Wednesday, December 9, 2009

அறிமுகம் - ஜூனியர்

அது 2008ம் வருசம். டிசம்பர் முப்பத்தியொண்ணாந்தேதி. வருசம் பழசாகி எக்ஸ்பயராகப் போற அந்த நாள்ல எங்க குடும்பத்துக்கு புது உறுப்பினர் வந்தாரு. வந்தவரு சும்மால்லாம் வரல. அவங்கம்மாவ இருவத்தியேழு மணிநேரம் வேதனப் பட வச்சி, கிட்டத்தட்ட சிசேரியன் தான்னு டாக்டர்லாம் சொன்னப் பிறகு சுகப்பிரசவமாவே வந்துட்டாரு. 

கொஞ்சம் கொஞ்சமா நெறய சேட்டை செய்ய ஆரம்பிச்சிட்டாரு (அவங்கப்பா மாதிரியேன்னு அவங்கப்பா மட்டும் சொல்லிக்கிறாரு). 

இப்ப அவருக்கு கிட்டத்தட்ட ஒரு வயசு ஆறதுனால நிறைய விசயங்கள் எப்பிடி செய்யறதுன்னு எல்லாருக்கும் சொல்லிக்குடுக்க ஆரம்பிச்சிட்டாரு. அதுல ஒண்ணையாவது என்னோட ப்ளாக்ல போடணும்னு ஒரே தொல்லை. (கூடிய சீக்கிரம் அவரே தனி ப்ளாக் ஆரம்பிச்சாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல)

முதல் முதலா தோசை சாப்புடுறது எப்பிடின்னு அவரோட செய்முறை விளக்கத்தை இந்த வீடியோல பாருங்க




அவருக்குத் தமிழ் பாட்டு ரொம்பப் பிடிக்கு. இந்த வீடியோல அப்பாவும் அம்மாவும் பாடுற பாட்டுக்கு அழகா (?!) அபிநயம் பிடிக்கிறாரு பாருங்க.


டிஸ்கி - 1: இதுல பாடுற ஆண்குரலோட இனிமையக் கேட்டு யாரும் மயங்கி ரசிகர் மன்றம் தொடங்குறதோ, இல்ல ரசிகர் கடிதம், தந்தி, இ-மெயில் எறும்பு-மெயில், டெலிஃபோன் எல்லாம் பண்ணக்கூடாது. சொல்லிட்டேன் ஆமா.
டிஸ்கி - 2: இதுல பாடுன பாடகருக்கு, சினிமா, ஆல்பம், குறும்படம், நெடும்படம், விழாமேடை, இப்பிடி எந்த இடத்திலயும் (பாத்ரூம் உட்பட) பாடுற எண்ணம் இல்லை. அதுனால முன்னாள், இந்நாள், வருங்கால இசையமைப்பாளர்கள் யாரும் பொட்டியத் தூக்கிக்கிட்டு வர வேணாமுன்னு கண்டிப்பா கேட்டுக்குறோம்




11 comments:

Anonymous said...

ஜூனியர் ரொம்ப க்யூட். கைய வீசிட்டு கடைக்கு போக பாக்கறார். நீங்க கதவெல்லாம் பூட்டி வைச்சிருந்தா என்ன பண்ணுவார்? :)

பூங்குன்றன்.வே said...

மழலை ரொம்ப அழகா இருக்கான்..கட்டுரை நல்லா இருக்கு.

//நீங்க கதவெல்லாம் பூட்டி வைச்சிருந்தா என்ன பண்ணுவார்? :)//

அதானே !!!

vasu balaji said...

அல்லோ. என்னதான் டிஸ்கி போட்டு உங்க பக்கம் இழுக்க பார்த்தாலும் நோ சான்ஸ். ஹீரோ ஒரு செகண்ட் விடாம மொத்த கவனத்தையும் ஈர்த்துட்டார். அவர் சார்பில் இந்த இடுகையை மொக்கை என்றும் வகைப் படுத்தியமைக்கு கண்டனம் தெரிவிக்கப் படுகிறது.

சந்தனமுல்லை said...

ரசித்தேன்...க்யூட்! ஜூனியருக்கு வாழ்த்துகள்! :-))

கலகலப்ரியா said...

achcho... soooooooo cute...! ty for sharing..! kai veesammaa superoooo super...! =))

Unknown said...

// சின்ன அம்மிணி said...
ஜூனியர் ரொம்ப க்யூட். கைய வீசிட்டு கடைக்கு போக பாக்கறார். நீங்க கதவெல்லாம் பூட்டி வைச்சிருந்தா என்ன பண்ணுவார்? :)
//

நன்றி சின்ன அம்மிணி.

Unknown said...

பூங்குன்றன்

வருகைக்கு நன்றி

வானம்பாடிகள்

கண்டனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது

சந்தனமுல்லை

வருகைக்கு நன்றி

கலகலப்ரியா

நன்றி

பின்னோக்கி said...

கவிதை...


உங்க பேர்தான் முகிலன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.

வீடு ரொம்ப மார்டனா, நல்லாயிருக்கு

Unknown said...

// பின்னோக்கி said...
கவிதை...
//
உரையாடல் கவிதைப்போட்டிக்கு அனுப்பலாமுங்களா?

//உங்க பேர்தான் முகிலன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.
//

எனக்கு எங்கப்பா அம்மா வடமொழியில பேரு வச்சிட்டாங்க, அட்லீஸ்ட் நம்ம பிள்ளைக்காவது தமிழ்ல வைக்கலாமேன்னுதான்..

//வீடு ரொம்ப மார்டனா, நல்லாயிருக்கு
//
நன்றி

நசரேயன் said...

மறுபடியும் வாரேன்.

குடுகுடுப்பை said...

super mukilan. ungappa nallaaaa paaduraar, en music la chance tharennnu solluppa.