இரண்டு விசயங்களையும் வைத்துப் பார்க்கும் போது பூச்சாண்டி என்று சொல்லி பயமுறுத்துவது தவறோ என்று படுகிறது. அவர் பாட்டுக்கு பூச்சாண்டி என்று யாரையாவது கற்பனை செய்து பயந்து போய் விடுவாரோ என்று எனக்கு பயமாய் இருக்கிறது. யாராவது இது சரியா தவற என்று சொன்னால் நல்லது.
எபிக் பிரவுசர் உபயோகிக்கத் துவங்கி உள்ளேன். நன்றாகத் தான் உள்ளது. என்ன என்.எச்.எம் இதில் வேலை செய்ய மாட்டேன் என்கிறது. firefox க்கான தமிழ் தட்டச்சு add -on சேர்த்த பின் அதிலே தட்டச்சியதே இது. தீம்ஸ் மாற்றுவது எப்படி என்பதைப் பார்க்க வேண்டும்.
14 comments:
பூச்சாண்டியைச்சொலலி பயமுறுத்தவது தவறாக ஒன்றும் தோணவில்லை. வளரும் குழந்தைகள்
அதை மறந்துவிடுகிறார்கள். இல்லையென்றால் இப்போதைய குட்டிஸ்களை சமாளிப்பது ரொம்ப கஷ்டம்...
எங்க வீட்டு வாண்டு பூச்சாண்டிக்கு கூட பயப்பட மாட்டேங்குதேன்னு எங்களுக்கு கவலை...:))
பூச்சாண்டி, ரெண்டுகண்ணன், மூணுகண்ணன் எல்லாரையும் கூப்பிடலாம் தப்பேயில்லை :-)))))
டாக்டர்,டீச்சர்,போலீஸ்ன்னு ஆட்களை மட்டும் தயவுசெய்து கூப்பிடாதீங்க. அது குழந்தைகளிடம் பாதிப்பை உண்டாக்கும்.
நானும் பதிவு படித்து கொண்டே நாதஸ்வரம் வசனங்கள் கேட்பது உண்டு சில நாட்கள். பூவிலங்கு மோகனின் பேச்சு நடை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.
சில வசனங்களில் உண்மையான நாதஸ்வர கலைஞர்கள் வீட்டு பேச்சு எதிரொலிக்கிறது.
//இந்த இரண்டு விசயங்களையும் வைத்துப் பார்க்கும் போது பூச்சாண்டி என்று சொல்லி பயமுறுத்துவது தவறோ என்று படுகிறது//
இப்பதான் அது செல்லுபடியாகும். ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சா , Dont be mean to me- சொல்லி உங்களுக்கு பல்ப்தான்.
நாதஸ்வரம் எந்த டீவில வருது. எங்கியாவது நெட்ல கிடைக்குதான்னு பாக்கறேன்
//பூச்சாண்டி வந்துடுவான் என்றால் சகலமும் அடங்கி படுக்கையில் படுத்துக் கொள்கிறார்.///
என் பொண்ணு பூச்சாண்டி வரட்டும் நான் பார்க்கணும் என்று சொல்கிறாள் .. என்ன செய்ய ???
@ammini
sun tv indian time 7.30
இப்பதான் புரியுது. நறுக் படிச்சி சிரிச்சப்ப வெள்ளைக்காரன் வெறிச்சிட்டானுக்கு அர்த்தம்:)). பீ ப்ரிப்பேர்ட். நாளைக்கு முகிலன் குடுக்க போற டரியலுக்கு:))))
நான் ரெண்டு நாள் திருமதி செல்வம் பார்த்தேன்.. அடுத்த நாளும் பாக்கணும்னு ஆயிடுச்சு.. ஆளவிடுங்க சாமீன்னு ஊருக்கு ஒடியாந்துட்டேன்...
முகிலன் வளரட்டும், பூச்சாண்டி யாருன்னு சொல்லித்தருவார்...
பூச்சாண்டி ல்லாம் பெரிய ப்ரச்சனை இல்லைன்னு நினைக்கிறேன்..
எதுககாச்சும் இதுங்க பயப்படனுமா வேணாமா..
||பூச்சாண்டி வந்துடுவான் என்றால் சகலமும் அடங்கி படுக்கையில் படுத்துக் கொள்கிறார்||
செய்யாதீங்க... தேவையே இல்லாம.. இல்லாத ஒன்றுக்காகப் பயத்தை உருவாக்கியாச்சு... அதை வளர்க்க வேணாம்...
செரியா தவறான்னு கேக்க முன்னாடியே... இது சொல்லனும்னு நினைச்சேன்..
||முத்துலெட்சுமி/muthuletchumi said...
பூச்சாண்டி ல்லாம் பெரிய ப்ரச்சனை இல்லைன்னு நினைக்கிறேன்..
எதுககாச்சும் இதுங்க பயப்படனுமா வேணாமா..||
எதுக்காக... எதுக்காச்சும் பயப்டனும்..?!
அம்மா அப்பாக்கு மரியாத கொடுக்கிற மாதிரிப் பழக்கிட்டா போதும்.. சீட்டில் உட்கார மாட்டேன்னு அடம் புடிச்சா.. செல்லம் கொடுக்காம... கத்தாம... சீரியஸா குரலை வச்சுக்கிட்டு.. அங்க உட்காருன்னு சொல்லுங்க...
rules & consequence romba important... he should learn that...
//
போன வாரம் முழுக்க புரச்சி செய்து ஓய்ந்து போய் விட்டேன்.
//
ஒரு சோடாவை ஒடச்சி குடிச்சிட்டு அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகுங்க தலைவரே...ஒரே நாள்ல எட்டு பொதுக்கூட்டம், பதினாறு தெருமுனை பிரச்சாரமெல்லாம் நமக்கு புதுசா :)))
இன்னும் கொஞ்ச நாள்தான்.
பாருங்களேன் அதே பூச்சாண்டியை உங்களுக்குச் சொல்லிப் பயம் காட்டுவார் முகிலன் !
வேனும்னா சொல்லுங்க... சின்ன வயசுல பாத்த பூச்சாண்டி போட்டோ ஒன்னு இருக்கு.. அனுப்பிவிடறேன்.. :)
பாசிட்டிவா செய்ய முடியாதா? இப்படி செஞ்சா இது கிடைக்கும்ன்னு?
Post a Comment