Monday, July 16, 2012

Confidence (2003) - என் பார்வை


இன்னுமொரு ஹீய்ஸ்ட் படம். இந்தப் படத்தின் ஆரம்பத்தில் வரும் கதாநாயகன் Con எப்படி செய்ய வேண்டும் என்று விளக்குவதை வைத்து நான் எழுதிய கதைதான் களவு ஹீய்ஸ்ட் படங்களின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு வந்ததற்குக் காரணம் இந்தப் படம் தான் என்றுகூட சொல்லலாம்.



படம் கான் ஆர்ட்டிஸ்ட்கள் பற்றி என்பதால் நேரடியாக கதைக்கே போய்விடலாம். நான்கு நண்பர்கள், இரண்டு LAPD போலீஸ்காரர்களுடன் சேர்ந்து மற்றவர்களை ஏமாற்றி சம்பாதித்து வருகின்றனர். அப்படி ஒரு முறை ஒரு ஆளை ஏமாற்றி அடித்த பணத்தை செலவு செய்துகொண்டிருக்கும்போது, நான்குபேரில் ஒருவன் அவனது அப்பார்ட்மெண்டில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறான். அப்போதுதான் தாங்கள் கை வைத்தது ஒரு பெரிய டான் - த கிங் (Dustin Hoffman)- கின் ஆட்களில் ஒருவனை என்பதும் அந்தப் பணம் கிங்குக்குப் போய் சேர வேண்டிய பணம் என்பது தெரிய வருகிறது.

சமாதானம் பேச கிங்கை சந்திக்கும் கதாநாயகன் ஜேக் விக் (Ed Burns), கிங்கிடம் அடித்த பணத்தை வட்டியோடு சேர்த்து வேறு யாரிடமாவது திருடிக் கொடுப்பதாக வாக்களிக்கிறான். யாரிடம் திருட வேண்டும் என்பதை த கிங்கே முடிவு செய்து, அவனது எதிரியான பேங்கர் மார்கன் ப்ரைஸ்ஸிடமிருந்து ஐந்து மில்லியன் டாலர்களை அடித்துக் கொடுக்குமாறு கூறுகிறான். ஜேக்கும் ஒத்துக்கொண்டு வருகிறான். கிங் தன்னுடைய ஆள் ஒருவனையும் இவர்களோடு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறான்.

Shill role எடுத்துக்கொள்ளும் நண்பன் இறந்து போனதால் அந்த இடத்தை நிரப்ப, தன் பர்ஸை பிக்பாக்கெட் அடிக்கும் பெண் லிலி (Rachel Weisz, The Mummy நாயகி)யை டீமில் சேர்த்துக் கொள்கிறான். திட்டம் இதுதான். ஜேக், கோர்டோ (Paul Giamatti, Sideways படத்தின் நாயகன்), மைல்ஸ், லிலி மற்றும் கிங்கின் ஆள் லுபஸ் ஐந்து பேரும் ஒரு நிறுவனம் துவக்க ஐடியா வைத்திருப்பதாகவும், அதற்கு ஐந்து மில்லியன் நிதி தேவைப்படுவதாக மோர்கன் ப்ரைஸ் நிறுவனத்தில் லோனுக்கு அப்ளை செய்வது. பின்னர் வங்கியின் விபி ஒருவருக்கு லஞ்சம் கொடுத்து லோனை அப்ரூவ் செய்ய வைத்து பணத்தை ஆஃப்ஷோர் பேங்க் ஒன்றுக்கு அனுப்பி வைப்பது. பின்னர் ஜேக் அந்த ஆஃப்ஷோர் வங்கிக்குப் போய் பணத்தை வித்ட்ரா செய்துகொண்டு ட்ராஃபிக் அதிகமில்லாத ontario ஏர்ப்போர்ட்டில் வந்திறங்குவது என நீட்டாக ஓட்டை உடைசல் இல்லாமல் திட்டம் போடுகின்றனர். இதில் வி.பிக்குக் கொடுக்க வேண்டிய லஞ்சப் பணத்தையும் த கிங்கையே ஸ்பான்ஸர் செய்யச் சொல்கின்றனர்.

இடையில் கந்தர் பூடான் என்ற ஒரு ஸ்பெஷல் ஏஜெண்ட் இந்தக் கூட்டணியின் நண்பர்களான LAPD போலீஸ்காரர்கள் இருவரையும் மடக்கி, தான் நீண்ட நாட்களாக ஜேக்கைப் பிடிக்க பின் தொடர்ந்து வருவதாகவும், ஜேக்குக்கும் இவர்களுக்கும் இருக்கும் நட்பையும் சொல்லி ஜேக்கைப் பிடிக்க தனக்கு உதவி செய்யுமாறு மிரட்டுகிறான். போலீஸ்காரர்களும் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்கின்றனர்.

விபி ஒருவரை மடக்கி லோன் அப்ரூவ் செய்யும் அளவுக்கு திட்டம் வளர்ந்துவிட்ட நிலையில், பூடான் தன்னைத் தொடர்வது தெரிந்ததும், திட்டத்தைக் கைவிட முனைகிறான் ஜேக். இதனால் வரும் வாய்ச்சண்டையில் லிலியைத் திட்டிவிட அவள் கோபித்துக் கொண்டு கிளம்பிவிடுகிறாள். லுபஸ், திட்டத்தைக் கைவிட்டால் கிங் அனைவரையும் டார்ச்சர் செய்து கொன்றுவிடுவான் என்று சொல்லி திட்டத்தைத் தொடரச் செய்கிறான். சின்ன மாற்றத்தோடு திட்டம் தொடர்கிறது.

இடையில் அணியிலிருந்து விலகிய லிலி, மோர்கன் ப்ரைஸைப் பார்த்து இவர்களின் திட்டத்தை விளக்குகிறாள். திட்டம் எப்படி போட்டார்கள், யார் யார் உடந்தை என்பதை முழுதும் தெரிந்துகொண்டு ஜேக்கைக் கொன்று விட்டு வருமாறு ஒரு அடியாளை லிலியுடன் அனுப்புகிறான் மோர்கன்.

பணத்தை எடுத்துக்கொண்டு வரும்போது ஏர்ப்போர்ட்டிலேயே மடக்கி அடித்துவிட வேண்டும் என கிங் திட்டமிடுகிறான். அதே ஏர்ப்போர்ட்டிலேயே வைத்து ஜேக்கைக் கைது செய்ய வேண்டும் என்று பூடான் திட்டப்படி LAPD போலீஸ்காரர்களும் காத்திருக்கிறார்கள். மோர்கன் பிரைஸின் அடியாளோடு ஜேக்கைத் தேடிப் போகிறாள் லிலி.

இறுதியில் என்ன நடந்தது? பணம் யார் கைக்குப் போனது, ஜேக் உயிர்பிழைத்தானா? கிங் திட்டம் பலித்ததா என்பதை கிளைமாக்ஸ் சொல்கிறது.

முதல் காட்சியில் ஜேக் விக் சுடப்பட்டு கீழே கிடப்பதோடு படம் துவங்குகிறது. மோர்கன் பிரைஸின் ஆள் ஜேக்கை நாற்காலியில் கட்டி வைத்து துப்பாக்கி முனையில் முழு கதையையும் சொல்ல வைப்பதாக மொத்த படமும் ஃப்ளாஷ் பேக்காக விரிகிறது. அதிக காட்சிகளில் வராவிட்டாலும் வந்த சில காட்சிகளிலும் தன் தனி முத்திரையைப் பதிக்கிறார் டஸ்டின் ஹாஃப்மன். ADHD இருக்கும் நபராக அட்டகாசமான நடிப்பு. சொல்லும் வகையில் நடித்திருக்கும் இன்னொரு நபர் பால் கியாமட்டி.

Con, ஹீய்ஸ்ட் பட ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.

No comments: