Sunday, August 15, 2010

ஆனந்த சுதந்திரம்?!?!?

என் தலித் சகோதரன் சுதந்திரமாக தேர்தலில் போட்டியிட முடியவில்லை.

அப்படிப் போட்டியிட்டு ஜெயித்தாலும், சுதந்திரமாக பஞ்சாயத்துத் தலைவராகப் பணியாற்ற முடியவில்லை.

கிழக்கு மாநில சகோதரர்கள் சுதந்திரமாகப் போராடக் கூட முடியாமல் நாட்டுக்குள்ளேயே ராணுவ ஆட்சிக் கொடுமை அனுபவித்து வருகிறார்கள்.

மேற்கு வங்க பழங்குடிச் சகோதரர்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசு தாரை வார்க்கத் துடிக்கும் தங்களின் சொந்த நிலங்களில் சுதந்திரமாகக் குடியிருக்க முடியவில்லை

போபால் சகோதரர்கள் தங்களுக்கு நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைக்கு தக்க நட்ட ஈட்டைக் கூட சுதந்திரமாகப் பெற முடியவில்லை.

என் தமிழக மீனவச் சகோதரர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க கடலில் இறங்க முடியவில்லை

சுதந்திரமாம்.. தினமாம்... விழாவாம்

9 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//சுதந்திரமாம்.. தினமாம்... விழாவாம்
//

சே கொன்னுட்டீங்க போங்க கலக்கல்..!

சுதந்திர தினத்தன்னிக்கு தாய் நாட்டுலதான் இல்லை இவ்வளவு தூரம் படிச்சு இம்பூட்டு தூரம் வேலைக்கு வந்தும் அதுவும் அந்த மண்ணிலே பொறந்த நாம தாய் நாட்டை பழிச்சு பேசறோம் .

பின்ன அடுத்த நாட்டுக்காரனும் நம்ம நாட்டைப்பத்தி தப்பாத்தான் பேசுவாங்க தினேஷ்..

சுதந்திர தினம்ன்றது அந்த சுதந்திரத்தை வாங்குறதுக்கு தன்னோட ரத்தத்தை சிந்தி உயிர்விட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தறதுக்கு மட்டும்தான் அதசெய்வோம் நாம் அட்லீஸ்ட் ...

அரசியல்வாதிகள் செய்ற தவறுக்கு நாடு என்ன பாவம் பண்ணுச்சு தினேஷ்?

vinthaimanithan said...

நல்ல பதிவு... சுதந்திரம் என்ற பெயரால் இந்தியாவில் நடந்தது.. வெள்ளை முதலாளிகளின் கையிலிருந்து உள்ளூர் முதலாளிகளின் கைகளுக்கு நடந்த அதிகாரப் பரிமாற்றமே!

vasu balaji said...

சுதந்திரதினம் அப்படிங்கறதோட சரி. விழாவா கொண்டாட மனசாட்சி இருந்தா முடியாதுதான்.

புலவன் புலிகேசி said...

அதான் இங்கிலாந்து காரன் கிட்ட வாங்கி அமெரிக்கா காரன் கிட்ட வித்துட்டிருக்கோமே...இன்னும் என்ன சுதந்திரம்?

Chitra said...

சுதந்திரம் வாங்கி கொடுத்த தியாகிகளையே யாரும் மதிக்கிறது இல்லை. அப்புறம், சுதந்திரத்தை யார் மதிக்கிறது? :-(

Anonymous said...

இந்தியாவில இல்லாததால் அவ்வளவா ஒண்ணும் தெரியலை

பிரபாகர் said...

மௌனியாய் இருப்பதைத் தவிர வேறெதுவும் சொல்ல இயலாது நம்மால் தினேஷ்!

பிரபாகர்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏண்ணே.. ரொம்ப வெறுத்திட்டீங்க போல....

kashyapan said...

50-60 ம் ஆண்டுகளில் பிரும்மபுத்திரா திட்டம் என்று ஒன்றை அமெரிக்க உளவுத் துறை வட கிழக்கு மாநிலங்களில் ஆரம்பித்தது.அப்போது பொட்ட விதை இன்று விஷ விருட்சமாக வளர்ந்துள்ளது .வன குடிகளின் நிலத்தை பன்னாட்டுக் கம்பெனிகளுக்காக ஆக்ரமிக்கிறார்கள்.மன்மோகன்.சிதம்பரம், அகுலிவாலியாக்களை நியமித்தது "வால் ஸ்டிரீட்". ஸ்விட்ச் உங்க ஊர்லதான் இருக்கு தம்பி!--------காஸ்யபன்.