இட்லி வடையில் கொஞ்ச நாள் முன்பு வரை ஒரு கார்ட்டூன் இடம் பெற்றிருந்தது - “என்ன சார், வருசம் பிறந்து ஏழெட்டு நாள் ஆயிடுச்சி, இன்னும் முதல்வருக்கு ஒரு பாராட்டு விழாக்கூட எடுக்காம இருக்கோமே” என்று தமிழ்த்திரையுலகினர் (கோலிவுட்னு சொல்லாதீங்க தமிழ்த்திரையுலகம்னு சொல்லுங்கன்னு கமல் சொல்லியிருக்காராமே?) வருத்தப்படுவது போல. அதை யாரோ பார்த்துவிட்டார்கள். மறுபடியும் அதே நேரு உள்விளையாட்டு அரங்கம், அதே திரையுலகினர் அதே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், அதே ஐஸ் பேச்சு. அன்றைய தினம் சென்னையில் காக்காய்களே காணப்படவில்லையாமே உண்மையா??
அந்த விழாவில் அஜித் தைரியமாகவும் பரபரப்பாகவும் பேசியிருக்கிறார். அவர் பேச்சின் சாராம்சம் இதுவே - “எல்லா கூட்டங்களுக்கும் வரும்படி கட்டாயப் படுத்தி அழைக்கிறார்கள். காவிரியில் தண்ணீர் இல்லையென்றால் நீங்கள் (முதல்வர்) பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் ஏன் கூட்டம் போட வேண்டும்?”. நல்ல கேள்விதான். ரஜினி மாதிரி ஆட்கள் இதைப் பேசியிருந்தால் கன்னடன், மராட்டி, தமிழினத் துரோகி என்று சத்யராஜ், பாரதிராஜா முதலானோர் ஏசி(அவர்களுக்குப் பேசத் தெரியாது) இருப்பார்கள்.
சினிமாத் தொழிலை மற்ற தொழில்கள் போல நடத்திக் கொண்டு போயிருந்தால் இந்த சிக்கல் வந்திருக்காது. சினிமாவைப் பார்க்கும் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்வது, அரசியலுக்கு வருவேன், வருவேன் என்று சொல்லி அவர்களை உசுப்பேத்துவது என்று சில நடிகர்கள் திரையில் செய்வதால் தான் பொதுப் பிரச்சனைகளில் அவர்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்பது ஒரு சாராரின் வாதம். சரிதான், ஆனால் அதை ஏன் கட்டாயப்படுத்துகிறார்கள்? நடிகனுக்கு விருப்பம் இல்லையென்றால் விடவேண்டியதுதானே? ரெட் கார்டு போடுவோம் என்ற மிரட்டல் எதற்கு? சரி, அப்படி வந்த நடிகனுக்கு ஒரு பிரச்சனை என்றால் நடிகர் சங்கமோ இல்லை அரசாங்கமோ பின்னால் நிற்கிறதா? இல்லையே?
அஜித் உட்பட எல்லாரும் முதல்வரை ஐஸ் மழையில் நனைய வைத்துவிட்டனர். கலைஞர் டி.வி பார்க்க வசதியிருப்பவர்கள், நயன்தாரா பிரபுதேவா ஆட்டத்தைப் பார்த்து ரசியுங்கள்.
குட்டி திரைப்படம் பார்த்தேன். தனுஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் கூட பரவாயில்லை. இந்தப் படத்தில் ஷ்ரியா படம் முழுக்கவே தனுஷுக்கு பெரியம்மா மாதிரி இருக்கிறார். இன்னொரு நாயகனாக வருபவர் (பெயர் தெரியவில்லை) நன்றாகவே நடித்திருக்கிறார். புதுமுகம் போலத் தெரியவேயில்லை. கமர்சியலாக வெற்றி பெறுமா தெரியவில்லை ஆனால் படம் போரடிக்காமல் ஜாலியாக இருந்தது.
இதில் தனுஷுடன் பல குட்டிக் குழந்தைகள் நடித்துள்ளனர். அப்படி ஒரு காட்சியின் தங்கமணியின் கமெண்ட் - “இதுல எத்தன பேரு பின்னாடி தனுஷ் கூட ஜோடியா நடிக்கப்போறாங்களோ தெரியல”
கோவா திரைப்படமும் பார்த்தேன். எனக்குக் கலவையான அனுபவம். சில இடங்களில் சிரித்தேன். சில இடங்களில் ரசித்தேன், சில இடங்களில் கொட்டாவி விட்டேன், சில இடங்களில் ‘அடப்பாவிகளா’ என்று திட்டினேன். மொத்தத்தில் பார்க்கலாம் ரகம். முக்கியமாக Gay ரிலேஷன்ஷிப்பை தமிழில் முதல்முதலாகக் காட்டியதற்காக வெங்கட் பிரபுவைப் பாராட்டலாம்.
நான் ரசித்த இடங்கள் - பஞ்சாயத்து காட்சி, ஃப்ளாஷ் பேக் வரும்போதெல்லாம் எழுபதுகளின் ஃபீட்பேக்கோடு ஓடும் படச்சுருள் போன்ற காட்சியமைப்பு. தியானம் செய்வது போல குறட்டை விட்டு தூங்கும் பிரேம்ஜி.
பியா அழகாக இருக்கிறார். அந்த வெள்ளைக்காரப் பெண் அழகாக வெட்கப் படுகிறார். சினேகா வந்து போகிறார். சொல்லிக்கொள்ளும்படியாக வேறு ஒன்றும் இல்லை.
எங்கள் ஊரில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடும் நபரிடம் தமிழ்ப்படத்தைப் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கிறேன். திரையிட்டால் பார்த்துவிட வேண்டும். மேலே சொன்ன இரு படங்களையும் பெரிய திரையில்(40 இன்ச் பெரிய திரை இல்லை தானே) பார்க்கவில்லை.
ஜெயராம் மலையாளிகளின் இயல்பைக் காட்டிவிட்டார் - பேட்டியில் கறுப்பான தடித்த தமிழத்தி என்று தன் வீட்டு வேலைக்காரியைச் சொன்னதைச் சொல்கிறேன். நாம் தமிழர் இயக்கத்தினர் அதற்காக அவர் வீட்டைச் சூறையாடியது அவர் பேசியதை விட பெரிய தவறு. சில நேரங்களில் நாம் எடுக்கும் அதிகப்படியான நடவடிக்கை தவறு செய்தவர்களை நியாயவான்களாக்கிவிடும். காந்தி இதே காரணத்திற்காகத்தான் சவுரி-சவுரா சம்பவத்திற்குப் பிறகு ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினாரோ? ஆமாம் தமிழ்த்திரையுலகினர் இதற்கெல்லாம் ரெட் கார்டு போட மாட்டார்களா?
கடைசியாக வந்த செய்தி - இலங்கையில் சரத் பொன்சேகா கைது. அவரை(னை?!)ப் பிடரியைப் பிடித்து இழுத்துச் சென்றனராம். அய்யோ கொல்றாங்களே
கொல்றாங்களே என்று கத்தியிருப்பாரா?
எச்சரிக்கை: டீன்-ஏஜ் கொசுவத்தி சுத்த சின்ன அம்மிணி அழைத்துள்ளார். அடுத்த பதிவு அதுதான்.
18 comments:
//இந்தப் படத்தில் ஷ்ரியா படம் முழுக்கவே தனுஷுக்கு பெரியம்மா மாதிரி இருக்கிறார்.//
நான் அக்கா மாதிரி இருக்கார்னு நினைச்சேன். நீங்க சூப்பர் ப்ரமோஷன் குடுத்துட்டீங்க ஷ்ரேயாக்கு.
சரத் பொன்சேகர் கமெண்ட் - ஹஹஹா
சில நேரங்களில் நாம் எடுக்கும் அதிகப்படியான நடவடிக்கை
தவறு செய்தவர்களை நியாயவான்களாக்கிவிடும்.
பிதற்றல் அருமை.
:)
எல்லாரும் எம்ஜிஆர் மாதிரி வரலாம்னு யோசிக்கிறாங்குளோ தெரியல பாஸ்..
கோவா நானும் பாத்தேன்.. சிரித்ததை விட சிரிக்கலன்னே சொல்லலாம்) நெளிந்த இடங்கள்தான் கூட..
அழகா பதற்றியிருக்ககிங்க.. தொடருங்க.. :)
எல்லாமே சூப்பர்.
//அய்யோ கொல்றாங்களே
கொல்றாங்களே என்று கத்தியிருப்பாரா?//
ம்கூம்... டப்பிங் கொடுக்க ஆள் இருந்திருக்காது....
/கடைசியாக வந்த செய்தி - இலங்கையில் சரத் பொன்சேகா கைது. அவரை(னை?!)ப் பிடரியைப் பிடித்து இழுத்துச் சென்றனராம். அய்யோ கொல்றாங்களே
கொல்றாங்களே என்று கத்தியிருப்பாரா?//
அப்ப அடுத்து அவர் ஆட்சியா முகில்?
//தமிழ்த்திரையுலகினர் (கோலிவுட்னு சொல்லாதீங்க தமிழ்த்திரையுலகம்னு சொல்லுங்கன்னு கமல் சொல்லியிருக்காராமே?) //
இப்போதைக்கு கோடம்பாக்கம்னு சொல்றதுக்குப் பதிலா "கோபாலபுரம்" னே சொல்லலாம்.. சன். ரெட் ஜெயண்ட், கிளவ்டு னைன் இவங்களோட படங்கள்தான் இனிமே வரும்.
அட அட... தினம் ஒரு பதிவு போட்டு கலக்குறீங்க..!! எவ்ளோ மேட்டர் ஒரு இடுகைல... =))
இதனால அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
குடுகுடுப்பையும் நானும் பகைமையை மறந்து கூட்டணி அமைத்து கட்சி வளர்ச்சிக்காக இன்று இரவு பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்....பலதரப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் அப்பட்டமாக ஊரறிய நிரூபிக்கப்பட்டுவிட்டதால் அண்ணன் குடுகுடுப்பை தி.கு.ஜ.மு.க தலைவர் பதவியை இழந்துவிட்டார்...ஆனாலும் அந்த பதவி வேற ஊரு காரருக்கு கொடுக்க மனதில்லாத காரணத்தினால் ஒரே ஊருக்காரரான (டல்லஸ்) எனக்கு அந்த பதவியை மனப்பூர்வமாக விட்டுக் கொடுத்துவிட்டார்.... கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்ட அறிவிப்புகள் அதிவிரைவில் என்னால் அறிவிக்கப்படும்....லஞ்சம் கொடுத்து பதவி வாங்கின அனைவர் பதவியும் "பணால்"........ புதிய பதவி வேண்டுவோர் உடனே என்னை மட்டும் அணுகவும்.... குடுகுடுப்பைஇடம் பணம் கொடுத்து எமாறாதிர்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
என்னையா பாண்டியரே ஒரு படத்த விடமாட்டீர் போல....என்ன வேற வேலை வெட்டி எதுவும் இல்லையா........ ஆமா எல்லா படமும் தியேட்டர்லயா இல்ல அண்ணாச்சி குடுகுடுப்பை போல
திருட்டு VCDலயா??????
@சின்ன அம்மிணி - வருகைக்கு நன்றி.. அதோட ஷ்ரியவுக்கு விக் பொருந்தவே இல்ல. தலைக்கி மேல இன்னொருதலை மாதிரி இருந்த்து.
@நெகமம் - நன்றி
@விசா - நன்றி
@வானம்பாடிகள் - :)
@புல்லட் - முதல் வருகைக்கு நன்றி
@சித்ரா - வாங்க, நன்றி சித்ரா
@க.பாலாசி - டப்பிங் கொடுக்கக் கூட ஆள் இருந்திருக்காதா ?!
@தண்டோரா - உயிரோட வச்சிருந்தானுங்கன்னா ஒரு வேளை வந்தாலும் வந்துடுங்கண்ணா
@உழவன் - சரியா சொன்னீங்க போங்க..
@கலகலப்ரியா - உங்கள மாதிரி ரத்தினச் சுருக்கமா எழுத வர மாட்டேங்குதே?
@வில்லன் - அப்ப பாண்டியன் கட்சி ஆகிடுச்சின்னு சொல்லுங்க
@வில்லன் - திருட்டு டிவிடி என்று சொல்லவும். நான் இருக்கிறது ஒரு சின்ன ஊரு. இங்க வருசத்துக்கு ரெண்டு தமிழ்ப்படம் (!?) போட்டா பெரிய விசயம். அதுனால வேற வழியில்ல. தயாரிப்பாளர்-டைரக்டர் எல்லாம் என்னை மன்னிச்சிருங்க. இந்தியா வரும்போது ஏ.வி.எம். பிள்ளையாருக்கு தேங்காய் உடச்சிடுறேன்.
கோவா பாக்கனும்னேன். அஜீத் பேசுனது சரிதான், அப்பவாவது சொம்பு தூக்குறது நிக்குமா?
super . thala arumai. kutti paarkalam. irunthaalum amma over.
இலகு வழியில் இணையத்தினூடு பணம் தேட இங்கே அழுத்துங்கள்:
http://www.clixofchange.com/index.php?ref=kaviyan
இந்த மாதிரி விளம்பர ப்ரியர் முதல்வரை இதுவரை யாரும் பாத்திருக்க முடியாது.., எப்பண்டா பாராட்டு விழா நடத்துவானுங்கன்னு காத்துகிட்டு இருப்பாரு போல... தமிழ்நாடு வௌங்கிரும்...
ஸ்ரேயா பத்தி உங்க தங்கமணி சொன்ன கமண்ட் சத்தியமா நடக்த்தான் போவுது.. மாமனாரு பண்ணத மருமகனும் செய்வாரு...
டீன்ஏஜ் பதிவு போடப்போறீங்களா? வேண்டாம் தல அந்த அசிங்கத்தைல்லாம் ஏன் வெளில சொல்லிட்டு விடுங்க
அது..... :))
Post a Comment