தனிப்பட்ட முறையில் 2009 மகிழ்ச்சியும் சோகமும் கலந்தடித்த வருடம்.
வருடத்தின் மகிழ்ச்சியான கணங்கள் முதலில்
2008ஐ சந்தோசத்தோடு முடித்தும் புது வருடத்தை சந்தோசத்தோடு துவங்கியும் வைத்த புது உறுப்பினர் வருகை.
ஆஸ்கார் மேடையில் தமிழ் கேட்ட கணம் கண்களில் நீர் வழிந்தது தவிர்க்க இயலாதது. ஆனந்தத்திலும் கண்ணீர் வரும்
கிரிக்கெட் வெறியனான எனக்கு இந்தியா டெஸ்ட் தர வரிசையில் முதல் இடத்தை அடைந்தது மகிழ்ச்சியான நிகழ்வே
பதிவுலகில் காலடி எடுத்து வைத்து நானே எழுதி நானே படித்துக் கொண்டிருந்தவனுக்கு குடுகுடுப்பையின் அறிமுகம் கிடைத்து தமிழ் மணம் தமிழிஷ்ல் இணைக்க ஆரம்பித்து பல நல்ல இதயங்களின் அறிமுகமும் நட்பும் கிடைத்து என் எழுத்துக்கும் ஒரு சிறிய அங்கீகாரம் கிடைத்த பல தருணங்கள். பதிவுலகில் பதிவிடும்போதும் பின்னூட்டங்கள் இடும்போதும் என் பதிவுக்கும் பின்னூட்டத்துக்கும் கிடைக்கும் பதில்களைப் படிக்கும்போதும் நான் பெறும் மகிழ்ச்சி அளவில்லாதது. அழுத்தம் நிறைந்த அலுவலகப் பணிக்கிடையில் இப்படி ஒரு வடிகால் தேவையானதே.
இழப்புகளும் அவை தந்த சோகங்களும்
முத்துக்குமார் - தன்னை எரித்து வெளிச்சம் கொடுக்கும் மெழுகினைப் போல தன்னை ஜோதியாக்கி தமிழக மக்கள் மனதில் ஈழப் போருக்கு ஆதரவுச் சுடரை எரிய வைத்த தோழன். இவன் மரணம் பல இரவுகள் என்னை அழ வைத்தது.
மே மாத மத்தியில் இந்தியாவில் இருக்க நேர்ந்தது. மகிழ்ச்சியாக சென்றிருக்க வேண்டிய இந்தக் கால கட்டத்தில் இடியாய் இறங்கிய ஈழப்போரின் முடிவும் அது தொடர்ந்த செய்திகளும் மனத்தின் கனத்தை அதிகமாக்கிய நிகழ்வுகள். ஈழம் ஒரு நாள் விடியும் என்ற நம்பிக்கை இன்னும் அடி ஆழத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்தியாவில் இருந்து திரும்பியதும் பொருளாதார சரிவின் பின்விளைவாய் என் நண்பர்கள் சிலரை பணியில் இருந்து நீக்க வேண்டிய பொறுப்பை என் தலையில் சுமந்த இருதலைக் கொள்ளி எறும்பு நாட்கள்.
ஒரு வழியாக 2009 போய்த் தொலைந்தது. இனி வரும் 2010 கூடிய மட்டிலும் மகிழ்ச்சியான நிகழ்வுகளை மட்டும் தாங்கி வரட்டும்.
அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

8 comments:
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
முகிலன் மகிழ்ச்சியான இந்நாளை உற்சாகத்துடன் கொண்டாடுங்கள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
முகிலன்...
மகிழ்ச்சியான புத்தாண்டா 2010 இருக்க வாழ்த்துக்கள்
நசரேயன்
குடுகுடுப்பை
கலகலப்ரியா
சின்ன அம்மிணி
புத்தாண்டு வாழ்த்துக்கள்
முகிலனுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!!! உங்களோடு நாங்களும் ஈழத்தை எதிர் பார்த்து காத்திருக்கிறோம் ... 2010 அவர்களுக்கு விடியலை உண்டாக்கட்டும் ...!!!
அன்புள்ள திரு முகிலன்,
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
எம்.ஏ.சுசீலா
புத்தாண்டு வாழ்த்துகள் முகிலன்
Post a Comment