Friday, February 19, 2010

கிரிக்கெட் கற்றுக் கொள்ளலாம் வாருங்கள் - 4

போன பதிவுல வலது கை சுழல் பந்து வீச்சாளர்களைப் பத்தி பேசினோம். இப்போ இடது கை.


இடது கையினால வீசுறதுனால வலது கையால வீசும்போது என்ன எஃபக்ட் வருமோ அதுக்கு அப்பிடியே ரிவர்ஸா வரும். 


அதாவது, வலது கை ஃபிங்கர் ஸ்பின்ல பால் ஆஃப் ஸ்பின் ஆகும். இடது கைல போட்டா லெக் ஸ்பின் ஆகும்.


இடது கை ஃபிங்கர்ஸ்பின்னர்ஸ் எப்பவும் வலது கை ஆட்டக்காரர்களுக்கு எதிரா ரொம்பவே எஃபக்டிவ்வா இருப்பாங்க.  உதாரணத்துக்கு கீழ இருக்குற வீடியோல யுவராஜ் சிங் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சனை க்ளீன் போல்டாக்குறதைப் பாருங்க. 





அதே சமயம் இடது கை ஆட்டக்காரர்கள் இவங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடறதும் உண்டு. கீழ இருக்கிற வீடியோல ஜெயசூர்யாவை தாதா கிழிக்கிறதைப் பாருங்க. (அந்த ஸ்ரீலங்கன் கமெண்டேட்டர் ஜெயசூர்யாவுக்குக் குடுக்குற பில்ட்-அப்பையும் அதை தாதா தவிடு பொடியாக்குறது காமெடி.)





இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர்ஸ் ரொம்ப கம்மி. வலது கைல ரிஸ்ட் ஸ்பின் பண்ணா லெக் ஸ்பின். இடது கைல பண்ணா அது ஆஃப் ஸ்பின்னாகும். ப்ராட் ஹாக் இப்போ அப்பிடி பந்து போடுற ஒருத்தர். இன்னொருத்தர் பால் ஆடம்ஸ். சவுத் ஆஃப்ரிக்கன். இவரோட பவுலிங் ஸ்டைலே வித்தியாசம். ரிஸ்ட் ஸ்பின்னரா இருந்தாலும் ரெண்டு விரலால பந்தைப் பிடிச்சித்தான் சுழட்டுவாரு. இவரோட வீடியோ ஒண்ணு இருக்கு பாருங்க.





இப்போ பந்து வீச்சாளர்களோட சைக்காலஜி.


1. பவுலருக்கு முதல் தேவை கான்ஃபிடன்ஸ். எதிர்ல இருக்குற பேட்ஸ்மேன் பெரிய ஆளு, இவருக்கெல்லாம் நாம பவுலிங் போடுறோமே அப்பிடின்னு நினைச்சா அம்புட்டுத்தான். அப்போவே அந்த பவுலர் அவுட்டு. 


2. ஃபாஸ்ட் பவுலருக்குத் தேவை aggression. பந்தைப் போட்டுட்டு பேட்ஸ்மேனைப் பாத்து ஒரு முறை முறைக்கணும். பால அடிச்சாலும் அடிக்கலைன்னாலும். அது அந்த அக்ரஷனைத் தக்க வைக்க உதவும். இதை இன்னிக்கு நேத்தில்ல பல காலமா பவுலர்ஸ் ஃபாலோ பண்ணிட்டு வர்றாங்க. ஆனா ஏனோ இதை இந்திய/இலங்கை/பங்களாதேஷி பவுலர்கள் செஞ்சா பெரிய கொலைக் குத்தம் மாதிரி எல்லாரும் - கமெண்டேட்டர்கள்ல இருந்து பதிவர்கள் வரை - நினைக்கிறாங்க. 


3. முதல்ல பேட்டிங் செஞ்சிட்டு அடுத்த இன்னிங்க்ஸ்ல பவுலிங் போடும் போது, ஸ்கோர் போர்ட்ல நிறைய ரன் இருந்தா பவுலர்கள் அதிக கான்ஃபிடன்ஸா பவுலிங் போடுவாங்க. அதுவே ரொம்ப குறைஞ்ச ஸ்கோரா இருந்தா அந்த கான்ஃபிடன்ஸ் எதிர் பார்க்க முடியாது. உதாரணத்துக்கு இப்போ ஸ்டெயின் - மோர்க்கல் ஜோடியை உலகத்தின் தற்போதைய சிறந்த வேகப் பந்து ஜோடி அப்பிடின்னு சொல்றாங்க. இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவும் இடையே நடந்த முதல் டெஸ்ட் பாத்திங்கன்னா, SA முதல்ல பேட் பிடிச்சி 500 க்கு மேல ரன் எடுத்தாச்சி. அடுத்த நாள் பொறி பறக்க பந்து வீசுனாங்க ரெண்டு பேரும். இந்தியா இன்னிங்க்ஸ் வித்தியாசத்துல தோல்வியைக் கவ்விச்சி. அதுவே அடுத்த டெஸ்ட்ல, 296 ரன்னுக்கு ஆல் அவுட். முந்தின மேட்ச்ல பவுலிங் போட்ட இந்த ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சி? இந்தியா முதல் இன்னிங்க்ஸ்ல 600+ ரன் வெறும் ஆறு விக்கெட் மட்டும் போயி (அதுல ஒன்னு ரன் அவுட்). இதே தான் ஹர்பஜன் - மிஸ்ராவுக்கும், ஆனா அவங்கள யாரும் உலகின் தற்போதைய தலை சிறந்த சுழல் பந்து ஜோடின்னு சொல்றதில்லைங்கறதால அவங்களை மன்னிச்சி விட்டுடலாம்.


சில நேரம் இதுக்கு எக்ஸெப்சனும் உண்டு. 1984/85 ல ஷார்ஜாவுல இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில ஒரு போட்டி. அதுல பாகிஸ்தான் டாஸ் ஜெயிச்சி இந்தியாவ ஃபர்ஸ்ட் பேட் பண்ண சொல்லிட்டாங்க. இந்தியா 43 ஓவர்ல 125 ரன் எடுத்து ஆல் அவுட் ஆகிடுச்சி. டீமே சோகமா ட்ரஸ்ஸிங் ரூம்ல உக்காந்திருக்கும்போது கேப்டன் கபில் தேவ் டீமைக் கூப்பிட்டு சொன்னாராம் - “ஒரு டீமால நம்மள 125 ரன்னுக்கு ஆல் அவுட் செய்ய முடியும்னா, நம்மளாலயும் அவங்கள அதுக்குள்ள சுருட்ட முடியும் அப்பிடின்னு உலகத்துக்குக் காட்டலாம் வாங்க”. மேட்ச் ரிசல்ட் - பாகிஸ்தான் 87 ஆல் அவுட். இது மாதிரி குறைஞ்ச ஸ்கோர் இருந்தாலும் உத்வேகமா பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தர்ற பவுலர்ஸும் இருக்காங்க.


இந்த பந்து வீச்சாளர்களுக்கு கான்ஃபிடன்ஸ் குடுக்குறதுல கேப்டன் முக்கியமான பங்கு வகிக்கிறார். அவரு குடுக்குற ஊக்கத்துல பவுலர் நல்லா பந்து வீசுவார். எல்லா மேட்ச்லயும் பெஸ்ட் பவுலரா இருக்க யாராலயும் முடியாது. எல்லாருக்கும் பர்ப்பிள் பேட்ச் இருக்கும். அந்த சமயத்துல அவங்கள தூக்கிடாம, தொடர்ந்து வாய்ப்புக் குடுத்துப் பாத்தா அவங்க முன்னை விட சிறப்பா வருவாங்க. இந்த விசயத்துல தோனி தொடர்ந்து பலருக்கு வாய்ப்புக் குடுத்துக்கிட்டே இருக்காரு. பாப்போம் அவரு நம்பிக்கையை அந்த பவுலர்கள் காப்பாத்துறாங்களான்னு.


பவுலிங் பத்தி ஓரளவுக்குப் பாத்திட்டோம். அடுத்த பகுதில பேட்டிங் பத்தி ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.

15 comments:

Paleo God said...

இப்படி ஒரு கிரிக்கெட் வெறியரா இருந்துட்டு அமெரிக்கா போனதுல எனக்கு வருத்தம்தான்.. :(

மொத்தமா படிக்கல, படிச்சிடரேன்..:) நல்லா மாங்கா அடிப்பேன், பாட்டிங்தான் உதறல் அடுத்த இடுகைக்கு ஆவல், அப்படியே சுவாரஸ்யமா மாட்ச் பாக்கும்போது ஸ்கோர் எவ்ளோன்னு கேட்டா எப்படி கரெக்டா சொல்றதுன்னு ஒரு பதிவு போடுங்க.

டிஸ்கி:-

இந்த பின்னூட்டம் உங்களுக்கும் எனக்கும் மட்டும். ஹும்ம்..

Paleo God said...

டொனட் டாவது கிடைச்சிதே..:)

Prathap Kumar S. said...

தலைவா நீங்க ஐசிசி-தலைவரா இருக்க வேண்டியவரு...எப்படி பொட்டிதட்டபோனீங்க...

பேட்டிங்க பத்தி நான் அன்னைக்கே கேட்டுட்டேன்...சீக்கிரம் எழுதுங்க தல

Chitra said...

Good one.

பிரபாகர் said...

படம் போட்டு அழகா எழுதிறீங்க முகிலன். பின்னூட்டத்துக்கெல்லாம் டிஸ்கி கொஞ்சம் ஓவரா இல்ல சங்கர்?

பிரபாகர்.

புலவன் புலிகேசி said...

பேசாம கோச்சா போங்களேன்...

க.பாலாசி said...

// நம்மளாலயும் அவங்கள அதுக்குள்ள சுருட்ட முடியும்//

இந்த கான்பிடன்டோட நடந்த மேட்சுகள் இன்னும் ரெண்டு மூணு இருக்குங்க... ஞாபகம் வரல... ஆனாலும் பெஸ்ட்....

vasu balaji said...

superb again

Unknown said...

@ஷங்கர்

இந்தியா ரெண்டு கோல் போட்டிருக்கு அமெரிக்கா இன்னும் கோல் போடலைன்னு சொல்லுங்க.

டிஸ்கி சூப்பர்

Unknown said...

@நாஞ்சில் பிரதாப் - என்னது ஐ சி சி தலைவரா?

ரொம்பப் புகழாதீங்க ஹி ஹி ஹி

Unknown said...

@சித்ரா

டெம்ப்ளேட்டா?

Unknown said...

@பிரபாகர்

நன்றிங்கண்ணா

Unknown said...

@புலவன் புலிகேசி

ஆமாங்க சென்னை சூப்பர்கிங்க்ஸ்ல கூப்டாகோ, டெல்லி டேர்டெவில்ஸ்ல கூப்டாகோ.. நாந்தேன் போகல.

Unknown said...

@க.பாலாசி..

ஆமாங்க.. ஆனா இதுதான் பெஸ்ட்.

Unknown said...

@வானம்பாடிகள்

டெம்ப்ளேட்ல இப்ப புதுசா அகெய்ன் சேத்திருக்கீங்க போல.