தமிழ்நாட்டுல இப்போதைக்கு எத்தனையோ பேருக்கு இந்த பாவப்பட்ட ஜென்மம் அப்பிடிங்கிற பட்டத்தைக் குடுக்கலாம். ஆனா அத வாங்குற ஆளுங்க நாளுக்கு நாள் மாறிட்டே இருப்பாங்க.
உதாரணத்துக்கு ஒவ்வொரு இடைத்தேர்தல் வரும்போதும் பாவப்பட்ட ஜென்மங்கள் தொகுதியில இருந்தும் வாக்குரிமை இல்லாதவங்க. சுத்தி இருக்குறவங்க எல்லாம் பிரியாணி சாப்டுக்கிட்டு கை நிறைய காசு வச்சிருக்கும்போது இவங்க மட்டும் அவங்கள பாத்து பெருமூச்சு விட்டுக்கிட்டே இருக்கணும்.
அப்புறம், பரிட்சை ரிசல்ட் வரும்போது ஃபர்ஸ்ட் மார்க் எடுத்தவன் பக்கத்து வீட்டுல இருக்கும் ஃபெயிலாப் போன பையன். பக்கத்து வீட்டுப் பையனைக் காட்டியே தினம் தினம் அடி விழும். அதுலயும் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்தது பக்கத்து வீடு பொண்ணா இருந்துட்டா அதுக்கே நாலு அடி சேத்து விழும்.
இப்பிடி பாவப்பட்ட ஜென்மம் பட்டம் நாளுக்கு நாள் ஒவ்வொருத்தர் கைல இருந்தும் மாறி மாறி போய்க்கிட்டே இருந்தாலும், ஒரே ஒருத்தர் கிட்ட மட்டும் சம்மணங்கால் போட்டு உக்காந்துக்கிட்டு இருக்கு.
ஆமாங்க, அவர் பேசலைனாலும் குத்தம், பேசிட்டாலும் குத்தம். போராட்டத்துக்கு வரலைன்னாலும் குத்தம், வந்துட்டாலும் குத்தம். சரி, பொது போராட்டத்துக்கு வரல, நான் தனியா ஒரு போராட்டம் நடத்துறேன்னு நடத்தினாலும் குத்தம். வாய்ஸ் குடுத்தாலும் குத்தம், குடுக்கலைன்னாலும் குத்தம். எதுத்துப் பேசுனாலும் குத்தம், பாராட்டிப் பேசுனாலும் குத்தம். ஒரு சினிமாவைப் பாத்து பாராட்டினாலும் குத்தம், பாராட்டலைன்னாலும் குத்தம்.
அவரை வச்சு தயாரிப்பாளர்கள் பொழச்சாங்களோ இல்லையோ மீடியா நல்லா பொழச்சிருக்கு. அவரைத் திட்டி எழுதுனாலும் பத்திரிக்கை விக்கிது, பாராட்டி எழுதினாலும் பத்திரிக்கை விக்கிது. அவர் படம் வர்றதுக்கு முன்னாடி, அந்தப் படத்தப் பத்தி எழுதியே யாவாரம் பண்ணுவாங்க. படம் வந்தப்புறம் அதத் திட்டி எழுதி வியாபாரம் பண்ணுவாங்க.
சமீபத்துல அவரு ஜக்குபாய் பட சிடி வெளியாயிடுச்சின்னு ராதிகாவும் சரத்தும் ஒப்பாரி வச்சி அழுத ப்ரஸ் மீட்ல கலந்துக்கிட்டு உருப்படியா பேசினாரு. என்ன பேசினாருன்னா - “திருட்டு விசிடி வெளிய போறதுக்குக் காரணம் நமக்குள்ள இருக்குறவங்கதான். எந்த லேப்ல இருந்து வெளிய போகுதுன்னு பாருங்க. அந்த லேபை தடை பண்ணுங்க. எந்த தியேட்டர்ல ஷூட் பண்றாங்கன்னு பாருங்க, அந்த தியேட்டருக்கு படம் குடுக்காதீங்க” இப்பிடியெல்லாம் பேசினாரு. அதோட சேத்து “ஜக்குபாய் படம் நான் பண்றதா இருந்தது. இது ஒரு ஃப்ரெஞ்ச் படத்தோட தழுவல். கொஞ்சம் வயசான வேசத்துல நடிக்க வேண்டியிருந்தது” இப்பிடியெல்லாம் படத்தப் பத்தி சில விசயங்களையும் சொன்னாரு.
சும்மா இருப்பாங்களா நம்ம ஆளுங்க. ஒருத்தர் என்னன்னா “தியேட்டர்ல டிக்கெட் காசுக்கு மேல வாங்குறாங்களே அந்த தியேட்டரை புறக்கணிக்க சொல்லுவாரா?” அப்பிடின்னு கேள்வி கேக்குறாரு. அந்தத் துறையிலயே இருக்குற இன்னொருத்தரோ - “இப்பிடி கதையச் சொன்னதுக்கு, திருட்டு டிவிடி வெளிய வந்ததே பரவாயில்ல”ன்னு சொல்றாரு.
அதே நபர், ரெண்டு நாளைக்கு முன்னால அந்த ஒரிஜினல் ஃப்ரெஞ்ச் படத்துக்கு விமர்சனம் எழுதி மீதிக் கதைக்கு ஜக்குபாய் படத்தப் பாருங்கன்னு சொல்றாரு. இது மட்டும் சரியா? என்ன கொடுமை சங்கர் சார்?
இவ்வளத்துக்கும் அப்புறம் அந்தப் படம் வெளிய வரப்போகுதுனு டிவியில விளம்பரம் போடுறாங்க. என்ன விளம்பரம்? இதே ஆள் அதே ப்ரஸ் மீட்டுல பேசுனத கட் பண்ணி கட் பண்ணிப் போட்டு விளம்பரம் தேடுறாங்க? எதுக்கு அப்பிடிப் போடணும்?
இவங்களுக்கு விளம்பரம் வேணும்னா அவரு வேணும். அவருக்கு ஒரு பிரச்சனைன்னா இவங்க என்னன்னு கேக்க மாட்டாங்க. அதை அவரே பாத்துக்கணும்.
இன்னொருத்தர் பெரிய லிஸ்ட் குடுத்துருக்கார். இந்த மனுசன் நடிச்சி வெற்றி பெற்ற படமெல்லாம் ரீ-மேக் படமாம். ஆஹா என்ன ஒரு கண்டுபிடிப்பு. அந்தப் படம் ரீ-மேக்னு சொல்லிட்டு, காசு குடுத்து ரைட்ஸ் வாங்கிட்டுத்தானப்பா அவரு அந்தப் படத்துல நடிக்கிறாரு? சில உல்டா நாயகன்களெல்லாம் இங்க்லீஷ் படத்துல இருந்து உருவிட்டு தன் கதைன்னு கூசாம பேர் போட்டுக்கிறாங்களே, அதுக்கு இது பரவாயில்லையே?
ஆனா ஒண்ணு, இந்த மனுசன் இதையும் கடந்து போவார் - தன்னைத் தூற்றியவர்களுக்கும் தேவையான நேரத்தில் தேவையான உதவியைக் கேட்காமலே செய்து..
உன் ரசிகன் நான் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமையே.
பின் குறிப்பு: கேபிளார் ரஜினி ரசிகன் இல்லை என்பது எனக்குத் தெரிந்தாலும் அவரது பழைய பதிவுகளை நான் கடவுள் பட விமர்சனத்திற்காகத் தேடிய போது இதைப் பார்க்க நேர்ந்தது. ஏதாவது சொல்லவேண்டுமே என்று நினைத்ததால் இந்தப் பதிவு.

14 comments:
உன் ரசிகன் நான் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமையே. ................... yes, sir! ditto.
//ஃபர்ஸ்ட் மார்க் எடுத்தது பக்கத்து வீடு பொண்ணா இருந்துட்டா அதுக்கே நாலு அடி சேத்து விழும். //
ஹஹஹஹ. உண்மைதாதங்க... ஏங்க அப்படி?
ரொம்ப பீல் பண்ணி எழுதியிருக்கீங்களே... இப்படி ஒரு ரசிகரா..?
கிரிக்கு துணை சேர்ந்தாச்சா:)). முகிலன் ஒரு ரெக்வஸ்ட். தமிழ்மணம் பட்டிய தமிழிஷ் மேல போடுங்களேன். உங்க பேஜ் பாதிக்கு மேல லோட் ஆகுதில்லை.
ஒவ்வொருதடவை 10வது, +2 ரிசல்ட் வரும் போது பொண்னுங்க, பசங்களை விட பாஸ் அதிகம்னு ஒரு நியூஸ் வரும். அப்பயும் திட்டு விழும்.
அப்புறம் வேற என்ன விஷயம் ?
//உன் ரசிகன் நான் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமையே.//
அதே!! அதே!!
நானும் பெருமைபடுகிறேன்
இவங்களுக்கு விளம்பரம் வேணும்னா அவரு வேணும். அவருக்கு ஒரு பிரச்சனைன்னா இவங்க என்னன்னு கேக்க மாட்டாங்க. அதை அவரே பாத்துக்கணும்.
அதனால தான் அவர் இன்றும் சூப்பர் ஸ்டார்
ரஜினி தான் உங்களுக்கு பாவப்பட்ட ஜென்மமாக தெரிகிறாரா. கடந்த 15 வருடங்களாக பாவப்பட்ட அவரது ரசிகர்களை எப்படி ஏமாத்தி வருகிறார் என்று உங்களுக்கு தெரியவில்லையா?
அரசியலுக்கு இப்ப வருவன், அப்பா வருவன், வர வேண்டிய நேரத்தில வருவன் எவ்வளவு கொடுமைகள்.
தமிழ்நாட்டுக்கு வந்தீர்கள், கஷ்டப்பட்டு முன்னேருநீர்கள், சில பல நல்ல காரியங்கள் செய்தீர்கள் என்று இருக்க வேண்டியது தானே, அதை விட்டிட்டு தன் மேல் அன்பு கொண்ட ரசிகர்களை இப்படியா குழப்பிறது.
ரஜினி எப்ப தெளிவா பேசி இருக்கிறார், சொலுங்க பார்க்கலாம்?
“ஜக்குபாய் படம் நான் பண்றதா இருந்தது. இது ஒரு ஃப்ரெஞ்ச் படத்தோட தழுவல். கொஞ்சம் வயசான வேசத்துல நடிக்க வேண்டியிருந்தது”
இந்த பேச்சு ஒரு சாதாரண மனிதனின் பேச்சா? ஒரு நண்பனின் செத்த வீட்டுக்கு போய் அவர் மனிவியிடம் உங்கள் கணவர் ரொம்ப நல்லவர் ஆனால் நான் அதை விட ரொம்ப நல்லவன் என்று வடிவேலு சினிமாவில் பேசுரமாதிரி இல்லையா?
"கொஞ்சம் வயசான வேசத்துல நடிக்க வேண்டியிருந்தது" அவரோட பட பணியிலேயே சொன்னால் என்ன "கொடுமை சரவணன் இது?"
நானும் ரஜினி படம் ரசித்து பார்ப்பவன் தான், ஆனால் அடித்து சொல்கிறேன் எந்திரன் படம் அவரை நார்மல் மனிதன் ஆக்கும் பாருங்கள்.
"இவ்வளத்துக்கும் அப்புறம் அந்தப் படம் வெளிய வரப்போகுதுனு டிவியில விளம்பரம் போடுறாங்க. என்ன விளம்பரம்? இதே ஆள் அதே ப்ரஸ் மீட்டுல பேசுனத கட் பண்ணி கட் பண்ணிப் போட்டு விளம்பரம் தேடுறாங்க?"
அதற்கு காரணம் உங்களை மாதிரி ரஜினி ரசிகர்களை பக்கா மடையன்கள் என்று இன்னமும் தமிநாடு சினிமா உலகமும் SunTV காரங்களும் நினைத்து கொண்டிருகிறார்கள். நீங்களே சொலுங்க ரஜினியின் விளம்பரத்தோட வந்த எதனை படங்கள் ஓடி உள்ளன. ரஜினி படங்களே நல்லா இல்லை என்றால் மண்ணை கவ்வுது. நான் கடவுள் என்ற படத்தை ரஜினி எப்படி புகழ்ந்தார் ஆனால் என்ன நடந்தது ?
கடசியா மிஞ்சியது தேசிய விருதுதான், ஆனால் படத்தோட தயாரிபளருக்கு கிடைத்ததோ நாமம் !!
நண்பா சூர்யாகதிர்க்கு
"அரசியலுக்கு இப்ப வருவன், அப்பா வருவன், வர வேண்டிய நேரத்தில வருவன் எவ்வளவு கொடுமைகள்"
அவர் என்றுமே அரசியலுக்கு வருவேன் என்று சொன்னதில்லை நண்பா
"ரஜினி படங்களே நல்லா இல்லை என்றால் மண்ணை கவ்வுது. நான் கடவுள் என்ற படத்தை ரஜினி எப்படி புகழ்ந்தார் ஆனால் என்ன நடந்தது ?
கடசியா மிஞ்சியது தேசிய விருதுதான், ஆனால் படத்தோட தயாரிபளருக்கு கிடைத்ததோ நாமம்"
தேசிய விருது என்பது எல்லா படத்திற்கும் கிடைபதில்லையே நல்ல படங்கள் மட்டுமே அதை பெறுகிறது
"அதற்கு காரணம் உங்களை மாதிரி ரஜினி ரசிகர்களை பக்கா மடையன்கள் "
நாங்கள் பக்கா மடையன்கள் அல்ல நண்பா
பக்குவபட்டவர்கள்.அதனால் தான் நீங்கள் கூறிய இந்த விமர்சனத்துக்கு பதில் கூற முடிகிறது.
எப்போவும் சொல்வோம் பெருமையுடன் நாங்கள் ரஜினி ரசிகன் என்பதை.நீங்கள் தூர இருந்து பார்த்த அந்த மனிதனை நான்
மூன்று முறை அருகில் இருந்து பார்த்தவன்
@ சித்ரா - நன்றி
@ நாஞ்சில் பிரதாப் - தெரியலைங்க.. நாம அப்பா ஆனப்பறம் தாந்தெரியுன்னு நினைக்கிறேன்.
@வானம்பாடிகள் - டெம்ப்ளேட் மாத்தியாச்சி சார். இப்போ எப்பிடி இருக்கு?
@பின்னோக்கி - நல்ல நழுவல்
@திவ்யாஹரி - நன்றி திவ்யா
@மஹாராஜன் - நன்றி
@சொல்லச் சொல்ல - சரியா சொன்னீங்க
சூர்யகதிர் said...
"ரஜினி எப்ப தெளிவா பேசி இருக்கிறார், சொலுங்க பார்க்கலாம்?"
நீங்க தெளிவா இருக்கிங்களா ?
"அதற்கு காரணம் உங்களை மாதிரி ரஜினி ரசிகர்களை பக்கா மடையன்கள் "
அப்போ நீங்க புத்திசாலி ?
//சூர்யகதிர் said...
ரஜினி தான் உங்களுக்கு பாவப்பட்ட ஜென்மமாக தெரிகிறாரா. கடந்த 15 வருடங்களாக பாவப்பட்ட அவரது ரசிகர்களை எப்படி ஏமாத்தி வருகிறார் என்று உங்களுக்கு தெரியவில்லையா?
//
என்னங்க ஏமாத்தினாரு? அவரு சிட்ஃபண்ட் ஆரம்பிச்சதாவோ, ஃபைனான்ஸ் கம்பெனி நடத்தினதாவோ எனக்குத் தெரியலையேங்க?
//அரசியலுக்கு இப்ப வருவன், அப்பா வருவன், வர வேண்டிய நேரத்தில வருவன் எவ்வளவு கொடுமைகள்.
//
அதெல்லாம் சினிமா வசனம். நிஜ வாழ்க்கையில எந்த மேடையிலயாவது நான் அரசியலுக்கு வரப் போறேன்னு சொன்னாரா? இல்ல ப்ரஸ் மீட் வச்சிதான் சொன்னாரா? அவருடைய உண்மையான ரசிகன் தெளிவாத்தான் இருக்கான்.
//தமிழ்நாட்டுக்கு வந்தீர்கள், கஷ்டப்பட்டு முன்னேருநீர்கள், சில பல நல்ல காரியங்கள் செய்தீர்கள் என்று இருக்க வேண்டியது தானே, அதை விட்டிட்டு தன் மேல் அன்பு கொண்ட ரசிகர்களை இப்படியா குழப்பிறது.
//
மறுபடியும் சாரிங்க. அவரு என்ன குழப்புனாருன்னு எனக்குத் தெரியலை. நீங்க தான் குழம்பி இருக்கிங்க. ஆனா நீங்க ரஜினி ரசிகன் மாதிரி தெரியலையே?
//ரஜினி எப்ப தெளிவா பேசி இருக்கிறார், சொலுங்க பார்க்கலாம்?
//
எல்லா எடத்திலயும் தெளிவாப் பேசி இருக்கிறதாத் தான் நான் நெனக்கிறேன்.
//“ஜக்குபாய் படம் நான் பண்றதா இருந்தது. இது ஒரு ஃப்ரெஞ்ச் படத்தோட தழுவல். கொஞ்சம் வயசான வேசத்துல நடிக்க வேண்டியிருந்தது”
இந்த பேச்சு ஒரு சாதாரண மனிதனின் பேச்சா? ஒரு நண்பனின் செத்த வீட்டுக்கு போய் அவர் மனிவியிடம் உங்கள் கணவர் ரொம்ப நல்லவர் ஆனால் நான் அதை விட ரொம்ப நல்லவன் என்று வடிவேலு சினிமாவில் பேசுரமாதிரி இல்லையா?
//
அவர் சொன்னது உண்மை தானுங்களே. அவர் என்ன சொன்ன வந்தாருன்னா. நீயே காப்பி அடிச்சித்தான் படம் எடுத்துருக்க. அப்புறம் எவனோ காப்பி அடிச்சிட்டான்னு எதுக்கு அழுவுற. அப்பிடின்னு கேட்டதாத்தான் நான் நினைக்கிறேன்.
//"கொஞ்சம் வயசான வேசத்துல நடிக்க வேண்டியிருந்தது" அவரோட பட பணியிலேயே சொன்னால் என்ன "கொடுமை சரவணன் இது?"
//
மக்கள் ஏத்துக்குற வரைக்கும் இளைஞனா நடிக்கலாம்ங்க. எம்.ஜி.ஆர், சிவாஜி எல்லாம் நடிச்சா மட்டும் ஏத்துக்குவிங்க. ஏன் கமல் கூடத் தான் நடிக்கிறார்.
//நானும் ரஜினி படம் ரசித்து பார்ப்பவன் தான், ஆனால் அடித்து சொல்கிறேன் எந்திரன் படம் அவரை நார்மல் மனிதன் ஆக்கும் பாருங்கள்.
//
அவர் எப்பவுமே நார்மல் தாங்க. நீங்க தான் சூப்பர் நேச்சுரல்னு நினைச்சிக்கிட்டு அவர் இப்பிடி சொல்லலாமா அப்பிடின்னு கேக்குறீங்க.
//"இவ்வளத்துக்கும் அப்புறம் அந்தப் படம் வெளிய வரப்போகுதுனு டிவியில விளம்பரம் போடுறாங்க. என்ன விளம்பரம்? இதே ஆள் அதே ப்ரஸ் மீட்டுல பேசுனத கட் பண்ணி கட் பண்ணிப் போட்டு விளம்பரம் தேடுறாங்க?"
அதற்கு காரணம் உங்களை மாதிரி ரஜினி ரசிகர்களை பக்கா மடையன்கள் என்று இன்னமும் தமிநாடு சினிமா உலகமும் SunTV காரங்களும் நினைத்து கொண்டிருகிறார்கள். நீங்களே சொலுங்க ரஜினியின் விளம்பரத்தோட வந்த எதனை படங்கள் ஓடி உள்ளன. ரஜினி படங்களே நல்லா இல்லை என்றால் மண்ணை கவ்வுது. நான் கடவுள் என்ற படத்தை ரஜினி எப்படி புகழ்ந்தார் ஆனால் என்ன நடந்தது ?
கடசியா மிஞ்சியது தேசிய விருதுதான், ஆனால் படத்தோட தயாரிபளருக்கு கிடைத்ததோ நாமம்
//
அப்போ நீங்களே சொல்றீங்க. விளம்பரம் வேணும்னா அவர் வேணும். அதுவே அவருக்கு ஒரு பிரச்சனைன்னா யாரும் பக்கத்துல கூட போக மாட்டீங்க. என்ன நியாயம்ங்க இது.
நானும் அதைதான் சொல்றேன். ஒரு படம் நல்லா இருந்தா தானா ஓடப் போகுது. அப்புறம் எதுக்கு ரஜியப் போட்டு விளம்பரம் பண்றிங்க. அப்பிடிப் பண்ணியும் அந்தப் படம் ஓடலைன்னா, அய்யோ ரஜினி சொல்லியும் இந்தப் படம் ஓடலைன்னு சொல்றீங்க?
@மஹராஜன் - நன்றி நண்பா.
அன்பு நண்பர்களே, என் எழுத்துகளை நானே திருத்திகொள்கிறேன்.
"அதற்கு காரணம் உங்களை மாதிரி ரஜினி ரசிகர்களை பக்கா மடையன்கள் என்று இன்னமும் தமிநாடு சினிமா உலகமும் SunTV காரங்களும் நினைத்து கொண்டிருகிறார்கள்."
"அதற்கு காரணம் எல்லா ரஜினி ரசிகர்களையும் பக்கா மடையன்கள் என்று இன்னமும் தமிழ்நாடு சினிமா உலகமும் SunTV காரங்களும் நினைத்து கொண்டிருகிறார்கள்."
என்று திருத்தி வாசிக்கவும்.
நண்பர்களே நீங்களே சொலுங்கள் ஒரு நடிகனின் படம் வெளியாகும் போது அவனுடைய கட்டவுட்டுக்கு பால் ஊத்த மேலே போய் கை கால் முறிய விழுந்தவர்களை புத்திமான் என்றா சொல்வார்கள் ?
"இல்ல ப்ரஸ் மீட் வச்சிதான் சொன்னாரா? அவருடைய உண்மையான ரசிகன் தெளிவாத்தான் இருக்கான். "
நண்பரே நீங்கள் உண்மையான ரஜினி ரசிகனா இருந்தால் அவருடைய ராகவேந்திர பிரஸ் மீட்டை பாருங்கள்.
அதில் அவர் அரசியலுக்கு வருவேன் என்றோ இல்லை வரமாட்டேன் என்றோ சொல்லி இருந்தால் என்னை மன்னிக்கவும். எப்படி கமலின் படம் அவருக்கும் அவர் ரசிகற்கும் தான் புரியுமோ அதை போல் ரஜினியின் பேச்சு அவர் ரசிகற்குதான் புரியும் என்று எடுத்து கொள்கிறேன்.
Post a Comment