போன பதிவுல ஸ்விங்க் பத்தி பாத்துட்டு இருந்தோம். இப்போ அதைத் தொடர்வோம்.
அவுட் ஸ்விங், இன் ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங் எல்லாம் பாத்தோம். அதுல எங்க இருந்து பால் டேம்ப்பரிங்க் செய்யறாங்க? அப்பிடி செய்யறதால என்ன நன்மை? இதையெல்லாம் இப்பப் பாப்போம்.
முதல்லயே சொன்ன மாதிரி பால் ஸ்விங் ஆகுறதுக்கு ஒரு பக்கம் ஷைனிங்காவும் இன்னொரு மக்கம் சொரசொரப்பாவும் இருக்கணும். தானா ஆகவேண்டிய சொரசொரப்பையும் ஷைனிங்கையும் வலுக்கட்டாயமா கொண்டு வர்றதுதான் பால் டேம்ப்பரிங்க்.
முதல்ல ஷைனிங் எப்பிடி கொண்டு வர்றது? இதுதான் ரொம்ப ஈஸி. பல ஃபாஸ்ட்/மீடியம் ஃபாஸ்ட் பவுலர்ஸ் பாத்திங்கன்னா, முகம் முழுக்க க்ரீம் பூசியிருப்பாங்க. சரி குளிர் நாட்டுல தான் மாய்ஸ்ச்சுரைஸிங்க் லோஷன் தடவுறாங்கன்னா, இந்தியா, ஷார்ஜா மாதிரி வெப்பமான நாட்டுலயும் இப்பிடித்தான் வருவாங்க.
இப்பிடி வர்றதுல ரெண்டு பயன் இருக்கு. ஒன்னு, முகமெல்லாம் வெள்ளையடிச்சிட்டு வர்றதால பாக்க கொஞ்சம் பயங்கரமா தெரிவாங்க (சில ஃபாஸ்ட் பவுலர்ஸ் முடி வித்தியாசமா வளர்க்குறதுக்கும் இதே காரணம்). இன்னொன்னு, முகத்துல இருக்குற கிரீமை எடுத்து பாலை ஷைன் பண்ணிக்கலாம். இல்லையா, பபுள்கம் இல்லைன்னா எதாவது மிட்டாய் தின்னுக்கிட்டு, அந்த ஜூஸை எடுத்து இந்த வீடியோல ராகுல் ட்ராவிட் (அட ஆமாங்க அவருதான்) செய்யறமாதிரியும் செய்யலாம்.
சொரசொரப்பாக்குறதுக்கு, பல ப்ளேயர்ஸ் பல வித்தைகளை பயன்படுத்தியிருக்காங்க. ரொம்ப பாப்புலரானது நம்ம இம்ரான் கான் - சோடா பாட்டில் மூடியை பயன்படுத்தினதா அவரே பெருமையா டிவியில சொன்னாரு.
ரிவர்ஸ் ஸ்விங்க்குக்கு சீம் ரொம்ப முக்கியம்னு சொன்னேன். அந்த சீம் வெளிய தூக்கிக்கிட்டு இருந்தாத்தான் பால் நல்லா ரிவர்ஸ் ஸ்விங்க் ஆகும். அதை வெளிய எடுத்து விடுற வேலையை நெறைய பேரு - நம்ம சச்சின் உட்பட - செய்றவங்க தான். அதிகப்படியா அதைக் கடிச்சி வெளிய எடுக்க முயற்சி செஞ்சது, எப்பிடியும் ஜெயிக்கணும்ங்கற அஃப்ரிடியோட ஆர்வக் கோளாறு. அந்த வீடியோவ கீழ பாருங்க
ஸ்விங்க் பவுலிங்க்ல வேகம் ரொம்ப முக்கியமான காரணமாயிருக்கறதால, நியூஸிலாந்து மாதிரி நாட்டுல எல்லாம் மீடியம் பேஸ் (pace) அதாவது மித வேகப் பந்து வீச்சு நல்லா ஸ்விங்க் ஆகும்.
பாஸ்ட் பவுலிங்க்ல ஸ்விங்க் அதிகமா ஆகலைன்னா அந்த ஸ்டைல் பவுலிங்க்ல என்னவெல்லாம் செய்யலாம்?
ஃபாஸ்ட் பவுலிங்ல முக்கியமான ரெண்டு விசயம் - பவுன்சரும் யார்க்கரும்.
ரெண்டும் ரெண்டு விதமான வித்தைகள். நீங்க கிரிக்கெட் பாக்கும்போது கமெண்ட்டேட்டர் சொல்றத கேட்டிடுப்பிங்க - குட் லெங்க்த் பால், ஷார்ட் பிட்ச் டெலிவரி, ஃபுல் டாஸ், யார்க்கர் லெங்க்த் பால் - இப்பிடியெல்லாம். இதெல்லாம் என்ன?
ஒரு பவுலர் பந்தை பிட்ச்ல எந்த எடத்துல பிட்ச் செய்யறார் அப்படிங்கறதத் தான் இவங்க வேற வேற பேர்ல கூப்புடுறாங்க.
இப்ப கீழ இருக்குற படத்தைப் பாருங்க.
இந்தப் படத்துல மேல இருக்குறதெல்லாம் லெங்க்த், கீழ இருக்குறதெல்லாம் இந்த ஸ்டைல் பாலுக்கு எந்த மாதிரி ஷாட் ஆடலாம் அப்பிடின்னு போட்டிருக்கு. பேட்டிங் பத்தி வரும்போது அதையெல்லாம் பாக்கலாம். இப்போ பவுன்ஸர்.
பவுன்ஸர் எப்பவுமே ஒரு ஃபாஸ்ட் பவுலருக்கு ஸ்டாக் பால். பேட்ஸ்மேன் ஃப்ரண்ட் ஃபுட்ல ஃப்ரீயா ஆடிக்கிட்டு இருக்கும் போது அவனை சர்ப்ரைஸ் செய்யறது இந்த பவுன்சர்தான்.
மேல இருக்குற படத்துல ஷார்ட் அப்பிடின்னு இருக்குற இடத்துல பாலை குத்தி, நெஞ்சு இல்லை அதுக்கும் உயரமா எந்திரிக்க விடுறது தான் பவுன்சர். பேட்ஸ்மேன் இதை எதிர்பார்க்கலைன்னா, அந்தப் பந்தை தொட்டு கீப்பர், ஸ்லிப் இல்லைன்னா மிட் விக்கெட்ல கேட்ச் குடுத்துட்டு அவுட் ஆகி போய்க்கிட்டே இருப்பார், இந்த வீடியோல ஷேவாக் மாதிரி.
ஆனா பாலை சரியான இடத்துல பிட்ச் செய்யலைனாலோ இல்லை எதிர் பாத்த அளவு எந்திரிக்கலைன்னாவோ பால் எங்க போய் விழும்னு சொல்ல முடியாது, கீழ இருக்குற வீடியோ மாதிரி..
இந்த பவுன்சர்ல இன்னொரு ஸ்டைல் ஷார்ட் பிட்ச் பால். இது பவுன்சர் மாதிரி குத்திப் போட்டாலும் இடுப்பு உயரத்துக்கு மட்டுமே எழும். எந்தக் கத்துக் குட்டி பேட்ஸ்மேனும் இந்த பாலை அடிக்க முடியும் (நான் உட்பட). ஆனா, சில பவுலர் அதையும் ஐடியா பாலா யூஸ் பண்ணுவாங்க.
ஃபாஸ்ட்டா போட்டுட்டு இருக்குற பவுலர் திடீர்னு ஒரு ஸ்லோ பால் - அதாவது பவுலிங் ஆக்ஷன் பாத்திங்கன்னா ஃபாஸ்ட் பால் போடுற மாதிரியே இருக்கும். ஆனா பந்து மட்டும் ஸ்லோவா வரும் - போட்டு ஷார்ட் பிட்ச் பண்ணுவாங்க. அதை ஃபாஸ்ட்ட வர்ற பால் மாதிரி நினைச்சிக்கிட்டு அடிக்க முயற்சி செய்யற பேட்ஸ்மேன் பந்தை மிஸ்ஸிடுவாரு இல்லைன்னா எட்ஜ் வாங்கி கேட்ச் மாட்டும்.
மிச்சத்த அடுத்த பகுதியில பாப்போம்...
அப்புறம் கிரிக்கெட் ப்ளேயர் ஆகுறதுக்கு வெளயாட தெரிஞ்சிருக்கோ இல்லையோ, பார்ட்டிக்குப் போய் டான்ஸ் ஆடத் தெரிஞ்சிருக்கணும்னு நான் வெளயாட்டா தங்கமணிக்கிட்ட பேசிட்டிருந்தது ஜூனியர் முகிலன் காதுல விழுந்திருச்சி போல..
12 comments:
இந்த ஆட்டைக்கும் நான் வரலை
ரகசிய காணொளிகள் வெளிய வருதே..,
ஹலோ!
அமெரிக்காவில் இருந்துக்கிட்டு க்ரிக்கெட்டா??
இது சூப்பர் பவ்ல் டைம்! ரோச்செஸ்டர்ல இருந்துகொண்டு க்ரிக்கட்டாவது...இதெல்லாம் நல்லாவே இல்லை சொல்லிப்புட்டேன்!
ஒழுங்கா அமெரிக்கன் ஃபுட்பால் இந்த வீக் எண்ட் பாருங்க!
கோல்ட்ஸ் ம் செயிண்ட்ஸ்ம் விளையாடுறாங்க! :)
அட.. என்ன ஆட்டம்.. க்ரிக்கெட் ப்ளேயர் ஆகற மாதிரி தெரியலயே.. தளபதி ஆகற மாதிரி தான் தெரியுது :))
ஜூனியரையும் ப்லாக் எழுதவிடுங்க...இன்னும் நிறைய விஷயம் வெளிலே வரும்! :-))
ஹலோ, சூப்பர் பௌல் நேரத்துல, கிரிக்கெட்டுக்கு நூல் விடுறீங்களே? நடத்துங்க, நடத்துங்க.
ஜூனியர் ஆட்டத்தில கிரிக்கட் டெஸ்ட் மேட்ச் மாதிரி ஆயிடுத்து:))
@நசரேயன் - நீங்க ஆட்டைக்கு வர்ற வரைக்கும் விடமாட்டோம்..
@சுரேஷ் - :))
@வருண் - :)) திங்கட்கிழமை அதைப் பத்தியும் ஒரு இடுகை போட்டுத்தாக்கிருவோம் வருண்..
@எல் போர்ட் - ஏதோ ஒண்ணு நல்லா காசு பாக்குற துறையில போய் சேந்தா நல்லது தான் ;-) (ஸ்மைலி போட்டிருக்கேன்)
@சந்தனமுல்லை - அவரு எழுத முயற்சி பண்ணி ஏற்கனவே ஒரு லேப்டாப்பை ஒடச்சிட்டாரு..
@சித்ரா - சொன்னோம்ல. திங்கட்கிழமை பாருங்க..
@வானம்பாடிகள் - டெஸ்ட் மேட்ச் தான் இண்ட்ரஸ்டிங்க்னு யாரோ சொன்னாங்க சார்.. :)
தலைவா சூப்பர்.
அடுத்தது பேட்டிங் பத்தி எழுதுங்க... லாராவோட பேட்டிங் பத்தி தெரிஞ்சதை எழுதுங்க தல.
ஜூனியர் முகிலன் சும்மா பிச்சு உதறுராரு. பிளாக் எழுத கத்துக்கொடுத்துடாதிங்க. :):)
aiyayo.. 1st part miss pannittene...!! irukkattu elllaam serthu padichukkaren..!!! (escapeuu...)
chchooooooo... junior is sooooooo cute... superb dance..=))
Good one... periya cricket player a iruppeenga pola irukke.... As Varun said, it is Super Bowl weekend!! Enjoy the game of New Orleans Vs Indianapolis....
Post a Comment