அருமையான ப்ளாக் டெம்ப்ளேட்தான்
அதனால் நாட்டுக்கு என்ன பயன்?
அடடா போட வைக்கும் எழுத்து நடைதான்
அதனால் ஏழைகளுக்கு என்ன பயன்?
இடுகை படித்து பின்னூட்டமிட்டு
தமிழ்மணத்தில் ஓட்டையும் போட்டு
இண்டர்நெட் லிமிட்டை எக்சீட் செய்து
அடுத்த வேளை ரீசார்ஜ் செய்ய நண்பனின்
பாக்கெட்டைத் தடவ வேண்டிய நிலை
ஒவ்வொரு இடுகை வெளியீட்டின் போதும்
இது இயல்புதான்
அதற்காக புலவர் வந்து உனக்கு
ரீசார்ஜ் செய்தாரா?
நாட்டின் வறுமையை இடுகையில்
விளக்கும் புலவன்
உண்மையில் அதை ஒழிக்க
கெண்டைக்கால் மயிரேனும் பிடுங்கியிருப்பாரா?
ஓசி ப்ளாக்கரில் அவர்கள்
ஓதுவது புரட்சியை
நிஜத்தில் வேண்டுவது புகழை.
22 comments:
//ஓதுவது புரட்சியை
நிஜத்தில் வேண்டுவது புகழை.//
True...
//ஓசி ப்ளாக்கரில் அவர்கள்
ஓதுவது புரட்சியை
நிஜத்தில் வேண்டுவது புகழை//
100% unmai
உமக்கு ஓட்டு போட்டாச்சு...யாருக்கய்யா வேணு உம்ம புகழ்...நீங்களே கட்டிக் கொள்ளும். எனக்கு புகழ் மட்டும் போதுமென நினைத்திருந்தால் இது பற்றியெல்லாம் எழுதியிருக்க மாட்டேன். எந்திரனை ஆஹா ஓஹோ என புகழ்ந்திருப்பின் எனக்கு பெரிய ரசிகர் பட்டாளமும், ஏகத்துக்கு ஹிட்சும் ஓட்டும் கிடைத்திருக்கும்.
இணையம் உபயோகிப்பவரையும், ஏழை மக்களையும் ஒப்பிட்டு கொச்சைப் படுத்தி விட்டீர். நடுத்தர வர்க்க சிந்தனை என்று சொல்வதை விட வேறெதுவும் தோன்றவில்லை.
நான் ஒன்றும் புரட்சி எழுத்தாளன் அல்ல. சொல்லப்போனால் நான் எழுத்தாளனே அல்ல. எனக்குத் தவறென தோன்றுவதை பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான். என்னை எழுத்தாளன் என்றெல்லாம் புகழாதீர்கள்
101% True :-)
//இணையம் உபயோகிப்பவரையும், ஏழை மக்களையும் ஒப்பிட்டு கொச்சைப் படுத்தி விட்டீர். நடுத்தர வர்க்க சிந்தனை என்று சொல்வதை விட வேறெதுவும் தோன்றவில்லை//
பாஸ் தப்பா சொல்லிட்டீங்க.
நடுத்தர வர்க்கச் சிந்தனை இல்லை. முதலாளித்துவச் சிந்தனை.
//ஓதுவது புரட்சியை
நிஜத்தில் வேண்டுவது புகழை.//
இப்படி பார்த்தால் எந்த வித புரட்சிகர எழுத்துக்களும் வராது நண்பரே ..........
KRP செந்தில் கூட அப்படி தான் எழுதிகிறார் போல ....................
சரி புலிகேசி போபால் பற்றி ஒரு ப்ளாக் ஆரம்பித்தாரே ????அதற்க்கு ஹிட்ஸ் கம்மி .........
முன்னாடி எல்லாம் அவர் எழுதும் பொழுது வாக்குகள் குமியும் இப்பொழுது .........குமியவில்லையே ........
உங்களை போன்று பாடல் வெளியீட்டு விழா பற்றி எழுதி இருந்தால் ஒருவேளை ஹிட்ஸ் கூடி இருக்கும் ....
எழுத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் ஏன் எழுதுகிறீர்கள் ............. !!!!எழுத்தின் வலிமை என்ன என்பதை
தெரிந்து கொள்ள ...............நானே சிறந்த உதாரணம் ........எனக்கு சரியாக்கள் எழுதத்தெரியாமல் போகலாம் ......ஆனால்
வினவு தளம் படித்து பக்குவம் அடைந்து கொண்டே இருக்கிறேன் .............!!!!!!!அதனால் புரட்சிகரமாய் எழுதுவது கூட
செயல் தான் .............!!!போபால் பற்றி தளம் ஆரம்பித்தார் அதற்க்கு ஹிட்ஸ் கம்மி தானே ??????? புரட்சி என்று நீங்கள்
பேசிப்பாருங்கள் ஹிட்ஸ் கூடாது குறையும் என்பதே உண்மை ..........ரஜினி பற்றி நீங்கள் ஆதரவாய் எழுதினால் நான்கு
positive வாக்கு உங்களுக்கு ....புலிகேசிக்கு இரண்டு வாக்கு எதற்கு வாக்கு அதிகம் எது பொது புத்தி என்பது புரிகிறதா ....?????
//இப்படி பார்த்தால் எந்த வித புரட்சிகர எழுத்துக்களும் வராது நண்பரே //
புரட்சிகர எழுத்துகள் என்றால் என்ன? சிவப்பு நிறத்தில் எழுதுவதா? முதலில் பிழை இல்லாமல் தமிழில் எழுதிப் பழகுங்கள் அதன் பிறகு சமுதாயத்தின் பிழைகளைப் பட்டியலிடலாம்.
//சரி புலிகேசி போபால் பற்றி ஒரு ப்ளாக் ஆரம்பித்தாரே ????அதற்க்கு ஹிட்ஸ் கம்மி .........//
முடிந்த விசயத்தைப் பற்றி பேசி என்ன செய்ய என்று நினைத்திருப்பார்களோ என்னவோ?
//முன்னாடி எல்லாம் அவர் எழுதும் பொழுது வாக்குகள் குமியும் இப்பொழுது .........குமியவில்லையே ........
உங்களை போன்று பாடல் வெளியீட்டு விழா பற்றி எழுதி இருந்தால் ஒருவேளை ஹிட்ஸ் கூடி இருக்கும் ....//
ஹிட்ஸுக்கும் ஓட்டுக்கும் வித்தியாசம் தெரியுமா சாரே? பாடல் வெளியீட்டு விழாவைப் பற்றி நான் எழுதிய இடுகையைப் படித்தீர்களா? படிக்காமல் தாக்குவதுதான் புரச்சி எழுத்தா?
//எழுத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் ஏன் எழுதுகிறீர்கள் ............. !!!!எழுத்தின் வலிமை என்ன என்பதை
தெரிந்து கொள்ள ...............நானே சிறந்த உதாரணம் ........எனக்கு சரியாக்கள் எழுதத்தெரியாமல் போகலாம் ......ஆனால்
வினவு தளம் படித்து பக்குவம் அடைந்து கொண்டே இருக்கிறேன் //
அந்தப் பக்குவம் எனக்கு வந்துவிடக்கூடாது என்று தான் நான் வினவு பக்கமே போவதில்லை.
//புரட்சி என்று நீங்கள்
பேசிப்பாருங்கள் ஹிட்ஸ் கூடாது குறையும் என்பதே உண்மை//
என் அடுத்த இடுகை புரட்சி பற்றி தான் (#விளம்பரம்)
//ரஜினி பற்றி நீங்கள் ஆதரவாய் எழுதினால் நான்கு
positive வாக்கு உங்களுக்கு ....புலிகேசிக்கு இரண்டு வாக்கு எதற்கு வாக்கு அதிகம் எது பொது புத்தி என்பது புரிகிறதா ....?????//
படிப்பவர்கள் எல்லாம் வாக்குப் போடுகிறார்கள் என்று எண்ணும் உங்களை எண்ணி மனதுக்குள் சிரிக்கிறேன்.
ஒரு விசயத்தில் உங்களை எனக்குப் பிடிக்கும் கார்த்திக். உங்கள் தலைப்பு உள்ளே என்ன இருக்கும் என்பதைப் பிரதிபலிக்கும்.அதற்காகவே உங்களைப் பாராட்டலாம். மற்றபடி.. :))
//புரட்சிகர எழுத்துகள் என்றால் என்ன? சிவப்பு நிறத்தில் எழுதுவதா? முதலில் பிழை இல்லாமல் தமிழில் எழுதிப் பழகுங்கள் அதன் பிறகு சமுதாயத்தின் பிழைகளைப் பட்டியலிடலாம்.//
பிழை எழுத்தில் இருப்பதில் தவறில்லை. கருத்தில் இருப்பதுதான் தவறு. அது உங்களுக்கு புரியவில்லை.
//முடிந்த விசயத்தைப் பற்றி பேசி என்ன செய்ய என்று நினைத்திருப்பார்களோ என்னவோ?
//
அது ஒன்னும் முடிஞ்ச விசயமில்லீங்க. அடுத்து நடக்க போறதுக்கான ஆரம்பம்.
கார்த்திக்/புலிகேசி,
நீங்கள் எல்லாம் இப்போது தான் அதில் காலை விடுகிறீர்கள். நான் அதில் கழுத்து வரை விட்டுப் பார்த்தவன். புரட்சியைப் பற்றி நீங்கள் வகுப்பெடுக்க வேண்டாம்.
:)))
அப்படிப்போடு
கழுத்துவரைக்கும் புரட்சியில் மூழ்கி முத்தெடுத்து தெளிந்த தங்களுக்கு ஒரு எளிய கேள்வி
புரட்சி என்றால் என்ன
சத்தியம்! உண்மை! எதார்த்தம்!
:-)
//கழுத்துவரைக்கும் புரட்சியில் மூழ்கி முத்தெடுத்து தெளிந்த தங்களுக்கு ஒரு எளிய கேள்வி
புரட்சி என்றால் என்ன//
புரட்சி என்றால் புரட்டிப் போடுதல் அல்லது புரண்டு படுத்தல் - நன்றி கிருஷ்ணமூர்த்தி அய்யா
புரட்சி பிதற்றல்கள் பல வகை
அதில் இந்த புலவர்களும் ஒரு வகை
வினவை படித்ததால் வந்ததாம் பக்குவம்
விஷத்தால் வீழ்ந்தவர் உமிழும் தத்துவம்
பிழைப்புக்கு வழியில்லா பித்தர்கள் சிலரும்
வேலைக்கு போகாத சிவப்பு சித்தர் பலரும்
சாக்கடையில் செல்வம் தேட சத்தமுடன் சென்றார்கள்
சகதி வாழ்க்கையே சுகமென சலனமின்றி சொன்னார்கள்
கொலைகளம் அமைப்பது புரட்சியாம்
கொடுங்கோல் சர்வாதிகாரம் ஜனநாயக முதிர்ச்சியாம்
உள்ளேன் ஐயா :)
நாட்டின் வறுமையை இடுகையில்
விளக்கும் புலவன்
உண்மையில் அதை ஒழிக்க
கெண்டைக்கால் மயிரேனும் பிடுங்கியிருப்பாரா?
---------------------------
இதுவே ஒரு நல்ல செயல்தான் .. சில சுய சொறிதல்களை ஒப்பீடு செய்யும்போது..
எழுத்தினால் சமூகத்தில் மாற்றம் கண்டிப்பாக கொண்டு வரமுடியும்...
நல்லது நம்மால் செய்ய முடியாவிட்டாலும் எள்ளாமல் இருப்பது சிறப்பு...
// எந்திரனை ஆஹா ஓஹோ என புகழ்ந்திருப்பின் எனக்கு பெரிய ரசிகர் பட்டாளமும், ஏகத்துக்கு ஹிட்சும் ஓட்டும் கிடைத்திருக்கும்//
என்ன கொடுமை சார் இது?
புகழ்ந்து எழுதினால் ரசிகர் பட்டாளம் கிடைக்குமாமே?
5 நிமிட். நான் ஒரு பதிவெழுதிட்டு வறேன் :)
Post a Comment