மறுபடியும் ஒரு குண்டு வெடிப்பு. இந்த முறை புனே. ஜெர்மன் பேக்கரி என்ற ஒரு முக்கியமான வெளிநாட்டவர் கூடும் இடத்தை குறிவைத்துத் தாக்கியிருக்கிறார்கள் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர். இவர்கள் தாலிபனுக்கு ஆதராவாக இந்தத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்கிறது மீடியா. வெளிநாட்டவரைத் தாக்குவதன் மூலம் இந்தியாவுக்குக் கெட்ட பெயரையும், வெளிநாட்டவருக்கு எச்சரிக்கையையும் விடுக்கும் வண்ணம் செய்திருக்கலாம் என்கின்றனர்.
குண்டு வெடிப்பில் மரணமடைந்த/காயமுற்றவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல்கள்.
எனக்கு எப்போதுமே டெஸ்ட் கிரிக்கெட் தான் உண்மையான கிரிக்கெட் என்ற எண்ணம் உண்டு. அதை மீண்டும் நிரூபித்தது கல்கத்தாவில் நடந்த இந்திய தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி.
20-20 போட்டிகளிலும், ஒரு நாள் போட்டிகளிலும், ஒரு அணி தவறு செய்து விட்டால் அதை திருத்த அவர்களுக்கு நேரம் கிடைக்காது. அதே போல ஒரு அணி டாமினேட் செய்யத் துவங்கிவிட்டால் அதற்கு அணை போட நேரமிருக்காது. ஆனால் டெஸ்ட் போட்டி அப்படியல்ல. செய்த தவறை திருத்திக் கொள்ள நேரம் இருக்கும். தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு டாமினேட் செய்வதும் சுலபமான காரியம் இல்லை.
இந்தியா மிகவும் சிறப்பாக விளையாடி இந்தப் போட்டியை வென்றதன் மூலம் தொடரைச் சமன் செய்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது மேலும் சிறப்பு. கடைசி நிமிடம் வரை சீட்டின் நுனியில் (மெத்தையின் ?!) உட்கார்ந்து என் எந்த விரலிலும் நகமே இல்லை.
வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், கடைசி நாளில் சிறப்பாக பந்து வீசிய ஹர்பஜன் சிங், மிஸ்ரா மற்றும் இஷாந்த் சர்மாவுக்கும் வாழ்த்துகள்.
அஜித் முதல்வரின் பாராட்டு விழாவில் பேசினாலும் பேசினார், அந்த அரசியல் வெப்பத்தில் குளிர் காய பலர் புறப்பட்டு விட்டனர். குறிப்பாக ஜாக்குவார் தங்கம். இவர் அஜீத்தை ஒருமையில் பேசி மிரட்டியதும், ரஜினி ஒரு ஜோக்கர் என்று தாக்கியதும் எதற்காக? சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நடிகையைக் கற்பழித்த வழக்கில் கிடைத்த கெட்ட பெயரைப் போக்கிக் கொள்ளவா?
இது இப்படி இருக்க வி.சி.குகநாதன் ஊரோடு ஒத்து வாழாவிட்டால் மிரட்டத்தான் செய்வோம் என்று சொல்லியிருப்பது அநாகரீகத்தின் உச்சம். தனி மனிதனுக்கு சுதந்திரமே இல்லையா?
கம்பராமாயணத்தில் ரெயின் - செக் பதிவில் ஸ்ரீ என்று ஒருவர் பின்னூட்டம் போட்டு, அது எப்பிடி ரெயின் செக் ஆகும், தசரதன் தான் ஸ்டாக் இல்லைன்னு சொல்லலையே என்று கேட்டிருந்தார். அமெரிக்கர்கள் சாதாரணமாக பேசும்போது நிறைய துறை (குறிப்பாக விளையாட்டு) சார்ந்த வார்த்தைகளை உபயோகிப்பார்கள். பால் பார்க் எஸ்டிமேட், பிட்ச், ஹோம் ரன், ரன் அப், டச் டவுன் இப்படி. அதில் ஒன்று இந்த ரெயின் செக். யாருக்காவது நீங்கள் காஃபி வாங்கித் தருவதாக சொல்கிறீர்கள். அந்நபர் அப்போதைக்கு காஃபி அருந்த மனமில்லை, ஆனால் நீங்கள் வாங்கித் தருவதாக சொன்னதையும் விட முடியாது. இந்த சந்தர்ப்பத்தில் அவர் - “I am not interested to have a coffee now, but let me take a rain check" என்று சொல்வார். இந்த கோணத்தில் தான் அந்தப் பதிவை எழுதினேன். இதே சம்பவத்தையே எழுதியிருக்க முடியும், ஆனால் தங்கமணியை எப்படி உள்ளே நுழைப்பது? அதனால்தான் ஆஃபிஸ் மேக்ஸ்.
இந்திய ஆங்கிலத்துக்கும், பிரித்தானிய ஆங்கிலத்துக்கும், அமெரிக்க ஆங்கிலத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதை நம்மில் பலர் அறிவோம்.
குறிப்பாக நம்மிடம் இருக்கும் பல உறவுகளுக்கு அவர்களிடத்தில் பெயர்கள் இல்லை. கீழே ???? குறியிட்ட உறவுகளுக்கு ஆங்கிலத்தில் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?
மனைவியின் தங்கை - மைத்துனி - sister-in-law
மனைவியின் தங்கையின் கணவர் - சகலை - ???
கணவரின் தம்பி - கொழுந்தன் - Brother -in - law
கணவரின் தம்பி மனைவி - ஓரகத்தி - ???
நாம் இந்திய ஆங்கிலத்தில் உறவுகளுக்கு இல்லாத பல வார்த்தைகளைச் சேர்த்து புதிய வார்த்தைகளை உருவாக்குகிறோம். உதாரணத்திற்கு சித்தி, அத்தை இரண்டுமே ஆங்கிலத்தில் aunty தான். அத்தையின் மகளை - கசின் cousin - என்றும், சித்தியின் மகளை - கசின் சிஸ்டர் - cousin sister - என்றும் சொல்கிறோம். உண்மையில் சித்தி/சித்தப்பா/பெரியம்மா/பெரியப்பாவின் மகனோ/மகளோ அல்லது அத்தை/மாமா/மாமியின் மகனோ/மகளோ தான்.
இப்படி நாம் உருவாக்கிய இன்னும் சில வார்த்தைகள் கோ-பிரதர், லவ்-அஃபயர் போன்றவை. உங்களுக்குத் தெரிந்த இப்படிப்பட்ட வார்த்தைகள் சிலவற்றை பட்டியலிடுங்களேன்?
பிறகு பார்க்கலாம்.
24 comments:
பஸ்ஸ விட்டு போய் பண்ண காரியம் இதானா:)). நல்லாருக்கு
நான் அமெரிக்கா வந்த புதிதில், குடும்பம் பற்றி பேசும் போது, நம் ஆங்கில புலமையில் உள்ள வார்த்தைகளான - co-brother, cousin sister என்று எல்லாம் சொல்லி, அவர்கள் புரியாமல் முழித்தது நினைவுக்கு வருகிறது. ஹா,ஹா,ஹா,ஹா.....
கோ-பிரதர், லவ்-அஃபயர்
போன்றவை இந்தியர்கள் மட்டுமே பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகள் என்ற தகவல் புதுசு.
டெஸ்ட் மேட்ச்னாலே எனக்கு அலர்ஜி... ஓடியேப்போயிருவேன்...
அப்பா அம்மாவுக்கு எத்தனாவது பையன் அப்படிங்கற கேள்விக்கு கூட ஆங்கிலத்தில் வார்த்தைகள் இல்லன்னு கேள்விப்பட்டேன் அப்படியா தல...? அது என்ன sister in law அப்படின்னு சம்பந்தமே இல்லாம கடைசில லா பேசுறானுங்க... இந்த இங்கிலிபிசே இப்படித்தான் வெறும் சொதப்பல் லாங்குவேஜ்...
இன்னும் நடு சென்டர், கேட் வாசல், பட் ஆனா, பலா பட்டறை இதுக்கே என்னன்னு தெரியல.. சகலைக்கு எங்க போய் தேட..?? டோரத்தி ன்னு, ட்விஸ்டர் படத்துல பார்த்தேனே?? அது ஓரகத்தி இல்லையா??
பீட்டர் கிஸ்டன் ன்னு ஒருத்தர என் ஃப்ரண்ட் தென் ஆப்பிரிக்கா இந்தியா வந்த புதுசுல நெம்ப புகழுவார், அவர் இப்ப நம்ம அணிக்கே கோச்சா வந்திருப்பது எனக்கு வியப்புதான்..:))
ஆனா இதுக்கெல்லாம் பேரில்லையான்னு கேட்டா? அப்பால இன்னாத்துக்கு எனக்குன்னு ஒரு பேருன்னுவாங்கோ உங்காளுங்கோ..:)
டிஸ்கி:-
ஏற்கனவே போட்டதுதான்.
கோ சிஸ்டர் எல்லாம் நம் கலாச்சாரத்துக்கே உரிய வார்த்தைகள்
வாரத்துக்கு ஒருக்கா பிதற்றிடுவீங்களா? :)))
ம்ம்.. அந்த மாதிரி வார்த்தைகள் இப்போதைக்கு வேற எதுவும் தெரியலயே..
//வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், கடைசி நாளில் சிறப்பாக பந்து வீசிய ஹர்பஜன் சிங், மிஸ்ரா மற்றும் இஷாந்த் சர்மாவுக்கும் வாழ்த்துகள். //
இதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்..இவர்கள் எல்லாம் சிறந்த பந்து வீச்சாளர்கள் அல்ல..சிறப்பாக வீசியிருந்தால் இறுதி வரை இழுத்ஹ்டிருக்க வேண்டியில்லை.
@வானம்பாடிகள் - இதுக்கு பதிலை டெம்போ வேன்லயே குடுத்துட்டேன்.
@சித்ரா - சரியா சொன்னீங்க. அமெரிக்கன் இங்க்லீஷ்ல த்ரைஸ் (thrice) கிடையாது த்ரீ டைம்ஸ் தான். இதை யூஸ் பண்ணி அவங்க சிரிச்சிருக்காங்க.. :(
@r.selvakkumar - வருகைக்கு நன்றி செல்வா. இப்பிடி பல வார்த்தைகள் இருக்கு ஒன்னியும் ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது
@நாஞ்சில் பிரதாப்
கல்கத்தால நடந்த மாதிரி மேட்ச்னா பாக்கலாம். சில நேரம் கொஞ்சம் போர் தான்.
@ஷங்கர் - நடு செண்டர், கேட் வாசல், ஷாப்பு கடை, பட் ஆனா - இதெல்லாம் டமில் வார்த்தைகள் ஷங்கர். நான் கேட்டது இந்திய-இங்க்லீஷ் வார்த்தைகள்
டோரத்தி யாருக்காவது ஓரகத்தியா இருந்திருக்கலாம்.. :(
அவங்களுக்கு இந்த அளவுக்கு டீப்பான ரிலேஷன்ஷிப் இல்லை. 18 வயசுக்கப்புறம் பெத்த அம்மா அப்பாவையே வருசத்துக்கு ஒரு தடவை பாக்கிறவிங்க.
@சின்ன அம்மிணி
சரியா சொன்னீங்க அம்மிணி.
@எல் போர்ட்.. பீ சீரியஸ்
என்ன பேரு மாத்தீட்டீங்க?
டெய்லி பிதற்றுறதுதாங்க. வாரத்துக்கு ஒருக்கா ஸ்பெஷல் பிதற்றல். :)
யோசிங்க யோசிங்க..
ஆங்கில முகிலன்.
@புலவன் புலிகேசி - இவங்களை நான் சிறப்பான பந்து வீச்சாளர்கள்னு சொல்லல. சிறப்பா பந்து வீசுனாங்கன்னு தான் சொன்னேன். அவங்க ஸ்டேண்டர்டுக்கு இது சிறப்பு தான். வழக்கமா பந்து வீசியிருந்தா ஜெயிச்சிருக்கவே முடியாது. ஏன்னா கடைசி வரைக்கும் பிட்ச்ல உயிர் இருந்தது.
// இந்த சந்தர்ப்பத்தில் அவர் - “I am not interested to have a coffee now, but let me take a rain check" என்று சொல்வார். இந்த கோணத்தில் தான் அந்தப் பதிவை எழுதினேன். இதே சம்பவத்தையே எழுதியிருக்க முடியும், ஆனால் தங்கமணியை எப்படி உள்ளே நுழைப்பது? //
நல்லவேளை - நீங்க உங்க தங்கமணிகிட்ட ஏமாந்து போய்டீங்கலோன்னு நெனச்சேன்... உஷாராதான் இருக்கீங்க :-)
Srini
// குடுகுடுப்பை said...
ஆங்கில முகிலன்.
//
அது என்ன ஆங்கில முகிலன்?
ஆமா கடை என்ன கொஞ்ச நாளா மூடியேக் கிடக்கு?
@Sri
ஹி ஹி ஹி
http://maniyinpakkam.blogspot.com/2009/09/cousin-in-law.html
கணவரின் தம்பி மனைவி - ஓரகத்தி - சரியே!
cousininlaw
பகிர்வுக்கு நன்றி !
@பழமைபேசி
பழமையண்ணா, கணவரின் தம்பி மனைவி - கசின் இன் லா ஆக மாட்டாளே?
சிஸ்டர்-இன்-லா தானே?
@வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர்
வருகைக்கு நன்றி சங்கர்.
Post a Comment