இந்தியா நம்பர் - 1
=================
இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் முதலிடத்தை அடைந்திருக்கிறது. அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்வது இந்தியாவின் கையில் இல்லை என்பதும், இருக்கப்போவது குறுகிய காலமாகவே இருப்பினும், இது ஒரு மகத்தான சாதனை. அதை அடைந்ததற்காக தோனியின் தலைமையிலான இந்திய அணிக்குப் பாராட்டுக்கள்.
தொண்ணூறுகளில் பெரும்பாலும் ஒன் - மேன் ஷோவாக இருந்த இந்திய அணி, டீம் வொர்க்காக மாறியது கங்குலியின் தலைமைக்குக் கீழ் தான். இந்திய அணிக்கு வெற்றி பெற முடியும் என்பதைச் சொல்லிக்கொடுத்ததே கங்குலிதான் என்று சொன்னாலும் மிகையில்லை.
தொண்ணூறுகளிலிருந்த இந்திய அணிக்கும் இன்றைய இந்திய அணிக்கும் வித்தியாசம் என்னவென்றால், அப்போது ஓரிருவரையே நம்பி இருந்தது. அவர்கள் சோபிக்கவில்லையென்றால் தோல்வி நிச்சயம் என்ற நிலைமை. ஆனால் இன்றைய அணியில் ஒருவர் போனால் அடுத்தவர் என்று ஒவ்வொருவரும் அணியின் வெற்றியில் பங்கு பெறுகின்றனர். இதுவரை இருந்த (நான் பார்த்த) இந்திய அணிகளிலேயே இதுதான் சிறந்த அணி என்று சொல்வதில் எனக்குத் தயக்கம் ஏதுமில்லை.
Congratulations Team India.
தமிழ் படும் பாடு
================
நசரேயனின் இந்த பதிவைப் படித்ததும் எனக்கு அதே பெங்களூருவில் ஏற்பட்ட ஒர் அனுபவம் நினைவுக்கு வந்தது. நான் பனிரெண்டாவது முடித்த போதிருந்தே தமிழில் கையெழுத்திடுவது வழக்கம். இரண்டாயிரத்து ஒன்றாம் ஆண்டு எம்.சி.ஏ பட்டம் பெற்று பெங்களூருவில் (அப்போது பெங்க்ளூர்) ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்தேன். சிட்டி வங்கியில் சேமிப்புக் கணக்குத் தொடங்க விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தால், தமிழில் கையொப்பம் போடுவதால் அஃபிடவிட் ஒன்றை நோட்டரி பப்ளிக்கிடம் பெற்று வரவேண்டும் என்று சொல்லி விட்டார்கள். போங்கடா என்று எச்.டி.எஃப்.சி வங்கியில் - இது போல எதையும் கேட்காததால் - கணக்கு தொடங்கிவிட்டேன்.
அடுத்த மாதத்தில் ஒருநாள் அதே சிட்டி வங்கியில் கடன் அட்டைக்கு விண்ணப்பம் கொடுத்தால் எந்தக் கேள்வியும் கேட்காமல் கொடுக்கிறார்கள். என்னடா கொடுமை இது. என் பணத்தை சேமித்து வைக்க கணக்கு ஆரம்பிக்கலாம் என்றால் என் கையெழுத்து சரியில்லையாம். அதுவே கடன் வாங்க எனக்குக் கையெழுத்தே போடத் தெரியவில்லையென்றாலும் பரவாயில்லையாம்.
இதெல்லாம் பரவாயில்லை. அலுவலக சம்பந்தமாக ஒரு பயணம் செய்த செலவை சமர்ப்பித்து அந்தப் பணத்தைப் பெறுவதற்காக படிவங்களைப் பூர்த்தி செய்து மேலாளரிடம் கொடுத்தால் (அவர் ஒரு கன்னடர்) அவர் தமிழில் கையெழுத்திட்டிருப்பதால் ஆயிரம் கேள்வி - கையெழுத்தைப் பற்றி மட்டுமே - கேட்கிறார்.
ஏன் தமிழ்ல கையெழுத்துப் போடுற? ஆங்கிலத்துல போட முயற்சி செய்யலயா?
ஆங்கிலத்துல போடுறது சுலபம். தமிழ்ல போடணும்ங்கிறதுக்காக, கஷ்டப்பட்டு பழகினேன்.
தமிழ்ல கையெழுத்துப் போட்டா வங்கிக் கணக்குத் தொடங்குறது கஷ்டமாச்சே?
அதெல்லாம் கணக்கு வச்சிருக்கேனே.
வெளிநாடு போனா அவனுக்கு இது புரியாதே?
(ஒனக்கு மட்டும் புரியுமாக்கும்) கையெழுத்துல என்ன புரியணும்? பேட்டர்ன் மேட்சிங் தான?
இப்பிடியெல்லாம் பதில் சொல்லியும் அவன் இங்க்லீஷ்ல கையெழுத்துப் போட்டாத்தான் அப்ரூவ் செய்ய முடியும் என்று சொல்லிவிட்டான். அப்புறம் அவனுடைய மேலாளரிடம் புகார் கொடுத்து அனுமதி வாங்க வேண்டியதாகிவிட்டது. இன்றும் தமிழில் தான் கையெழுத்து. அமெரிக்காவில் ஒருத்தரும் கேள்வி கேட்டதில்லை.
டீலா நோ டீலா
===============
அமெரிக்காவில் ஒளிபரப்பான Deal or No Deal சன் டிவியில் டீலா நோ டீலா என்று ஒளிபரப்பாகி வருகிறது. ஆங்கிலத்திலேயே டீலா நோ டீலா என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக உள்ளே/வெளியே என்று வைத்திருக்கலாம்.
ஆங்கிலத்தில் பல முறை இந்த நிகழ்ச்சியப் பார்த்திருந்தாலும் தமிழில் இதுவரைப் பார்க்கவில்லை. கடந்த வாரம் இந்நிகழ்ச்சிக்கான விளம்பரத்தில் ஒரு பெண்மணி கலங்கிய கண்களுடன் - அவருக்காக - என்று ஆரம்பித்ததும், கணவருக்கு என்னவோ ஏதோ என்று தொடர்ந்து ஆர்வத்துடன் கேட்டால் - சாண்ட்ரோ வேண்டாம், அத விட பெரிய காரா வாங்கணும் - என்று சொன்னதைக் கேட்டவுடன் நானும் தங்கமணியும் தலையில் அடித்துக் கொண்டோம் - உலகத்தில் எவ்வளவோ கஷ்டம் இருக்க சாண்ட்ரோவை விட பெரிய கார் வாங்குவதற்காக கண்கலங்குபவரைப் பார்த்து. ஒரு வேளை முழு நிகழ்ச்சியையும் பார்த்திருந்தால் அவர் அழுததற்கான நியாயம் புரிந்திருக்குமோ என்னவோ? பார்த்தவர்கள் யாராவது சொல்லுங்களேன்.
MONK (மான்க்)
==============
யு.எஸ்.ஏ நெட்வொர்க் தொலைக்காட்சியில் விடாமல் பார்த்துவந்த தொடர். போன வாரத்தோடு முடிந்துவிட்டது. கதையின் நாயகன் ஏட்ரியன் மான்க் ஒரு அப்சஸ்ஸிவ் கம்ப்பல்ஸிவ் டிஸ்ஸார்டர் உள்ள அசாதாரணமான டிடெக்டிவ் (முன்னாள் என்பதே சரி. அவரது மனநிலைக் குறைபாட்டால் போலீஸ் வேலையை விட்டு நீக்கப்பட்டு விடுகிறார்). சாதாரண ஆட்களுக்கு தென்படாத க்ளூக்கள் கூட அவருக்குப் பிடிபடும். மிகவும் சுவாரஸ்யமாக சிக்கலான குற்றங்களைக் கூட தீர்த்து வைப்பார்.
கடைசிக்கு முந்தய வாரத்தில் அவருக்கு விஷம் கொடுத்துவிட்டார்கள். என்ன விஷம் என்பது தெரியாமல் முறிவு மருந்து கொடுக்க முடியாது என்று மருத்துவர்கள் கை விட்டு விடுகிறார்கள். இரண்டு அல்லது மூன்று நாட்கள்தான் உயிரோடு இருக்க முடியும் என்பதோடு அந்த வாரம் முடிந்தது. ஒரு வாரமாக ஒரே சோகம். ஊரில் மெகா சீரியல் பார்க்கும் தங்கமணிகள் நாடகக் கதாபாத்திரங்களுக்காக வருத்தப்படும்போது கிறுக்குத்தனம் என்று நினைத்த நான், ஒரு விஷயத்தில் ஒன்றிப் போய் விட்டால் அப்படித்தான் இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டேன்.
(நல்ல வேளை மான்க்கைக் காப்பாற்றி விட்டார்கள்)
அப்புறம் பாக்கலாம்,

10 comments:
//கையெழுத்துல என்ன புரியணும்? //
நான் ஒரு கிறுக்கி கிறுக்கீறுவேன். அவங்களுக்கெல்லாம் புரியுமா என்ன :)
சின்ன அம்மிணி
சரியாச் சொன்னிங்க..
நல்ல பதிவு.
நான் மலேசியாவில் பொட்டி தட்டிக் கொண்டு இருக்கிறேன் .
இங்கு நான் தமிழில் தான் கை எழுத்து போடுகிறேன் .
இந்த பிரச்னையும் இல்லை.
//இன்றும் தமிழில் தான் கையெழுத்து. அமெரிக்காவில் ஒருத்தரும் கேள்வி கேட்டதில்லை.//
எவ்வளவு பாராட்டினாலும் தகும் உங்களை.ச்சே..நான் எல்லாம் எப்படி சுயலவாதி ஆகி இங்கிலிஷ்ல தான் கையெழுத்து போடுறேன்?ரொம்ப கேவலமா இருக்கு ஸார்.
//அமெரிக்காவில் ஒருத்தரும் கேள்வி கேட்டதில்லை.//
நம்மூர்ல என் பிரண்டே கேவலமா பார்குறான் ஸார்.
//டீலா நோ டீலா என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக உள்ளே/வெளியே என்று //
=))...
//ஒனக்கு மட்டும் புரியுமாக்கும்) கையெழுத்துல என்ன புரியணும்? பேட்டர்ன் மேட்சிங் தான//
finger print தான் செரி இவங்களுக்கெல்லாம் . . =))...
//இன்றும் தமிழில் தான் கையெழுத்து. அமெரிக்காவில் ஒருத்தரும் கேள்வி கேட்டதில்லை.//
great முகிலன்... =))
//கிரிக்கெட் //
insect mattume theriyum.. :(
//அத விட பெரிய காரா வாங்கணும்//
=)).. hmm.. greedy ppl..
//MONK//
இந்த வார்த்தைக்கே அர்த்தமற்றுப் போகச் செய்து கொண்டிருக்கிறார்கள் சில..பலர்..!
ஆமாம்... லாஸ்ட் பார்ட் எங்க..?! =))
அதான. லாஸ்ட் பார்ட்ல அந்த க்ளூ எங்க.=))
// nedun said...
நல்ல பதிவு.
நான் மலேசியாவில் பொட்டி தட்டிக் கொண்டு இருக்கிறேன் .
இங்கு நான் தமிழில் தான் கை எழுத்து போடுகிறேன் .
இந்த பிரச்னையும் இல்லை.
//
ஆமா நெடுன், வெளிநாட்டுக்காரன் கூட சும்மா இருக்கான். நம்ம நாடுன்னு சொல்லிக்கிரவனுக்குத்தான் தாங்க முடியிறதில்ல
பூங்குன்றன்.வே said...
//எவ்வளவு பாராட்டினாலும் தகும் உங்களை.ச்சே..நான் எல்லாம் எப்படி சுயலவாதி ஆகி இங்கிலிஷ்ல தான் கையெழுத்து போடுறேன்?ரொம்ப கேவலமா இருக்கு ஸார்.//
இதுக்கெல்லாம் கேவலப்பட வேண்டாம் சார். இனிமே நீங்க கையெழுத்த மாத்தணும்னும் அவசியம் இல்லை. அதுக்குபதிலா உங்க பிள்ளைங்கள தமிழ் பேச வைங்க. டாடி மம்மின்னு கூப்பிடாம அம்மா அப்பானு அழகுத்தமிழ்ல கூப்பிட வைங்க
//நம்மூர்ல என் பிரண்டே கேவலமா பார்குறான் ஸார்.
//
இந்த மாதிரி ஜென்மங்களத்தான் என்ன செய்யறதுன்னு தெரியல
கலகலப்ரியா
வானம்பாடிகள்
வருகைக்கு நன்றி
அதே பதிவிலேயே சேர்த்து விட்டேன்
//இன்றும் தமிழில் தான் கையெழுத்து//
அட நல்ல யோசனையா இருக்கே
Post a Comment