எந்திரன் படப் பாடல்கள் வெளியாகிவிட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வரும் தலைவர் படமாததால், ஓசி டவுன்லோடு செய்யாமல், ஐ-ட்யூன்ஸில் வரும் வரைக் காத்திருந்து வாங்கி, ஐ-ஃபோனில் கேட்டேன். எல்லாப் பாட்டுகளுமே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
ஷங்கரின் திரைப்படங்களில் பாடல்கள் எப்போதுமே ஸ்பெஷல் தான். அவர் ஒரு பேட்டர்ன் வைத்திருப்பார். அந்தப் பேட்டர்னிலேயே இந்தப் பாடல்களும் இருப்பதால் பலருக்கு எங்கோ கேட்டதைப் போல இருக்கிறது. மூன்று பாடல்கள் கண்டிப்பாக இந்த வருடத்தின் ஹிட்டாகப் போவது உறுதி.
படம் செப்டம்பர் மூன்றாம் தேதி ரிலீசாம். நான்காம் தேதி அல்லது ஐந்தாம் தேதி ராச்சஸ்டரில் போடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். கண்டிப்பாக டிக்கெட் $15க்குக் குறையாமல் இருக்கும். க்ரோசரி ஸ்டோர் போகும்போது முன்பதிவு செய்து வைக்க வேண்டும்.
ரஜினிக்கு ஒரு அசாத்திய கவர்ச்சி இருக்கிறது. ஐந்து வயது சிறுவர்கள் முதல் ஐம்பது வயது இளைஞர்கள் (பாலா சார் சந்தோசமா?) வரை கவர்ந்து இழுத்துவிடுகிறார். பாட்சா வந்த புதிதில் நான் ஒரு தடவை சொன்னா என்று சொல்லித்திரியாத சிறுவர்களையே பார்த்திருக்க முடியாது. அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்திவிடுவார்.
என் நண்பரின் (மலையாளி) மகள், சிவாஜி வந்த போது அவளுக்கு 4 வயது, அது வரை தமிழ்ப்படங்கள் பார்த்து பழக்கப் படாதவள். ரஜினியை யாரென்றே தெரியாது. சிவாஜி படம் (தியேட்டரில்) பார்த்ததில் இருந்து அவள் ரஜினியை சிவாஜி என்றே அழைக்க ஆரம்பித்து விட்டாள்.
நாங்கள் சிவாஜி படம் ராச்சஸ்டரில் பார்த்த போது ஒரு தமிழ்க்குடும்பம் - கணவன், மனைவி, ஒரு 2 அல்லது 3 வயதுப் பெண் குழந்தை - படம் போட்டு சில நிமிடங்கள் கழித்து உள்ளே வந்தார்கள். இருட்டைப் பார்த்ததும் அந்தக் குழந்தை வீரிட்டு அழ ஆரம்பித்துவிட்டது. அவர்கள் தட்டுத்தடுமாறி அவர்களின் நண்பர்கள் அமர்ந்திருந்த எங்கள் பின்வரிசையில் அமர்ந்தனர். கொஞ்ச நேரத்திலேயே குழந்தை அழுகையை நிறுத்திவிட்டது (ரஜினியைப் பார்த்ததும் பயந்து நிறுத்திவிட்டது என்று யாராவது கமெண்ட் போட்டால் மாடரேட் செய்யப்படும், சொல்லிப்புட்டேன்). பாருங்கள் ரஜினி படத்தை ஒரு 3 வயது குழந்தை கூட அழுகையை நிறுத்தி ரசிக்கிறது என்று சொல்ல வரவில்லை. வெளிச்சமும் பெரும் திரையில் ஓடும் கலர்ஃபுல் காட்சிகளும் அந்தக்குழந்தையின் அழுகையை நிறுத்தியிருக்கலாம்.
ஆனால் இண்டர்வெல்லில் அந்தக் குழந்தை அவள் தந்தையைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாள் பாருங்கள் “நீ ஏம்பா விசிலே அடிக்க மாட்டேங்குற?”. இது காட்டும் அந்தப் பெண் சினிமாவில் ஆழ்ந்துதான் அழுகையை நிறுத்தியிருக்கிறாள் என்று. இதுதான் ரஜினியின் பவர்.
ஏனோ வலையுலகில் ரஜினியை ரசிக்கும் சிலர் கூட தாங்கள் ரஜினியை ரசிக்கிறோம் என்று சொல்ல பயப்படுகிறார்கள். எனக்கு அந்த பயமெல்லாம் இல்லை. நான் ரஜினி ரசிகன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு பெருமையே.
ஜூனியர் முகிலன் வளர்ந்துவிட்டான். ஒரிரு வார்த்தைகளில் நம்மோடு உரையாடவும் விரும்புகிறான். நல்ல நினைவாற்றலும் இருக்கிறது. என்னையும் தங்கமணியையும் அப்பா அம்மா என்றழைப்பதை விட பெயர் சொல்லி அழைப்பதையே விரும்புகிறான் (நானும் தங்கமணியும் ஒருவரை ஒருவர் பெயர் சொல்லி அழைப்பதால் இருக்கலாம்). திஸ் என்று எனக்குப் பெயர் வைத்துள்ளான். மனைவிக்கு கயிதா. அவனுக்குப் பிடித்த ஒரு பொழுதுபோக்கு ஃபேமிலி ஆல்பத்தை எடுத்து அதில் இருக்கும் ஒவ்வொருவரையும் ஆச்சி, தாத்தா, மாமா(இது மட்டும் பெரிய சத்தமாக இருக்கும்), மாயினி (மாலினி), ஹஷ் (ஹாஷினி), ஜாவு(மன்னர் ஜவஹர்), பாட்டி, நிஷ்(நிஷாந்த்), பிதுபிதுபிது(பிரதீப்), பீபா(தீபா), கும்மா(குமார்), ராஜ் (ராஜன்), சீன்னூ(செங்குட்டுவன்) என்று அடையாளம் காட்டுவது.
சன் டிவியின் புண்ணியத்தில் சன் பிக்சர்ஸார் வெளியிடும் திரைப்படங்கள் அனைத்தின் அலுக்கச்செய்யும் விளம்பரங்கள் எல்லாம் பார்த்து விடுகிறான். இதுவரை வந்த விளம்பரங்களில் அவனை மிகவும் கவர்ந்தது வேட்டைக்காரன் விளம்பரம் தான். எங்கே விளையாடிக் கொண்டிருந்தாலும் வேட்டைக்காரன் விளம்பரம் கேட்டதும் ஓடி வந்து டிவியில் அதை பார்த்துவிட்டு விளம்பரம் முடிந்ததும் திரும்ப தன் விளையாட்டைத் தொடரச் சென்று விடுவான் (சுறா, சிங்கம் எல்லாம் அவனை இழுக்கவில்லை). இப்போது சனி மற்றும் ஞாயிறு அன்று, மலேசியாவில் நடைபெற்ற எந்திரன் பாடல் வெளியீடு ஒளிபரப்பு விளம்பரம் அவனை கவர்கிறது. அதிலும் கடைசியில் ரோபோ ரஜினி நிற்க எந்திரன் என்று போடும் காட்சியில் ரஜினியைச் சுட்டிச் சுட்டிக் காட்டுகிறான் (என் ஐபோனில் எந்திரன் பாட்டு ஓடும்போதும் அதே போஸ்டர் தெரிவதால் என்று நினைக்கிறேன்). ரஜினி என்று சொல்லிக் கொடுத்திருக்கிறேன். கூடிய சீக்கிரம் சொல்லிவிடுவான் என்று எதிர்பார்க்கிறேன். சொன்னதும் வீடியோ எடுத்துப் போடுகிறேன். பார்த்துத் தொலைய வேண்டிய தலையெழுத்து உங்களுக்கு.
ஹமாம் விளம்பரத்தில் ஆட்டோல போகும்போது என்று வரும் வரியை தூசி கீசி ஒட்டியிருக்கும் என்று மாற்றியிருக்கிறார்கள். வரவேற்கத்தக்கது. ஆனால் இப்போது டிவியில் சிகப்பழகு தரும் க்ரீம்களின் விளம்பரம் அதிக எண்ணிக்கையில் வருவது போல உள்ளது. எல்லா விளம்பரங்களிலும் கறுப்பாக இருப்பவர்களுக்கு கான்ஃபிடன்ஸ் இருக்காது. சிகப்பாக இருந்தால் தான் வெற்றியடைய முடியும் என்பதே மையக்கருவாக இருக்கிறது. ஏன் இப்படி ஒரு எண்ணத்தை புகுத்தி கறுப்பாக இருப்பவர்களுக்கு ஒரு தாழ்வுமனப்பான்மையை உருவாக்கும் விளம்பரங்களுக்கு எதிராக யாரும் தடை வாங்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ரஜினியைப் பார்த்த பிறகுமா தமிழர்கள் சிவப்பாக இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று எண்ணுகிறார்கள்?
(ஒருவழியா இன்னைக்கி எல்லா செய்தியிலயும் ரஜினி பேரை நுழைச்சாச்சி)

26 comments:
ஹமாம் சோப் விளம்பரம் யூ ட்யூப்ல இருக்கா என்ன
//ஏனோ வலையுலகில் ரஜினியை ரசிக்கும் சிலர் கூட தாங்கள் ரஜினியை ரசிக்கிறோம் என்று சொல்ல பயப்படுகிறார்கள். //
எனக்கு ரஜினி புடிக்கும். ஸ்டைலுக்காகவே
//ஏனோ வலையுலகில் ரஜினியை ரசிக்கும் சிலர் கூட தாங்கள் ரஜினியை ரசிக்கிறோம் என்று சொல்ல பயப்படுகிறார்கள். எனக்கு அந்த பயமெல்லாம் இல்லை. நான் ரஜினி ரசிகன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு பெருமையே.//
எனக்கும்
Rajini ROCKS!!!!
நானும் எந்திரன் பாட்டு கேட்டேன் நல்லா இருக்கு... கண்டிப்பா ஹிட் தான்.
ஐ.. எனக்கும் பிடிக்கும்.. அந்த பழைய ரஜினிய.. தில்லுமுல்லு, ஜானி, தம்பிக்கு எந்த ஊரு (இதுல வர்ற காதலின் தீபம் ஒன்று ல ரொம்பவே பிடிக்கும்)etc.. etc.. etc.. etc.. etc.. etc..
இப்ப, as a person, less as an actor..
சிவாஜி டெல்லியில பாத்தோம்..விசில் பறக்கப் பறக்க..எதிர்பார்க்கவேயில்ல.. சுத்தியும் தமிழ் மக்கள்.. மறக்க முடியாதது..
லிட்டில் சூப்பர் ஸ்டார் தத்தித்தத்தி பேசறதக் கேக்க ஆவல்... முடிஞ்சா சீக்கிரமே போடுங்க (ரஜினி பேரச் சொல்லாட்டியும் பரவால்ல)
// சிகப்பாக இருந்தால் தான் வெற்றியடைய முடியும் என்பதே மையக்கருவாக இருக்கிறது. //
கறுப்பு நிறம் என்பது இயற்கை அளித்த வரம்.. வாழும் இடத்தின் தட்பவெட்பத்துக்கு ஏத்த மாதிரி உருவானதொரு பரிமாண மாற்றம்.. எப்போ இதப் புரிஞ்சுக்கப் போறாங்கன்னு தான் தெரியல..
Rajni rocks..:-)))))
நல்ல கருத்துகள்
//நான் ரஜினி ரசிகன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு பெருமையே.//
ஓ.....
அடுத்த வேட்டைக்காரருக்கு வாழ்த்துக்கள்...
thalaivar rocksss
ஏன் இப்படி ஒரு எண்ணத்தை புகுத்தி கறுப்பாக இருப்பவர்களுக்கு ஒரு தாழ்வுமனப்பான்மையை உருவாக்கும் விளம்பரங்களுக்கு எதிராக யாரும் தடை வாங்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை
************************************
ஏன்னா சிகப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்ல...??!

பெங்குவினுக்கு ரஜனின்னு ட்யூஷனா? அவ்வ்வ்வ்:))
Nice......
அவ்வ்வ்வ்.... ஐய்யா எனக்கு ஒரு உண்மை சொல்லியாவணும்... ரொம்ப டவுனா இருக்கறப்போல்லாம் நானும் ரஜினி படம் பார்ப்பேன் பார்ப்பேன் பார்ப்பேன்....
எந்திரன் பாட்டு எனக்குப் புடிக்கலை.... அதுக்கும் ரஜினிக்கும்... சங்கருக்கும்.... ரஹ்மானுக்கும் சந்தர்ப்பமில்லை... என்னோட டேஸ்ட்டுக்கு சரியா வரலை வரலை வரலை...
ஆனா... சங்கர் சார் படப் பாட்டு எல்லாம் போக போகத்தான் ரசிக்குமாம்ல.... போய்க்கிட்டே இருக்கேன்... பார்க்கலாம்... ஆனா ஜீன்ஸ் படப் பாட்டு உடனேயே பிடிச்சதே...
ஸ்ஸ்ஸ்ஸபா இப்பவே கண்ணைக் கட்டுதே... ஒரு வார்த்தை சொன்னா... ஒரு இடுகையே போட்டுத் திட்டுறாய்ங்களே...
சந்தர்ப்பமில்லை என்பதை சம்மந்தமில்லையென்று படிக்கவும்... :)))))))))... (இந்த சந்தர்ப்பத்தை நான் வேற மாதிரிப் பயன்படுத்திக்கொள்ளவில்லையென்பதை சொல்லிக் கொ’ல்’கிறேன்..)
ரஜினிஸ்பெஷல்?.. நன்று.
இன்னும் எவ்வளவு நாட்கள் தான், இந்த
சினிமாகாரர்களையே கொண்டாடிக் கொண்டிருக்கப்
போகிறோம். ந்டிகரோ, அப்பாவி ரசிகர்களின் கும்பல் காட்டி
(பால்/பீர் அபிஷேகம், கட் அவுட்,தேரணம்,தலைமுடி காணிக்கை,
சூடம் ஏற்றல்,மினிமம் கேரண்டி) ஸ்டார் வேல்யு கூட்டி
சம்பளம் ஏற்றிக்கொள்வார்.தயாரிப்பாளர்கள், விளம்பரம் போட்டு,
விலையேற்றி, விநியோகஸ்தர்களிடம், விற்றுவிடுவார்கள்.
அவர்கள்,பாவம் இந்த ரசிக மக்களிடம் ஷோவுக்கு டிக்கட்டு
விலையேற்றி, பணம் பார்த்து விடுவார்கள்.
படம் எதிர்பார்த்த அளவு போகலைன்னா,
நடிகர்ட்ட நஷ்ட ஈடு கேட்பார்கள்.
(தயாரிப்பாளர்ட்ட நெருங்க/நெருக்க முடியாது)
சினிமா ஒரு பொழுது போக்கு என்பதைத் தாண்டி
அறுபதுகளில், அரசியலான பின், அடிப்படைகளும்,
ரிய்லிசங்களும் அதிலிருந்து விலகி, தேவை/அளிப்பு
பிண்ணனியில் வெறும் தொழிலாக உருமாறி விட்டது.
ஓரிரு இயக்குநர்களும்,தயாரிப்பாளர்களும்,நடிகர்களும்
ம்ற்றும் சில அபிமானிகள் விதிவிலக்காய் இருப்பார்கள்.
அந்த ஹமாம்..விளம்பரத்தை பத்தி நானும் எழுதுனும்னு நினைச்சேன்... நன்றி முகிலன்..
ரஜினியிடம் குழந்தைகளைக் கவரும் வசீகரம் இருப்பது மறுக்க இயலாத உண்மை. என் மகன், சிவாஜி படத்தை தியேட்டரில் அழுகையில்லாமல் முழுப்படத்தையும் பார்த்தான். ரஜினி போலவே, விஜய் பசங்களுக்குப் பிடிக்கிறது. காரணம், ரஜினி மற்றும் விஜயின் ஆக்ஷன் அத்துடன் கூடிய இசை என நினைக்கிறேன்.
ஜீனியர் வீடியோ போடுங்க. பார்த்துத் தொலைய வேண்டியது என்று கூறாதீர்கள். குழந்தைகளைப் பார்ப்பதைவிட ஆனந்தம் எதிலிருக்கிறது.
நானும் முன்னாடியே எழுதியிருக்கேன். விளம்பரத்துல கருப்பானவங்களை யாரும் காட்டுறதேயில்லைன்னு. என்ன நினைச்சுக்கிட்டு இருக்காங்கன்னு தெரியலை. கருப்புன்னா மட்டமா.
பின்குறிப்பு: இப்படி எழுதியதால், நான் கருப்பா இருக்கேன்னு நினைச்சுக்காதீங்க. :)
நம்ம வாண்டும் சிவாஜி அங்கிள்னு தான் சொல்லுறாரு...
ரஜினி ஸ்பெஷல்....ஸ்பெஷல் தான்!
பிரபாகர்...
ரஜினி'காந்தம்' :-))
அட நம்மாளு...
இதுவும் “ரஜினி” ஸ்பெஷலா?
அது தான் ரஜினி”காந்தம்”....
@சின்ன அம்மிணி - கிடைச்சா லின்க் அனுப்பறேன் அம்மிணி.
@சின்ன அம்மிணி - சூப்பர்
@தர்ஷன் - வாங்க பாஸ்.
@விசா - நன்றி
@நாடோடி - நன்றி
@எல் போர்ட்.. பீ சீரியஸ் - சீக்கிரம் ரிலீஸ் செஞ்சிருவோம்.
@எல் போர்ட் பீ சீரியஸ் - கரெக்ட்
@கார்த்திகைப் பாண்டியன் - நன்றி
@Mohamed Faaique - நன்றி
@க.பாலாசி - :-?
@எல்.கே - ஆமா
@ரெட்டைவால்ஸ் - ஹி ஹி ஹி
@வானம்பாடிகள் - கொஞ்ச நாள்ல நமக்கு ட்யூசன் குடுப்பாரு போல
@வழிப்போக்கன் - நன்றி
@கலகலப்ரியா - உங்களுக்காக எழுதின பதிவு இல்லை (ஒரே ஒரு வாக்கியத்தைத் தவிர). நீங்க ஏன் அப்பிடி நினைச்சிக்கிறீங்க?
@நர்சிம் - நன்றி
@வாசன் - வாங்க சார். நீங்கள் சொல்லும் எதையும் செய்யும் சராசரி ரசிகனில்லை நான்.
@ஜாக்கி சேகர் - நான் சும்மா ஒரு வரி தான எழுதினேன். நீங்க பெருசா எழுதுங்க ஜாக்கி.
@பின்னோக்கி - நன்றி
@பிரபாகர் - நன்றி
@அமைதிச்சாரல் - ஆமாங்க
@ஆர்.கோபி - ஆமா பாஸ்.
என் பெண் குழந்தையும் 2 1/2 வயதில் அழாமல் தியேட்டரில் பார்த்த முதல் சினிமா சிவாஜி தான்.தலைவரின் மேஜிக் அது .தொகுப்பு மிக அருமை.
Post a Comment