Friday, January 22, 2010

எங்கே செல்லும்....

முன் குறிப்பு: கலைஞரின் ஓய்வு அறிக்கையைப் போல இழுத்துக் கொண்டே இருக்காமல், விசா அவர்கள் கொடுத்த யோசனையின் படி ஒரே கதையை ஆளுக்கொரு பகுதியாக எழுத ஒரு முயற்சி. நான் துவங்குகிறேன் அடுத்து தொடர நினைப்பவர்கள் கையைத் தூக்கிவிட்டு தொடரலாம்.

************************************************************************************
RULES:
1. தொடர விரும்புபவர்கள் கடைசியாக யார் எழுதியிருக்கிறார்களோ அந்தப் பதிவில் சென்று பின்னூட்டம் இடுங்கள்.
2. கடைசியாகப் பதிவை எழுதியவர் யார் தொடரலாம் என்பதை தேர்ந்தெடுப்பார்.
3. முந்தைய பாகங்களுக்கான சுட்டியையும், அடுத்த பாகத்தின் சுட்டியையும் (யாரவது தொடர்ந்த பின்னர்) பதிவில் கட்டாயமாக இட வேண்டும்.
4. ஒரு எச்.டி.எம்.எல் கேட்ஜட் உருவாக்கத்தில் இருக்கிறது. உருவான பின் அதையும் உங்கள் வலைப்பூவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்
5. மேலே உள்ள விதிகள் அனைத்தும் தொடர் பாகத்தை ஒருவருக்கு மேற்பட்டவர்
எழுதிவிடக்கூடாது என்பதற்காகவே.

***************************************************************************************

ஸ்டேடியத்தில் ரசிகர்களின் ஆரவாரம் பெரும் சத்தமாக இருந்தது. ஒரு சீராக அவன் பேட்டை ஸ்டம்புக்கு முன் அடிக்கும் சத்தமும் இதயத் துடிப்பும் ஒத்திருப்பது போல இதயம் சிறிது மெதுவாகவே துடித்தது. இன்னும் ஒன்பது ரன்கள் எடுக்க வேண்டும். இருப்பதோ இரண்டே பந்துகள். பின்னால் விக்கெட் கீப்பர் என்னவோ சொல்வது தூரத்தில் இருந்ததால் சரியாகக் காதில் விழவில்லை.

சோஹைப் அக்தர் கிட்டத்தட்ட ஃபோர் லைனில் இருந்து ஓடி வந்து கொண்டிருந்தான். அவன் கீழுதட்டைக் கடித்துக் கொண்டிருப்பதிலேயே தெரிந்து விட்டது யாக்கர் தான் போடப் போகிறான். அவன் தயாரானான்.

க்ரீஸுக்கு அருகில் வந்துவிட்டான் அக்தர். கையைச் சுற்றி பந்தை வீசப் போகிறான். வீசி விட்டான். அந்தோ பரிதாபம் யாக்கர் லெங்க்த்தில் இல்லாமல் ஃபுல் டாஸாகிவிட்டது. காலை க்ளியர் செய்து பேட்டை வீசினான்.

அதே சமயம் அம்பயரின் “நோ” என்ற குரல் கேட்டது.

பேட்டின் மத்தியில் பந்து பட்டு விர்ரென்று கிளம்பியது. பந்து எங்கே போகிறது என்பதைப் பார்க்காமல் ஓடத்துவங்கினான். பந்து லாங்க்-ஆன் திசையில் பவுண்டரியைத் தாண்டி ஸ்டாண்டில் அமர்ந்திருந்த ரசிகர்களின் மத்தியில் விழுந்தது. டெல்லி ரசிகர்கள் கத்தித் தீர்த்து விட்டனர். நோ பாலின் புண்ணியத்தில் ஏழு ரன்கள். இனி இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி.

அடுத்த பந்தை அக்தர் ஷார்ட்டாகப் பிச் செய்து நெஞ்சுயரத்திற்கு எழும்பும் ஒரு பவுன்சராகப் போட்டான். அவன் புல் செய்ய முயன்று மிஸ்ஸாகி கீப்பரின் கையில் தஞ்சம் புகுந்தது பந்து.

ஒரு பந்து, ஒரு ரன்.

என்ன பந்து போடப் போகிறான் என்று தெரியவில்லை. நெஞ்சு அடித்துக் கொள்வது தெளிவாகக் கேட்டது. ஓடி வந்த அக்தர் கையைச் சுற்றி வீசினான். ஷார்ட் பிச். பேட்டை மறுபடி வீசினான்.

அய்யோ, அது ஸ்லோ டெலிவரி. பேட்டை அவசரப் பட்டு சுற்றியதால் விளிம்பில் பட்டு பந்து இரண்டு பனை மர உயரத்திற்கு மேலே போனது. கண்ணை மூடிக்கொண்டு ஓடினான். இரண்டாவது ரன்னுக்கும் திரும்பி ஓடினான்.

பந்து விழுமிடத்தில் மூன்று பேர் சூழ்ந்தனர். அஃப்ரிடி லீவிட் கேட்டு கடைசியில் கையிடுக்கில் தவற விட்டான். மறுபடி ஸ்டேடியம் திடீரென்று உயிர் பெற்ற மாதிரி கதறியது. தவற விட்ட பந்தை சல்மான் பட் எடுத்து கீப்பரை நோக்கி வீசினான்.

அங்கே பந்தை கலெக்ட் செய்ய யாரும் இல்லை. ஸ்டம்பை 1 செ.மீ இடைவெளியில் மிஸ் செய்த பந்து ஓடியது. இரண்டாவது ரன்னையும் பூர்த்தி செய்த அவன் தரையிலிருந்து மூன்றடிக்கு எம்பிக் குதித்தான். ஸ்டம்புகளில் ஒன்றை உருவிக் கொண்டு அவன் பார்ட்னரைக் கட்டிப் பிடித்தான்.

ரசிகர்கள் நிறுத்தாமல் அடித்தொண்டையில் கத்திக் கொண்டிருந்தனர். பாகிஸ்தான் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் கை கொடுத்துக்கொண்டே இருவரும் பெவிலியன் நோக்கி நடந்தனர். பாகிஸ்தான் கேப்டனுக்கு நாடு திரும்பியதும் விசாரணைக் கமிசன் உறுதி.

பெவிலியன் வாசலில் மொத்த இந்திய அணியும் இவர்களை வரவேற்க நின்றிருந்தது.

செல்போன் ஒலித்தது. 

“ஹலோ?”

“டேய் பாஸ்கர், மேட்ச் பாத்தியா? லாஸ்ட் மினிட்ல ஜெயிச்சிட்டானுங்கடா. நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு செகண்ட் ஹார்ட்டே நின்னு போச்சி. மச்சி”

“ஹலோ நீங்க யாரு? என்ன வேணும் உங்களுக்கு?”

“சாரி சார். நீங்க பாஸ்கர் இல்லையா?”

“இல்ல சார். ராங் நம்பர்”

“சாரி சார். சாரி ஃபர் த டிஸ்டர்பன்ஸ்”

செல் போனை மறுபடி பையில் வைத்து விட்டு, சூப்பர் மார்க்கெட்டின் டி.வியில் இருந்து கண்ணை அகற்றிய அவன் முன்னாலிருந்த ஷாப்பிங் கார்ட்டைத் தள்ளிக் கொண்டு பில் கவுண்டரை நோக்கி நடந்தான்.

ஒவ்வொரு பொருளாக எடுத்து ஸ்கேன் செய்த அவள் கடைசியில் சொன்ன பில் பணத்துக்கு தன் பர்ஸில் இருந்து ஒரு க்ரடிட் கார்டை எடுத்து நீட்டினான். அவள் க்ரடிட் கார்டு மெசினில் தேய்த்து ப்ரிண்ட் செய்து கொடுத்த துண்டுச் சீட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு மறுபடியும் கார்ட்டைத் தள்ளிக் கொண்டு நடந்தான்.

“சார், ஆர் யூ இண்ட்ரஸ்டட் இன் சிட்டி பேங்க் கிரடிட் கார்ட் சார்” என்று துரத்திய க்ரடிட் கார்ட் சேல்ஸ்மேனை பொருட்படுத்தாமல் காரை நோக்கி நடந்தான்.

கார்ட்டில் முன்னால் உட்கார்ந்திருந்த குழந்தை அழத் தொடங்கியது.

“ஜோ ஜோ ஜோ.. எதுக்கும்மா அழற.. என்ன வேணும் பாப்பாக்கு?” என்று சமாதானம் செய்தான். குழந்தை விடாமல் அழுதது.

“என்ன கண்ணு எதுக்கு அழுகுற?” என்று குழந்தையை கார்ட்டில் இருந்து தூக்கினான்.

“அழக்கூடாதும்மா..” குழந்தையின் பேர் என்ன? யோசித்தான். எவ்வளவு யோசித்தாலும் பெயர் நினைவுக்கு வரவில்லை.

மறுபடி குழந்தையின் முகத்தைப் பார்த்தான். ‘யார் இந்தக் குழந்தை? இதுவரை பார்த்ததே இல்லையே?’ இப்போது சுற்றியும் பார்த்தான்.

‘எங்கே நிற்கிறேன்? என்ன இடம் இது? என் முன்னால் இருக்கும் ஷாப்பிங் கார்ட் யாருடையது? என் கார் எங்கே?’ அவனுக்குள் ஆயிரம் கேள்விகள். கையில் இருக்கும் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருந்தது.

பின்னால் ஆட்கள் ஓடி வரும் சத்தம் அதிகமாகிக் கொண்டே வருவதில் இவனை நோக்கி வருவதாகப் பட்டது. பின்னால் திரும்பினான்.

“என் குழந்தை, என் குழந்தை” என்று அழுது கொண்டே வந்த அந்தப் பெண் இவன் கையில் இருந்த குழந்தையை பிடுங்கினாள். அவளுக்குப் பின்னால் மூச்சு வாங்க ஓடி வந்த சற்று பருமனான ஆள் கையை வீசி இவன் தாடையில் வெடித்தான்.

“பரதேசி நாயே. பாக்க டீசண்டா இருக்க. புள்ள பிடிக்க வந்திருக்கியா?”

“இல்ல. நீங்..” பேச விடாமல் அடுத்த அடி விழுந்தது. அதற்குள் சிறிய கூட்டம் கூடி இருந்தது.

“இவங்களயெல்லாம் சும்மா விடக்கூடாது சார். நாலு மொத்து மொத்துனா தான் அடுத்து இப்பிடி செய்ய மாட்டானுங்க..” யாரோ ஒரு பிரகஸ்பதி கூட்டத்தில்.

“அய்யோ என்னத் தப்பா புரிஞ்..” 

கூட்டம் கூடி தர்ம அடி கொடுக்கத் துவங்கியது. யாரோ தொலைபேசியில் காவல்துறையை அழைத்துக் கொண்டிருந்தார்கள்.

(தொடரும்)


பின் குறிப்பு: இதன் தொடர்ச்சியை பலா பட்டறை சங்கர் இங்கே தொடர்கிறார்.


யார் தொடரப்போகிறீர்கள் என்பதை முந்தய பாகத்தில் கைதூக்குங்கள். அதே மாதிரி முந்தைய பாகத்தை எழுதியவர் அதை உங்கள் போஸ்ட்டில் அப்டேட் செய்யுங்கள். ஒரு HTML Gadgetம் போட ஏற்பாடு செய்வோம். (நன்றி ஹாலிவுட் பாலா)

எல்லாப் பதிவுகளையும் ஒரே இடத்தில் படிக்க இங்கே சுட்டவும். (நன்றி பலா பட்டறை)

28 comments:

VISA said...

ஆரம்பமே அதிரடியா இருக்கு!!!!

vasu balaji said...

பட்டாசு! பார்க்கலாம் யார் கை தூக்குறான்னு.

Paleo God said...

என்னோடது ரெடிங்க.. எங்க பதிவு போடனும்..உங்களுக்கு மெயில் அனுப்பவா அல்லது என்னோட பக்கத்திலயே போட்டுடலாமா..?? ரிப்ளை ப்ளீஸ்..:)

Chitra said...

தொடரும்...... நல்ல பதிவு.

Anonymous said...

படிக்கமட்டும் ஆவலாய் இருக்கிறென். நேரமின்மை.

Unknown said...

உங்க பக்கத்துலயே போட்டுடுங்க பலா. எனக்கு லின்க் மட்டும் அனுப்புங்க.

கலகலப்ரியா said...

ஆரம்பிச்சிட்டாய்ங்கையா... ஆரம்பிச்சிட்டாய்ங்க... ஒன்னு பண்ணுங்க... எல்லாம் எழுதிட்டு என் கிட்ட சொல்லுங்க நான் முடிவு எழுதுறேன்... =))... அருமையா எழுதி இருக்கீங்க... ஆனா கிரிக்கெட்ல ஆரம்பிச்சது டூ மச் ஆமாம்...

sathishsangkavi.blogspot.com said...

அதிரடி பதிவு...

Unknown said...

ஓப்பனிங் நல்லா இருந்தாத்தான போட்டி நல்லா இருக்கும்.

Unknown said...

//வானம்பாடிகள் said...
பட்டாசு! பார்க்கலாம் யார் கை தூக்குறான்னு.//

அல்ரெடி பலா பட்டறை தூக்கியாச்சி.. விசா நீங்க வெய்ட் பண்ணனும்.

Unknown said...

//Chitra said...
தொடரும்...... நல்ல பதிவு.
//

கதைன்னு யாரும் நம்ப மாட்டிங்களோ?

Unknown said...

//கலகலப்ரியா said...
ஆரம்பிச்சிட்டாய்ங்கையா... ஆரம்பிச்சிட்டாய்ங்க... ஒன்னு பண்ணுங்க... எல்லாம் எழுதிட்டு என் கிட்ட சொல்லுங்க நான் முடிவு எழுதுறேன்... =))... அருமையா எழுதி இருக்கீங்க... ஆனா கிரிக்கெட்ல ஆரம்பிச்சது டூ மச் ஆமாம்...//

வேணுமின்னேதாங்க்கா கிரிக்கெட்ல ஆரம்பிச்சேன். கிரிக்கெட் பத்தி தெரிஞ்சிக்கிட்டு நீங்க எழுதணுமின்னு.. ;)))

Unknown said...

//Sangkavi said...
அதிரடி பதிவு..//

நன்றி சங்க்கவி..

Unknown said...

//சின்ன அம்மிணி said...
படிக்கமட்டும் ஆவலாய் இருக்கிறென். நேரமின்மை//

அய்யோ ஒரு முக்கியமான ஆளு எஸ்ஸாகுறாங்களே

திவ்யாஹரி said...

நல்லாருக்குங்க.. ஐயோ முடிவ கலகலப்ரியா அக்கா எழுதுறேன்னு சொல்றாங்க .. அப்போ முடிவு யாருக்கும் புரியாதே?

பிரபாகர் said...

பலா பட்டறை அவர்களை தொடர்ந்து மூன்றாம் பாகத்தினை நாளை நான் எழுதுகிறேன்...

பிரபாகர்.

ப்ரியமுடன் வசந்த் said...

அசத்தல் ஆரம்பம்...!

வித்தியாசமான தொடர்தான்...

kudukuduppai said...

நான் ஆட்டத்துக்கு வந்தா, இந்தக்கதை என்ன ஆகும்னு யோசிக்கவே பயங்கரமா இருக்கே?

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கதை , தொடருங்கள் ..

பழமைபேசி said...

விறுவிறுப்பா இருக்குங்க....

பாலா said...

இது பலா-வுக்கு போட்ட பின்னூட்டம். உங்களுக்கு காப்பி/பேஸ்ட் பண்ண மறந்துட்டேன்.

-------

இது மாதிரி.. முன்னாடி, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் & சுபா மூணு பேரும் சேர்ந்து எழுதியிருந்தாங்க.

இப்ப நீங்களா??! :) :)

கலக்குங்க. ஆனா.. யார் தொடரப் போறாங்கன்னு.. அந்த பாகத்தை எழுதினவங்க முடிவு பண்ணினா நல்லாயிருக்குமே.

அல்லது முதல்ல கை தூக்குறவங்க பெயரை, பதிவிலாவது அப்டேப் பண்ணலாமே.

பிரபாகர் மாதிரி இன்னொருத்தர் இதோட மூணாவது பாகம் எழுதினா.. ஏற்படும் குழப்பத்தை நினைச்சிப் பாருங்க. :) :)

அப்புறம்.., இன்னுமொரு 10-15 பதிவுகள் போனப் பின்னாடி.. இதோட ஃபாலோஅப் இன்னும் பிரச்சனையாகும். அதுக்கெல்லாம்.. எதாவது ஐடியா வச்சிருக்கீங்களா?

(சைடில் ஒரு HTML கேட்ஜெட் போட்டு.. லிங்க் அப்டேட் பண்ணுற மாதிரி)

பாலா said...

ஊப்ப்ப்ப்ப்ப்ஸ்...

ஸாரி.. நீங்க ஏற்கனவே அப்டேட் பண்ணிட்டீங்களா?? :) :)

Unknown said...

@திவ்யாஹரி - உங்களுக்கு பதில் சொல்ல கலகலப்ரியாவை அழைக்கிறேன்(பதிவு மட்டும் தான் தொடரா? நாங்க பின்னூட்டமே தொடராப் போடுவோம்ல)

@பிரபாகர் - வருகைக்கு நன்றி

@வசந்த் - நன்றி

@குடுகுடுப்பை - எங்களுக்கும் பயமா இருக்கு.. ஆனா அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாம அடிச்சு ஆடுங்க.

@ஸ்டார்ஜன் - முதல் வருகைக்கு நன்றி சார்.

@பழமைபேசி - வாங்கண்ணே. பழையபடி ஃபார்முக்கு வாங்க.

@ஹாலிவுட் பாலா - உங்கள் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 4வது பாகத்தை எதிர்பார்க்கிறேன்.

"உழவன்" "Uzhavan" said...

என்ன கொடுமை சார் இது

பாலா said...

இங்கே நாலாவது பாகம்.. உங்களை குதற ரெடி..

http://www.hollywoodbala.com/2010/01/4.html

பாலா said...

உழவன்.. வந்து உங்க கமெண்ட்டை நம்ம ஏரியாவிலும் போடுங்க! :)

Prathap Kumar S. said...

ஆகா... ஆரம்பமே களைகட்டுதே... கிரிக்கெட் விவரிப்பு கலக்கல்...

எலே பசுபதி அடுத்தது பலாபட்டறைக்கு வண்டிய விட்றா...

Thenammai Lakshmanan said...

Superb MUKILAN
u r very much interested in cricket
vithyasamana thrilling aana issue

congrats..!!!