Sunday, January 24, 2010

பிதற்றல்கள் - 1/23/2010

இந்த தொடர்பதிவுக் கதை யோசனையை முதலில் வைத்தது நண்பர் விசா. ஆரம்பத்தில் நான், விசா, கலகலப்ரியா மற்றும் அதுசரி மட்டுமே எழுதுவதாக இருந்தது (வேற யாரும் முன்வரலைங்கறதுதான் உண்மை). ஆகவே பெரிதாக விதிமுறைகள் எல்லாம் வகுக்கவில்லை.

ஆனால், நான் முதல் பாகத்தை போட்ட வேகத்தில் பலா பட்டறை, பிரபாகர் இரண்டாவது மூன்றாவது பாகத்தை வேகமாக எழுதிவிட்டனர். ஆகவே விதிமுறைகள் வகுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுவிட்டோம்.

எப்படியோ இது சுவாரசியமாக செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைத் தட்டிச் சென்று விமர்சகர்களின் (முகத்தில் அறைந்த என்று எழுதலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் நான் இன்னும் பின்னவீனத்துவவாதி ஆகாத காரணத்தால்) விமர்சனங்களுக்கு பதில் சொன்ன பாலாவுக்கு பாராட்டுகள்.

சேது படத்திலேயேவோ இல்லை பிதாமகன் படத்திலாவது வந்திருக்க வேண்டிய விருது இது. கொஞ்சம் லேட்டாக வந்தாலும் நான் கடவுளுக்குக் கிடைத்திருப்பதும் நல்லதே.

பாலாவின் அடுத்த படம் என்ன என்பதை விட எப்போது என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நான் கடவுள் படத்தின் மேக்கப் மேன் மூர்த்திக்கும் விருது கிடைத்துள்ளது. அவருக்கும் வாழ்த்துகள்.

தமிழுக்குக் கிடைத்த மூன்றாவது விருது வாரணம் ஆயிரம் படத்துக்கு. இதில் ஏதாவது அரசியல் இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்நேரம் மதுரையில் என்ன என்ன போஸ்டர் ஒட்டியிருப்பார்கள் என்று நினைக்கையிலேயே சிரிப்பு வருகிறது.

சேவாக் சொன்ன “பங்களாதேஷ் ஒரு ஆர்டினரி டீம். அவர்களால் 20 இந்திய விக்கெட்டுகளை எடுக்க முடியாது” என்று சொன்னது பெரும் சர்ச்சைக்குள்ளாகும் என்று எதிர்பார்க்கப்பட்டதே. முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய மாதிரி ஆனது. எல்லா ஊடகவியலாளர்களும் இந்திய அணியில் யாரைப் பார்த்தாலும் இதைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தனர். ஒரு வேளை இந்தியா அதிக ரன்களை எடுத்திருந்தால் யாரும் இதைப் பற்றி பேசியே இருக்கமாட்டார்கள். நல்ல வேளை இந்தியா வெற்றி பெற்றது.

தோனி இரண்டாவது போட்டிக்கு முன் கொடுத்த பேட்டியில் மிகவும் நாகரீகமாகப் பேசியிருக்கிறார். இந்தியா என்ன கிழிக்கிறது என்று பார்ப்போம்.

சன் டிவியில் இன்று மாலை ஒளிபரப்பிய அதே நேரம் அதே இடம் பார்த்தேன். இந்தப் படம் ஓடாது என்று கதாநாயகன் ஜெய் பேட்டியில் சொன்னதாக பரபரப்பைக் கிளப்பிய படம். பெரும்பாலான காட்சிகளில் நடிகர்கள் எழுதி ஒப்பித்தது போல வசனம் பேசியது எரிச்சலாக இருந்தது. எப்படா முடியும் என்றிருந்தேன். (நம்ம தங்கமணிக்கு ஒரு கெட்ட பழக்கம், படம் பாக்க ஆரம்பிச்சிட்டா அது எவ்வளவு மொக்கையா இருந்தாலும் படம் முடியாம எந்திரிக்க மாட்டாங்க. கட்டிக்கிட்ட பாவத்துக்கு நாமும் பாத்து தொலையனும்).

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் இன்று சன் செய்திகளில் தமிழ்நாட்டுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தேவை இல்லை என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாகத் தெரிவித்தார். அங்கிருந்தெல்லாம் சரியாகக் கமிஷன் வருவதில்லை போலும்.

மே மாதத்தின் இடையில் இந்தியா வருவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போலத் தெரிகிறது. முடிந்தால் சக பதிவர்களை சந்திக்க விருப்பம். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

22 comments:

பலா பட்டறை said...

இவ்வளவு நடந்திருக்கா? கடைசில விசாவுக்கே விசா லேட்டாயிருச்சே::))

முகிலன் said...

// பலா பட்டறை said...
இவ்வளவு நடந்திருக்கா? கடைசில விசாவுக்கே விசா லேட்டாயிருச்சே::)
//

அதுனால என்ன. அவரு லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவாரு.. :)))

KarthigaVasudevan said...

//(நம்ம தங்கமணிக்கு ஒரு கெட்ட பழக்கம், படம் பாக்க ஆரம்பிச்சிட்டா அது எவ்வளவு மொக்கையா இருந்தாலும் படம் முடியாம எந்திரிக்க மாட்டாங்க. கட்டிக்கிட்ட பாவத்துக்கு நாமும் பாத்து தொலையனும்).//

அதெல்லாம் கடமைங்க..இதுக்கெல்லாம் சலிச்சுக்கிட்டா ஒரு நாள்ல தீர்ந்துடற கதையா இது?!
:)

வானம்பாடிகள் said...

நான் கடவுள் படத்தில் சசி என்பவர்தான் மேக்கப் மேனாம். மூர்த்தி என்ற பெயரில் யாரும் பணிபுரியவில்லையாம். யாருக்கு வட போச்சேவோ தெரியலை:))

VISA said...

பிதற்றல் சுவை. பாலாவுக்கு விருது கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. என் மனதில் பெரும் மரியாதையோடு வீற்றிருக்கும் அவருக்கு என் வாழ்த்துக்கள். தென் தொடர் பதிவு பிச்சுக்கும் பாருங்க. அதை தொடங்கி வைத்த உங்களுக்கு நன்றி.

பிரபாகர் said...

நீங்களும் மாட்டுனீங்களா? அதே படம், அதே டி.வி... அம்மணி இல்ல, அதால மாத்தி மாத்தி பார்த்தேன். பணம் போட்டு எப்படி இந்த மாதிரி நம்பிக்கை வெச்சி எடுக்கறாங்கன்னு ரொம்ப நேரம் யோசிச்சிகிட்டிருந்தேன்...

பிரபாகர்.

கலகலப்ரியா said...

நல்லாருக்கு .. Bala deserves it..!!!


//வேணுமின்னேதாங்க்கா கிரிக்கெட்ல ஆரம்பிச்சேன். கிரிக்கெட் பத்தி தெரிஞ்சிக்கிட்டு நீங்க எழுதணுமின்னு.. ;)))//

கதை முடியறதுக்குள்ள கிரிக்கெட் போன இடமே தெரியாம போய்டும்.. அப்புறம் பார்த்துக்கறோம்.. ஆமா.. =)).. இல்லைனா கிரிக்கெட் தெரிஞ்சுக்க நோ சான்ஸ்...

Chitra said...

(நம்ம தங்கமணிக்கு ஒரு கெட்ட பழக்கம், படம் பாக்க ஆரம்பிச்சிட்டா அது எவ்வளவு மொக்கையா இருந்தாலும் படம் முடியாம எந்திரிக்க மாட்டாங்க. கட்டிக்கிட்ட பாவத்துக்கு நாமும் பாத்து தொலையனும்)................இதுதான் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு எடுத்துக்கிறதா? ஹா,ஹா,ஹா,....

பிரியமுடன்...வசந்த் said...

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைத் தட்டிச் சென்று விமர்சகர்களின் (முகத்தில் அறைந்த என்று எழுதலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் நான் இன்னும் பின்னவீனத்துவவாதி ஆகாத காரணத்தால்) விமர்சனங்களுக்கு பதில் சொன்ன பாலாவுக்கு பாராட்டுகள்.
//

லொள் :))

அது சரி said...

இதுவரை வந்திருக்கு மூணு பாகமும் படிச்சிட்டேன் முகிலன்...கதை நல்லா போகுது...வெரி குட் ஸ்டார்ட்...

கடைசி பெஞ்சு பசங்கள்லாம் வேற வழியே இல்லாட்டி தான் கைய தூக்குவோம்...அதனால டைம் கிடைச்சா நானும் கைய தூக்குவேன் :0)))

Anonymous said...

//(நம்ம தங்கமணிக்கு ஒரு கெட்ட பழக்கம், படம் பாக்க ஆரம்பிச்சிட்டா அது எவ்வளவு மொக்கையா இருந்தாலும் படம் முடியாம எந்திரிக்க மாட்டாங்க//

Fast Forward பட்டன் ஒண்ணு இருக்கும். அதுதான் எனக்கு கை குடுக்கும்.

முகிலன் said...

//KarthigaVasudevan said...
//(நம்ம தங்கமணிக்கு ஒரு கெட்ட பழக்கம், படம் பாக்க ஆரம்பிச்சிட்டா அது எவ்வளவு மொக்கையா இருந்தாலும் படம் முடியாம எந்திரிக்க மாட்டாங்க. கட்டிக்கிட்ட பாவத்துக்கு நாமும் பாத்து தொலையனும்).//

அதெல்லாம் கடமைங்க..இதுக்கெல்லாம் சலிச்சுக்கிட்டா ஒரு நாள்ல தீர்ந்துடற கதையா இது?!
:)//

அங்கயும் இதே கதை தான் போல இருக்கே.. உங்க ரங்கமணிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்..

முகிலன் said...

//வானம்பாடிகள் said...
நான் கடவுள் படத்தில் சசி என்பவர்தான் மேக்கப் மேனாம். மூர்த்தி என்ற பெயரில் யாரும் பணிபுரியவில்லையாம். யாருக்கு வட போச்சேவோ தெரியலை:)//

அப்பிடியா? புது நியூஸா இருக்கு?? ஃபாலோ அப் போடுங்க ப்ளீஸ்

முகிலன் said...

//VISA said...
பிதற்றல் சுவை. பாலாவுக்கு விருது கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. என் மனதில் பெரும் மரியாதையோடு வீற்றிருக்கும் அவருக்கு என் வாழ்த்துக்கள். தென் தொடர் பதிவு பிச்சுக்கும் பாருங்க. அதை தொடங்கி வைத்த உங்களுக்கு நன்றி//

நன்றி விசா... ஹாலிவுட் பாலா சொன்ன மாதிரி 10 எபிசோடுக்கு ஒரு தடவ கதைய முடிச்சிட்டு வேற கதை ஆரம்பிச்சா இண்ட்ரெஸ்டிங்கா இருக்கும். மறுபடி எழுத நமக்கும் வாய்ப்பு கிடைக்கும். என்ன சொல்றீங்க?

முகிலன் said...

//பிரபாகர் said...
நீங்களும் மாட்டுனீங்களா? அதே படம், அதே டி.வி... அம்மணி இல்ல, அதால மாத்தி மாத்தி பார்த்தேன். பணம் போட்டு எப்படி இந்த மாதிரி நம்பிக்கை வெச்சி எடுக்கறாங்கன்னு ரொம்ப நேரம் யோசிச்சிகிட்டிருந்தேன்...
//

குடுத்து வச்சவர் சார் நீங்க.. (அம்மணி இல்லாதத சொல்லல :) )

முகிலன் said...

//கலகலப்ரியா said...
நல்லாருக்கு .. Bala deserves it..!!!


//வேணுமின்னேதாங்க்கா கிரிக்கெட்ல ஆரம்பிச்சேன். கிரிக்கெட் பத்தி தெரிஞ்சிக்கிட்டு நீங்க எழுதணுமின்னு.. ;)))//

கதை முடியறதுக்குள்ள கிரிக்கெட் போன இடமே தெரியாம போய்டும்.. அப்புறம் பார்த்துக்கறோம்.. ஆமா.. =)).. இல்லைனா கிரிக்கெட் தெரிஞ்சுக்க நோ சான்ஸ்.//

கிரிக்கெட் இல்லாமப் போனாலும் நீங்க தொட்டு எழுதணும். இது நாட்டாமை தீர்ப்பு.... =))

முகிலன் said...

//Chitra said...
(நம்ம தங்கமணிக்கு ஒரு கெட்ட பழக்கம், படம் பாக்க ஆரம்பிச்சிட்டா அது எவ்வளவு மொக்கையா இருந்தாலும் படம் முடியாம எந்திரிக்க மாட்டாங்க. கட்டிக்கிட்ட பாவத்துக்கு நாமும் பாத்து தொலையனும்)................இதுதான் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு எடுத்துக்கிறதா? ஹா,ஹா,ஹா,.//

ஆஹா அவங்க இன்பம் நமக்கு துன்பமா இருந்தாலுமா??

முகிலன் said...

//பிரியமுடன்...வசந்த் said...
சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைத் தட்டிச் சென்று விமர்சகர்களின் (முகத்தில் அறைந்த என்று எழுதலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் நான் இன்னும் பின்னவீனத்துவவாதி ஆகாத காரணத்தால்) விமர்சனங்களுக்கு பதில் சொன்ன பாலாவுக்கு பாராட்டுகள்.
//

லொள் :))
//
வருகைக்கு நன்றி..

முகிலன் said...

//அது சரி said...
இதுவரை வந்திருக்கு மூணு பாகமும் படிச்சிட்டேன் முகிலன்...கதை நல்லா போகுது...வெரி குட் ஸ்டார்ட்...

கடைசி பெஞ்சு பசங்கள்லாம் வேற வழியே இல்லாட்டி தான் கைய தூக்குவோம்...அதனால டைம் கிடைச்சா நானும் கைய தூக்குவேன் :0)))//

இப்பிடி சொல்லியெல்லாம் தப்பிச்சிற முடியாது...

முகிலன் said...

//சின்ன அம்மிணி said...
//(நம்ம தங்கமணிக்கு ஒரு கெட்ட பழக்கம், படம் பாக்க ஆரம்பிச்சிட்டா அது எவ்வளவு மொக்கையா இருந்தாலும் படம் முடியாம எந்திரிக்க மாட்டாங்க//

Fast Forward பட்டன் ஒண்ணு இருக்கும். அதுதான் எனக்கு கை குடுக்கும்.//

என்னாங்க நீங்க.. விளம்பர இடைவேளைல சானல் மாத்தினாலே கை மேல அடி விழுகுது.. இதுல எங்க ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பட்டன்?

பின்னோக்கி said...

//கட்டிக்கிட்ட பாவத்துக்கு நாமும் பாத்து தொலையனும்

என்ன ஒரு தைரியம் உங்களுக்கு இப்படி எழுத. ஒருவேளை நாந்தான் தப்பா படிச்சுட்டனோ ? :)

நசரேயன் said...

//நம்ம தங்கமணிக்கு ஒரு கெட்ட பழக்கம், படம் பாக்க ஆரம்பிச்சிட்டா அது எவ்வளவு மொக்கையா இருந்தாலும் படம் முடியாம எந்திரிக்க மாட்டாங்க. கட்டிக்கிட்ட பாவத்துக்கு நாமும் பாத்து தொலையனும்//

வீட்டுக்கு வீடு வாசப்படி